TNPSC Current Affairs Question and Answer in Tamil 4th February 2021

Current Affairs in Tamil 4th February 2021

Hello, TNPSC Aspirants, Here we provide the Current Affairs question and answer in Tamil for 4th February 2021. Take the quiz and improve your Current Affairs Knowledge.



3rd February | 5th February

1. ‘தோழி’ என்ற திட்டம் எந்த நகர போலீசாரால் செயல்படுத்தப்பட்டு வருகிறது?

  1. சென்னை
  2. கோவை
  3. திருச்சி
  4. மதுரை
Answer & Explanation

Answer: சென்னை

Explanation:

பாலியல் குற்றங்களால் பாதிக்கப்பட்ட குழந்தைகள் – பெண்கள்மற்றும் அவர்களின் குடும்பத்தினரின் நலன் காக்க அவர்கள் வசிக்கும் இடம் தேடி நேரடியாக சென்று மன ரீதியாகவும் உளவியல் ரீதியாகவும் உதவி மற்றும் ஆலோசனைகள் வழங்க சென்னை காவல்துறை ‘தோழி’ என்ற தனிப்பிரிவு உருவாக்கி செயல்படுத்தி வருகிறது.

மேலும் ரயியிலில் பயணம் செய்யும் பெண்களின் பாதுகாப்பிற்காக ‘எனது தோழி’ என்ற திட்டத்தை ரயில்வே போலீசார் செயல்படுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

2. தமிழகத்தில் 15 வயதுக்கு மேற்பட்ட பணியாளர் விகிதம்?

  1. 51.4 %
  2. 54.8 %
  3. 63.9 %
  4. 68.8 %
Answer & Explanation

Answer:

Explanation:

Annual Periodic Labour Force Survey (PLFS)

2018-19-ஆம் ஆண்டுக்கான ஆய்வின் படி தமிழ்நாட்டில் 15 வயதுக்கு மேற்பட்டோருக்கான பணியாளர் மக்கள் தொகை விகிதம் 51.4 ஆக உள்ளது என தேசிய புள்ளியியல் அலுவலகத்தால் நடத்தப்பட்ட வருடாந்திர தொழிலாளர் ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், 15 வயதுக்கு மேற்பட்டவர்களில் நிலவும் வேலைவாய்ப்பின்மை விகிதம் 5.8 சதவீதமாகும் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

  • Dadra & Nagar Haveli – 68.8 %
  • Lakshadweep – 29.5
  • Himachal Pradesh – 63.9 %
  • Bihar – 36.4

3. இந்தியாவின் முதல் ஈரநிலங்கள் பாதுகாப்பு மற்றும் மேலாண்மைக்கான மையம் எங்கு தொடங்கப்பட்டுள்ளது?

  1. பிச்சாவரம்
  2. கண்ணனூர்
  3. சென்னை
  4. கொல்கத்தா
Answer & Explanation

Answer: சென்னை

Explanation:

Centre for Wetland Conservation and Management

மத்திய சுற்றுச்சூழல் துறை இணை அமைச்சர் திரு. பாபுல் சுப்ரியோ காணொலிக் காட்சி வாயிலாக, ஈரநிலங்கள் பாதுகாப்பு மற்றும் மேலாண்மைக்கான நாட்டின் முதல் மையத்தை சென்னையில் தொடங்கி வைத்துள்ளார்.

சுற்றுச் சூழல் அமைச்சகத்தின் கீழ் சென்னையில் இயங்கும் நீடித்த கடலோர மேலாண்மைக்கான தேசிய மையத்தின் ஒரு பகுதியாக, ஈரநில பாதுகாப்பு மற்றும் மேலாண்மைக்கான மையம் திகழும் என்று அவர் கூறினார்.

4. யாருடைய நலனுக்காக அடல் பீமித் வியாக்தி கல்யாண் யோஜனா தொடங்கப்பட்டது?

  1. விவசாயிகள்
  2. மாணவர்கள்
  3. பெண்கள் மற்றும் குழந்தைகள்
  4. தொழிலாளர்கள்
Answer & Explanation

Answer: தொழிலாளர்கள்

Explanation:

1948 ஆம் ஆண்டு தொழிலாளர் அரசு ஈட்டுறுதி சட்டத்தின் கீழ் பதிவு செய்த தொழிலாளர்களுக்காக, “அடல் பிமித் வியாக்தி கல்யாண் யோஜனா” (காப்பீடு செய்த நபரின் நல்வாழ்விற்கான அடல் திட்டம்) என்ற புதிய திட்டம் 2018 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது.

இத்திட்டத்தின் கீழ், அரசு காப்பீட்டு நிறுவனத்தின் உறுப்பினராக உள்ள தொழிலாளர்கள் திடீரென வேலை இழக்க நேரிட்டால், அவர்கள் புதிய வேலையை தேடிக் கொண்டிருக்கும் காலகட்டத்தில் அவர்களது வங்கிக் கணக்கில் நேரடியாக நிவாரண உதவித் தொகை செலுத்தப்படும்.

இரண்டு ஆண்டுகள் சோதனை அடிப்படையில் தொடங்கப்பட்ட இத்திட்டம் தற்போது இன்னும் விரிவு படுத்தப்பட்டுள்ளதாக மத்திய தொழிலாளர் நலம் மற்றும் வேலைவாய்ப்பு இணை அமைச்சர் (தனிப் பொறுப்பு) திரு சந்தோஷ்குமார் கங்க்வார் தெரிவித்துள்ளார்.

5. மக்களாட்சி குறியீடு 2020 (Democracy Index 2020) ல் இந்தியா வகிக்கும் இடம் ?

  1. 27
  2. 41
  3. 51
  4. 53
Answer & Explanation

Answer: 53

Explanation:

167 நாடுகள் பங்குபெற்ற மக்களாட்சி குறியீடு 2020 -ல் இந்தியா 53 வது இடத்தை பிடித்துள்ளது.

இந்தபட்டியலில் முதல் மூன்று இடங்களை முறையே நார்வே, ஐஸ்லேண்ட் மற்றும் ஸ்வீடன் நாடுகள் பெற்றுள்ளன.

இந்த பட்டியலில் கடைசி இடத்தை வடகொரியா பிடித்துள்ளது.

மக்களாட்சி குறியீடு – 2020 பட்டியலுக்கு நோய் மற்றும் ஆரோக்கியத்தில்? (In sickness and in health?) என பெயரிடப்பட்டுள்ளது

6. இந்தியாவின் இளம் பெண் விமானி என்ற சிறப்பை பெற்றுள்ளவர் ?

  1. சோயா அகர்வால்
  2. பாவனாகாந்த்
  3. அவனி சதுர்வேதி
  4. ஆயிஷா அஜீஸ்
Answer & Explanation

Answer: ஆயிஷா அஜீஸ்

Explanation:

நாட்டில் மிகவும் இளம் வயதில் விமானி ஆன பெண் என்ற பெருமையை காஷ்மீரைச் சேர்ந்த 25 வயது ஆயிஷா அஜீஸ் பெற்றுள்ளார்.

சோயா அகர்வால் – சான்பிரான்சிஸ்கோ to பெங்களூர்  – ஏர் இந்தியா (ஏஐ176) [2013-ம் ஆண்டு போயிங் 777 விமானத்தை உலகின் முதல் பெண்ணாக இயக்கியவர்]

பாவனாகாந்த், சுவாதி ரத்தோர் – 72வது குடியரசு தின அணிவகுப்பில் பங்குபெற்ற முதல் பெண் விமானிகள்

மோகனா சிங், பாவனா காந்த் & அவனி சதுர்வேதி – இந்திய விமானப் படையின் முதலாவது மகளிர் போர் விமானிகள் (2016) – [நாரி சக்தி புரஸ்கர் விருது-2020]





7. “யூத் அபியாஸ்” என்பது எந்த இருநாடுகளுக்கு இடையேயான போர்பயிற்சி ஆகும்?

  1. ஜப்பான் – அமெரிக்கா
  2. இந்தியா – ஜப்பான்
  3. இந்தியா – அமெரிக்கா
  4. ரஷ்யா – இலங்கை
Answer & Explanation

Answer: இந்தியா – அமெரிக்கா

Explanation:

இந்தியா-அமெரிக்கா இராணுவ வீரர்களுக்கிடையே 16வது “யூத் அபியாஸ் / Yudh Abhyas” எனும் போர்பயிற்சி பிப்ரவரி 8ம் தேதி முதல் 21ம் தேதி வரை ‘இராஜஸ்தான்’ மாநிலத்தில் நடைபெற உள்ளது

8. `சவுரி சவுரா’ நிகழ்வின் நூற்றாண்டு விழா சமீபத்தில் எப்போது கொண்டாடப்பட்டது?

  1. ஜனவரி 31
  2. பிப்ரவரி 04
  3. பிப்ரவரி 03
  4. பிப்ரவரி 02
Answer & Explanation

Answer:பிப்ரவரி 04

Explanation:

1922 பிப்ரவரி 4 ஆம் தேதி பிரிட்டிஷ் இந்தியாவில் ஐக்கிய மாகாணத்தின் , கோரக்பூர் மாவட்டத்தில் ( உத்தரப்பிரதேசம்) இந்திய சுதந்திரப் போராட்டத்தின் முக்கிய நிகழ்வான `சவுரி சவுரா’ சம்பவம் நடைபெற்றது.

2021 பிப்ரவரி 4 அன்றுடன் இந்நிகழ்வு நடைபெற்று நூறு ஆண்டுகள் ஆகின்றன.

9. சர்வதேச மனித சகோதரத்துவ தினம் எப்போது அனுசரிக்கப்படுகிறது?

  1. ஜனவரி 31
  2. பிப்ரவரி 04
  3. பிப்ரவரி 14
  4. மார்ச் 10
Answer & Explanation

Answer:

Explanation:

International Day of Human Fraternity

A Pathway to the Future என்ற கருப்பொருளுடன் முதலாவது சர்வதேச மனித சகோதாரத்துவ தினம் பிப்ரவரி 4 அன்று அனுசரிக்கப்படுகிறது.

சர்வதேச சகோதரர் தினம் – மே 24

Universal Brotherhood Day – செப்டம்பர் 11 (Swami Vivekananda – 1893)

10. உலக புற்றுநோய் தினம் எப்போது அனுசரிக்கப்படுகிறது?

  1. ஜனவரி 30
  2. பிப்ரவரி 04
  3. நவம்பர் 14
  4. மார்ச் 24
Answer & Explanation

Answer: பிப்ரவரி 04

Explanation:

புற்றுநோய் தொடர்பான விழிப்புணர்வை மக்களிடையே ஏற்படுத்துவதற்காக உலக சுகாதார நிறுவனத்தால் 2000 ஆம் ஆண்டு முதல் ஆண்டுதோறும் பிப்ரவரி 04 உலக புற்றுநோய் தினமாக அனுசரிக்கப்படுகிறது.

இந்த ஆண்டுக்கான கருப்பொருள்: I Am And I Will

  • ஜனவரி – 30: உலகத் தொழுநோய் ஒழிப்பு தினம்
  • நவம்பர் – 14: உலக சர்க்கரை நோய் தினம்
  • மார்ச் – 24: உலக காசநோய் தினம்

சில ஒரு வரி செய்திகள்

  1. இந்தியாவின் முதல் உடல் உறுப்பு துண்டித்தோறுக்கான தனி மருத்துவமனை (India’s First Amputee Clinic) “சண்டிகரில்” தொடங்கப்பட்டுள்ளது.
  2. 1600 டன் லித்தியம் ( lithium) படிவு – கர்நாடகாவின் மண்டியா மாவட்டத்தில் கண்டுபிடிப்பு.
  3. மத்திய புலனாய்வு அமைப்பின் (சிபிஐ) பொறுப்பு இயக்குநராக பிரவீண் சின்ஹா நியமிக்கப்பட்டுள்ளார். (முன்னர் – ரிஷிக்குமார் சுக்லா)
  4. தேசிய பாதுகாப்பு ஆலோசனைக் குழு உறுப்பினராகத் ஸ்ரீதர் வேம்பு நியமிக்கப்பட்டுள்ளார்.
More TNPSC Current Affairs

Leave a Comment