Current Affairs in Tamil 11th February 2020
Hello, TNPSC Aspirants, Here we provide Current Affairs question and answer in Tamil for 11th February 2020. Take the quiz and improve your Current Affairs Knowledge.

1. “நீரின்றி அமையாது உலகு”என்ற தலைப்பிலான நீர் மேலாண்மை விழிப்புணர்வு கண்காட்சி எங்கு நடைபெறுகிறது?
- பிர்லா கோளரங்கம் (சென்னை)
- பிர்லா கோளரங்கம் (கொல்கத்தா)
- மும்பை தமிழ் சங்கம் (மும்பை)
- பாரதி தமிழ் சங்கம் (கொல்கத்தா)
Answer & Explanation
Answer: பிர்லா கோளரங்கம் (சென்னை)
Explanation:
சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள பிர்லா கோளரங்கத்தில் அமெரிக்காவின் ஸ்மித்ஸோனியன் நிலையம், கேர் எர்த் டிரஸ்ட், பெங்களூரு அறிவியல் கூடம் ஆகியவற்றுடன் இணைந்து அமெரிக்க துணைத் தூதரகம் “நீரின்றி அமையாது உலகு”என்ற தலைப்பிலான நீர் மேலாண்மை விழிப்புணர்வு கண்காட்சியியை பிப்ரவரி 11 முதல் பிப்ரவரி 29 வரை நடத்துகிறது.
TNPSC Group 1 Model Papers – Download
2. சமீபத்தில் பெண்கள் நல சர்வதேச மருத்துவ கருத்தரங்கு எங்கு நடைபெற்றது?
- சென்னை
- கோவை
- திருச்சி
- காரைக்குடி
Answer & Explanation
Answer: சென்னை
Explanation:
மியாட் மருத்துவமனை சார்பில் பிப்ரவரி 10 அன்று பெண்கள் நல சர்வதேச மருத்துவ கருத்தரங்கு சென்னையில் நடைபெற்றது.
ஆண்டுதோறும் மார்ச்-8 சர்வதேச மகளிர் தினம் அனுசரிக்கப்படுகிறது மேலும் மே-28 சர்வதேச மகளிர் நல தினமாக அனுசரிக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.
3. சமீபத்தில் தமிழ்நாடு மாநில மனித உரிமைகள் ஆணையத்தின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளவர்?
- மீனாகுமாரி
- துரை ஜெயச்சந்திரன்
- ஜெய்தீப் கோவிந்த்
- எச். எல். தத்து
Answer & Explanation
Answer: துரை ஜெயச்சந்திரன்
Explanation:
தமிழ்நாடு மாநில மனித உரிமைகள் ஆணையத்தின் தலைவராக இருந்துவந்த மீனாகுமாரி ஓய்வுபெற்றதையடுத்து, ஆணையத்தின் உறுப்பினராக உள்ள துரை ஜெயசந்திரன் புதிய தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.
தமிழ்நாடு மாநில மனித உரிமை ஆணையம் ஏப்ரல் 17, 1997ஆம் ஆண்டு மாநில அதிகாரத்தின் கீழ் பிரிவு-21 இன் மனித உரிமைப் பாதுகாப்புச் சட்டம், 1993, இன்படி உருவாக்கப்பட்டது.
தேசிய மனித உரிமைகள் ஆணையம் 12 அக்டோபர் 1993 அன்று உருவாக்கப்பட்டது. இதன் தற்போதைய தலைவர் எச். எல். தத்து மற்றும் பொது செயலாளர் ஜெய்தீப் கோவிந்த் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆண்டுதோறும் டிசம்பர் 10 ‘மனித உரிமைகள் தினமாக’ கொண்டாடப்படுவது குறிப்பிடத்தக்கது.
4. பூமிக்கு திரும்பும் ஏவுகணைகளின் வெப்பத்தை தணிக்க ‘கபிந்த்ரா’ என்ற பெயரில் புதிய தொழில்நுட்பத்தை கண்டுபிடித்துள்ள அமைப்பு?
- இஸ்ரோ
- DRDO
- சென்னை ஐ.ஐ.டி
- இந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிடெட்
Answer & Explanation
Answer: தமிழ்நாடு
Explanation:
பூமிக்கு திரும்பும் ஏவுகணைகளின் வெப்பத்தை தணிக்க ‘கபிந்த்ரா’ என்ற பெயரில் புதிய தொழில்நுட்பத்தை சென்னை ஐ.ஐ.டி-யை சேர்ந்த பேராசிரியர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
சமீபத்தில் ராணுவ ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு கழகம் DRDO) நடத்திய புதுமையான கண்டுபிடிப்பு தொடர்பான போட்டியில் கபிந்த்ரா தொழில்நுட்பம் முதல் இடத்தை பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.
5. அஜயா வாரியர் -2020 என்பது எந்த இரு நாடுகளுக்கு இடையேயான இராணுவ பயிற்சி?
- அமெரிக்கா – ஜப்பான்
- ஆப்கானிஸ்தான் – ஜப்பான்
- இந்தியா – இங்கிலாந்து
- இந்தியா – ஜப்பான்
Answer & Explanation
Answer: இந்தியா – இங்கிலாந்து
Explanation:
இந்தியா – இங்கிலாந்து நாடுகளுக்கு இடையே 5வது AJEYA WARRIOR-2020 என்ற கூட்டு இராணுவ பயிற்சி பிப்ரவரி 13 முதல் பிப்ரவரி 26 வரை இங்கிலாந்து நாட்டிலுள்ள சாலிஸ்பரி பிளைன்ஸ் (Salisbury Plains) எனுமிடத்தில் நடைபெறுகிறது.
6. சிறந்த படத்திற்கான ஆஸ்கார் விருதை வென்ற திரைப்படம்?
- 1917
- ஜோக்கா்
- த நெய்பா்ஸ் விண்டோ
- பாராசைட்
Answer & Explanation
Answer: பாராசைட்
Explanation:
சிறந்த படத்திற்கான ஆஸ்கார் விருதை போங் ஜுன் ஹோ இயக்கிய பாராசைட் என்ற தென் கொரிய படம் வென்றுள்ளது. இதன்மூலம் ஆஸ்கார் விருது வென்ற முதல் வெளிநாட்டு திரைப்படம் என்ற பெருமையை பெற்றுள்ளது.
சிறந்த திரைப்படம், சிறந்த திரைக்கதை, சிறந்த வெளிநாட்டு படம், சிறந்த இயக்குனர் ஆகிய 4 பிரிவுகளில் இந்த படம் ஆஸ்கார் விருதை வென்றது குறிப்பிடத்தக்கது.
- சிறந்த இயக்குநா்: போங் ஜுன் ஹோ, பாராசைட்
- சிறந்த நடிகா்: ஜாக்குவின் ஃபீனிக்ஸ், ஜோக்கா்
- சிறந்த நடிகை: ரென்னிஜெஸ்வேகா், ஜூடி
- சிறந்த குறும்படம்: த நெய்பா்ஸ் விண்டோ
- சிறந்த அனிமேஷன் படம்: டாய் ஸ்டோரி 4
- சிறந்த அனிமேஷன் குறும்படம்: ஹோ் லவ்
7. சர்வதேச ஹாக்கி கூட்டமைப்பின் 2019 ஆம் ஆண்டிற்கான வளரும் வீரர் விருது யாருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது?
- விவேக் சாகர்
- ரக்பீர் சிங்
- நித்தின் சேகர்
- மன்தீப் சிங்
Answer & Explanation
Answer: விவேக் சாகர்
Explanation:
சர்வதேச ஹாக்கி கூட்டமைப்பின் 2019 ஆம் ஆண்டிற்கான வளரும் வீரர் விருதானது (Rising Star of the Year 2019) ஆண்கள் பிரிவில் விவேக் சாகர் என்பவருக்கும் பெண்கள் பிரிவில் லால்ரெம்சியாமி என்பவருக்கும் வழங்க உள்ளதாக அறிவித்துள்ளது.
8. தேசிய ஸ்னூக்கர் சாம்பியன்ஷிப் போட்டியில் சாம்பியன் பட்டத்தை வென்றவர்?
- பங்கஜ் அத்வானி
- ஆதித்யா மேத்தா
- லஷ்மன் ராவத்
- கீத் சேத்தி
Answer & Explanation
Answer: ஆதித்யா மேத்தா
Explanation:
கொல்கத்தாவில் நடைபெற்ற தேசிய ஸ்னூக்கர் சாம்பியன்ஷிப் போட்டியின் ஆண்கள் பிரிவில் ஆதித்யா மேத்தா, பங்கஜ் அத்வானியை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை வென்றார்.
பெண்கள் பிரிவில் பெண்கள் பிரிவில் வித்யா பிள்ளை, அமீகமானியை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை வென்றார்.
வித்யா பிள்ளை ஒரு தமிழர் என்பதும் இவர் கர்நாடகா அணிக்காக விளையாடுகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
ஸ்னூக்கர்(Snooker) தமிழில் மேடைக் கோற்பந்தாட்டம் என அழைக்கப்படுகிறது.
9. தேசிய குடற்புழு நீக்க தினம் (National Deworming Day) எப்போது அனுசரிக்கப்படுகிறது?
- பிப்ரவரி 09
- பிப்ரவரி 10
- ஆகஸ்ட் 10
- பிப்ரவரி 11
Answer & Explanation
Answer: பிப்ரவரி 10 & ஆகஸ்ட் 10
Explanation:
ஆண்டுதோறும் பிப்ரவரி 10 மற்றும் ஆகஸ்ட் 10ஆம் தேதிகளில் தேசிய குடற்புழு நீக்க தினம் கடைப்பிடிக்கப்படுகிறது.
அவ்விரு நாள்களிலும் நாடு முழுவதிலும் 19 வயதுக்குட்பட்ட குழந்தைகள் மற்றும் சிறாருக்கு “அல்பெண்டசோல்’ எனப்படும் குடற்புழு நீக்க மாத்திரைகள் வழங்கப்படுவது குறிப்பிடத்தக்கது.
More TNPSC Current Affairs
Related