Hello, TNPSC Aspirants, Here we provide the Current Affairs question and answer in Tamil for 9th February 2021. Take the quiz and improve your Current Affairs Knowledge.
1. தோபி – துர்காபூர் இயற்கை எரிவாயு குழாய் திட்டம் பின்வரும் எந்த இரு மாநிலங்களுக்கு இடையே அமைந்துள்ளது?
பீகார் – ஜார்க்கண்ட்
ஜார்க்கண்ட் – ஒடிசா
ஒடிசா – மேற்கு வங்கம்
பீகார் – மேற்கு வங்கம்
Answer & Explanation
Answer: பீகார் – மேற்கு வங்கம்
Explanation:
Urja Ganga Gas Pipeline Project
பிரதமரின் உர்ஜா கங்கா திட்டத்தின் ஒரு பகுதியாக, அமைக்கப்பட்டு வந்த 348 கிலோ மீட்டர் நீளம் கொண்ட தோபி – துர்காபூர் இயற்கை எரிவாயு குழாய் திட்டத்தை பிப்ரவரி 7 அன்று பிரதமர் நாட்டுக்கு அர்ப்பணித்து வைத்தார்.
உர்ஜா கங்கா என்பது கிழக்கிந்திய பகுதிகளில் குழாய் மூலம் இயற்கை எரிவாயு வழங்கும் திட்டம் ஆகும்.
இது மொத்தமாக 2655 கிலோமீட்டர் நீளத்திற்கு அமைக்கப்படும் JHBDPL (Jagdishpur-Haldia & Bokaro-Dhamra Natural Gas Pipeline project) திட்டம் ஆகும்.
திட்டம் துவக்கம்: அக்டோபர் 24, 2016
2. நெடுஞ்சாலைகளை மேம்படுத்த சமீபத்தில் அசாம் மாநிலம் தொடங்கியுள்ள திட்டம்?
ASOM MALA
SVAYEM
Green Way
ASAM GO
Answer & Explanation
Answer: ASOM MALA
Explanation:
மாநில நெடுஞ்சாலைகள் மற்றும் முக்கிய மாவட்ட சாலைகளையும் மேம்படுத்துவதற்கு 8210 கோடி மதிப்பிலான `அசாம் மாலா’ என்ற திட்டத்தை அசாம் மாநிலம் தொடங்கியுள்ளது.
இத்திட்டத்தை பிப்ரவரி 7 அன்று பிரதமர் அவர்கள் தொடங்கிவைத்தார். மேலும் பிஸ்வநாத் மற்றும் சாராய்தேவ் ஆகிய இடங்களில் இரண்டு மருத்துவக் கல்லூரிகளையும் தொடங்கிவைத்தார்.
இத்திட்டம் மத்திய அரசின் பாரத்மாலா திட்டத்தின் ஒரு பகுதியாக இயங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
பாரத்மாலா பரியோஜனா திட்டமானது ஜூலை 31, 2015 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது.
3. தற்போதைய மாநிலங்களவை தலைவர் யார்?
குலாம் நபி ஆசாத்
வெங்கய்யா நாயுடு
ராம்நாத் கோவிந்த்
ஓம் பிர்லா
Answer & Explanation
Answer:வெங்கய்யா நாயுடு
Explanation:
மாநிலங்களவை எதிர்க்கட்சி தலைவராக உள்ள குலாம் நபி ஆசாத்தின் பதவிக்காலம் வரும் 15 ஆம் தேதி முடிய உள்ள நிலையில், அவருக்கு பிரிவு உபசார நிகழ்வு இன்று (9th February) நடைபெற்றது.
துணைத் தலைவர் – ஹரிவன்ஷ்
தலைவர் & துணைத் தலைவர் பற்றி கூறும் ஷரத்து – 89
4. உலகின் மிகப்பெரிய கடலோர காற்றாலைப் பண்ணை எங்கு அமைக்கப்பட உள்ளது?
வடகொரியா
தென்கொரியா
டென்மார்க்
நியூசீலாந்து
Answer & Explanation
Answer: தென்கொரியா
Explanation:
உலகின் மிகப்பெரிய கடலோர காற்றாலைப் பண்ணை (offshore wind farm) தென்கொரியாவில் அமைக்கப்படவுள்ளது. (8.2 GW)
வரும் 2030ஆம் ஆண்டுகள் இத்திட்டம் அமைக்கப்பட உள்ளது.
5. உலக வர்த்தக அமைப்பின் (WTO) முதல் பெண் தலைவராக பதவியேற்க இருப்பவர்?
எர்லென் மக் ஆர்தர்
யூ மியங்-ஹீ
எல்லன் ஜான்சன் சர்வீஃப்
கோஸி ஒகேஞ்சோ-இவியாலா
Answer & Explanation
Answer: கோஸி ஒகேஞ்சோ-இவியாலா
Explanation:
சுவிட்சர்லாந்தின் ஜெனீவாவை தலைமையிடமாக கொண்டு இயங்கும் உலக வா்த்தக அமைப்பானது 1st ஜனவரி 1995-ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது.
இந்த அமைப்பானது சா்வதேச நாடுகளிடையிலான வா்த்தகம் மற்றும் ஏற்றுமதி வரிகளைக் கட்டுப்படுத்தி வருகிறது.
இந்த அமைப்பின் முதல் பெண் மற்றும் ஆப்ரிக்க தலைவராக நைஜிரியாவின் முன்னாள் நிதி அமைச்சரான கோஸி ஒகேஞ்சோ-இவியாலா ( Okonjo-Iweala) தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
இந்த அமைப்பில் 164 நாடுகள் உறுப்பினா்களாக உள்ளனா்.
6. “கொரோனாவாக்” என்பது பின்வரும் எந்த நாட்டை சேர்ந்த தடுப்பூசி ஆகும்?
அமெரிக்கா
சீனா
ரஷ்யா
இஸ்ரேல்
Answer & Explanation
Answer: சீனா
Explanation:
’சினோவாக்’ (Sinovac) கொரோனா தடுப்பூசியை தொடர்ந்து ‘கொரோனாவாக்’ (CoronaVac) என்ற உள்நாட்டில் உருவாக்கப்பட்டுள்ள தடுப்பூசியை பயன்படுத்த சீனா அரசு அனுமதியளித்துள்ளது.
சீரம் – கோவிஷீல்டு (ஆக்ஸ்போர்டு + அஸ்ட்ரா ஜெனேகா)
யுனிசெஃப் அமைப்பிற்க்கு நீண்டகால அடிப்படையில் கரோனா தடுப்பூசியை வழங்க ஒப்பந்தம்
பாரத் பயோடெக் – கோவாக்சின் (இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் + பாரத் பயோடெக்)
அதிக பயனாளிகளுக்கு கொவிட்-19 தடுப்பூசியை வழங்கிய நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா மற்றும் இங்கிலாந்து நாடுகளை தொடர்ந்து இந்தியா மூன்றாவது இடம் பிடித்துள்ளது
7. ஐசிசி – யின் ஜனவரி மாத சிறந்த வீரர் விருதை பெற்றுள்ளவர்?
ரிஷப் பந்த்
ஜோ ரூட்
முகமது சிராஜ்
பால் ஸ்டிர்லிங்
Answer & Explanation
Answer:ரிஷப் பந்த்
Explanation:
ஐசிசி – யின் ஜனவரி மாத சிறந்த வீரர் விருது இந்தியாவின் ரிஷப் பந்த்-க்கும், பெண்கள் பிரிவில் தென் ஆபிரிக்காவின் ஷப்னிம் இஸ்மாயில் அவர்களுக்கும் வழங்கப்பட்டுள்ளது.
8. Parliamentary Messenger in Rajasthan என்ற புத்தகத்தின் ஆசிரியர்?
வெங்கய்யா நாயுடு
ஜெய்பிரகாஷ்
சுவேதா லிங்கம்
கே.என். பண்டாரி
Answer & Explanation
Answer:கே.என். பண்டாரி
Explanation:
கே.என். பண்டாரி அவர்கள் எழுதிய Parliamentary Messenger in Rajasthan என்ற புத்தகத்தை சமீபத்தில் திரு. வெங்கய்யா நாயுடு அவர்கள் வெளியிட்டுள்ளார்.