TNPSC Current Affairs Question and Answer in Tamil 1st February 2021

Current Affairs in Tamil 1st February 2021

Hello, TNPSC Aspirants, Here we provide the Current Affairs question and answer in Tamil for 1st February 2021. Take the quiz and improve your Current Affairs Knowledge.

TNPSC Current Affairs 1st February 2021



1. இந்திய நீதி அறிக்கை 2020-ன் படி மக்களுக்கு நீதி வழங்கும் மாநிலங்கள் பட்டியலில் முதலிடம் வகிக்கும் மாநிலம் ?

  1. மஹாராஷ்டிரா
  2. கேரளா
  3. டெல்லி
  4. தமிழ்நாடு
Answer & Explanation

Answer: மஹாராஷ்டிரா

Explanation:

India Justice Report 2020

  • டாட்டா அறக்கட்டளை வெளியிட்ட இந்திய நீதி அறிக்கை 2020-ன் படி மக்களுக்கு நீதி வழங்கும் மாநிலங்களில் மஹாராஷ்டிரா மாநிலம் முதலிடம் பிடித்துள்ளது.
  • தமிழகம் இப்பட்டியலில் இரண்டாம் இடம் பிடித்துள்ளது, இப்பட்டியலில் உத்திர பிரதேசம் கடைசி இடத்தை பிடித்துள்ளது.

2. இந்தியாவின் முதல் படகு நூலகம் (Boat Library) பின்வரும் எந்த நகரத்தில் தொடங்கப்பட்டுள்ளது?

  1. கோழிக்கோடு
  2. கொல்கத்தா
  3. பாட்னா
  4. பனாஜி
Answer & Explanation

Answer: கொல்கத்தா

Explanation:

இந்தியாவின் முதல் படகு நூலகம் (Boat Library) “கொல்கத்தாவில்” தொடங்கப்பட்டுள்ளது.

குழந்தைகள் பயனடையும் வகையில் 500க்கும் மேற்பட்ட ஆங்கில மற்றும் வங்காள புத்தகங்கள் இந்த நூலகத்தில் வைக்கப்பட்டுள்ளன

3. சமீபத்தில் ஸ்டார்ஸ் திட்டத்திற்கு (STARS Project) நிதி வழங்குவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ள சர்வதேச அமைப்பு?

  1. உலக வங்கி
  2. ஆசிய வளர்ச்சி வங்கி (ADB)
  3. புதிய மேம்பாட்டு வங்கி (NDB)
  4. சர்வதேச நாணய நிதியம் (IMF)
Answer & Explanation

Answer: உலக வங்கி

Explanation:

மத்திய கல்வித்துறை அமைச்சகம் சார்பில், மாநிலங்களுக்கான கற்பித்தலை மேம்படுத்துதல் மற்றும் தேர்வு முடிவுளை மேம்படுத்துதலை நோக்கமாக கொண்ட ஸ்டார்ஸ் திட்டத்தை (STARS Project) செயல்படுத்துவதற்தான நிதியுதவி வழங்குவது தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில், பொருளாதார விவகாரத்துறை (DEA) மற்றும் உலக வங்கி (World Bank) இடையே கையெழுத்தாகியுள்ளது

இத்திட்டம் ராஜஸ்தான், மத்திய பிரதேசம், மஹாராஷ்டிரா, கேரளா, இமாச்சல பிரதேசம் மற்றும் ஒடிசா ஆகிய மாநிலங்களை உள்ளடக்கியது

STARS- Strengthening Teaching-Learning and Results for State

4. 2020 ஆம் ஆண்டுக்கான ஊழல் குறியீடு பட்டியலில் இந்தியா வகிக்கும் இடம்?

  1. 81
  2. 78
  3. 80
  4. 86
Answer & Explanation

Answer: 86

Explanation:

Corruption Perceptions Index 2020

ஊழல் குறியீடு பட்டியலில் இந்தியா 6 இடங்கள் சறுக்கி 86வது இடத்திற்கு பின்தங்கியுள்ளது.

அரசு அலுவலகங்கள், பொது வணிக நிறுவனங்களில் நடைபெறும் ஊழலை அடிப்படையாக கொண்டு இப்பட்டியல் வெளியிடப்படுகிறது

இந்த பட்டியலை ஆண்டுதோறும் ஜெர்மனியை சேர்ந்த ‘டிரான்ஸ்பரன்சி இன்டர்நேஷ்னல்’ நிறுவனம் வெளியிடுகிறது.

இப்பட்டியலில் நியூசிலாந்தும் டென்மார்க்கும் முதலிடம் பிடித்துள்ளன

5. “தேசிய தகவல் சேவை மையம்” (NICSI) தொடங்கப்பட்ட ஆண்டு?

  1. 1980
  2. 1991
  3. 1995
  4. 2001
Answer & Explanation

Answer: 1995

Explanation:

தேசிய தகவல் மையத்தின் கீழ் செயல்படும் பொதுத்துறை நிறுவனமான “தேசிய தகவல் சேவை மையம்” (NICSI) தனது வெள்ளி விழாவை ஜனவரி 28ம் தேதி கொண்டாடியுள்ளது

வெள்ளி விழாவை முன்னிட்டு “தேஜாஸ்”[TEJAS] -காட்சி நுண்ணறிவு கருவியை (Virtual Intelligence) இந்த அமைச்சகம் வெளியிட்டுள்ளது

மேலும் அரசு ஊழியர்களுக்காக வீட்டிலிருந்தே வேலை செய்தல் வலைத்தளத்தையும் இந்த அமைச்சகம் வெளியிட்டுள்ளது





6. சமீபத்தில் இந்தியா எந்த நாட்டுடன் இணைந்து, 2021ம் ஆண்டை சுற்றுச்சூழல் ஆண்டாக” அறிவித்துள்ளது?

  1. ரஷ்யா
  2. பிரான்ஸ்
  3. இங்கிலாந்து
  4. அமெரிக்கா
Answer & Explanation

Answer: பிரான்ஸ்

Explanation:

Indo-French year of Environment 2021

உலக சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் இந்தியாவும் பிரான்சும் இணைந்து, 2021ம் ஆண்டை “இந்தோ-பிரான்ஸ் சுற்றுச்சூழல் ஆண்டாக” அறிவித்துள்ளனர்.

7. சமீபத்தில் பாசுமதி அரிசிக்கு புவிசார் குறியீடு பெற்றுள்ள நாடு?

  1. இந்தியா
  2. இந்தோனேசியா
  3. பாகிஸ்தான்
  4. பங்களாதேஷ்
Answer & Explanation

Answer: பாகிஸ்தான்

Explanation:

8. சையத் முஷ்டாக் அலி கோப்பையை எத்தனையாவது முறையாக தமிழக அணி வென்றுள்ளது?

  1. 1
  2. 2
  3. 3
  4. 4
Answer & Explanation

Answer: 2வது முறை

Explanation:

முஷ்டாக் அலி கோப்பைக்கான இறுதி ஆட்டத்தில் தமிழக அணி குஜராத் மாநிலத்திற்குட்பட்ட பரோடா அணியை வீழ்த்தி வெற்றி பெற்றுள்ளது.

14 ஆண்டுகளுக்கு பின்னர் தமிழ்நாடு கிரிக்கெட் அணி, சையத் முஸ்தக் அலி கோப்பையை வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

9. “By Many a Happy Accident: Recollections of a Life” என்ற புத்தகம் பின்வரும் யாருடைய சுயசரிதை?

  1. ஹமித் அன்சாரி
  2. பிரணாப் முகர்ஜி
  3. வெங்கையா நாயுடு
  4. மன்மோகன்சிங்
Answer & Explanation

Answer: ஹமித் அன்சாரி

Explanation:

முன்னாள் குடியரசு துணைத் தலைவர் ஹமித் அன்சாரியின் சுயசரிதை “By Many a Happy Accident: Recollections of a Life” என்ற பெயரில் வெளியிடப்பட்டுள்ளது.

10. கடலோர காவல்படை தினம் எப்போது அனுசரிக்கப்படுகிறது?

  1. ஜனவரி 30
  2. ஜனவரி 31
  3. பிப்ரவரி 1
  4. பிப்ரவரி 2
Answer & Explanation

Answer: பிப்ரவரி 1

Explanation:

இந்திய கடலோர காவல் படை தொடங்கப்பட்ட பிப்ரவரி 1ஆம் தேதி (1977) ஆண்டுதோறும் கடலோர காவல் தினமாக அனுசரிக்கப்படுகிறது.

இந்த ஆண்டு 44வது கடலோர காவல் படை தினம் கொண்டாடப்பட்டது.

இந்திய கடலோர காவல் படை 1977 பிப்ரவரி 1-ல் தற்காலிகமாக தொடங்கப்பட்டு, 1978 ஆகஸ்ட் 18-ல் சட்டப்பூர்வமாக உருவாக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்திய கடலோர காவல் படை தலைவர்: கிருஷ்ணசாமி நடராஜன்

More TNPSC Current Affairs

1 thought on “TNPSC Current Affairs Question and Answer in Tamil 1st February 2021”

Leave a Comment