Hello, TNPSC Aspirants, Here we provide Current Affairs question and answer in Tamil for 2nd February 2020. Take the quiz and improve your Current Affairs Knowledge.
1. சமீபத்தில் தஞ்சை பெரிய கோவில் குடமுழுக்கு விழாவுக்காக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள மொபைல் செயலி?
தஞ்சை 1000
நம்ம தஞ்சை
நம்ம ஊரு தஞ்சை
தஞ்சை பூமியில்
Answer & Explanation
Answer: நம்ம தஞ்சை
Explanation:
தஞ்சாவூர் பெரிய கோவில் குடமுழுக்கு விழாவை முன்னிட்டு, பொதுமக்களுக்கு உதவும் வகையில், ‘நம்ம தஞ்சை’ என்ற பெயரில் மொபைல் செயலி ஒன்றை மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ளது.
2. தமிழகத்தின் எந்த பகுதியில் புதிய தொல்லியல் அருங்காட்சியகம் அமைக்கப்பட உள்ளது?
ஆதிச்சநல்லூர்
கீழடி
கோடியக்கரை
திருச்சி
Answer & Explanation
Answer: ஆதிச்சநல்லூர்
Explanation:
காவிரிப்பூம்பட்டினத்தை தொடர்ந்து ஆதிச்சநல்லூரில் தொல்லியல் அருங்காட்சியகம் அமைக்கப்பட இருப்பதாக பட்ஜெட் உரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தின் ஆதிச்சநல்லூர் உட்பட இந்திய அளவில் 5 தொல்லியல் அருங்காட்சியங்கள் அமைக்கப்பட உள்ளன.
மற்ற நான்கு இடங்கள்.,
ஹரியானா – ராக்கிகர்
உத்திரபிரதேசம் – அஸ்தினாபூர்
அசாம் – ஷிவ்சாகர்
குஜராத் – தோலாவிரா
3. 2022ஆம் ஆண்டு G-20 மாநாடு எங்கு நடைபெற உள்ளது?
ஜப்பான்
சவூதி அரேபியா
இத்தாலி
இந்தியா
Answer & Explanation
Answer: இந்தியா
Explanation:
வரும் 2022 ஆம் ஆண்டில் 17வது G-20 மாநாடு இந்தியாவில் நடைபெறுகிறது. ஜி20 மாநாட்டை நடத்த ரூ.100 கோடியை மத்திய அரசு சமீபத்தில் ஒதுக்கியுள்ளதாக பட்ஜெட் உரையில் நிதி அமைச்சர் தெரிவித்தார்.
இந்த ஆண்டு வரும் நவம்பர் மாதம் 21 மற்றும் 22 தேதிகளில் G-20 மாநாட்டை சவூதி அரேபியா நடத்த உள்ளது குறிப்பிடத்தக்கது.
4. சமீபத்தில் அளவுக்கு அதிகமான வெட்டுக்கிளிகளின் பாதிப்பினால் அவசரநிலையை அறிவித்துள்ள நாடு?
கென்யா
பாகிஸ்தான்
சீனா
எத்தியோப்பியா
Answer & Explanation
Answer: பாகிஸ்தான்
Explanation:
பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் அளவுக்கு அதிகமான வெட்டுக்கிளிகளின் பாதிப்பினால் அந்த பகுதியில் அவசரநிலையை அறிவித்துள்ளது.
வெட்டுக்கிளிகளைக் கட்டுப்படுத்துவதற்காக பாகிஸ்தான் அரசு ரூ.730 கோடி ஒதுக்கீடு செய்துள்ளது.
மேலும், சமீபத்தில் கென்யா நாடும் வெட்டுக்கிளிகளால் அதிகமாக பாதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
5. சமீபத்தில் காமன்வெல்த் அமைப்பின் உறுப்பினராக மீண்டும் இணைந்துள்ள நாடு?
மாலத்தீவு
கமரூன்
நமீபியா
ருவாண்டா
Answer & Explanation
Answer: மாலத்தீவு
Explanation:
சமீபத்தில் காமன்வெல்த் அமைப்பின் 54வது உறுப்பினர் நாடாக மாலத்தீவுகள் இணைந்துள்ளது.
கடந்த 2016-ஆம் ஆண்டு காமன்வெல்த் அமைப்பில் இருந்து விலகிய மாலத்தீவு மீண்டும் பிப்ரவரி 1 அன்று இணைத்துள்ளது.
மாலத்தீவு அதிபர்: இப்ராஹிம் முஹம்மது சோலிஹ்
6. ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் பெண்கள் ஒற்றையர் பிரிவில் சாம்பியன் பட்டத்தை வென்றவர்?
சோபியா கெனின்
கார்பைன் முகுருஜா
மரியா ஷரபோவா
ஷெரினா வில்லியம்ஸ்
Answer & Explanation
Answer: சோபியா கெனின்
Explanation:
அமெரிக்காவின் சோபியா கெனின் (Sofia Kenin) ஸ்பெயின் வீராங்கனை கார்பைன் முகுருசாவை (Garbine Muguruza) தோற்கடித்து ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் பெண்கள் ஒற்றையர் பிரிவில் சாம்பியன் பட்டத்தை வென்றார்.
இளம் வயதில் (21 வயது 80 நாட்கள்) இந்த பட்டத்தை பெறும் இரண்டாவது வீராங்கனை இவர் என்பது குறிப்பிடத்தக்கது.
7. ஹெம்பல் உலகக் கோப்பை படகு போட்டியில் தங்க பதக்கம் வென்றவர்?
நேத்ரா குமணன்
வஸிலியா
எரிகா ரெயின்கே
ஜக்காரியா
Answer & Explanation
Answer: எரிகா ரெயின்கே
Explanation:
அமெரிக்காவின் மியாமியில் சமீபத்தில் நடைபெற்ற ஹெம்பல் உலகக் கோப்பை படகு போட்டியின் லேசர் ரேடியல் பிரிவில் அமெரிக்காவின் எரிகா ரெயின்கே தங்கமும், கிரீஸின் வஸிலியா வெள்ளியும் வென்றனா்.
இப்போட்டியில் தமிழகத்தை சேர்ந்த நேத்ரா குமணன் வெண்கல பதக்கத்தை வென்றார்.
இதன் மூலம் உலகக் கோப்பை படகு போட்டியில் பதக்கம் வென்ற முதல் இந்திய வீராங்கனை என்ற பெருமையை பெற்றுள்ளார்.
8. உலக சதுப்பு நில தினம் (உலக ஈரநிலங்கள் தினம்) எப்போது அனுசரிக்கப்படுகிறது?
ஜனவரி 30
ஜனவரி 31
பிப்ரவரி 01
பிப்ரவரி 02
Answer & Explanation
Answer: பிப்ரவரி 2
Explanation:
உலகிலுள்ள சதுப்பு நிலங்களை பாதுகாக்கும் பொருட்டு யுனெஸ்கோ (UNESCO) அமைப்பினால் ஈரான் நாட்டின் ராம்சார் நகரில் பிப்ரவரி 02, 1971 அன்று சர்வதேச மாநாடு நடத்தப்பட்டது.
அதனை நினைவுகூறும் வகையில் ஆண்டுதோறும் பிப்ரவரி-2 உலக சதுப்பு நில தினமகா கொண்டாடப்படுகிறது.
இந்தியாவில் சமீபத்தில் கண்டறியப்பட்டுள்ள 10 புதிய சதுப்புநிலப் பகுதிகள் (ராம்சார் தலங்களாக [Ramsar sites]) – யும் சேர்த்து மொத்தம் 37 ராம்சார் தலங்கள் உள்ளது குறிப்பிடத்தக்கது.