TNPSC Current Affairs Question and Answer in Tamil 11th and 12th February 2021

Current Affairs in Tamil 11th & 12th February 2021

Hello, TNPSC Aspirants, Here we provide the Current Affairs question and answer in Tamil for 11th February 2021. Take the quiz and improve your Current Affairs Knowledge.



10th February | 19th February

1. தேசிய மகளிர் தினமாக கொண்டப்படும் சரோஜினி நாயுடு அவர்களின் பிறந்த தினம்?

  1. பிப்ரவரி 13,1879
  2. பிப்ரவரி 13,1885
  3. பிப்ரவரி 13,1886
  4. பிப்ரவரி 13,1889
Answer & Explanation

Answer: பிப்ரவரி 13,1879

Explanation:

இந்தியாவின் முதல் பெண் கவர்னர் சரோஜினி நாயுடு அவர்களின் பிறந்தநாளான பிப்ரவரி 13 தேசிய மகளிர் தினமாக அனுசரிக்கப்படுகிறது.

பிப்ரவரி 13 உலக வானொலி தினமாகவும் அனுசரிக்கப்படுகிறது. மேலும் இதற்கான கருப்பொருள்: புதிய உலகம், புதிய வானொலி

மேலும் ஆண்டுதோறும் மார்ச்-8 சர்வதேச மகளிர் தினமாகவும் மற்றும் மே-28 சர்வதேச மகளிர் நல தினமாகவும் அனுசரிக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

2. சமீபத்தில் பின்வரும் எந்த மாநிலம் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளின் சீர்திருத்தங்களை நிறைவேற்றியுள்ளது?

  1. குஜராத்
  2. பீகார்
  3. தமிழ்நாடு
  4. கோவா
Answer & Explanation

Answer: கோவா

Explanation:

Urban Local Bodies Reforms

ஆந்திரப் பிரதேசம், மத்தியப் பிரதேசம், தெலங்கானா, மணிப்பூர், மற்றும் ராஜஸ்தான் மாநிலங்களை தொடர்ந்து 6 – வது மாநிலமாக கோவா நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான சீர்திருத்தங்களை நிறைவேற்றியுள்ளது.

இச் சீர்த்திருத்தங்கள் மத்திய நிதித்துறை அமைச்கம் வழிகாட்டுதலின்ப்படி மேற்கொள்ளப்படுகின்றன.

இதன்மூலம் கோவா அதன் மாநில உற்பத்தியில் 0.25 சதவீத அளவுக்குக் கூடுதல் கடன் (223 கோடி) பெற முடியும்.

  • ஒரே தேசம் ஒரே ரேஷன் அட்டைத் திட்டம் (தமிழ்நாடு – அக்டோபர் 1 (11வது))
  • எளிதாக வர்த்தகத்தை மேற்கொள்வதற்கான சீர்திருத்தம்
  • மின்துறை சீர்திருத்தங்கள்

3. பின்வரும் எந்த நிறுவனம் அழுத்தமூட்டப்பட்ட இயற்கை எரிவாயுவில் (CNG) இயங்கும் இந்தியாவின் முதல் டிராக்டரை உருவாகியுள்ளது  ?

  1. ராவ்மத் டெக்னோ சொல்யூஷன்ஸ் மற்றும் டொமசெட்டோ அக்கில் இந்தியா
  2. மஹிந்திரா
  3. அசோக் லயலண்ட்
  4. ஹ்யுண்டாய் இந்தியா
Answer & Explanation

Answer: Option – A 

Explanation:

ராவ்மத் டெக்னோ சொல்யூஷன்ஸ் மற்றும் டொமசெட்டோ அக்கில் இந்தியா நிறுவனத்தால்,  தயாரிக்கப்பட்ட, அழுத்த மூட்டப்பட்ட இயற்கை எரிவாயுவில் (CNG) இயங்கும் இந்தியாவின் முதல் டிராக்டரை மத்திய அமைச்சர் திரு. நிதின் கட்கரி 12-2-2021 அன்று அறிமுகப்படுத்தினர்.

இந்தியாவின் முதல் CNG – Plant புனேயில் அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

4. பிப்ரவரி 10 அன்று பின்வரும் எந்தநாட்டை சேர்ந்த விண்கலம் செவ்வாய் கிரக சுற்றுவட்டப் பாதையை அடைந்தது?

  1. ஜப்பான்
  2. சீனா
  3. ஐக்கிய அரபு அமீரகம்
  4. இஸ்ரேல்
Answer & Explanation

Answer: சீனா 

Explanation:

கடந்த ஜூலை 23, 2020 அன்று Long March 5 ராக்கெட் மூலம் சீனா அனுப்பிய டினாவென் 1 (Tianwen-1) விண்கலம் பிப்ரவரி 10 அன்று செவ்வாய் கிரக சுற்றுவட்டப் பாதையை அடைந்தது.

இதன்மூலம் செவ்வாய் கிரக சுற்றுவட்டப் பாதையை அடைந்தத 7-வது நாடு என்ற பெருமையை பெற்றது.

2011 அன்று சீனா ரஷ்யா உடன் இணைந்து செவ்வாய் கிரகத்துக்கு அனுப்பிய விண்கலம் தோல்வியில் முடிந்தது குறிப்பிடத்தக்கது.

5. சமீபத்தில் மிஸ் இந்தியா 2020 பட்டத்தை வென்றவர்?

  1. சுமன் ராவ்
  2. பிரியா தேவ்
  3. மானசா வாரணாசி
  4. மன்யா சிங்
Answer & Explanation

Answer: மானசா வாரணாசி

Explanation:

மிஸ் இந்தியா 2020 பட்டத்தை தெலுங்கானாவைச் சேர்ந்த 23 வயதான மானசா வாரணாசி வென்றுள்ளார்.

இதன் மூலம், வரும் டிசம்பர் மாதம் நடக்கவிருக்கும் 2021 ஆண்டிற்கான உலக அழகிப் போட்டிக்கு இந்தியா சார்பில் பங்கேற்கவுள்ளார்.

அரியானாவைச் சேர்ந்த மனிகா சிஷோகந்த் மற்றும் உத்திர பிரதேசத்தைச் சேர்ந்த மன்யா சிங் ஆகிய இருவரும் இரண்டாம் இடத்தை பகிர்ந்துள்ளனர்.

6. சமீபத்தில் பாபர் (Babur) என்ற ஏவுகணையை சோதனை செய்த நாடு??

  1. பங்களாதேஷ்
  2. மலேசியா
  3. பாகிஸ்தான்
  4. ஐக்கிய அரபு அமீரகம்
Answer & Explanation

Answer: பாகிஸ்தான்

Explanation:

தரையிலிருந்து 450 கி.மீ. தொலைவில் உள்ள தரை இலக்குகளைத் தாக்கி அழிக்கக் கூடிய தனது பாபா் ஏவுகணையை பாகிஸ்தான் 11-2-2021 அன்று வெற்றிகரமாக பரிசோதனை செய்தது.

’காஷ்னவி’ (‘Ghaznavi (Hatf-III)) என்ற பெயரில் அணு ஆயுதம் தாங்க வல்ல தரையிலிருந்து – தரையிலுள்ள இலக்கை தாக்கும் ஏவுகணையை பாகிஸ்தான் இராணுவம் 3-2-2021 அன்று சோதித்தது.

மேலும் ஜனவரி 20-ஆம் தேதி 2,750 கி.மீ. தொலைவு இலக்குகளைத் தாக்கக் கூடிய ஷாஹீன்-3 என்ற ஏவுகணையையும் சோதித்தது குறிப்பிடத்தக்கது.





7. பின்வரும் செயலிகளில் எது “சுயசார்பு இந்தியா செயலி உருவாக்கத்துக்கான போட்டி 2020” -யில் சமூக ஊடகம் பிரிவில் வெற்றிபெற்றது?

  1. Koo
  2. Chingari
  3. YourQuote
  4. AskSarkar
Answer & Explanation

Answer: Koo

Explanation:

“Atma Nirbhar Bharat app challenge 2020” போட்டியில் சமூக ஊடகம் பிரிவில் Chingari என்ற மொபைல் செயலியானது முதலிடத்தை பிடித்தது.

மேலும் இதேபரிவில் YourQuote மற்றும் Koo ஆகிய இரண்டு செயலிகளும் இடண்டாம் இடத்தை பிடித்துள்ளது.

8. 2021-ஆம் ஆண்டுக்கான சிறந்த வனவிலங்குப் புகைப்படவியலாளர் விருதை வென்றுள்ளவர்?

  1. ஸ்டீவ் இர்வினின்
  2. ராபர்ட் இர்வின்
  3. கெவின் ஹார்ட்
  4. செர்ஜி கோர்ஷ்கோவ்
Answer & Explanation

Answer: ராபர்ட் இர்வின்

Explanation:

கடந்த ஆண்டு ஏற்பட்ட ஆஸ்திரேலியக் காட்டுத் தீயின் போது ராபர்ட் இர்வின் எடுத்த புகைப்படம் தற்போது அவருக்கு சிறந்த வனவிலங்குப் புகைப்படவியலாளர் விருது பிரிவில் முதலிடத்தைப் பிடித்து கொடுத்துள்ளது.

9. The Terrible, Horrible, Very Bad Good News என்ற புத்தகத்தை எழுதியவர்?

  1. ஈரா திரிவேதி
  2. மீனா கந்தசாமி
  3. நிதி துகர் குண்டலியா
  4. மேக்னா பந்த்
Answer & Explanation

Answer: மேக்னா பந்த்

10. தேசிய குடற்புழு நீக்க தினம் (National Deworming Day) எப்போது அனுசரிக்கப்படுகிறது?

  1. பிப்ரவரி 09
  2. பிப்ரவரி 10
  3. ஆகஸ்ட் 10
  4. பிப்ரவரி 11
Answer & Explanation

Answer: பிப்ரவரி 10 & ஆகஸ்ட் 10

Explanation:

ஆண்டுதோறும் பிப்ரவரி 10 மற்றும் ஆகஸ்ட் 10ஆம் தேதிகளில் தேசிய குடற்புழு நீக்க தினம் கடைப்பிடிக்கப்படுகிறது.

அவ்விரு நாள்களிலும் நாடு முழுவதிலும் 19 வயதுக்குட்பட்ட குழந்தைகள் மற்றும் சிறாருக்கு “அல்பெண்டசோல்’ எனப்படும் குடற்புழு நீக்க மாத்திரைகள் வழங்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

More TNPSC Current Affairs

1 thought on “TNPSC Current Affairs Question and Answer in Tamil 11th and 12th February 2021”

Leave a Comment