Current Affairs in Tamil 3rd February 2020
Hello, TNPSC Aspirants, Here we provide Current Affairs question and answer in Tamil for 3rd February 2020. Take the quiz and improve your Current Affairs Knowledge.

1. சமீபத்தில் கோ – 6 என்ற சிறிய வெங்காய ரகத்தை அறிமுகம் செய்துள்ள மாநிலம்?
- கேரளா
- தெலுங்கானா
- ஆந்திரப்ரதேஷ்
- தமிழ்நாடு
Answer & Explanation
Answer: தமிழ்நாடு
Explanation:
தமிழ்நாடு வேளாண் பல்கலைகழக ஆராச்சியாளர்கள் ‘கோ – 6’ சிறிய வெங்காய ரகத்தை கண்டறிந்துள்ளனர்.
TNPSC Group 1 Model Papers – Download
2. எந்த ஆண்டுக்குள் காசநோயை முற்றிலும் ஒழிக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது?
- 2022
- 2023
- 2024
- 2025
Answer & Explanation
Answer: 2025
Explanation:
இந்திய அரசு 2025-ம் ஆண்டுக்குள் காசநோயை முற்றிலும் ஒழிக்க திட்டமிட்டுள்ளது.
உலகச் சுகாதார நிறுவனம், 2030-ம் ஆண்டுக்குள் காசநோயை முற்றிலும் ஒழிக்க திட்டமிட்டுருப்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் உலகக் காசநோய் தினம் ஓவ்வொரு ஆண்டும் மார்ச் 24 அன்று அனுசரிக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.
3. இந்திய ஆயுள் காப்பீட்டுக் கழக சட்டம் எப்போது கொண்டுவரப்பட்டது?
- 1950
- 1952
- 1954
- 1956
Answer & Explanation
Answer: 1956
Explanation:
சமீபத்தில் மத்திய அரசு எல்.ஐ.சி பங்குகளை விற்பனை செய்ய இருப்பதாக அறிவித்திருந்தது.
அதை விற்பனை செய்ய வேண்டுமானால் இந்திய ஆயுள் காப்பீட்டுக் கழகம் (LIC) சட்டம் 1956-இல் திருத்தும் கொண்டுவந்தால் மட்டுமே முடியும்.
இந்திய ஆயுள் காப்பீட்டுக் கழகம் (LIC) சட்டம் ஜூன் 18, 1956 அன்று நாடாளுமன்றத்தால் நிறைவேற்றப்பட்டு ஜூலை 1, 1956 முதல் நடைமுறைக்கு வந்தது.
மேலும் LIC தொடங்கப்பட்ட நாள் செப்டம்பர் 01, 1956.
4. சமீபத்தில் மத்திய மறைமுக வரிகள் மற்றும் சுங்க வரிகள் வாரியத்திய (CBIC) தலைவராக நியமிக்கப்பட்டுள்ளவர்?
- ராஜீவ் லோகன்
- பிரணாப் குமார் தாஸ்
- அஜய் பூஷண்
- எம். அஜித் குமார்
Answer & Explanation
Answer: எம். அஜித் குமார்
Explanation:
மத்திய மறைமுக வரிகள் மற்றும் சுங்க வரிகள் வாரியத்திய (CBIC) தலைவராக எம். அஜித் குமார் நியமிக்கப்பட்டுள்ளார்.
GST, உற்பத்தி வரி , விற்பனை வரி, சேவை வரி, மதிப்புக் கூட்டு வரி போன்றவை மறைமுக வரிகள் ஆகும்.
மேலும்.,
மத்திய நேரடி வரிகள் வாரியத் (CBDT) ) தலைவா் பிரமோத் சந்திர மோடி (P.C Modi ) என்பது குறிப்பிடத்தக்கது.
5. கரோனா வைரஸினால் சீனாவிற்கு வெளியே எந்த நாட்டில் உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது?
- பிலிப்பைன்ஸ்
- ஜப்பான்
- தாய்லாந்து
- சிங்கப்பூர்
Answer & Explanation
Answer: பிலிப்பைன்ஸ்
Explanation:
கொரோனா வைரஸ் பாதிப்புக்கு உள்ளான ஒருவர் பிலிப்பைன்ஸில் பலியாகி உள்ளார். சீனாவுக்கு வெளியே பதிவாகும் முதல் மரணம் இது என்பது குறிப்பிடத்தக்கது.
6. சமீபத்தில் ஐபிஎம் நிறுவனத்தின் புதிய தலைமை செயல் அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளவர்?
- அரவிந்த் கிருஷ்ணா
- விர்ஜினியா ரோமெட்டி
- அஜய் பிஷாரியா
- ராகுல் ஜோஹ்ரி
Answer & Explanation
Answer: அரவிந்த் கிருஷ்ணா
Explanation:
IBM நிறுவனத்தின் புதிய தலைமை செயல் அதிகாரியாக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அரவிந்த் கிருஷ்ணா நியமிக்கப்பட்டுள்ளார்.
7. ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியின் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் சாம்பியன் பட்டம் வென்றவர்?
- டாமினிக் தியம்
- நோவாக் ஜோகோவிச்
- ரோஜர் பெடரர்
- ரபெல் நடால்
Answer & Explanation
Answer: நோவாக் ஜோகோவிச்
Explanation:
ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியின் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் ஆஸ்திரியாவின் டாமினிக் தியம்மை வீழ்த்தி செர்பியாவின் நோவாக் ஜோகோவிச் சாம்பியன் பட்டத்தை வென்றார்.
ஆஸ்திரேலிய ஓபன் தொடரில் கடந்த 2008, 2011, 2012, 2013, 2015, 2016, 2019 ஆண்டுகளை தொடர்ந்து தற்போது எட்டாவது முறையாக (2020) சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளார்.
இது அவருக்கு 17வது கிராண்ட்ஸ்லாம் பட்டம் ஆகும். இதன் மூலம் அதிக கிராண்ட்ஸ்லாம் பட்டம் பெற்றவர்கள் பட்டியலில் ரோஜர் பெடரர் (20), ரபெல் நடால் (19) ஆகியயோரை தொடர்ந்து மூன்றாவது இடத்தில் உள்ளார்.
மேலும் சில.,
- காலிறுதி போட்டியில் மிலோஸ் ராவ்னிக் (கனடா) உடன் மோதினார்.
- அரையிறுதி போட்டியில் ரோஜர் பெடரர் (சுவிச்சர்லாந்து) உடன் மோதினார்.
8. தாய்லாந்து ஐடிஎப் சேலஞ்சா் டென்னிஸ் போட்டியில் பெண்கள் ஒற்றையர் பிரிவில் சாம்பியன் பட்டம் வென்றவர்?
- சோல் பாக்கியட்
- பிபியன் ஸ்கூப்
- அங்கிதா ரெய்னா
- சோபியா கெனின்
Answer & Explanation
Answer: அங்கிதா ரெய்னா
Explanation:
தாய்லாந்து ஐடிஎப் சேலஞ்சா் டென்னிஸ் போட்டியின் பெண்கள் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் அங்கிதா ரெய்னா, பிரான்ஸின் சோலோ பக்கெட்டை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை வென்றாா்.
மேலும், பெண்களுக்கான இரட்டையர் பிரிவு போட்டியிலும் பிபியன் ஸ்கூப் உடன் இணைந்து சாம்பியன் பட்டத்தை வென்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
9. இந்திய பாரா ஒலிம்பிக் சங்க தலைவராக தேர்வுசெய்யப்பட்டுள்ளவர்?
- சந்திரசேகர்
- தீபா மாலிக்
- தேவேந்திர ஜஜாரியா
- நரிந்தர் துருவ் பாத்ரா
Answer & Explanation
Answer: தீபா மாலிக்
Explanation:
Paralympic Committee of India (PCI) தலைவராக ஹரியானவை சேர்ந்த தீபா மாலிக் தேர்வுசெய்யப்பட்டுள்ளார்.
2016 ரியோ பாரா ஒலிம்பிக் போட்டியில் குண்டு எறிதலில் பிரிவில் வெள்ளிப்பதக்கம் வென்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும்.,
2019 ஆண்டுக்கான ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருது (மாற்றுத் திறனாளி) பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்திய ஒலிம்பிக் சங்க தலைவர் – நரிந்தர் துருவ் பாத்ரா
More TNPSC Current Affairs
Related