Hello, TNPSC Aspirants, Here we provide Current Affairs question and answer in Tamil for 6th February 2020. Take the quiz and improve your Current Affairs Knowledge.
1. L&T மற்றும் MBDA இணைந்து ஏவுகணை ஒருங்கிணைப்பு மையத்தை எங்கு துவங்க உள்ளன?
திருச்சி
கோவை
திருநெல்வேலி
கன்னியாகுமரி
Answer & Explanation
Answer: கோவை
Explanation:
Missile Integration Facility
ராணுவத் தளவாடங்களை தயாரித்து வரும் ஐரோப்பிய நிறுவனமான எம்பிடிஏ (MBDA)-வுடன் எல் & டி இணைந்த கூட்டு நிறுவனமான LTMMSL (L&T MBDA Missile Systems Limited) கோயம்பத்தூரில் ஏவுகணை ஒருங்கிணைப்பு மையத்தை அமைக்கவுள்ளது.
ஏவுகணை சார்ந்த உதிரிபாகங்கள் ஒருங்கிணைப்பு, ஏவும் தளவாடங்கள், வெடிபொருள் சாராத ஏவுகணை பரிசோதனை அமைப்புகள் ஆகியவற்றை உருவாக்க உள்ளன.
2. இந்திய சா்வதேச ஜனநாயகம் மற்றும் தோ்தல் மேலாண்மை கழகம் அமைந்துள்ள இடம்?
சென்னை
டெல்லி
மும்பை
கொல்கத்தா
Answer & Explanation
Answer: டெல்லி
Explanation:
டெல்லியில் அமைந்துள்ள இந்திய சா்வதேச ஜனநாயகம் மற்றும் தோ்தல் மேலாண்மை கழகத்தில் மறைந்த முன்னாள் தலைமை தேர்தல் கமிஷனர் டி.என்.சேஷன் பெயரில், ஆய்வு இருக்கை அமைக்க, தேர்தல் கமிஷன் முடிவு செய்துள்ளது.
3. உலகப பசி பட்டியல் 2019 (Global Hunger Index 2019) – இல் இந்தியா வகிக்கும் இடம்?
72
73
102
103
Answer & Explanation
Answer: 102
4. நாட்டின் 13வது பெரிய துறைமுகம் எங்கு அமைக்கப்பட உள்ளது?
வாதவான்
ரத்னகிரி
அலிபாக்
பால்கர்
Answer & Explanation
Answer: வாதவான்
Explanation:
நாட்டின் 13வது பெரிய துறைமுகத்தை (Major Port) மஹாராஷ்டிரா மாநிலம் ‘வாதவானில்'(Vadhavan) அமைக்க மத்திய அமைச்சரவை குழு, கொள்கை ஒப்புதல் அளித்துள்ளது
ஜவஹர்லால் நேரு துறைமுகம், மும்பை துறைமுகம் என ஏற்கனவே இரண்டு துறைமுகங்கள் மஹாராஷ்டிரா மாநிலத்தில் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
5. 2020 ஆம் ஆண்டிற்கான சிறந்த வங்கியாளர் – ஆசியா:பசுபிக் விருது யாருக்கு வழங்கப்பட உள்ளது?
எஸ்.ஆர்.பன்சால்
சக்திகாந்ததாஸ்
ரகுராம் ராஜன்
உர்ஜித் பட்டேல்
Answer & Explanation
Answer: சக்திகாந்ததாஸ்
Explanation:
இங்கிலாந்தைச் சேர்ந்த வங்கியாளர் இதழ் (Banker Magazine) வழங்கும் Central banker of the year 2020, Asia-Pacific விருது இந்திய ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்ததாஸ் அவர்களுக்கு வழங்கப்பட உள்ளது.
6. சமீபத்தில் SFURTI என்ற திட்டத்தை அறிமுகம் செய்துள்ள மத்திய அமைச்சகம் எது?
NSIC
SIDBI
NSDC
MSME
Answer & Explanation
Answer: MSME
Explanation:
கடந்த 2005 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்ட SFURTI என்ற பாரம்பரிய தொழிற்சாலைகள் மறுவாழ்விற்கான திட்டம் வரும்காலங்களில் புதுப்பொலிவுடன் மத்திய சிறு, குறு மற்றும் நடுத்தர தொழிற்சாலைகள் அமைச்சகதின்(MSME) கீழ் செயல்படும் என பட்ஜெட் உரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இத்திட்டத்திற்கு 2.3 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
இத்திட்டத்தின் மூலம், பாரம்பரிய கிராமப்புற தொழில்களுக்கான, தொழிற்சாலை மையங்கள் நாடுமுழுவதும் அமைக்கப்படவுள்ளன.
SFURTI – Scheme of Fund for Regeneration of Traditional Industries
MSME – Ministry of Micro, Small and Medium Enterprises
SIDBI – Small Industries Development Bank of India
NSDC – National Skill Development Corporation
NSIC – National Small Industries Corporation
7. சமீபத்தில் ஜன் சேவகா என்ற திட்டத்தை அறிமுகம் செய்துள்ள மாநிலம்?
குஜராத்
கர்நாடகா
மத்தியப் பிரதேஷ்
உத்திரப்பிரதேஷ்
Answer & Explanation
Answer: கர்நாடகா
Explanation:
மூத்த குடிமக்களுக்கு ரூ .115 இல் அரசு சேவைகளை வீடுகளுக்கே சென்று வழங்க ஜன் சேவகா (Janasevaka Scheme) என்ற திட்டத்தை கர்நாடகா மாநில அரசு அறிவித்துள்ளது.
8. கிராம் நியாயாலயா சட்டம் 2018 நடைமுறைக்கு வந்த நாள்?
26 ஜனவரி 2008
15 ஆகஸ்ட் 2008
24 ஜனவரி 2009
02 அக்டோபர் 2009
Answer & Explanation
Answer: 02 அக்டோபர் 2009
Explanation:
கிராம் நியாயாலயா சட்டம் 2018, 02 அக்டோபர் 2009 அன்று நடைமுறைக்கு வந்தது. கிராமப்புற நடமாடும் நீதிமன்றங்கள் அமைப்பதே இச்சட்டத்தின் முக்கிய நோக்கம்.
சமீபத்தில் உச்ச நீதிமன்றம் நான்கு வாரங்களுக்குள் கிராமப் புற நடமாடும் நீதிமன்றங்களை அமல்படுத்த மாநில அரசுகளை அறிவுறித்தியுள்ளது.
9. ராக்கி ஹால்டர் பின்வரும் எந்த விளையாட்டுடன் தொடர்பானவர்?
பளுதூக்குதல்
குத்துசண்டை
கபடி
நீளம் தாண்டுதல்
Answer & Explanation
Answer: பளுதூக்குதல்
Explanation:
கொல்கத்தாவில் நடந்து வரும் தேசிய பளுதூக்குதல் போட்டியில், பெண்களுக்கான 64 கிலோ எடைப்பிரிவில் மேற்குவங்காள வீராங்கனை ராக்கி ஹால்டர்(Rakhi Halder) சாம்பியன் பட்டத்தை வென்றார்.
10. Blue Is Like Blue என்ற புத்தகத்தின் ஆசிரியர்?
ஆர்.பி.சிங்
எஸ். எல். பைரப்பா
அமிர்த பிரிதம்
வினோத் குமார் சுக்லா
Answer & Explanation
Answer: வினோத் குமார் சுக்லா
Explanation:
சத்தீஸ்கர் மாநிலத்தை சேர்ந்த வினோத் குமார் சுக்லா (VK Shukla) எழுதிய Blue Is Like Blue என்ற புத்தகதிற்கு 2020ஆம் ஆண்டுக்கான மாத்ருபூமி – சிறந்த புத்தக விருது (Mathrubhumi Book of the year 2020) வழங்கப்பட்டுள்ளது.