Current Affairs in Tamil 7th February 2020
Hello, TNPSC Aspirants, Here we provide Current Affairs question and answer in Tamil for 7th February 2020. Take the quiz and improve your Current Affairs Knowledge.

1. கடல்சார் பாதுகாப்புக் குறித்த கிழக்கு ஆசிய உச்சி மாநாடு எங்கு நடைபெற உள்ளது?
- கொல்கத்தா
- கொச்சின்
- மும்பை
- சென்னை
Answer & Explanation
Answer: சென்னை
Explanation:
கடல்சார் பாதுகாப்பு ஒத்துழைப்பு தொடர்பான 4-வது கிழக்கு ஆசிய உச்சி மாநாடு சென்னையில் நடைபெற உள்ளது.
TNPSC Group 1 Model Papers – Download
2. சர்வதேச அறிவுசார் சொத்துரிமை பட்டியல்-2020 இல் இந்தியா வகிக்கும் இடம்?
- 36
- 40
- 46
- 50
Answer & Explanation
Answer: 40
Explanation:
அமெரிக்காவை சேர்ந்த சேம்பர் ஆஃப் காமர்ஸ்-இன் Global Innovation Policy Center (GIPC) எனும் அமைப்பு வெளியிட்டுள்ள International Intellectual Property (IP) Index-இல் இந்தியா 40 வது இடத்தை பிடித்துள்ளது.
மேலும் முதல் ஐந்து இடங்களை முறையே அமெரிக்கா, இங்கிலாந்து, ஸ்வீடன், பிரான்ஸ் மற்றும் ஜெர்மனி நாடுகள் பெற்றுள்ளன.
கடந்த ஆண்டு இந்தியா 36 வது இடத்தில் இருந்தது குறிப்பிடத்தக்கது.
3. சமீபத்தில், தொழுநோய் ஒழிப்பிற்கான சர்வதேச காந்தி விருது-2020 யாருக்கு வழங்கப்பட்டது?
- யோஹெய் சசகாவா
- என்.எஸ். தர்ம ஷக்து
- எம்.டி.குப்தே
- டாக்டர் அதுல் ஷா
Answer & Explanation
Answer: என்.எஸ். தர்ம ஷக்து
Explanation:
சமீபத்தில் 2020ஆம் ஆண்டுக்கான தொழுநோய் ஒழிப்புக்கான சர்வதேச காந்தி விருது இரண்டு பிரிவுகளில் வழங்கப்பட்டது.
தனி நபர் பிரிவு – டாக்டர் என்.எஸ். தர்மஷக்து (N.S. Dharmashaktu)
நிறுவன பிரிவு – தொழுநோய் மிஷன் அறக்கட்டளைக்கு -டெல்லி (Leprosy Mission Trust)
4. ஜனநாயக இலட்சியவாதத்திற்கான PEN கௌரி லங்கேஷ் விருது யாருக்கு வழங்கப்பட்டது?
- யூசுப் ஜமீல்
- பி மகாமூத்
- ரவீஷ்குமார்
- டி உமபதி
Answer & Explanation
Answer: யூசுப் ஜமீல்
Explanation:
PEN தென்னிந்திய மற்றும் PEN தில்லி ஆகியவை 2017 ஆம் ஆண்டில் படுகொலை செய்யப்பட்ட பத்திரிக்கை ஆசிரியரான மறைந்த கௌரி லங்கேஷ் என்பவரது பெயரில் 2018ஆம் ஆண்டுமுதல் PEN கௌரி லங்கேஷ் விருதை வழங்கி வருகிறது.
2019ஆம் ஆண்டுக்கான ஜனநாயக இலட்சியவாதத்திற்கான PEN கௌரி லங்கேஷ் விருது காஷ்மீரைச் சேர்ந்த மூத்தப் பத்திரிகையாளரான யூசுப் ஜமீல் அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.
PEN (Poets, Essayists and Novelists) என்பது ஒரு சர்வதேச அமைப்பாகும்.
5. 2020-2021 ஆண்டு காலகட்டங்களில் இந்தியாவின் GDP எவ்வளவு இருக்கும் என RBI தெரிவித்துள்ளது?
- 5.15 %
- 5.40 %
- 6 %
- 6.1 %
Answer & Explanation
Answer: 6%
Explanation:
2019-2020 நிதியாண்டிற்கான கடைசி நிதி கொள்கையை RBI சமீபத்தில் வெளியிட்டது,
அதில் 2020-2021 ஆண்டு காலகட்டங்களில் இந்தியாவின் GDP 6% இருக்கும் என தெரிவித்துள்ளது.
6. அமெரிக்காவை சேர்ந்த கிறிஸ்டினா கோச் விண்வெளியில் எவ்வளவு நாட்கள் தங்கியிருந்தார்?
- 311
- 317
- 328
- 332
Answer & Explanation
Answer: 328
Explanation:
சர்வதேச விண்வெளி நிலையத்தில் (International Space Station – ISS) 328 நாட்களாக தங்கியிருந்த நாசாவை சேர்ந்த கிறிஸ்டினா கோச் 6-2-2020 அன்று கஜகஸ்தானில் விண்வெளி ஓடம் மூலம் பூமிக்கு திரும்பினார்.
இவர் விண்வெளியில் மிக நீண்ட நாட்கள் தங்கியிருந்த பெண்மணி என்ற சாதனையை படைத்துள்ளார்.
7. ரயில்வே பாதுகாப்புப் படை (RPF) தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் சாம்பியன் பட்டம் வென்ற அணி?
- மத்திய ரயில்வே ஆா்.பி.எஃப்
- வடக்கு ரயில்வே ஆா்.பி.எஃப்
- தெற்கு ரயில்வே ஆா்.பி.எஃப்
- ஆா்.பி.எஃப் சிறப்புப் படை
Answer & Explanation
Answer: தெற்கு ரயில்வே ஆா்.பி.எஃப்
Explanation:
ரயில்வே மண்டலங்களுக்கு இடையேயான ரயில்வே பாதுகாப்புப் படை (ஆா்.பி.எஃப்.) தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் தெற்கு ரயில்வே ஆா்.பி.எஃப் அணி முதலிடத்தை பிடித்து, தடகள சாம்பியன்ஷிப்பை வென்றது.
இந்தபோட்டியில், சிறந்த தடகள வீரராக தெற்கு ரயில்வே ஆா்.பி.எஃப் தலைமை காவலா் வினோத் கண்ணன் தோ்வு செய்யப்பட்டாா். இவா் வட்டு எறிதலில் 44.10 மீட்டா் தொலைவுக்கு வீசி புதிய சாதனை படைத்தாா்.
மேலும், இரண்டாவது இடத்தை மத்திய ரயில்வே ஆா்.பி.எஃப் அணியும், மூன்றாவது இடத்தை ஆா்.பி.எஃப் சிறப்புப் படையும் வென்றன.
More TNPSC Current Affairs
Related