Hello, TNPSC Aspirants, Here we provide Current Affairs question and answer in Tamil for 10th February 2020. Take the quiz and improve your Current Affairs Knowledge.
1. பாதுகாக்கப்பட்ட சிறப்பு வேளாண் மண்டலமாக அறிவிக்கப்பட உள்ள தமிழக பகுதி?
திருநெல்வேலி
தூத்துக்குடி
காவிரி டெல்டா
கீழடி
Answer & Explanation
Answer: காவிரி டெல்டா
Explanation:
காவிரி டெல்டா பகுதிகள் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக்க சிறப்புச் சட்டம் கொண்டு வரப்படும் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி 9-2-2020 அன்று அறிவித்துள்ளார்.
2. சமீபத்தில் மத்திய அரசு தமிழகத்தின் எந்த நகரத்தை தென்னை நார் ஏற்றுமதிக்கான சிறப்புப் பொருளாதார நகரமாக அறிவித்துள்ளது?
பொள்ளாச்சி
திண்டுக்கல்
திருப்பூர்
மதுரை
Answer & Explanation
Answer: பொள்ளாச்சி
Explanation:
பொள்ளாச்சியை தென்னை நார் ஏற்றுமதிக்கான சிறப்பு பொருளாதார நகரமாக மத்திய அரசு ஜனவரி 29ஆம் தேதி அறிவித்துள்ளது.
ந்த அறிவிப்பால், பொள்ளாச்சிக்கு ஆண்டுக்கு சிறப்பு நிதியாக ரூ. 1000 கோடிக்கும் மேல் கிடைக்க வாய்ப்புள்ளது குறிப்பிடத்தக்கது.
3. சிறப்பாக செயல்படும் 20-ஸ்மார்ட் சிட்டி பட்டியலில் முதலிடம் வகிக்கும் நகரம்?
திருப்பூர்
திருச்சி
வாரணாசி
ஆமதாபாத்
Answer & Explanation
Answer: ஆமதாபாத்
Explanation:
மத்திய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சகம் வெளியிட்ட சிறப்பாக செயல்படும் 20 ஸ்மார்ட் சிட்டி பட்டியலில் முதலிடத்தை குஜராத்தின் ஆமதாபாத் பிடித்துள்ளது.
இரண்டாம் இடத்தை நாக்பூர் பிடித்துள்ளது. மேலும் இந்த இடத்தை திருப்பூர் 3வது இடத்தையும், வேலூர் 10வது இடத்தையும் பிடித்துள்ளன.
இந்திய இராணுவத்தின் மிலிட்டரி பொறியியல் கல்லூரி மிகக்குறைந்த விலையிலான ”பார்த்” (Parth) என்ற துப்பாக்கிச் சூடு லொக்கேட்டரை (Gunshot Locator) கண்டுபிடித்துள்ளது.
5. எங்கு நாட்டிலேயே முதல் முறையாக மனிதக்கழிவுகளில் இருந்து இயற்கை உரம் தயாரிக்கும் திட்டம் தொடங்கப்பட்டது?
கேங்டாக்
சண்டிகர்
நீலகிரி
ராணிப்பேட்டை
Answer & Explanation
Answer: நீலகிரி
Explanation:
நாட்டிலேயே முதல் முறையாக நீலகிரி மாவட்டம் கேத்தி பேரூராட்சியில் மனிதக் கழிவுகளில் இருந்து உரம் தயாரிக்கப்பட்டு விவசாயத்துக்குப் பயன்படுத்தப்படுகிறது.
6. சமீபத்தில் 2020ஆம் ஆண்டுக்கான ஆப்பிரிக்க ஒன்றிய உச்சி மாநாடு எங்கு நடைபெற்றது?
ஒட்டாவா
டொராண்டோ
நைரோபி
ஆட்டிஸ் அபாபா
Answer & Explanation
Answer: ஆட்டிஸ் அபாபா
Explanation:
2020ஆம் ஆண்டுக்கான ஆப்பிரிக்க ஒன்றிய உச்சி மாநாடு (African Union Summit ) எத்தியோப்பியாவின் தலைநகர் ஆட்டிஸ் அபாபா (Addis Ababa) ல் நடைபெற்றது.
இந்த மாநாட்டில், ஆப்பிரிக்க ஒன்றியத்தின் புதிய தலைவராக தென் ஆப்பிரிக்க அதிபர் சிறில் ராமபோஷா தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
இந்த மாநாட்டின் கருப்பொருள்: Silencing the Guns
7. 19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் சாம்பியன் பட்டம் வென்ற அணி?
பாகிஸ்தான்
இலங்கை
பங்களாதேஷ்
இந்தியா
Answer & Explanation
Answer: பங்களாதேஷ்
Explanation:
தென்னாப்பிரிக்காவில் நடைபெற்றது 19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக்கோப்பை கிரிக்கெட் இறுதி போட்டியில் இந்திய அணியை வீழ்த்தி பங்களாதேஷ் அணி முதன்முறையாக சாம்பியன் பட்டத்தை வென்றது.
கடந்த ஆண்டு இந்திய – வங்கதேச அணிகள் ஆசியக் கோப்பையின் இறுதிப் போட்டியில் மோதின. அப்போது இந்திய அணி வெற்றியடைந்தது குறிப்பிடத்தக்கது.
8. காம்யா கார்த்திகேயன் பின்வரும் எந்த விளையாட்டுடன் தொடர்பானவர்?
மலையேற்றம்
குதிரையேற்றம்
கோல்ப்
துப்பாக்கி சுடுதல்
Answer & Explanation
Answer: மலையேற்றம்
Explanation:
சமீபத்தில் ஆந்திராவைச் சேர்ந்த காம்யா கார்த்திகேயன், தென் அமெரிக்க கண்டத்தின் மிக உயா்ந்த மலைச் சிகரமான அகோன்காகுவாவில் ஏறிய உலகின் மிகக் குறைந்த வயதுச் சிறுமி என்ற சாதனையை படைத்துள்ளார்.
9. சர்வதேச தானியங்கள் தினம் எப்போது அனுசரிக்கப்படுகிறது?
ஜனவரி 28
பிப்ரவரி 10
பிப்ரவரி 09
அக்டோபர் 16
Answer & Explanation
Answer: பிப்ரவரி 10
Explanation:
அக்டோபர்-1 உலக சைவ உணவு தினமும், அக்டோபர்-16 உலக உணவு தினமும் அனுசரிக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.