Hello, TNPSC Aspirants, Here we provide the Current Affairs question and answer in Tamil for 2nd February 2021. Take the quiz and improve your Current Affairs Knowledge.
1. சமீபத்தில் ‘ஆபரேஷன் ஸ்மைல்’ என்ற செயல் திட்டம் எங்கு தொடங்கப்பட்டுள்ளது?
கேரளா
ஆந்திரா
தமிழ்நாடு
புதுச்சேரி
Answer & Explanation
Answer: தமிழ்நாடு
Explanation:
பொது இடங்களில் பிச்சை எடுக்கும் குழந்தைகள், வேறு மாவட்ட, மாநிலங்களில் இருந்து தவறி வந்த குழந்தைகள், குழந்தைத் தொழிலாளா், ஆதரவற்ற குழந்தைகளை மீட்டு அவா்களுக்கு மறுவாழ்வு அளிக்க ‘ஆபரேஷன் ஸ்மைல்’ என்ற திட்டதை தமிழக போலீசார் மேற்கொண்டுள்ளனர்.
இதில் ஒருபகுதியாக ‘ஆபரேஷன் ஸ்மைல்’ வாகனத்தை வேலூா் ஆட்சியா் தொடங்கி வைத்தாா்.
2. தமிழ்நாடு அரசின் அனைத்து உதவிகளையும் பெற அறிமுகம் செய்யப்பட்டுள்ள புதிய இலவச தொலைபேசி எண்?
127
1105
1100
151
Answer & Explanation
Answer: 1100
Explanation:
தமிழ்நாடு அரசின் அனைத்து உதவிகளையும் வீட்டிலிருந்தபடியே பெற 1100 என்ற இலவச எண்ணை ஆளுநர் பன்வாரிலால் புரோகித் அறிமுகப்படுத்தியுள்ளார்
3. பிப்ரவரி 3 அன்று, சர்வதேச விமான கண்காட்சி எங்கு தொடங்க உள்ளது?
சென்னை
பெங்களூர்
கொச்சின்
ஹைதராபாத்
Answer & Explanation
Answer: பெங்களூர்
Explanation:
மத்திய அரசின் பாதுகாப்புத் துறை சார்பில் 13-வது பெங்களூரு சர்வதேச விமான கண்காட்சி எலகங்கா விமானப்படை தளத்தில் பிப்ரவரி 3 தொடங்கி மூன்று நாட்கள் நடைபெற உள்ளது.
கண்காட்சியை மத்திய ராணுவத் துறை மந்திரி ராஜ்நாத்சிங் தொடங்கி வைக்கிறார்.
4. காப்பீட்டுத் துறையில் எத்தனை சதவீத அன்னிய நேரடி முதலீட்டுக்கு மத்திய அரசு அனுமதி வழங்க உள்ளது ?
49%
60%
74%
80%
Answer & Explanation
Answer: 74%
Explanation:
காப்பீட்டுத் துறையில் அந்நிய நேரடி முதலீடு வரம்பு 49 சதவீதத்திலிருந்து 74 சதவீதமாக அதிகரிக்க ஒப்புதல் வழங்கப்படுவதாக பட்ஜெட்-2021 துறையில் அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் எல்ஐசி நிறுவனத்தின் பங்குகள் பொதுமக்கள் வாங்கும் வகையில் வெளியிடப்பட உள்ளன.
5. சமீபத்தில் எந்த நாட்டில் ராணுவ ஆட்சி அமுல்படுத்தப்பட்டுள்ளது?
மியான்மர்
பங்களாதேஷ்
சிங்கப்பூர்
இலங்கை
Answer & Explanation
Answer:மியான்மர்
Explanation:
மியான்மரில் ராணுவம் அந்நாட்டு ஆட்சியை கைபற்றியுள்ளது. மேலும் ஓராண்டுக்கு நெருக்கடி நிலையை அறிவித்துள்ளது. ஆங் சான் சூச்சி உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் அனைவரும் சிறை வைக்கப்பட்டுள்ளனர்.
6. “Global Climate Risk Index 2021” இன் படி அதிகம் பாதிப்படைந்த நாடுகள் பட்டியலில் இந்தியா வகிக்கும் இடம்?
4
7
9
12
Answer & Explanation
Answer: 7
Explanation:
2019ம் ஆண்டில் பருவநிலை மாற்றத்தால் அதிகம் பாதிப்படைந்த நாடுகள் பட்டியலில் முதலிடத்தை மொசாம்பிக் நாடு பிடித்துள்ளது.
இப்பட்டியலில் இந்தியா 7வது இடம் பிடித்துள்ளது.
இந்த பட்டியலை “Germanwatch” என்ற நிறுவனம் வெளியிட்டுள்ளது.
7. சமீபத்தில் நாசாவின் செயல் தலைவராக நியமிக்கப்பட்டுள்ள இந்திய வம்சாவளி நபர்?
அய்ஷா ஷா
வினய் ரெட்டி
கௌதம் ராகவன்
பவ்யா லால்
Answer & Explanation
Answer: பவ்யா லால்
Explanation:
அமெரிக்காவின் நாசாவின் செயல் தலைவராக இந்தியா வம்சாவளியை சேர்ந்த பவ்யா லால் நியமனம் செய்யப்பட்டுள்ளார்
8. சமீபத்தில் காலமான பி.எஸ். நிவாஸ் பின்வரும் எந்த படத்திற்காக தேசிய விருதை பெற்றுள்ளார்?
சாகர சங்கமம்
மோகனியாட்டம்
கிழக்கே போகும் ரயில்
16 வயதினிலே
Answer & Explanation
Answer: மோகனியாட்டம்
Explanation:
தமிழ்ச் சினிமாவின் குறிப்பிடத்தக்க ஒளிப்பதிவாளர்களில் ஒருவராகத் திகழ்ந்த பி.எஸ். நிவாஸ் பிப்ரவரி 1 அன்று கேரளாவில் கோழிக்கோட்டில் உடல் நலக் குறைவால் காலமானார்.
1976ஆம் ஆண்டு ‘மோகனியாட்டம்’ என்ற மலையாளப் படத்தில் ஒளிப்பதிவு செய்தமைக்காக சிறந்த ஒளிப்பதிவுக்கான தேசிய விருதினைப் பெற்றுள்ளார்.
9. ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் புதிய தலைமை செயல் அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளவர்?
அஸ்வினி குமார் திவாரி
இந்து பூஷன்
ஜெய் அமித் ஷா
R. S சர்மா
Answer & Explanation
Answer: R. S சர்மா
Explanation:
TRAI இன் முன்னாள் தலைவரான R. S சர்மா ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் புதிய தலைமை செயல் அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார்.
ஜெய் அமித் ஷா – President of Asian Cricket Council
10. உலக சதுப்பு நில தினம் (உலக ஈரநிலங்கள் தினம்) எப்போது அனுசரிக்கப்படுகிறது?
ஜனவரி 30
ஜனவரி 31
பிப்ரவரி 1
பிப்ரவரி 2
Answer & Explanation
Answer:பிப்ரவரி 2
Explanation:
உலகிலுள்ள சதுப்பு நிலங்களை பாதுகாக்கும் பொருட்டு யுனெஸ்கோ (UNESCO) அமைப்பினால் ஈரான் நாட்டின் ராம்சார் நகரில் பிப்ரவரி 02, 1971 அன்று சர்வதேச மாநாடு நடத்தப்பட்டது.
அதனை நினைவுகூறும் வகையில் ஆண்டுதோறும் பிப்ரவரி-2 உலக சதுப்பு நில தினமாக கொண்டாடப்படுகிறது.
Theme: Wetlands and Water (2020 Theme: Wetlands and Biodiversity)