TNPSC Current Affairs Question and Answer in Tamil 10th February 2021

Current Affairs in Tamil 10th February 2021

Hello, TNPSC Aspirants, Here we provide the Current Affairs question and answer in Tamil for 10th February 2021. Take the quiz and improve your Current Affairs Knowledge.



9th February | 11th & 12th February

1. தமிழகத்தில் அமைக்கப்பட உள்ள புதிய சைபர் குற்றப்பிரிவு காவல் நிலையங்களின் எண்ணிக்கை ?

  1. 26
  2. 38
  3. 46
  4. 52
Answer & Explanation

Answer: 46

Explanation:

தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் சைபர் குற்றப்பிரிவு காவல் நிலையங்கள் தொடங்குவதற்கான அரசாணை சமீபத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

36 மாவட்டம், 7 மாநகராட்சி என 46 புதிய சைபர் குற்றப்பிரிவு காவல் நிலையங்கள் அமைக்கப்படும்.

சைபர் குற்றப்பிரிவு காவல் நிலையங்கள் ‘ஏடிஎஸ்பி’ (ADSP) தலைமையில் செயல்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது

2. அரசு விழாவாக கொண்டாடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ள கிருபானந்த வாரியாரின் பிறந்த தினம்?

  1. 16 அக்டோபர் 1905
  2. 25 ஆகஸ்ட் 1906
  3. 15 ஆகஸ்ட் 1907
  4. 25 ஆகஸ்ட் 1907
Answer & Explanation

Answer: 25 ஆகஸ்ட் 1906

Explanation:

வேலூர் மாவட்டம், காட்பாடிக்கு அருகே பாலாற்றங்கரையில் அமைந்துள்ள காங்கேயநல்லூரில் பிறந்த கிருபானந்தவாரியார் பிறந்த நாளான ஆகஸ்ட் 25ம் தேதி அரசு விழாவாக கொண்டாடப்படும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

எம்.ஜி.ஆருக்கு ‘பொன்மனச் செம்மல்’ என்ற பட்டத்தை வழங்கியவர் கிருபானந்த வாரியார் என்பது குறிப்பிடத்தக்கது.

1993ஆம் ஆண்டு நவம்பர் 7 அன்று காலமானார்.

3. சமீபத்தில் கர்நாடக மேல் சபை தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ளவர்?

  1. பசவராஜ் ஹொரட்டி
  2. பிரதாப்சந்திர ஷெட்டி
  3. வஜூபாய் வாலா
  4. எம்.கே.பிரனேஷ்
Answer & Explanation

Answer:பசவராஜ் ஹொரட்டி

Explanation:

கர்நாடக மேல் சபை புதிய தலைவராக பா.ஜ.க.- ஜனதா தளம் (எஸ்) கூட்டணி சார்பிலானா பசவராஜ் ஹொரட்டி தேர்வுசெய்யப்பட்டுள்ளார்.

கர்நாடக மேல் சபை தலைவராக பணியாற்றிய பிரதாப்சந்திர ஷெட்டி தனது பதவியை கடந்த வாரம் ராஜினாமா செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழ்நாடு – நவம்பர் 1, 1986 ஒழிக்கப்பட்டது

4. சர்வதேச நிலைத்த வளர்ச்சி மாநாடு 2021 – ஐ தொடங்கி வைத்தவர்?

  1. முகமது இர்ஃபான் அலி
  2. ஜேம்ஸ் மராபே
  3. முகமது நஷீத்
  4. நரேந்திர மோடி
Answer & Explanation

Answer: நரேந்திர மோடி 

Explanation:

காணொலி மூலம் நடைபெறும் 20வது சர்வதேச நிலைத்த வளர்ச்சி மாநாட்டை பிரதமர் மோடி அவர்கள் தொடங்கி வைத்தார்

நமது பொதுவான எதிர்காலத்தை மறுவரையறை செய்தல்: அனைவருக்கும் பாதுகாப்பான சுற்றுச்சூழல்’ என்ற கருப்பொருளுடன் World Sustainable Development Summit 2021 பிப்ரவரி 10 முதல் பிப்ரவரி 12 வரை இணையவழியில் நடைபெறுகிறது.

இம்மாநாட்டை ஆண்டுதோறும் டெல்லியில் இயங்கிவரும் ஆற்றல் மற்றும் வளங்கள் நிறுவனம் (The Energy and Resources Institute (TERI)) நடத்துகிறது.

Theme: Redefining our common future: Safe and secure environment for all

5. சமீபத்தில் பின்வரும் யாருக்கு ஆசிய சுற்றுச்சூழல் அமலாக்க விருது வழங்கப்பட்டது?

  1. R.S. ஷரத்
  2. ஜனனி சுபாஷ்
  3. சஸ்மிதா லங்கா
  4. லுஜின் அல்-ஹட்லால்
Answer & Explanation

Answer: சஸ்மிதா லங்கா

Explanation:

சட்டவிரோதமாக எறும்புத்தின்னி (Pangolin) கடத்தப்படுவதை கட்டுப்படுத்திய ஒரிசாவை சேர்ந்த வன அலுவலர் சஸ்மிதா லங்காக்கு 2020 ஆம் ஆண்டுக்கான ஆசிய சுற்றுச்சூழல் அமலாக்க விருது வழங்கப்பட்டுள்ளது.

6. சமீபத்தில் செவ்வாய் கிரக சுற்றுவட்டப் பாதையை அடைந்த ‘ஹோப்’ விண்கலம் பின்வரும் எந்த நாட்டை சேர்ந்தது?

  1. ரஷ்யா
  2. சீனா
  3. ஐக்கிய அரபு அமீரகம்
  4. இஸ்ரேல்
Answer & Explanation

Answer: ஐக்கிய அரபு அமீரகம்

Explanation:

ஐக்கிய அரபு அமீரகத்தின் ‘ஹோப்’ விண்கலம் கடந்த 7 மாத பயணத்திற்கு பிறகு பிப்ரவரி 9 அன்று செவ்வாய் கிரக சுற்றுவட்டப்பாதையை அடைந்தது.

Al Amal பற்றி…

அரபு மொழியில் அல் அமல் (நம்பிக்கை) என்ற பொருள்படும் ‘ஹோப்’ என்ற விண்கலத்தை முகம்மது பின் ராஷித் விண்வெளி மையம்-துபாய் உருவாக்கியது.

இந்த விண்கலம் மனிதர்கள் இல்லாமல் செவ்வாய் கிரகத்திற்கு கடந்த ஜூலை 15 அன்று ஜப்பானின் டனகஷிமா ராக்கெட் ஏவுதளத்தில் (Tanegashima Space Center) இருந்து `ஹெச் 11 ஏ’ என்ற ராக்கெட் மூலம் செலுத்தப்பட்டது

அமீரகத்தின் 50-வது தேசிய தினத்தை கொண்டாடும் வகையில் இந்த செவ்வாய் கிரக பயண திட்டம் செயல்படுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.





7. லாலந்தர் (ஷாதூட்) என்ற அணை பின்வரும் எந்த நாட்டில் அமைக்கப்படவுள்ளது?

  1. ஆப்கானிஸ்தான்
  2. மியான்மர்
  3. இலங்கை
  4. பங்களாதேஷ்
Answer & Explanation

Answer: ஆப்கானிஸ்தான்

Explanation:

ஆப்கானிஸ்தானின் காபூல் ஆற்றின் குறுக்கே லாலந்தர் (ஷாதூட்) அணை கட்டுவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் காணொலி மூலம் 2021 பிப்ரவரி 9 அன்று கையெழுத்தானது.

வெளியுறவு அமைச்சர் டாக்டர் ஜெய்சங்கர், ஆப்கானிஸ்தான் வெளிநாட்டு அமைச்சர் திரு ஹனிஃப் ஆத்மர் ஆகியோர், பிரதமர் திரு நரேந்திர மோடி மற்றும் ஆப்கானிஸ்தான் அதிபர் முகமது அஷ்ரப் கனியின் முன்னிலையில் இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.

கடந்த 2016 ஆம் ஆண்டு இந்தியா-ஆப்கானிஸ்தான் நட்புறவு அணையை (சல்மா அணை) இந்தியா கட்டமைத்துக் கொடுத்தது குறிப்பிடத்தக்கது.

8. சமீபத்தில் இந்திய கடற்படை மேற்கொண்டு வரும் போர்பயிற்சின் பெயர்?

  1. SLINEX 21
  2. SAMPRITI-IX
  3. PASSEX 21
  4. TROPEX 21
Answer & Explanation

Answer: TROPEX 21

Explanation:

இந்திய கடற்படை, இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை மேற்கொள்ளும் மிகப் பெரிய போர் பயிற்சியான ‘ட்ரோபெக்ஸ் 21’ (Theatre Level Operational Readiness Exercise (TROPEX 21) இந்திய பெருங்கடலில் நடைபெற்று வருகிறது.

இதில் கடற்படையின் போர்க்கப்பல்கள், நீர்மூழ்கி கப்பல்கள், விமானங்கள் உட்பட அனைத்து பிரிவுகளும், தரைப்படை, விமானப்படை, இந்திய கடலோர காவல் படையின் சில பிரிவுகளும் ஈடுபடுகின்றன.

9. Platform Scale: For a Post-Pandemic World என்ற புத்தகத்தை எழுதியர்?

  1. சங்கர் ஆச்சார்யா
  2. யோகிந்தர் கே அலாக்
  3. பினா அகர்வால்
  4. சங்கீத் பால் சவுத்திரி
Answer & Explanation

Answer: சங்கீத் பால் சவுத்திரி

10. 2021ஆம் ஆண்டுக்கான நிதி எழுத்தறிவு வாரம் எப்போது அனுசரிக்கப்படுகிறது?

  1. 08-12 பிப்ரவரி
  2. 10-14 பிப்ரவரி
  3. 10-16 பிப்ரவரி
  4. 17-21 பிப்ரவரி
Answer & Explanation

Answer: 08-12 பிப்ரவரி 

Explanation:

Financial Literacy Week

இந்திய ரிசர்வ் வங்கினால் 2016 முதல் ஆண்டுதோறும் அனுசரிக்கப்பட்டு வரும் நிதி எழுத்தறிவு வாரம், இந்த ஆண்டு பிப்ரவரி 8 முதல் பிப்ரவரி 12 வரை அனுசரிக்கப்படுகிறது.

இந்த ஆண்டுக்கான கருப்பொருள்: Credit Discipline and Credit from Formal Institutions

More TNPSC Current Affairs




Leave a Comment