Hello, TNPSC Aspirants, Here we provide the Current Affairs question and answer in Tamil for 3rd February 2021. Take the quiz and improve your Current Affairs Knowledge.
1. இந்திய அளவில் கடந்த நவம்பர் மாதம் நடைபெற்ற சி.ஏ. தேர்வில் முதலிடம் பிடித்த நபர்?
ஜான் பிரிட்டோ
ஸ்ரீபிரியா
இசக்கி ராஜ்
கோமல் கிஷோர்
Answer & Explanation
Answer: இசக்கி ராஜ் & கோமல் கிஷோர்
Explanation:
இந்திய அளவில் கடந்த நவம்பர் மாதம் நடைபெற்ற சி.ஏ. தேர்வில் பழைய பாடதிட்டத்தின் படி சேலம் இசக்கி ராஜ் 800 மதிப்பெண்ணுக்கு 553 மதிப்பெண்கள் பெற்று முதலிடமும், சென்னையை சேர்ந்த மாணவி ஸ்ரீபிரியா இரண்டாவது இடமும் பெற்றார்.
மேலும் புதிய பாடதிட்டடத்தின் படி தேர்வு எழுதியதில் தேசிய அளவில் மும்பையை சேர்ந்த கோமல் கிஷோர் ஜெயின் 75% மதிப்பெண்களுடன் முதலிடமும், சூரத் மாணவர் முதீத் அகர்வால் இரண்டாம் இடமும் பிடித்துள்ளார்
2. அரசு ஊழியர்கள் வீடு கட்டுவதற்கு வழங்கப்படும் முன்பணம் எவ்வளவு?
25 லட்சம்
30 லட்சம்
35 லட்சம்
40 லட்சம்
Answer & Explanation
Answer: 40 லட்சம்
Explanation:
அரசு ஊழியர்கள் வீடு கட்டுவதற்காக, அரசு சார்பில் வழங்கப்படும் முன்பணம் ரூ.25 லட்சத்தில் இருந்து ரூ.40 லட்சமாக உயர்த்தி தமிழக அரசு அரசாணை வெளியீட்டுள்ளது.
3. புதிதாக விமான நிலையங்கள் துவங்கப்பட உள்ள நகரங்கள் பட்டியலில் தவறான ஒன்று?
தஞ்சாவூர்
நெய்வேலி
வேலூர்
தென்காசி
Answer & Explanation
Answer: தென்காசி
Explanation:
தஞ்சை, நெய்வேலி, வேலூர் மற்றும் ராமநாதபுரத்தில் விமான நிலையங்கள் அமைக்க 160 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக விமான போக்குவரத்து துறை அமைச்சர் ஹர்திப் சிங் பூரி தெரிவித்துள்ளார்.
4. 2020 ஆம் ஆண்டுக்கான சிறந்த ஹிந்தி வார்த்தையாக தேர்வுசெய்யப்பட்டுள்ளது?
ஆதார்
நாரி சக்தி
சம்விதான்
ஆத்மநிர்பர்தா
Answer & Explanation
Answer: ஆத்மநிர்பர்தா
Explanation:
ஆக்ஸ்போர்டு அகராதி குழுமம் 2020 ஆம் ஆண்டுக்கான சிறந்த ஹிந்தி வார்த்தையாக, தற்சார்பு என்ற பொருள் கொண்ட ஆத்மநிர்பர்தா (Aatmanirbharta) என்ற வார்த்தையை தேர்வு செய்துள்ளது.
நாரி சக்தி – பெண்கள் சக்தி
சம்விதான் – அரசியல் சாசனம்
5. கேரளாவின் முதல் தாய்ப்பால் வங்கி எங்கு தொடங்கப்பட உள்ளது?
கண்ணூர்
எர்ணாகுளம்
திருவனந்தபுரம்
கொல்லம்
Answer & Explanation
Answer:எர்ணாகுளம்
Explanation:
எர்ணாகுளம் அரசு ஆஸ்பத்திரியில் கொச்சி ரோட்டரி கிளப் உதவியுடன் ரூ.35 லட்சம் செலவில் தாய்ப்பால் வங்கி (‘வாழ்வின் தேன்’) அமைக்கப்பட்டுள்ளது.
அதனை கேரள சுகாதாரத்துறை மந்திரி சைலஜா பிப்ரவரி 5 அன்று தொடங்கி வைக்கிறார்.
6. சமீபத்தில் Har Ghar Pani, Har Ghar Safai என்ற திட்டத்தை தொடங்கியுள்ள மாநிலம்?
குஜராத்
மத்தியபிரதேசம்
பஞ்சாப்
ராஜஸ்தான்
Answer & Explanation
Answer:பஞ்சாப்
Explanation:
மார்ச் 2022-ம் ஆண்டிற்குள் கிராமப்புறங்களுக்கு 100 சதவீதம் குழாய்களின் வழியே குடிநீர் விநியோகிக்க Har Ghar Pani, Har Ghar Safai என்ற திட்டத்தை பஞ்சாப் அரசு தொடங்கியுள்ளது
7. சமீபத்தில் புறஊதா கதிர்களை பயன்படுத்தி ரயில்பெட்டிகளை தூய்மைப்படுத்தும் பணியை தொடங்கியுள்ள மெட்ரோ ரயில் நிலையம்?
லக்னோ மெட்ரோ
டெல்லி மெட்ரோ
சென்னை மெட்ரோ
பெங்களூர் மெட்ரோ
Answer & Explanation
Answer: லக்னோ மெட்ரோ
Explanation:
புறஊதா கதிர்களை பயன்படுத்தி ரயில்பெட்டிகளை தூய்மைப்படுத்தும் பணி நாட்டில் முதன்முறையாக லக்னோ மெட்ரோ அறிமுகப்படுத்தியுள்ளது.
8. “The Little Book of Encouragement”என்ற புத்தகத்தை எழுதியவர்?
தலாய் லாமா
சாகிர் நாயக்
ரமேஷ் ஓஜா
ஆனந்திபென் படேல்
Answer & Explanation
Answer: தலாய் லாமா
9. ஐசிசி – யின் ஜனவரி மாத சிறந்த வீரர் விருதுக்கான பரிந்துரைப் பட்டியலில் இடம் பெற்றுள்ள இந்தியர்?
ரிஷப் பந்த்
ரவிச்சந்திரன் அஸ்வின்
முகமது சிராஜ்
நடராஜன்
Answer & Explanation
Answer:ரிஷப் பந்த்
Explanation:
ஜனவரி மாதத்துக்கான சிறந்த வீரருக்கான பரிந்துரைப் பட்டியலில் இந்தியாவின் ரிஷப் பந்த், இங்கிலாந்து கேப்டன் ஜோ ரூட், அயர்லாந்தின் பால் ஸ்டிர்லிங் ஆகிய மூவர் இடம் பெற்றுள்ளனர்.
மகளிர் பிரிவில் பாகிஸ்தானின் டயனா பைக், தென் ஆபிரிக்காவின் ஷப்னிம் இஸ்மாயில், தென் ஆபிரிக்காவின் காப் ஆகிய மூவர் இடம் பெற்றுள்ளனர்.
10. “பிருத்விராஜ் தொண்டைமான்” பின்வரும் எந்த விளையாட்டுடன் தொடர்பானவர்?
கிரிக்கெட்
துப்பாக்கி சுடுதல்
குத்துசண்டை
செஸ்
Answer & Explanation
Answer: துப்பாக்கி சுடுதல்
Explanation:
சமீபத்தில் நடைபெற்ற ஆசிய அளவிலான ஆன்லைன் துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப் போட்டியில் தமிழகத்தை சேர்ந்த பிருத்விராஜ் தொண்டைமான் வெண்கல பதக்கம் வென்றுள்ளார் .