TNPSC Current Affairs Question and Answer in Tamil 7th and 8th February 2021

Current Affairs in Tamil 7th & 8th February 2021

Hello, TNPSC Aspirants, Here we provide the Current Affairs question and answer in Tamil for 7th and 8th February 2021. Take the quiz and improve your Current Affairs Knowledge.



6th February | 9th February

1. சமீபத்தில் கோவிட் விமன் வாரியர்ஸ் – த ரியல் ஹீரோஸ் என்ற விருது யாருக்கு வழங்கப்பட்டது?

  1. பாரதி
  2. வெண்ணிலா
  3. ரேகா சர்மா
  4. லலிதா
Answer & Explanation

Answer: வெண்ணிலா

Explanation:

Covid Women Warriors, the Real Heroes

நீலகிரி மாவட்டம் குன்னுார் அருகில் உள்ள காட்டேரி பகுதியைச் சேர்ந்தவர் அங்கன்வாடி ஊழியர் வெண்ணிலாவுக்கு கோவிட் விமன் வாரியர்ஸ் – த ரியல் ஹீரோஸ் என்ற விருதை மத்திய அரசு வழங்கியுள்ளது.

கொரோனா காலத்தில் நாள்தோறும் 12 கி.மீ தொலைவு நடந்து சென்று ஊட்டச்சத்து உணவுகளை பழங்குடி மக்களுக்கு வழங்கியதற்காக இவ்விருதை தேசிய மகளிர் ஆணையம் வழங்கியுள்ளது.

இவ்விருதை மத்திய நீர்வளத்துறை அமைச்சர் ரத்தன்லால் கட்டாரியா வழங்கினார்.

2. தமிழகத்தில் உள்ள புலிகள் சரணாலயங்களின் எண்ணிக்கை?

  1. 3
  2. 4
  3. 5
  4. 6
Answer & Explanation

Answer: 5

Explanation:

ஸ்ரீவில்லிப்புத்தூர், மேகமலை புலிகள் சரணாலயம்

தற்போது தமிழகத்தின் ஐந்தாம் புலிகள் சரணாலயமாகவும், இந்தியாவின் 51-வது புலிகள் சரணாலயமாகவும் ஸ்ரீவில்லிப்புத்தூர், மேகமலை சரணாலயத்தை தேர்வு செய்து மத்திய வனம் மற்றும் சுற்றுப்புறச்சூழல் அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.

ஸ்ரீவில்லிபுத்தூர் சாம்பல் நிற அணில்கள் சரணாலயத்துடன் மேகமலை வன உயிரின சரணாலயம் இணைக்கப்பட்டு இந்த புதிய புலிகள் காப்பகம் உருவாக்கப்படுகிறது.

தமிழகத்தில் ஏற்கனவே களக்காடு முண்டந்துறை, ஆனைமலை, முதுமலை மற்றும் சத்தியமங்கலம் ஆகியவை புலிகள் காப்பகமாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது.

கடைசியாக 6 ஆண்டுகளுக்கு முன்பு அருணாசாலப்பிரதேசத்தின் காம்லாங் பகுதி புலிகள் சரணாலயமாக அங்கீகரிக்கப்பட்டது.

தேனி வனக்கோட்டம் இரண்டாக பிரிக்கப்பட்டு 2008 ல் மேகமலை சரணாலயம் உருவாக்கப் பட்டது குறிப்பிடத்தக்கது.

மேலும், 2018-ம் ஆண்டு நடத்தப்பட்ட கணக்கெடுப்பில், மேகமலை பகுதியில் 14 புலிகள் இருப்பதாகவும், அதில் 3 ஆண் , 11 பெண் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், 2020- ஆம் ஆண்டு கணக்கெடுப்பின் படி இந்தியாவில் 674 சிங்கங்களும்.  2017- ஆம் ஆண்டு கணக்கெடுப்பின் படி, 29,964 யானைகளும், 2018- ஆம் ஆண்டு கணக்கெடுப்பின் படி 2,967 புலிகளும் உள்ளதாகத் சமீபத்தில் மத்திய சுற்றுச்சூழல் துறை இணையமைச்சர் பாபுல் சுப்ரியோ தெரிவித்துள்ளார்.

3. ரிஷிகங்கா மின்திட்டம் பின்வரும் எந்த மாநிலத்தில் அமைந்துள்ளது?

  1. மத்தியபிரதேஷ்
  2. உத்தரகாண்ட்
  3. உத்திரபிரதேசஷ்
  4. கோவா
Answer & Explanation

Answer: உத்தரகாண்ட்

Explanation:

உத்தரகாண்ட் மாநிலம், சமோலி மாவட்டத்தில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால், ரிஷிகங்கா ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டு வந்த தபோவன் அணை அதாவது ரிஷிகங்கா மின்திட்டம் முழுமையாக அடித்துச் செல்லப்பட்டது.

4. இந்தியாவின் முதல் புவிவெப்ப மின்சார நில மேம்பாட்டு திட்டம் எங்கு அமைக்கப்பட உள்ளது?

  1. ஸ்ரீநகர்
  2. லே
  3. உத்தர்காஷி
  4. பன்ட்நகர்
Answer & Explanation

Answer:

Explanation:

இந்தியாவின் முதல் புவிவெப்ப மின்சார நில மேம்பாட்டு திட்டம் (India’s first Geothermal Field Development Project) லடாக்கின் ‘லே (Leh)’ பகுதியில் அமைப்பதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம், லடாக் யூனியன் பிரதேச நிர்வாகம் மற்றும் எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு கழகத்திற்கு(ONGC) இடையே கையெழுத்தானது.

குறிப்பாக ‘லே’ பகுதியில் அமைந்துள்ள புகா (Puga) கிராமத்தில் அமைக்கப்பட உள்ளது.

லடாக்கின் துணைநிலை ஆளுநர் – ஆர் கே மாத்தூர்

5. 2021ம் ஆண்டிற்கான தேசிய தோட்டக்கலை கண்காட்சி எங்கு நடைபெறுகிறது?

  1. பெங்களூர்
  2. கோயம்புத்தூர்
  3. திண்டுக்கல்
  4. மைசூர்
Answer & Explanation

Answer:

Explanation:

National Horticulture Fair 2021

ஸ்டார்ட்-அப் மற்றும் ஸ்டாண்ட்-அப் இந்தியாவுக்கான தோட்டக்கலை என்ற கருத்துருடன் 2021 ஆம் ஆண்டுக்கான தேசிய தோட்டக்கலை கண்காட்சி பெங்களூரில் உள்ள
இந்திய தோட்டக்கலை ஆராய்ச்சி நிறுவனதில் (IIHR) பிப்ரவரி 8 முதல் 5 நாட்கள் நடைபெறுகிறது.

Theme: Horticulture for Start-Up and Stand-Up India

இந்திய வேளாண் ஆராய்ச்சிக் குழுமம் (ICAR) மற்றும் இந்திய தோட்டக்கலை ஆராய்ச்சி நிறுவனமும் இணைந்து இந்த கண்காட்சியை நடத்துகின்றன.

6. சமீபத்தில் எந்த உயர்நீதிமன்றத்தின் 60-வது ஆண்டு வைர விழாவை முன்னிட்டு அஞ்சல்தலை வெளியிடப்பட்டது?

  1. ஒடிசா
  2. பாட்னா
  3. சிக்கிம்
  4. குஜராத்
Answer & Explanation

Answer:

Explanation:

குஜராத் உயர்நீதிமன்றத்தின் 60வது ஆண்டு வைர விழா, கடந்த மே மாதம் தொடங்கி கொண்டாடப்பட்டு வருகிறது,

அதன் ஒரு பகுதியாக குஜராத் உயர்நீதிமன்றம் தொடங்கப்பட்டு 60 ஆண்டுகள் நிறைவடைந்ததை குறிக்கும் வகையில் நினைவு தபால்தலையை பிரதமர் மோடி சமீபத்தில் வெளியிட்டார்.

தொடங்கப்பட்ட நாள் : 1st மே 1960

தலைமை நீதிபதி: விக்ரம் நாத்





7. சமீபத்தில் eMantrimandal என்ற போர்டலை துவங்கியுள்ள மாநிலம்?

  1. ஆந்திரப்பிரதேசம்
  2. உத்தரகாண்ட்
  3. உத்திரபிரதேசஷ்
  4. கோவா
Answer & Explanation

Answer:

Explanation:

மின் அமைச்சரவை என்று பொருள்படும் eMantrimandal (e-cabinet) என்ற போர்டலை (http://emantrimandal.uk.gov.in/) உத்தர்காண்ட் அரசு தொடங்கியுள்ளது. மேலும் இந்த போர்டல் வழியே காகிதம் அல்லா தனது மாநில முதல் அமைச்சரவை கூட்டத்தையும் நடத்தியுள்ளது.

”இ-கேபினட்” (e-Cabinet) முறையை இந்தியாவில் அமல்படுத்தியுள்ள முதல் மாநிலம் எனும் பெருமையை ஹிமாச்சலப்பிரதேசம் பெற்றுள்ளது.

கடந்த 2014 ஆம் ஆண்டே நாட்டின் முதல் காகிதம் இல்லா அமைச்சரவை கூட்டத்தை ஆந்திரா மாநில அரசு நடத்தியது குறிப்பிடத்தக்கது.

மேலும், விரைவில் உத்தரப்பிரதேச மாநில அரசு காகிதம் இல்லாத அமைச்சரவை கூட்டத்தை, நடத்த முடிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

8. சமீபத்தில் ஜெனரல் திம்மய்யா அருங்காட்சியகம் எங்கு திறக்கப்பட்டுள்ளது?

  1. கர்நாடகா
  2. ஆந்திரப்ரதேஷ்
  3. தெலுங்கானா
  4. கேரளா
Answer & Explanation

Answer: கர்நாடகா 

Explanation:

இந்திய ராணுவ தளபதியாக கடந்த 1957 முதல் 1961-ம் ஆண்டு வரை பணியாற்றியவர் ஜெனரல் திம்மய்யா சாதனையை விவரிக்கும் பொருட்டு ஜெனரல் திம்மய்யா அருங்காட்சியகம் அவர் பிறந்த ஊரான கர்நாடக மாநிலம் குடகு மாவட்டம் மடிகேரியில் திறக்கப்பட்டுள்ளது.

இதனை திறந்து வைத்தவர் குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த்.

9. பரம்தீப் மோர் பின்வரும் எந்த விளையாட்டுடன் தொடர்பானவர்?

  1. நடைபந்தயம்
  2. குத்துசண்டை
  3. உயரம் தாண்டுதல்
  4. கிரிக்கெட்
Answer & Explanation

Answer: நடைபந்தயம் 

Explanation:

ஹரியானவை சேர்ந்த பரம்தீப் மோர் ஒரு நடைபந்தய வீரர்.

இவர் அசாம் மாநிலம் குவஹாத்தியில் நடைபெற்று வரும் 36வது தேசிய ஜூனியர் தடகள போட்டியில் 10KM நடைபந்தயத்தில் வென்ற வெள்ளிப்பதக்கம் வெற்று இருந்தார்.

ஆனால் தற்போது அவர் நிர்ணயிக்கப்பட்ட வயதை விட அதிகம் என தெரியவந்ததை தொடர்ந்து அவரது பதக்கம் திரும்பபெறப்பட்டுள்ளது.

10. Yes Man: The Untold Story of Rana Kapoor என்ற புத்தகத்தை எழுதியவர்?

  1. பவன் சி. லால்
  2. ரவ்னீத் கில்
  3. பிரஷாந்த் கபூர்
  4. ஆதித்யா பூரி
Answer & Explanation

Answer: பவன் சி. லால்

Explanation:

யெஸ் வங்கியின் நிறுவனர் ராணா கபூரின் வாழ்கை வரலாற்றை அடிப்படியாக கொண்டு Yes Man: The Untold Story of Rana Kapoor என்ற புத்தகத்தை பவன் சி. லால் எழுதியுள்ளார்.

சில வரி செய்திகள்

  • 1000 பள்ளி மாணவர்கள் இணைந்து தயாரித்த 100 மிகச் சிறிய கையடக்க பெம்டோ செயற்கைக்கோள்கள் (Femto satellite) 7-2-2021 அன்று ராமேசுவரத்திலிருந்து விண்ணில் செலுத்தப்பட்டது.
  • 13வது யானைகள் நலவாழ்வு முகாம் கோவை, மேட்டுப்பாளையத்தில் பிப்ரவரி 8 அன்று தொடங்குகிறது.
  • ஏமன் போரில் சவூதி அரேபியாவுக்கு அமெரிக்கா அளித்து வந்த ஆதரவை நிறுத்தியுள்ளதாக அதிபா் ஜோ பைடன் அறிவித்துள்ளாா்.
More TNPSC Current Affairs



Leave a Comment