Current Affairs in Tamil 12th February 2020
Hello, TNPSC Aspirants, Here we provide Current Affairs question and answer in Tamil for 12th February 2020. Take the quiz and improve your Current Affairs Knowledge.

1. சமீபத்தில் ‘மாபெரும் சாலைகள்’ என்ற திட்டத்தை அறிமுகம் செய்துள்ள மாநிலம்?
- தமிழ்நாடு
- கர்நாடகா
- குஜராத்
- பஞ்சாப்
Answer & Explanation
Answer: தமிழ்நாடு
Explanation:
சென்னை உள்பட 11 மாநகராட்சிகளில் நடந்தும், சைக்கிள்களிலும் மக்கள் சிரமமின்றி செல்லும் வகையில் ‘மாபெரும் சாலைகள்’ திட்டம் (Mega Streets Project) செயல்படுத்தப்பட உள்ளது.
இந்த திட்டம் முதல்கட்டமாக சென்னையில் பிப்ரவரி – 11 அன்று தொடங்கி வைக்கப்பட்டது. சென்னையில் முதற்கட்டமாக 110 KM அளவுக்கு அமைக்கப்பட உள்ளது.
TNPSC Group 1 Model Papers – Download
2. முக்கியமந்திரி பரிவர் சம்ரிதி யோஜனா என்ற திட்டத்தை செயல்படுத்தி வரும் மாநிலம்?
- தமிழ்நாடு
- தெலுங்கானா
- ஹரியானா
- உத்தராகண்ட்
Answer & Explanation
Answer: ஹரியானா
Explanation:
ஆண்டுதோறும் குடும்பத்திற்கு ரூபாய் 6000 வழங்கும் Mukhyamantri Parivar Samridhi Yojana என்ற திட்டத்தை ஹரியானா அரசு கடந்த ஆகஸ்ட் 30 ஆம் தேதி தொடங்கிவைத்தது.
இந்த திட்டத்தில் இதுவரை 13000 குடும்பங்கள் இணைந்துள்ளதாக சமீபத்தில் ஹரியானா அரசு தெரிவித்துள்ளது.
3. டெல்லி சட்டப்பேரவை தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி எத்தனை தொகுதிகளில் வெற்றி பெற்றது?
- 60
- 62
- 68
- 72
Answer & Explanation
Answer: 62
Explanation:
டெல்லி சட்டப்பேரவைத் தேர்தலில் அரவிந்த் கெஜ்ரிவால் ஆம் ஆத்மி 62 தொகுதிகளிலும், பாரதிய ஜனதா கட்சி 8 தொகுதிகளிலும் வெற்றி பெற்றுள்ளது.
இதன் மூலம் அரவிந்த் கெஜ்ரிவால் 3வது முறையாக பதவியேற்க உள்ளார்.
கூடுதல் தகவல்கள்.,
பதிவான வாக்குகள் 62.59% ஆகும்.
அரவிந்த் கெஜ்ரிவால் போட்டியிட்ட சட்டப்பேரவை தொகுதி – புது டெல்லி
கடந்த 2015 ஆம் ஆண்டு நடந்த ட்டப்பேரவைத் தேர்தலில் ஆம் ஆத்மி 67 தொகுதிகளிலும், பாரதிய ஜனதா கட்சி 3 தொகுதிகளிலும் வெற்றி பெற்றது குறியிடத்தக்கது.
மேலும் 2019ஆம் ஆண்டு நடந்த மக்களவை தேர்தலில் மொத்தம் உள்ள 7 தொகுதிகளிலும் பாரதிய ஜனதா கட்சி வெற்றி பெற்றது குறியிடத்தக்கது.
4. தேசிய நிதி மேலாண்மை நிறுவனத்தின் பெயர் எவ்வாறு மாற்றப்பட உள்ளது?
- அருண்ஜேட்லி தேசிய நிதி மேலாண்மை நிறுவனம்
- ஐ. கே. குஜ்ரால் தேசிய நிதி மேலாண்மை நிறுவனம்
- 9சரண் சிங் தேசிய நிதி மேலாண்மை நிறுவனம்
- மொரார்ஜி தேசாய் தேசிய நிதி மேலாண்மை நிறுவனம்
Answer & Explanation
Answer: அருண்ஜேட்லி தேசிய நிதி மேலாண்மை நிறுவனம்
Explanation:
மத்திய நிதியமைச்சர் கீழ் இயங்கும் தேசிய நிதி மேலாண்மை நிறுவனத்தின் (NIFM) பெயரை முன்னாள் நிதியமைச்சர் அருண்ஜேட்லி பெயரில் அருண்ஜேட்லி தேசிய நிதி மேலாண்மை நிறுவனம் எனப் பெயர் மாற்றம் செய்ய மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
5. பிம்ஸ்டெக் பேரிடர் மேலாண்மை ஒத்திகை பயிற்சி (BIMSTEC DMEx-2020) எங்கு நடைபெற்றது?
- கோவா
- ஒடிஷா
- டெல்லி
- அசாம்
Answer & Explanation
Answer: ஒடிஷா
Explanation:
பிம்ஸ்டெக் நாடுகளுக்கிடையேயான கூட்டு பேரிடர் மேலாண்மை ஒத்திகை பயிற்சியானது BIMSTEC DMEx-2020 என்ற பெயரில் ஒடிஷா மாநிலம் புவனேஸ்வரில் பிப்ரவரி 11 முதல் பிப்ரவரி 13 வரை நடைபெற்றது.
6. கரோனா வைரஸ்க்கு சூட்டப்பட்டுள்ள புதிய பெயர்?
- KOVID-19
- COVID-19
- KOVID-20
- COVID-20
Answer & Explanation
Answer: COVID-19
Explanation:
தவறான பெயர்களைக் கொண்டு குறிப்பதைத் தடுக்கும் விதமாக கரோனா வைரஸ்க்கு COVID-19 என்ற புதிய பெயரை உலக சுகாதார அமைப்பு சூட்டியுள்ளது.
COVID-19 என்ற இந்தப் பெயரில் CO’ என்பது கரோனா (CORONA) என்ற வார்த்தையையும், VI என்பது வைரஸ் என்ற வார்த்தையையும், D என்பது நோய் (DISEASE) என்ற வார்த்தையையும், 19 என்பது 2019 என்பதையும் குறிப்பதாகும்.
7. Gandhi’s Hinduism the Struggle against Jinnah’s Islam என்ற புத்தகத்தை எழுதியவர்?
- முக்தார் அப்பாஸ் நக்வி
- எம்.ஜே. அக்பர்
- அஜித் டோவல்
- விஜய் கேசவ் கோகலே
Answer & Explanation
Answer: எம்.ஜே. அக்பர்
8. சமீபத்தில் ஆஸ்திரேலியாவின் ஆலன் பார்டர் விருது யாருக்கு வழங்கப்பட்டது?
- ஸ்டீவ் ஸ்மித்
- பாட் கமின்ஸ்
- ஏ.பி.டிவில்லியர்ஸ்
- டேவிட் வார்னர்
Answer & Explanation
Answer: டேவிட் வார்னர்
Explanation:
ஆஸ்திரேலியாவால் வழங்கப்படும் சிறந்த வீரருக்கான (கிரிக்கெட்) ஆலன் பார்டர் விருது டேவிட் வார்னருக்கு வழங்கப்பட்டது. டேவிட் வார்னர் இந்த விருதை 3வது முறையாக பெறுகிறார்.
மேலும், சிறந்த வீராங்கனைக்கான பெலிண்டா கிளார்க் விருதை எல்லிஸ் பெர்ரி வென்றுள்ளார். எல்லிஸ் பெர்ரியும் இந்த விருதை 3வது முறையாக பெறுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
9. சர்வதேச ஒலிம்பில் குழுவின் (IOC) சிறந்த பயிற்சியாளருக்கான வாழ்நாள் சாதனை விருதை வென்றவர்?
- புலேலா கோபிசந்த்
- ரவி சாஸ்திரி
- பால்வன் சிங்
- அர்ஜுன் ஹலப்பா
Answer & Explanation
Answer: புலேலா கோபிசந்த்
Explanation:
சர்வதேச ஒலிம்பில் குழுவின் (IOC) சிறந்த பயிற்சியாளருக்கான வாழ்நாள் சாதனை விருது இந்திய பேட்மிட்டன் அணியின் தலைமை பயிற்சியாளர் புலேலா கோபிசந்த் (Pullela Gopichand) அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.
இந்த விருதை பெறும் முதல் இந்தியர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது.
10. அறிவியலில் பெண்கள் மற்றும் பெண்குழந்தைகளுக்கான சர்வதேச தினம் எப்போது அனுசரிக்கப்படுகிறது?
- பிப்ரவரி 10
- பிப்ரவரி 11
- பிப்ரவரி 12
- பிப்ரவரி 13
Answer & Explanation
Answer: பிப்ரவரி 11
Explanation:
கருப்பொருள்: Investment in Women and Girls in Science for Inclusive Green Growth
மேலும் உலக யுனானி தினமும் இதே நாளில் அனுசரிக்கப்படுகிறது.
More TNPSC Current Affairs
Related