Current Affairs in Tamil 4th February 2020
Hello, TNPSC Aspirants, Here we provide Current Affairs question and answer in Tamil for 4th February 2020. Take the quiz and improve your Current Affairs Knowledge.

1. கொரானா வைரஸ் பாதிப்பை தொடர்ந்து மாநில பேரிடர் என அறிவித்துள்ள இந்திய மாநிலம்?
- கேரளா
- ஒரிசா
- டெல்லி
- ஹரியாணா
Answer & Explanation
Answer: கேரளா
Explanation:
கேரளாவில் 3வது நபருக்கு கொரானா வைரஸ் இருப்பது உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து மாநில பேரிடராக அறிவித்துள்ளது.
TNPSC Group 1 Model Papers – Download
2. எக்ஸ்னோரா அமைப்பின், சர்வதேச தலைவராக நியமிக்கப்பட்டுள்ளவர்?
- ஏ.ஆர்.ரஹ்மான்
- ஏ.ஆர்.ரெஹானா
- ஜி.வி.பிரகாஷ்
- ரஹிமா ரஹ்மான்
Answer & Explanation
Answer: ஏ.ஆர்.ரெஹானா
Explanation:
சென்னையை தலைமையிடமாக கொண்டு இயங்கும் எக்ஸ்னோரா (Exnora) என்ற சுற்றுச்சூழல் சேவை அமைப்பின் சர்வதேச தலைவராக ஏ.ஆர்.ரெஹானா நியமிக்கப்பட்டுள்ளார்.
இவர் ஏ.ஆர்.ரஹ்மான் அவர்களின் சகோதரி என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும், இவ்வமைப்பின் பசுமை தூதராக ஜி.வி.பிரகாஷ் நியமிக்கப்பட்டுள்ளார்.
3. Antah Pragnya – 2020 என்ற கிராமப்புற தொழில்நுட்ப விழா எங்கு நடைபெறுகிறது?
- கர்நாடகா
- குஜராத்
- ஆந்திரப்ரதேஷ்
- தெலுங்கானா
Answer & Explanation
Answer: தெலுங்கானா
Explanation:
தேசிய அளவிலான இந்தியாவின் மிகப்பெரிய கிராம தொழில்நுட்ப விழாவான அந்தபிராக்னியா 2020 (Antah Pragnya) தெலுங்கானா மாநிலத்தில் உள்ள ராஜீவ் காந்தி அறிவு தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தில் நடைபெறுகிறது.
India’s Biggest Rural Technical Festival
4. அட்டு சுற்றுலா மண்டல திட்டம் பின்வரும் எந்த நாட்டுடன் தொடர்பானது?
- இந்தியா
- பங்களாதேஷ்
- மாலத்தீவு
- மியான்மர்
Answer & Explanation
Answer: மாலத்தீவு
Explanation:
மாலத்தீவின் சுற்றுலா திட்டமான “அட்டு சுற்றுலா மண்டல திட்டத்தை” (Addu tourism Zone) மேம்படுத்தும்பொருட்டு இந்தியா மற்றும் மாலத்தீவு நாடுகளுக்கு இடேயே சமீபத்தில் 5 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் செய்துகொள்ளப்பட்டன.
5. இலங்கை நாட்டின் சுகந்திர தினம் எப்போது அனுசரிக்கப்படுகிறது?
- பிப்ரவரி 4
- பிப்ரவரி 5
- ஜனவரி 27
- ஜனவரி 30
Answer & Explanation
Answer: பிப்ரவரி 4
Explanation:
இலங்கை அரசு தனது 72வது சுகந்திரத்தினத்தை பிப்ரவரி 4 அனுசரிக்கிறது.
ஆங்கிலேயரிடம் இருந்து பிப்ரவரி 4, 1948 ஆம் ஆண்டு சுகந்திரம் பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.
6. மாட்லா அபியான் (‘Matla Abhiyaan’) என்ற பெயரில் கடலோர காவல் ஒத்திகையை மேற்கொண்ட நாடு?
- இலங்கை
- மியான்மார்
- மாலதீவு
- இந்தியா
Answer & Explanation
Answer: இந்தியா
Explanation:
இந்திய கடற்படையின், கடலோர காவல் ஒத்திகை மாட்லா அபியான் (‘Matla Abhiyaan’) என்ற பெயரில் 29 ஜனவரி 2020 முதல் 2 பிப்ரவரி 2020 வரை ஐந்து நாட்களுக்கு கல்கத்தாவில் நடைபெற்றது.
7. சமீபத்தில் ஈராக்கின் புதிய பிரதமராக நியமிக்கப்பட்டுள்ளவர்?
- பர்ஹாம் சாலி
- அடில் அப்துல் மஹ்தி
- முகமது தவுபிக் அலாவி
- அமீர்-அப்பாஸ் ஹோவெய்டா
Answer & Explanation
Answer: முகமது தவுபிக் அலாவி
Explanation:
முன்னாள் பிரதமர் அடில் அப்துல் மஹ்தி கடந்த நவம்பர் மாதம் பதவி விலகினார்.
தற்போது ஈராக்கின் புதிய பிரதமராக முகமது தவுபிக் அலாவி என்பவரை அதிபர் பர்ஹாம் சாலி நியமித்துள்ளார்.
8. கோல்டன் கோ்ள் ஜூனியா் குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியா பெற்றுள்ள பதக்கங்களின் எண்ணிக்கை?
- 6
- 14
- 7
- 15
Answer & Explanation
Answer: 14
Explanation:
சொ்பியாவின் போராஸ் நகரில் நடைபெற்ற கோல்டன் கோ்ள் ஜூனியா் குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியா 6 தங்கம் உள்பட 14 பதக்கங்களை பெற்றுள்ளது.
மேலும் ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தையும் இந்தியா கைப்பற்றியது என்பது குறிப்பிடத்தக்கது.
9. சமீபத்தில் ஓய்வை அறிவித்துள்ள இந்திய டென்னிஸ் வீரர்?
- லியாண்டர் பயஸ்
- ஸ்டீபன் அம்ரித்ராஜ்
- சுமித் நாகல்
- ராம்குமார்
Answer & Explanation
Answer: லியாண்டர் பயஸ்
Explanation:
இந்தியாவின் சிறந்த டென்னிஸ் வீரர் லியாண்டா் பயஸ் 2இந்த ஆண்டில் இருந்து தொழில்முறை போட்டியில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.
10. உலக புற்றுநோய் தினம் எப்போது அனுசரிக்கப்படுகிறது?
- ஜனவரி 30
- பிப்ரவரி 04
- நவம்பர் 14
- மார்ச் 24
Answer & Explanation
Answer: பிப்ரவரி 04
Explanation:
புற்றுநோய் தொடர்பான விழிப்புணர்வை மக்களிடையே ஏற்படுத்துவதற்காக உலக சுகாதார நிறுவனத்தால் 2000 ஆம் ஆண்டு முதல் ஆண்டுதோறும் பிப்ரவரி 04 உலக புற்றுநோய் தினமாக அனுசரிக்கப்படுகிறது.
இந்த ஆண்டுக்கான கருப்பொருள்: I Am And I Will
- ஜனவரி – 30: உலகத் தொழுநோய் ஒழிப்பு தினம்
- நவம்பர் – 14: உலக சர்க்கரை நோய் தினம்
- மார்ச் – 24: உலக காசநோய் தினம்
More TNPSC Current Affairs
Related