TNPSC Current Affairs Question and Answer in Tamil 1st February 2020

Current Affairs in Tamil 1st February 2020

Hello, TNPSC Aspirants, Here we provide Current Affairs question and answer in Tamil for 1st February 2020. Take the quiz and improve your Current Affairs Knowledge.




TNPSC Current Affairs in Tamil 1st February 2020
1. சமீபத்தில் டாக்டர் வி.சாந்தாராம் வாழ்நாள் சாதனையாளர் விருது யாருக்கு வழங்கப்பட்டது?

  1. ராஜலட்சுமி சிவலிங்கம்
  2. தினாநாத் மங்கேஷ் கர்
  3. நரேஷ் பேடி
  4. எஸ்.கிருஷ்ணசாமி
Answer & Explanation
Answer: எஸ்.கிருஷ்ணசாமி

Explanation:

மும்பையில் நடந்து வரும் சர்வதேச திரைப்பட விழாவில் தமிழகத்தை சேர்ந்த மூத்த ஆவணப்பட இயக்குனர் எஸ்.கிருஷ்ணசாமிக்கு டாக்டர் வி.சாந்தாராம் வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டது.

1976ல் அவர் இயக்கிய ‘சிந்துவெளி முதல் இந்திராகாந்தி வரை’ என்ற பொருளில், ‘Indus Valley to Indira Gandhi’ என்ற ஆவணப் படத்திற்காக இவ்விருது வழங்கப்பட்டுள்ளது.

TNPSC Group 1 Model Papers – Download

2. மத்திய அரசு எந்த பொதுத் துறை நிறுவனத்தை பங்குச் சந்தையில் பட்டியலிட முடிவு செய்துள்ளது?

  1. இந்திய ரயில்வே
  2. BSNL
  3. BHEL
  4. LIC
Answer & Explanation
Answer: LIC

Explanation:

மிகப்பெரிய பொதுத் துறை நிறுவனங்களில் ஒன்றான இந்திய ஆயுள் காப்பீட்டுக் நிறுவனத்தை (LIC) பங்குச் சந்தையில் பட்டியலிட மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக பட்ஜெட் உரையின் போது நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் அவர்கள் தெரிவித்துள்ளார்.

3. IRCTC – யின் மூன்றாவது தனியார் ரயில் எந்த இருநகரங்களுக்கு இடேயே இயக்கப்பட உள்ளது?

  1. டெல்லி – லக்னோ
  2. இந்தூர் – வாரணாசி
  3. மும்பை – அஹமதாபாத்
  4. டெல்லி – புனே
Answer & Explanation
Answer: இந்தூர் – வாரணாசி

Explanation:

முதல் தனியார் ரயில் தேஜஸ் எக்ஸ்பிரஸ் (டெல்லி – லக்னோ)

இரண்டாவது தனியார் ரயில் : மும்பை – அஹமதாபாத்

மூன்றாவது தனியார் ரயில் இந்தூர் – வாரணாசி வழித்தடங்களில் காசி மஹாகல் எக்ஸ்பிரஸ் விரைவில் இயக்கப்பட உள்ளது.

4. சமீபத்தில் நேபாள நாட்டிற்கான இந்திய தூதராக நியமிக்கப்பட்டுள்ளவர்?

  1. வினய் மோக குவாத்ரா
  2. நீலாம்பர் ஆச்சார்யா
  3. தீப்குமார் உபாத்யாயா
  4. கே வி ராஜன்
Answer & Explanation
Answer: வினய் மோக குவாத்ரா

Explanation:

Vinay Mohan kwatra




5. சமீபத்தில் முக்கிய மந்திரி கிருஷக் துர்கட்னா கல்யாண் யோஜனா என்ற திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ள மாநிலம்?

  1. உத்திரப்பிரதேசம்
  2. மகாராஷ்டிரா
  3. குஜராத்
  4. பஞ்சாப்
Answer & Explanation
Answer: உத்திரப்பிரதேசம்

Explanation:

விவசாயி இறந்தால் விவசாயிகளின் குடும்பத்திற்கு ரூ .5 லட்சம் உதவி வழங்கும் Mukhyamantri Krishak Durghatna Kalyan Yojana என்ற திட்டத்தை உத்திரப்பிரதேச அரசு சமீபத்தில் அறிமுகப்படுத்தியுள்ளது.

6. சமீபத்தில் எப்போது உலக சுகாதார அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்டது?

  1. 29-01-2020
  2. 30-01-2020
  3. 31-01-2020
  4. 01-02-2020
Answer & Explanation
Answer: 31-01-2020

Explanation:

கொரோனா வைரஸ் பாதிப்பை தொடர்ந்து, ஐ.நா. வின் சுகாதார அமைப்பான உலக சுகாதார நிறுவனம் 31-1-2020 அன்று முதல் உலகம் முழுக்க சுகாதார அவசரநிலையை பிரகடனப்படுத்தியுள்ளது.

சர்வதேச சுகாதார விதிகள், ஷரத்து 43இன் படி, அவசர நிலை அறிவிக்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

உலக சுகாதார நிறுவனத்தின் பொது இயக்குநர் – டெட்ரோஸ் அதானோம் கெப்ரிஷியஷ்

7. சமீபத்தில் கடுமையான சூறாவளியால் பாதிக்கப்பட்ட மடகாஸ்கர் நாட்டிற்கு  உதவ இந்திய கடற்படை மேற்கொண்ட ஆபரேஷன்?

  1. ஆபரேஷன் வெனிலா
  2. ஆபரேஷன் தண்டர்போல்ட்
  3. மடகாஸ்கர் மீட்பு
  4. ஆபரேஷன் ஹெல்ப்
Answer & Explanation
Answer: ஆபரேஷன் வெனிலா

Explanation:

அவா புயலினால் ( Cyclone Ava ) பாதிக்கப்பட்டுள்ள மடகாஸ்கர் நாட்டிற்கு உதவ இந்திய கடற்படை ஆபரேஷன் வெனிலா (Operation Vanilla) என்ற ஒன்றை தொடங்கியுள்ளது.

இதன் ஒரு  பகுதியாக  இந்திய கடற்படையின் ‘ஐ.என்.எஸ். அய்ராவட்’ (INS Airavat) மடகாஸ்கர் நாட்டிற்கு அனுப்பப்பட்டுள்ளது.

8. ஆஸ்திரேலியன் ஓபன் டென்னிஸ் போட்டியின் மகளிா் இரட்டையா் பிரிவில் சாம்பியன் பட்டம் வென்றவர்கள்?

  1. டிமியா பாபோஸ் – கிறிஸ்டினா மிளாடெனோவிச்
  2. பாா்போரா – ஹிஸியா
  3. சானியா மிர்சா – மார்டினா ஹிங்கிஸ்
  4. செரினா வில்லியம்ஸ் – நவோமி ஒசாகா
Answer & Explanation
Answer: டிமியா பாபோஸ் – கிறிஸ்டினா

Explanation:

ஆஸ்திரேலியன் ஓபன் டென்னிஸ் போட்டியின் மகளிா் இரட்டையா் பிரிவில் டிமியா பாபோஸ்( Timea Babos) – கிறிஸ்டினா மிளாடெனோவிச் (Kristina Mladenovic) இணை சாம்பியன் பட்டத்தை வென்றது.

இரண்டாம் இடத்தை பாா்போரா- ஹிஸியா இணை பெற்றது.

9. கடலோர காவல்படை தினம் எப்போது அனுசரிக்கப்படுகிறது?

  1. ஜனவரி 30
  2. ஜனவரி 31
  3. பிப்ரவரி 1
  4. பிப்ரவரி 2
Answer & Explanation
Answer: பிப்ரவரி 1

Explanation:

இந்திய கடலோர காவல் படை தொடங்கப்பட்ட பிப்ரவரி 1ஆம் தேதி (1977) ஆண்டுதோறும் கடலோர காவல் தினமாக அனுசரிக்கப்படுகிறது.

இந்த ஆண்டு 43வது கடலோர காவல் படை தினம் கொண்டாடப்பட்டது.

இந்திய கடலோர காவல் படை 1977 பிப்ரவரி 1-ல் தற்காலிகமாக தொடங்கப்பட்டு, 1978 ஆகஸ்ட் 18-ல் சட்டப்பூர்வமாக உருவாக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்திய கடலோர காவல் படை தலைவர்: கிருஷ்ணசாமி நடராஜன்

10. “Sebastian and Sons: A Brief History of Mrdangam Makers” என்ற புத்தகத்தின் ஆசிரியர்?

  1. ஸ்வப்னில் சப்ரே
  2. டி.எம்.கிருஷ்ணா
  3. சஞ்சய் சுப்ரமண்யன்
  4. அபிஷேக் ரகுராம்
Answer & Explanation
Answer: டி.எம்.கிருஷ்ணா

More TNPSC Current Affairs



1 thought on “TNPSC Current Affairs Question and Answer in Tamil 1st February 2020”

Leave a Comment