Current Affairs in Tamil 5th February 2020
Hello, TNPSC Aspirants, Here we provide Current Affairs question and answer in Tamil for 5th February 2020. Take the quiz and improve your Current Affairs Knowledge.

1. 5ஆம் & 8ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நடத்துவதற்காக, இலவச கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தில் திருத்தம் மேற்கொள்ளப்பட்ட ஆண்டு?
- 2017
- 2018
- 2019
- 2020
Answer & Explanation
Answer: 2019
Explanation:
5ஆம் மற்றும் 8ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நடத்துவதற்காக, மத்திய அரசு இலவச கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தில் 2019ஆம் ஆண்டு திருத்தம் மேற்கொண்டது.
இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத் திருத்தம், 2019 ஆனது ஜனவரி 3, 2019 அன்று நாடாளுமன்றத்தால் நிறைவேற்றப்பட்டு ஜனவரி 10 அன்று இந்திய ஜனாதிபதியின் ஒப்புதலைப் பெற்றது.
TNPSC Group 1 Model Papers – Download
2. சமீபத்தில் புற்றுநோய் விழிப்புணர்வுக்காக, க்யூ-ஆர் (QR) கோடுகளுடன் கூடிய குடையை வெளியிட்ட மருத்துவமனை?
- ராமகிருஷ்ணா புற்றுநோய் ஆராய்ச்சி மையம்
- அடையாறு புற்றுநோய் மையம்
- அப்பல்லோ புற்றுநோய் மையம்
- சென்னை ராஜீவ்காந்தி மருத்துவமனை
Answer & Explanation
Answer: ராமகிருஷ்ணா புற்றுநோய் ஆராய்ச்சி மையம்
Explanation:
புற்றுநோய் விழிப்புணர்வுக்காக, இந்தியாவில் முதல்முறை யாக க்யூ-ஆர் (QR) கோடுகளுடன் புற்றுநோய் விழிப்புணர்வு குடையை கோவையை சேர்ந்த ராமகிருஷ்ணா புற்றுநோய் ஆராய்ச்சி மையம் அறிமுகம் செய்துள்ளது.
இதில், இடம்பெற்றுள்ள க்யூ-ஆர் கோடுகளை ஸ்கேன் செய்வதன்மூலம், மார்பகப் புற்று நோய், நுரையீரல் புற்றுநோய், வாய் புற்று நோய், கர்ப்பப்பை வாய், இரைப்பை புற்றுநோய் உள்ளிட்ட பல்வேறு புற்றுநோய்களின் அறி குறிகள், தன்மைகள், சுய பரிசோதனை, முன்பே கண்டறிதல் உள்ளிட்ட விவரங்களை அறியலாம்.
மேலும், ஹெல்ப் கேன்சர் என்ற இணையதள சேவையும் ராமகிருஷ்ணா புற்றுநோய் ஆராய்ச்சி மையம் அறிமுகம் செய்துள்ளது.
3. போக்குவரத்து விதிகளை மீறுவோர் மீது எளிதாக நடவடிக்கை எடுக்க புதிய செயலியை அறிமுகப்படுத்தியுள்ள மாவட்டம்?
- செங்கல்பட்டு
- தஞ்சாவூர்
- தென்காசி
- புதுக்கோட்டை
Answer & Explanation
Answer: தென்காசி
Explanation:
போக்குவரத்து விதிகளை மீறுவோர் மீது எளிதாக நடவடிக்கை எடுக்க, தமிழகத்தில் முதல்முறையாக தென்காசி மாவட்ட காவல்துறையினருக்காக ‘tenkasi district traffic police’ என்ற செல்போன் செயலி உருவாக்கப்பட்டுள்ளது.
4. மூக்நாயக் என்ற இதழை தொடங்கியவர்?
- பால கங்காதர் திலக்
- பிஆர். அம்பேத்கார்
- விவேகானந்தர்
- ஜவஹர்லால் நேரு
Answer & Explanation
Answer: பிஆர். அம்பேத்கார்
Explanation:
பிஆர். அம்பேத்கார் அவர்களால் தொடங்கப்பட்ட “மூக்நாயக்” இதழின் நூற்றாண்டு விழா இந்த ஆண்டு கொண்டாடப்படுகிறது.
இந்த இதழ் தொடங்கப்பட்ட ஆண்டு 31-01-1920
5. IMO 2020 என்பது பின்வரும் எதற்கான புதிய விதிகள்?
- கப்பல்கள்
- விமானங்கள்
- நான்கு சக்கர வாகனங்கள்
- இரு சக்கர வாகனங்கள்
Answer & Explanation
Answer: கப்பல்கள்
Explanation:
0.5 சதவீதத்திற்கு மேல் கந்தகம் அல்லது சல்பரைக் கொண்ட எரிபொருட்களை கப்பல்கள் பயன்படுத்துவதைத் தடை செய்யும் “IMO 2020” எனப்படும் கப்பல்களுக்கான புதிய விதிமுறைகளை சர்வதேச கடல்சார் அமைப்பானது (International Maritime Organization – IMO) வெளியிட்டுள்ளது.
6. பிரதான் மந்திரி மாத்ரு வந்தனா திட்டத்தை (PMMVY) சிறப்பாக செயல்படுத்திய மாநிலங்கள் பட்டியலில் முதலிடம் வகிக்கும் மாநிலம்?
- மத்தியப் பிரதேசம்
- ஆந்திரா
- ஹரியாணா
- தமிழ்நாடு
Answer & Explanation
Answer: மத்தியப் பிரதேசம்
Explanation:
பிரதான் மந்திரி மாத்ரு வந்தனா திட்டத்தை (PMMVY) சிறப்பாக செயல்படுத்திய மாநிலங்கள் பட்டியலில் முதல் மூன்று இடங்களை முறையே மத்தியப் பிரதேசம், ஆந்திரா, மற்றும் ஹரியாணா மாநிலங்கள் பெற்றுள்ளன.
மேலும் மாவட்டங்கள் அளவில் மத்தியப் பிரதேசதின் இந்தூர் மாவட்டம் பெற்றுள்ளது.
கர்ப்பிணிப் பெண்கள் மற்றும் பாலூட்டும் தாய்மார்களுக்கு அவர்களின் முதல் குழந்தைக்கு ரூ. 5000 வழங்கும் திட்டம் ஆகும்.
இந்த திட்டம் தொடங்கப்பட்ட நாள் :- 1-1-2017
7. ராணுவ தளவாட கண்காட்சி எங்கு நடைபெறுகிறது?
- டெல்லி
- மும்பை
- திருவிடந்தை
- லக்னோ
Answer & Explanation
Answer: லக்னோ
Explanation:
உத்தர பிரதேச மாநிலம் லக்னோவில் 11வது ராணுவ தளவாட கண்காட்சி (DefExpo) இன்று(பிப்ரவரி 5) தொடங்கி பிப்ரவரி 9 வரை நடைபெற உள்ளது.
இந்த கண்காட்சியை தொடங்கி வாய்த்த பிரதமர், அடுத்த 5 ஆண்டுகளில் செயற்கை நுண்ணறிவின் அடிப்படையில் இந்தியாவில் 25 ராணுவ தளவாட உபகரணங்களை (Develop 25 products based on Artificial Intelligence) தயாரிப்பதே நமது நோக்கம் என தெரிவித்தார்.
10வது ராணுவ தளவாட கண்காட்சி சென்னையை அடுத்த திருவிடந்தையில் கடந்த 2018ஆம் ஆண்டு நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.
8. சமீபத்தில் காலமான டேனியல் அராப் மோய் பின்வரும் எந்த நாட்டை சேர்ந்தவர்?
- உகண்டா
- சோமாலியா
- கென்யா
- எத்தியோப்பியா
Answer & Explanation
Answer: கென்யா
Explanation:
கென்யாவை சுமாா் 24 ஆண்டு காலம் ஆட்சி செய்தவரும், சா்வாதிகாரி என அறியப்பட்டவருமான முன்னாள் ஜானதிபதி டேனியல் அராப் மோய் சமீபத்தில் காலமானார்.
தற்போதைய ஜனாதிபதி:- உஹுரு கென்யாட்டா
9. கே.ஜெனிதா ஆண்டோ பின்வரும் எந்த விளையாட்டுடன் தொடர்பானவர்?
- நீச்சல்
- குத்துசண்டை
- கபடி
- செஸ்
Answer & Explanation
Answer: செஸ்
Explanation:
ஸ்லோவாக்கியா நாட்டின் ரூசும்பெரோக்கியில் கடந்த ஆண்டு ஜூன் 27 முதல் ஜூலை 7-ம் தேதி வரை நடந்த 19-வது உலக தனிநபர் செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில், தமிழகத் தைச் சேர்ந்த கே.ஜெனிதா ஆண்டோ தங்கப்பதக்கம் வென்றார்.
தமிழக அரசின் சார்பில் அவருக்கு ரூ.20 லட்சம் ஊக்கத் தொகையை முதல்வர் பழனிசாமி தலைமைச் செயலகத்தில் பிப்ரவரி 4 அன்று வழங்கினார்.
மேலும், பெங்களூருவில் கடந்த ஆண்டு நடந்த 10-வது ஆசிய ஏஜ் குரூப் நீச்சல் சாம்பியன்ஷிப் போட்டியில் ப்ரீஸ்டைல் நீச்சலில் வெண்கலப் பதக்கங்கள் வென்ற பி.விக்காஸ், டி.ஆதித்யா, ஏ.வி.ஜெயவீணா ஆகியோருக்கு தலா ரூ.2 லட்சத்தை முதல்வர் வழங்கினார்.
10. தேசிய பளுதூக்குதல் போட்டியில், பெண்களுக்கான 49 கிலோ எடைப்பிரிவில் சாம்பியன் பட்டம் வென்றவர்?
- பூனம் யாதவ்
- மீராபாய் சானு
- சஞ்சிதா சானு
- குஞ்சராணி தேவி
Answer & Explanation
Answer: மீராபாய் சானு
Explanation:
கொல்கத்தாவில் நடந்து வரும் தேசிய பளுதூக்குதல் போட்டியில், பெண்களுக்கான 49 கிலோ எடைப்பிரிவில் மணிப்பூர் வீராங்கனை சைக்கோம் மீராபாய் சானு சாம்பியன் பட்டத்தை வென்றார்.
இவர் ‘ஸ்னாட்ச்’ முறையில் 88 கிலோவும், ‘கிளன் அண்ட் ஜெர்க்’ முறையில் 115 கிலோவும் என மொத்தம் 203 கிலோ எடை தூக்கி புதிய தேசிய சாதனை படைத்தார்.
மீராபாய் கடந்த 2017-ம் ஆண்டு உலக சாம்பியன்ஷிப் போட்டியில் தங்கப்பதக்கம் வென்று இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆண்களுக்கான 73 கிலோ எடைப்பிரிவில் தமிழக வீரர் அஜித் ‘ஸ்னாட்ச்’ முறையில் 140 கிலோவும், ‘கிளன் அண்ட் ஜெர்க்’ முறையில் 170 கிலோவும் என மொத்தம் 310 கிலோ எடை தூக்கி தேசிய சாதனை படைத்தார்.
More TNPSC Current Affairs
Related