Current Affairs in Tamil 9th February 2020
Hello, TNPSC Aspirants, Here we provide Current Affairs question and answer in Tamil for 9th February 2020. Take the quiz and improve your Current Affairs Knowledge.

1. சமீபத்தில் தமிழகத்தின் எந்த பகுதியில் புதிய கிரிக்கெட் மைதானம் திறக்கப்பட்டுள்ளது?
- வாழப்பாடி
- தலைவாசல்
- உம்பளாச்சேரி
- ஆலம்பாடி
Answer & Explanation
Answer: வாழப்பாடி
Explanation:
சர்வதேச தரத்திலான பிரமாண்ட கிரிக்கெட் மைதானம் சேலம் அருகே வாழப்பாடியை அடுத்த காட்டுவேப்பிலைப்பட்டியில் முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமி 9-2-2020 அன்று திறந்து வைத்தார்.
இந்த மைதானம், 2 லட்சத்து 5 ஆயிரம் சதுர அடியில் உருவாக்கப்பட்டுள்ளது. முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் ராகுல் டிராவிட் இந்த மைதானம் துவக்க விழாவில் கலந்துகொண்டார்.
மேலும், முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அவர்களால் சேலம் தலைவாசலில் ரூ.396 கோடி ரூபாய் மதிப்பில் அமையும் நவீன கால்நடை பூங்காவிற்க்கும் அடிக்கல் நாட்டபட்டது.
TNPSC Group 1 Model Papers – Download
2. கவிமணி தேசிக விநாயகம் பிள்ளைக்கு எங்கு மணிமண்டபம் அமைக்கப்பட உள்ளது?
- தேரூர்
- கோட்டார்
- தோவாளை
- ஆத்தங்குடி
Answer & Explanation
Answer: தோவாளை
Explanation:
தோவாளையில் (கன்னியாகுமரி) கவிமணி தேசிகவிநாயகம் பிள்ளைக்கு விரைவில் மணிமண்டபம் அமைக்கப்பட உள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.
- பிறப்பு:- ஜூலை 27, 1876
- இறப்பு:- செப்டம்பர் 26, 1954
- பிறந்த இடம்:- தேரூர் (கன்னியாகுமரி)
- பெற்றோர்:- சிவதாணுப்பிள்ளை, ஆதிலட்சுமி
- மனைவி:- உமையம்மை
3. சமீபத்தில் “குடும்பஸ்ரீ ஓட்டல்கள்” என்ற பெயரில் மலிவு விலை உணவகங்களை அறிமுகப்படுத்தியுள்ள மாநிலம்?
- தமிழ்நாடு
- கேரளா
- தெலுங்கானா
- கர்நாடகா
Answer & Explanation
Answer: கேரளா
Explanation:
“குடும்பஸ்ரீ ஓட்டல்கள்” என்ற பெயரில் 25 ரூபாய்க்கு உணவுகளை விற்க கேரள அரசு முடிவு செய்துள்ளது.
முதல் கட்டமாக 1,000 மலிவு விலை உணவகங்களை அமைக்கவுள்ளது.
4. சமீபத்தில் எங்கு 23-வது தேசிய மின்னாளுமை மாநாடு எங்கு நடைபெற்றது?
- மும்பை
- கொல்கத்தா
- சென்னை
- கொச்சின்
Answer & Explanation
Answer: மும்பை
5. சமீபத்தில் எந்த நாடு சர்வதேச மத சுதந்திர கூட்டமைப்பு எனும் அமைப்பை துவங்கியுள்ளது?
- இந்தியா
- அமெரிக்கா
- ரஷ்யா
- இஸ்ரேல்
Answer & Explanation
Answer: அமெரிக்கா
Explanation:
சர்வதேச மத சுதந்திர கூட்டமைப்பு ( International Religious Freedom Alliance) எனும் அமைப்பை அமெரிக்கா 6-2-2020 அன்று துவங்கியுள்ளது. இதில், ஆஸ்திரியா, பிரேசில், இங்கிலாந்து, இஸ்ரேல், உக்ரைன், நெதர்லாந்து மற்றும் கிரேக்கம் உள்ளிட்ட 27 நாடுகள் உறுப்பினராகவுள்ளன.
6. சமீபத்தில் எந்த மாநிலத்தில் ‘திஷா’ காவல் நிலையங்கள் திறக்கப்பட்டுள்ளன?
- ஆந்திரா
- தெலுங்கானா
- ஹரியானா
- டெல்லி
Answer & Explanation
Answer: ஆந்திரா
Explanation:
பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்ற வழக்குகளை விசாரிப்பதற்காக 18 ‘திஷா’ காவல் நிலையங்கள் அமைக்க ஆந்திர அரசு முடிவு செய்துள்ளது.
அதன்படி, ராஜமகேந்திரவரத்தில் (ராஜமுந்திரி) முதல் காவல்நிலையம் 9-2-2020 அன்று திறந்து வைக்கப்பட்டது.
பாலியல் வன்கொடுமை குற்றவாளிகளுக்கு 21 நாள்களில் மரண தண்டனை வழங்க வகைசெய்யும் ‘திஷா’ சட்டத்தை ஆந்திர அரசு சில மாதங்களுக்கு முன் கொண்டுவந்தது குறிப்பிடத்தக்கது.
7. ”Lapinised CSF (Classical Swine Fever)” என்ற பெயரில் பன்றிக் காய்ச்சலை குணபடுத்தும் தடுப்பு மருந்தை உருவாகியுள்ள அமைப்பு?
- தேசிய பால் ஆராய்ச்சி நிறுவனம்
- இந்திய கால்நடை ஆராய்ச்சி நிறுவனம்
- மத்திய எருமைகள் ஆராய்ச்சி நிறுவனம்
- மத்திய செம்மறி ஆடு வளர்ப்பு பண்ணை
Answer & Explanation
Answer: இந்திய கால்நடை ஆராய்ச்சி நிறுவனம்
Explanation:
இந்திய வேளாண் ஆராய்ச்சி கவுண்சிலின் (ICAR) கீழ் செயல்படும் இந்திய கால்நடை ஆராய்ச்சி நிறுவனம் (IVRI) ”Lapinised CSF (Classical Swine Fever)” என்ற பெயரில் பன்றிக் காய்ச்சலை குணபடுத்தும் தடுப்பு மருந்தை உருவாக்கியுள்ளது.
8. தேசிய அளவிலான சீனியா் ராக்கிட் பால் போட்டியின் ஆண்கள் பிரிவில் சாம்பியன் பட்டம் வென்ற அணி?
- தமிழ்நாடு
- பஞ்சாப்
- கர்நாடகா
- புதுச்சேரி
Answer & Explanation
Answer: தமிழ்நாடு
Explanation:
பஞ்சாப் மாநிலம் அமிா்தசரஸில் நடைபெற்ற 7-வது தேசிய அளவிலான சீனியா் ராக்கிட் பால் போட்டியில் (National Rocketball Championship) ஆண்கள் பிரிவில் தமிழக அணி முதலிடமும், பெண்கள் பிரிவில் இரண்டாமிமும் பிடித்தன.
9. தேசிய சீனியா் பளுதூக்குதல் போட்டியில் ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தை வென்ற அணி?
- மகாராஷ்டிரா
- தமிழ்நாடு போலீஸ்
- மத்திய ரிசர்வ் போலீஸ் படை
- இந்திய ரயில்வே
Answer & Explanation
Answer: இந்திய ரயில்வே
Explanation:
கொல்கத்தாவில் நடைபெற்ற 35வது தேசிய சீனியா் பளுதூக்குதல் சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியன் ரயில்வே அணி ஆடவா் மற்றும் மகளிர் என ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தையும் கைப்பற்றியது.
மேலும், ஆடவா் பிரிவில் சா்வீஸஸும், மகளிா் பிரிவில் மகாராஷ்டிரமும் இரண்டாம் இடம் பெற்றன.
ஆடவா் பிரிவில் யூத் ஒலிம்பிக் சாம்பியன் ஜெரேமி லால்ரின்னுன்கா(Jeremy Lalrinnunga) மற்றும் மகளிா் பிரிவில் முன்னாள் உலக சாம்பியன் மீராபாய் சானு, ஆகியோா் சிறந்த வீரா்களாக தோ்வு செய்யப்பட்டனா்.
10. 2020ஆம் ஆண்டுக்கான நிதி எழுத்தறிவு வாரம் எப்போது அனுசரிக்கப்படுகிறது?
- 03-07 பிப்ரவரி
- 10-14 பிப்ரவரி
- 10-16 பிப்ரவரி
- 17-21 பிப்ரவரி
Answer & Explanation
Answer: 10-14 பிப்ரவரி
Explanation:
2020ஆம் ஆண்டுக்கான Financial Literacy Week பிப்ரவரி 10 முதல் பிப்ரவரி 14 வரை அனுசரிக்கப்படுகிறது.
இந்த ஆண்டுக்கான கருப்பொருள்: குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்நிறுவனங்கள்
More TNPSC Current Affairs
Related