TNPSC Current Affairs Question and Answer in Tamil 5th February 2021

Current Affairs in Tamil 5th February 2021

Hello, TNPSC Aspirants, Here we provide the Current Affairs question and answer in Tamil for 5th February 2021. Take the quiz and improve your Current Affairs Knowledge.



4th February | 6th February

1. எவ்வளவு மதிப்பிலான பயிர்க்கடன்கள் தள்ளுபடி செய்ய தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது?

  1. ரூ. 10,110 கோடி
  2. ரூ. 11,210 கோடி
  3. ரூ. 12,110 கோடி
  4. ரூ. 13,110 கோடி
Answer & Explanation

Answer: ரூ. 12,110 கோடி

Explanation:

சட்டசபை விதி 110ன் கீழ் ரூ. 12,110 கோடி மதிப்பிலான பயிர்க்கடன்களை தள்ளுபடி செய்வதாக முதல்வர் திரு. எடப்பாடி பழனிச்சாமி அறிவித்துள்ளார்.

16.43 லட்சம் விவசாயிகள் பயன் பெறுவார்கள்.

2. தென்னிந்தியாவில் மிகப்பெரிய பெரிய உப்பு நீர் ஏரி (Brackish Water Lake) எது?

  1. புலிகாட்
  2. கலிவேளி
  3. சில்கா
  4. கட்ச்
Answer & Explanation

Answer: புலிகாட்

Explanation:

தென்னிந்தியாவில் மிகப்பெரிய பெரிய உப்பு நீர் ஏரி ஆந்திராவில் உள்ள புலிகாட் ஏரி ஆகும். அதனை அடுத்து மிகப்பெரிய பெரியது விழுப்புரத்தில் உள்ள கலிவேளி ஏரி ஆகும்.

சமீபத்தில் கலிவேளி ஏரியை பறவைகள் சரணாலயமாக மாற்றுவதற்கான முன்னெடுப்பை விழுப்புரம் மாவட்ட நிர்வாகம் எடுத்து வருகிறது.

வனவிலங்கு பாதுகாப்பு சட்டம், 1972

3. முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பெயரில் பல்கலைக்கழகம் அமைய உள்ள நகரம்?

  1. வேலூர்
  2. விழுப்புரம்
  3. கள்ளக்குறிச்சி
  4. கடலூர்
Answer & Explanation

Answer: விழுப்புரம்

Explanation:

திருவள்ளுவர் பல்கலைக்கழகம் இரண்டாக பிரிக்கப்பட்டு, விழுப்புரத்தில் ‘டாக்டர் ஜெ.ஜெயலலிதா பல்கலைக்கழகம்’ என்ற புதிய பல்கலைக்கழகத்தை நிறுவ அரசு முடிவு செய்துள்ளது.

விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி ஆகிய மாவட்டங்களில் உள்ள கல்லூரிகள், டாக்டர் ஜெ.ஜெயலலிதா பல்கலைக்கழகத்தில் இணைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

4. சமீபத்தில் 6-வது இந்தியா-ரஷ்யா இராணுவ தொழில்துறை மாநாடு எங்கு நடைபெற்றது?

  1. பெங்களூர்
  2. லக்னோ
  3. புது டெல்லி
  4. சென்னை
Answer & Explanation

Answer: பெங்களூர்

Explanation:

பிப்ரவரி 3 அன்று 6-வது இந்தியா-ரஷ்யா இராணுவ தொழில்துறை மாநாடு (India-Russia Military Industrial Conference) பெங்களூரில் நடைபெற்றது.

கடந்த ஆண்டு இம்மாநாடு லக்னோவில் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.

5. கோபர்-தன் ( GOBAR-DHAN) என்ற திட்டத்தை தொடங்கிய அமைச்சகம்?

  1. விவசாயம் மற்றும் உழவர் நலன்
  2. குடிநீர் மற்றும் சுகாதார அமைச்சகம்
  3. ஆயுஷ் அமைச்சகம்
  4. இரசாயனங்கள் மற்றும் உரங்கள் அமைச்சகம்
Answer & Explanation

Answer: குடிநீர் மற்றும் சுகாதார அமைச்சகம்

Explanation:

கிராமங்களைத் திறந்தவெளிக் கழிப்பிடங்கள் அற்றவையாக ஆக்கவும் கிராமவாசிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தவும் இயற்கை உயிரி-வேளாண் ஆதாரங்கள் நிறைந்த கிராமம் எனப்படும் ‘கோபர்-தன் திட்டம்’ கடந்த 2018ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது.

இத்திட்டம், தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் தொடங்கப்பட்டது.

இது பண்ணைகளில் கால்நடைக் கழிவு மற்றும் திடக் கழிவுகளை நிர்வகிக்கவும், இயற்கை உரம், உயிரி எரிவாய் மற்றும் உயிரி இயற்கை எரிவாயுவாக மாற்றவும் உதவும்.

தற்போது ஜல் சக்தி அமைச்சகம் கால்நடைகள் மற்றும் மக்கும் கழிவுகளை பயனுள்ள வகையில் மேலாண்மை செய்து விவசாயிகளின் வருமானத்தை மேம்படுத்த ஒருங்கிணைந்த போர்ட்டலை அறிமுகப்படுத்தியுள்ளது.

6. “பிரபுத்தா பாரத்” என்பது ஒரு _ _ _ _ _ _ _ _ _ _ _?

  1. மாதாந்திர பத்திரிகை
  2. உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட செயற்கைகோள்
  3. நதியை தூய்மைப்படுத்தும் திட்டம்
  4. தேசிய கண்காட்சி
Answer & Explanation

Answer: மாதாந்திர பத்திரிகை

Explanation:

“பிரபுத்தா பாரத் / Prabuddha Bharata” என்பது ராமகிருஷ்ணரின் நினைவாக சென்னையில் தொடங்கப்பட்ட ஒரு  மாதாந்திரப் ஆங்கில பத்திரிக்கையாகும்.

விவேகானந்தரின் வழிகாட்டுதலின் படி 1896 ஆம் ஆண்டு P. அய்யாசாமி, B.R. ராஜம் அய்யர், G.G. நரசிம்மாச்சாரியா மற்றும் B.V. சாமேஸ்வர அய்யர் ஆகியோரால் தொடங்கப்பட்டது.

முதல் இரண்டு ஆண்டுகள் சென்னையில் இருந்து செயல்பட்ட இப்பத்திரிகை தற்போது கொல்கத்தாவில் உள்ள அத்வைதா ஆசிரமத்திலிருந்து வெளியிடப்பட்டு வருகின்றது.

2021 ஆம் ஆண்டு ஜனவரி 31 அன்று “பிரபுத்தா பாரத்தின்” 125வது ஆண்டு தின கொண்டாட்டம் விழா நடைபெற்றது.





7. 2021-2022 ஆண்டு காலகட்டங்களில் இந்தியாவின் GDP எவ்வளவு இருக்கும் என RBI தெரிவித்துள்ளது?

  1. 6%
  2. 7.2%
  3. 10.5%
  4. 8.6 %
Answer & Explanation

Answer: 10.5%

Explanation:

பிப்ரவரி 5, ரிசர்வ் வங்கியின் ஆளுநர் சக்தி காந்த தாஸ் தலைமையில் நாணயக் கொள்கைக் குழு (Monetary Policy Committee) கூட்டம் நடைபெற்றது.

இதில் முக்கிய முடிவாக, ரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றம் இல்லாமல் 4% என்ற முந்தைய நிலையே தொடரும் எனவும், ரிவர்ஸ் ரெப்போ வட்டி விகிதம் 3.35% ஆக தொடரும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

2021-2022 ஆண்டு காலகட்டங்களில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி (GDP) 10.5% இருக்கும் என RBI தெரிவித்துள்ளது.

மேலும்

8. இந்திய குத்துச்சண்டை கூட்டமைப்பின் தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ளவர்?

  1. விப்னேஷ் பரத்வாஜ்
  2. நரேஷ் சா்மா
  3. அஜய் படேல்
  4. அஜய் சிங்
Answer & Explanation

Answer:அஜய் சிங்

Explanation:

இந்திய குத்துச்சண்டை கூட்டமைப்பின் (Boxing Federation of India(BFI)) தலைவராக அஜய் சிங் (Ajay Singh) மீண்டும் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

9. பாதுகாப்பான இணைய தினம் எப்போது அனுசரிக்கப்படுகிறது?

  1. ஜனவரி 31
  2. பிப்ரவரி 9
  3. பிப்ரவரி 5
  4. மார்ச் 5
Answer & Explanation

Answer: பிப்ரவரி 9

Explanation:

இணைய தளத்தின் ஆபத்துக்களின் மீதான விழிப்புணர்வை ஏற்படுத்த 2004 ஆம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் “பாதுகாப்பான இணைய தினம்” அனுசரிக்கப்பட்டு வருகிறது.

இந்த ஆண்டுக்கான பாதுகாப்பான இணைய தினம் பிப்ரவரி 9 ஆம் தேதி அனுசரிக்கப்படுகிறது.

இத்தினம் 2019 ஆம் ஆண்டு பிப்ரவரி 5 அன்றும், 2020 ஆம் ஆண்டு பிப்ரவரி 11 அன்றும் அனுசரிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இந்த ஆண்டுக்கான கருப்பொருள்: Together for a better internet

10. “Whereabouts” என்ற புத்தகத்தை எழுதியவர்?

  1. கசுவோ இஷிகுரோ
  2. சல்மான் ருஷ்டி
  3. அருந்ததி ராய்
  4. ஜும்பா லஹிரி
Answer & Explanation

Answer: ஜும்பா லஹிரி

Explanation:

பிரபல அமெரிக்க பெண் எழுத்தாளர் ஜும்பா லஹிரி எழுதிய முதல் இத்தாலிய நாவலான “Whereabouts” புத்தகத்தின்.  ஆங்கில பதிப்பு இந்தாண்டு வெளிவர உள்ளது.

ஜும்பா லஹிரி தனது முதல் சிறுகதை தொகுப்பான இன்ட்ரெப்டர் ஆஃப் மாலடிஸ் (1999) -க்கு புலிட்சர் பரிசு மற்றும் பென் / ஹெமிங்வே விருதை வென்றவர் என்பது குறிப்பிடதக்கது.

சில வரி செய்திகள்

  1. வரதட்சணை மரண வழக்கில் 7 ஆண்டுகளாக இருந்துவரும் தண்டனையை 10ஆண்டுகளாக மாற்றம்.
  2. ஆன்லைன் சூதாட்டத்துக்கு தடை.
  3. அண்டார்டிகாவில் செவ்வாய் கிரகத்தில் காணப்படும் ஜாரோசைட் என்ற ஒரு அரிய வகைக் கடல்சார் தாது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
More TNPSC Current Affairs



Leave a Comment