TNPSC Current Affairs Question and Answer in Tamil 8th February 2020

Current Affairs in Tamil 8th February 2020

Hello, TNPSC Aspirants, Here we provide Current Affairs question and answer in Tamil for 8th February 2020. Take the quiz and improve your Current Affairs Knowledge.



TNPSC Current Affairs in Tamil 8th February 2020
1. இந்தியாவிலேயே முதல் முறையாக இறந்தவர்களின் ஆதார் எண்களை சேகரிக்கும் மாவட்டம்?

  1. அலிகார் (உத்தரபிரதேசம்)
  2. பில்வரா (ராஜஸ்தான்)
  3. விருதுநகர் (தமிழ்நாடு)
  4. குண்டூர் (ஆந்திரா)
Answer & Explanation
Answer: விருதுநகர்

Explanation:

கடந்த 8 ஆண்டுகளில் இறந்தவர்களின் ஆதார் அட்டையை சேகரிக்கும் சோதனை முயற்சி இந்தியாவில் முதல் முறை யாக விருதுநகர் மாவட்டத்தில் தொடங்கப்பட்டுள்ளது.

TNPSC Group 1 Model Papers – Download

2. தமிழக அரசின் 2020 – 21-ம் நிதியாண்டுக்கான நிதிநிலை அறிக்கை சட்டப்பேரவையில் எப்போது தாக்கல் செய்யப்பட உள்ளது?

  1. பிப்ரவரி 10
  2. பிப்ரவரி 14
  3. மார்ச் 10
  4. மார்ச் 14
Answer & Explanation
Answer: பிப்ரவரி 14

Explanation:

தமிழக அரசின் 2020 – 21-ம் நிதியாண்டுக்கான நிதிநிலை அறிக்கையை வரும் பிப்ரவரி 14 ஆம்  தேதி நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் சட்டப் பேரவையில் தாக்கல் செய்கிறார்.

3. மிஸ்டிக் கலிங்கா இலக்கிய விருது யாருக்கு வழங்கப்பட உள்ளது?

  1. மனோஜ் தாஸ்
  2. நபநீதா தேவ் சென்
  3. அபிஜித் பானர்ஜி
  4. செந்தில் முல்லைநாதன்
Answer & Explanation
Answer: மனோஜ் தாஸ்

Explanation:

பிரபல ஒடியா மற்றும் ஆங்கில மொழி எழுத்தாளர் மனோஜ் தாஸ் அவர்களுக்கு மிஸ்டிக் கலிங்கா இலக்கிய விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

4. 22வது இந்தியா-சர்வதேச கடற்சார் உணவுகள் கண்காட்சி எங்கு நடைபெறுகிறது?

  1. கொச்சி
  2. பானாஜி
  3. விசாகப்பட்டிணம்
  4. கொல்கத்தா
Answer & Explanation
Answer: கொச்சி

Explanation:

22வது India International Seafood show கொச்சியில் பிப்ரவரி 7 முதல் பிப்ரவரி 9 வரை நடைபெறுகிறது.

12 ஆண்டுகளுக்கு பிறகு கொச்சி இந்த கண்காட்சியை நடத்துகிறது. மேலும் 21வது கடற்சார் உணவுகள் கண்காட்சி கோவாவில் கடந்த 2018ஆம் ஆண்டு நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.

கடல் பொருட்கள் ஏற்றுமதி மேம்பாட்டு ஆணையம் (MPEDA) மற்றும் கடல் உணவு ஏற்றுமதியாளர்கள் சங்கம் (SEAI) இணைந்து இந்த கண்காட்சியை நடத்துகின்றன.




5. இந்தியாவின் முதல் கண்ணாடி தரை பாலம் எங்கு அமைக்கப்பட உள்ளது?

  1. முசோரி
  2. சிம்லா
  3. டார்ஜீலிங்
  4. ரிஷிகேஷ்
Answer & Explanation
Answer: ரிஷிகேஷ்

Explanation:

உத்ரகாண்ட் மாநிலம், ‘ரிஷிகேஷில்’ கங்கை ஆற்றின் குறுக்கே கண்ணாடி தரை பாலம் அமைக்கப்பட உள்ளது. இந்தியாவில் இதுவே முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது.

6. சமீபத்தில் இந்தியா எந்த நாட்டிலிருந்து கச்சா எண்ணெயை இறக்குமதி செய்ய ஒப்பந்தம் செய்துள்ளது?

  1. அமெரிக்கா
  2. சீனா
  3. ரஷ்யா
  4. இந்தோனேசியா
Answer & Explanation
Answer: ரஷ்யா

Explanation:

ரஷ்யாவிலிருந்து கச்சா எண்ணெய்யை (Crude oil) இந்தியாவிற்கு இறக்குமதி செய்ய, இந்தியாவும் ரஷ்யாவும் முதல் முறையாக ஒப்பந்தம் செய்துள்ளன.

7. சமீபத்தில் எந்த நாடு யானைகளை வேட்டையாட சட்டப்பூர்வ அனுமதி வழங்கியுள்ளது?

  1. போட்ஸ்வானா
  2. நமீபியா
  3. தன்சானியா
  4. மடகாஸ்கர்
Answer & Explanation
Answer: போட்ஸ்வானா

Explanation:

ஆப்பிரிக்க நாடான போட்ஸ்வானாவில் யானைகளை வேட்டையாட சட்டப்பூர்வ அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

உலகிலேயே அதிக யானைகளை கொண்டுள்ள போட்ஸ்வானா என்பது குறிப்பிடத்தக்கது.

8. உலக அளவில் எஃகு உற்பத்தியில் முதலிடம் வகிக்கும் நாடு?

  1. சீனா
  2. இந்தியா
  3. ஜப்பான்
  4. அமெரிக்கா
Answer & Explanation
Answer: சீனா

Explanation:

சமீபத்தில் உலக எஃகு சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கைப்படி உலக அளவில் எஃகு உற்பத்தியில் சீனா முதலிடம் வகிக்கிறது.

ஜப்பானை பின்னுக்கு தள்ளி இந்தியா இரண்டாம் இடத்தை பிடித்துள்ளது. மூன்றாவது நான்காவது ஐந்தாவது இடங்கள் முறையே ஜப்பான், அமெரிக்கா, ரஷ்யா பிடித்துள்ளன.

9. சிறுமி சஞ்சனா பின்வரும் எந்த விளையாட்டுடன் தொடர்பானவர்?

  1. வில்வித்தை
  2. செஸ்
  3. டேபிள் டென்னிஸ்
  4. கேரம்
Answer & Explanation
Answer: வில்வித்தை

Explanation:

வில்வித்தையில் 3 முறை உலக சாதனை படைத்த சிறுமி சஞ்சனாக்கு மும்பை, ‘அசாம் புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ்’ சார்பில் சமீபத்தில் டாக்டர் பட்டம் வழங்கப்பட்டுள்ளது.

More TNPSC Current Affairs



Leave a Comment