Hello, TNPSC Aspirants, Here we provide the Current Affairs question and answer in Tamil for 6th February 2021. Take the quiz and improve your Current Affairs Knowledge.
1. இந்தியாவின் முதல் இடிமின்புயல் ஆராய்ச்சி மையம் எங்கு அமைக்கப்பட உள்ளது?
கேரளா
தமிழ்நாடு
அசாம்
ஒடிசா
Answer & Explanation
Answer:
Explanation:
Thunderstorm Research Testbed
இடி மின்னல் மற்றும் பெருமழையால் ஏற்படும் சேதங்களை குறைக்கும் பொருட்டு, ஒடிசாவின் பாலசூரில் இடிமின்புயல் ஆராய்ச்சி மையம் அமைக்கப்பட உள்ளது.
மேலும், மத்தியபிரதேசம், போபால் அருகே பருவமழை சோதனை மையமும் அமைக்கப்பட இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு துறை தலைவர் மிருத்யுஞ்சய் தெரிவித்துள்ளார்.
இந்திய வானிலை ஆய்வு மையம், DRDO மற்றும் இஸ்ரோ ஆகியவற்றின் கூட்டு முயற்சியில் இந்த மையங்கள் அமைக்கப்பட உள்ளன.
ஒடிசாவில் ஆண்டுதோறும் சராசரியாக 350 பேர் இடி மின்னல் தாக்குதலினால் உயிரிழக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
2. லக்வார் மின்சார திட்டம் பின்வரும் எந்த மாநிலத்தில் அமைக்கப்பட உள்ளது?
உத்தரகண்ட்
ஹிமாச்சல் பிரதேஷ்
உத்தரப்பிரதேஷ்
ஹரியானா
Answer & Explanation
Answer:
Explanation:
Lakhwar Electricity Project
உத்தரகண்ட் மாநிலத்தின் டெஹ்ராடூன் மாவட்டத்தில் யமுனை ஆற்றில் லக்வார் மின்சார திட்டம் அமைக்கப்பட உள்ளது.
சமீபத்தில் மத்திய சுற்றுச்சூழல், வன மற்றும் காலநிலை மாற்ற அமைச்சகம் இதற்கான ஒப்புதலை அளித்துள்ளது.
இந்தத்திட்டமானது ரூ .5747.17 கோடி செலவில் அமைக்கப்பட உள்ளது.
3. சமீபத்தில் மின்சார வாகனங்களின் பயன்பாட்டை அதிகரிக்க டெல்லி மாநில அரசு மேற்கொண்டுள்ள பிரச்சாரத்தின் பெயர்?
Switch Delhi
E-Delhi
Green Delhi
Pure Delhi
Answer & Explanation
Answer: Switch Delhi
Explanation:
‘Switch Delhi’ Campaign
மின்சார வாகனங்களின் நன்மைகள் குறித்தும், டெல்லியை சுத்தமாகவும் மாசு இல்லாததாகவும் மாற்றுவதற்கு மின்சார வாகனங்கள் எவ்வாறு பங்களிக்கும் என்பது குறித்த விழிப்புணர்வுவை ஏற்படுத்த டெல்லி அரசு Switch Delhi என்ற பிரச்சாரத்தை முன்னெடுத்துள்ளது.
4. மூன்றாவது பங்களாதேஷ் திரைப்பட விழா 2021 எங்கு நடைபெறுகிறது?
டெல்லி
டாக்கா
கொல்கத்தா
கராச்சி
Answer & Explanation
Answer:கொல்கத்தா
Explanation:
3rd பங்களாதேஷ் திரைப்பட விழா 2021 மேற்கு வங்க மாநிலத்தின் தலைநகர் கொல்கத்தாவில் பிப்ரவரி 5 அன்று துவங்கி 5 நாட்கள் நடைபெற உள்ளது.
பங்களாதேஷ் தகவல்துறை அமைச்சர் டாக்டர் ஹசன் மஹ்மூத் இந்த விழாவை துவக்கி வைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த விழாவில் 32 பங்களாதேஷ் திரைப்படங்கள் திரையிடப்பட உள்ளன.
4. எந்த மாநில காவல்துறை நேதாஜி என்ற பெயரில் புதிய பட்டாலியன் பிரிவை தொடங்க உள்ளது?
குஜராத்
மேற்குவங்காளம்
தமிழ்நாடு
அசாம்
Answer & Explanation
Answer:மேற்குவங்காளம்
Explanation:
நேதாஜி என்ற பெயரில் புதிய பட்டாலியன் பிரிவு அமைக்கப்படும் என்று மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
6. சமீபத்தில் காஷ்னவி (Ghaznavi) என்ற ஏவுகணையை சோதனை செய்த நாடு?
பங்களாதேஷ்
மலேசியா
பாகிஸ்தான்
இந்தோனேசியா
Answer & Explanation
Answer:பாகிஸ்தான்
Explanation:
’காஷ்னவி’ (‘Ghaznavi (Hatf-III)) என்ற பெயரில் அணு ஆயுதம் தாங்க வல்ல தரையிலிருந்து – தரையிலுள்ள இலக்கை தாக்கும் ஏவுகணையை பாகிஸ்தான் இராணுவம் 3-2-2021 அன்று சோதித்துள்ளது.
7. தேசிய பாதுகாப்பு கவுன்சிலின் புதிய தலைவராக நியமிக்கப்பட்டுள்ளவர்?
எஸ்.என். சுப்பிரமணியம்
டி.எஸ்.திருமூர்த்தி
ஜி. சதீஷ் ரெட்டி
அஜித் தோவல்
Answer & Explanation
Answer: எஸ்.என். சுப்பிரமணியம்
Explanation:
National Safety Council
4 மார்ச் 1965 அன்று தொடங்கப்பட்ட தேசிய பாதுகாப்பு கவுன்சிலின் புதிய தலைவராக தமிழ்நாட்டை சேர்ந்த எஸ்.என். சுப்பிரமணியம் நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்த அமைப்பானது பணியிடங்களில் பாதுகாப்பு என்பதை குறிக்கோளாக கொண்டு இயங்குகிறது.
National Security Council (19 Nov 1998)
தேசிய பாதுகாப்பு ஆலோசகர் – அஜித் தோவல்
ஐ.நா. சபை பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியா 8 வது முறையாக தற்காலிக உறுப்பினராக இணைந்தது குறிப்பிடத்தக்கது.
ஐ.நாவுக்கான இந்தியாவின் நிரந்தர பிரதிநிதி – டி.எஸ்.திருமூர்த்தி
8. உலகின் முதல் ‘பசுமை எரிசக்தி தீவு’ பின்வரும் எந்த நாட்டில் கட்டப்பட உள்ளது?
டென்மார்க்
ஸ்வீடன்
அமெரிக்கா
ஜப்பான்
Answer & Explanation
Answer: டென்மார்க்
Explanation:
டென்மார் அரசு வட கடல் பகுதியில் (North Sea) ‘பசுமை எரிசக்தி தீவு’ அமைக்க முடிவு செய்துள்ளது.
9. பெண் பிறப்புறுப்பு சிதைத்தலின் பூஜ்ஜிய சகிப்பு தன்மைக்கான தினம் எப்போது அனுசரிக்கப்படுகிறது?
பிப்ரவரி 06
பிப்ரவரி 07
மார்ச் 06
மார்ச் 07
Answer & Explanation
Answer:பிப்ரவரி 06
Explanation:
International Day of Zero Tolerance for Female Genital Mutilation 2021
பெண் பிறப்புறுப்பு சிதைத்தல் என்பது பெண்களின் பிறப்புறுப்பை மருத்துவ காரணங்கள் அல்லாத விவகாரங்களுக்காக சேதாரம் ஏற்படுத்துவது அல்லது காயப் படுத்துவது உள்ளிட்ட அனைத்து முறைகளையும் உள்ளடக்கியதாகும்.
கருப்பொருள்: No Time for Global Inaction, Unite, Fund, and Act to End Female Genital Mutilation.
10. ’1857 – The Sword of Mastaan’ என்ற புத்தகத்தை எழுதியவர்?
வினீத் பாஜ்பாய்
அஸ்வின் சங்கி
அமிஷ் திரிபாதி
கெவின் மிசல்
Answer & Explanation
Answer: வினீத் பாஜ்பாய்
Explanation:
857 ஆம் ஆண்டின் சிப்பாய் கலகத்தைப் அடிப்படையாக கொண்டு வினீத் பாஜ்பாய் ’1857 – The Sword of Mastaan’ என்ற புத்தகத்தை எழுதியுள்ளார்.
சில வரி செய்திகள்
தென்மாவட்டதின் முதல் மண்டல புற்றுநோய் மையம் திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் துவங்கப்பட்டுள்ளது.
திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் புதிய துணைவேந்தராக செல்வம் நியமிக்கப்பட்டுள்ளார்
ICC அமைப்பின் புதிய துணைத்தலைவராக இம்ரான் குவாஜா நியமிக்கப்பட்டுள்ளார்