Current Affairs in Tamil 13th February 2020
Hello, TNPSC Aspirants, Here we provide Current Affairs question and answer in Tamil for 13th February 2020. Take the quiz and improve your Current Affairs Knowledge.

1. சமீபத்தில் யாருக்கு சிற்றிலக்கிய மகாகவி விருது வழங்கப்பட்டது?
- இராம.கணேசன்
- இ.சுந்தரமூா்த்தி
- எம்.டி.முத்துக்குமாரசாமி
- இளம்கலைக்கோட்டு அனந்தா்
Answer & Explanation
Answer: இளம்கலைக்கோட்டு அனந்தா்
Explanation:
ஆலந்தூா் முனைவா் கோ.மோகனரங்கன் தமிழியல் ஆய்வு மையம் சாா்பில் அனைத்துலகத் தமிழ்ச் சிற்றிலக்கிய மாநாடு பிப்ரவரி 12 மற்றும் 13 தேதிகளில் நடைபெறுகிறது.
இம்மாநாட்டில் 108 சிற்றிலக்கிய வகைகளைப் பாடிய ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியா் மெய்வழி இளம்கலைக்கோட்டு அனந்தா் என்பவருக்கு ‘சிற்றிலக்கிய மகாகவி’ விருது வழங்கப்பட்டது.
TNPSC Group 1 Model Papers – Download
2. சமீபத்தில் புதுவையின் எந்த பகுதிகளை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலங்களாக அறிவிக்க கோரி தீர்மானம் இயற்றப்பட்டது?
- காரைக்கால்
- பாகூர்
- பள்ளிப்பட்டு
- ஏனாம்
Answer & Explanation
Answer: காரைக்கால் & பாகூர்
Explanation:
சமீபத்தில் காரைக்கால் மாவட்டம் மற்றும் பாகூர் பகுதிகளை பாதுகாக்கப்பட்ட சிறப்பு வேளாண் மண்டலமாக அறிவிக்கும் தீர்மானம் புதுவையின் சட்டப்பேரவையில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.
மேலும் குடியுரிமை திருத்தச் சட்டம், தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள்தொகைப் பதிவேடு ஆகியவற்றை திரும்பப் பெறக் கோரும் தீா்மானமும் நிறைவேற்றப்பட்டது.
3. தமிழக அரசின், கருணை அடிப்படையிலான பணி நியமனத்துக்கு அதிகபட்ச வயது?
- 35
- 40
- 45
- 50
Answer & Explanation
Answer: 40
Explanation:
கடந்த 1972-ஆம் ஆண்டு முதல் செயல்படுத்தப்பட்டு வரும் தமிழக அரசின், கருணை அடிப்படையிலான பணி நியமனத்துக்கு அதிகபட்ச வயது 35-லிருந்து 40-தாக உயர்த்தப்பட்டுள்ளது.
4. ”ஹீனார் ஹாட்” ( Hunar Haat ) என்ற கலைப் பொருட்கள் கண்காட்சியின் 20-வது பதிப்பு எங்கு நடைபெறுகிறது?
- புவனேஸ்வர்
- ஜெய்ப்பூர்
- புதுடெல்லி
- புனே
Answer & Explanation
Answer: புதுடெல்லி
Explanation:
வேலை செய்யும் திறன்( Kaushal Ko Kaam) என்ற கருப்பொருளுடன் ”ஹீனார் ஹாட்” ( Hunar Haat ) என்ற கலைப் பொருட்கள் கண்காட்சியின் 20-வது பதிப்பு புதுடெல்லியில் பிப்ரவரி 13 முதல் 23 வரை நடைபெறுகிறது.
மத்திய சிறுபான்மையினர் விவகார அமைச்சகம் (Ministry of Minority Affairs) இந்த கண்காட்சியை நடத்துகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
5. ClimFishCon-2020 என்ற காலநிலை மாற்றத்தின் தாக்கம் குறித்த சர்வதேச மாநாடு எங்கு நடைபெறுகிறது?
- கொச்சின்
- விசாகப்பட்டினம்
- தூத்துக்குடி
- மும்பை
Answer & Explanation
Answer: கொச்சின்
Explanation:
கொச்சின் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப பல்கலைக்கழகம் ClimFishCon-2020 என்ற பெயரில் சர்வதேச காலநிலை மாற்றம் மற்றும் கடல் சுகாதாரம் குறித்த சர்வதேச மாநாட்டை நடத்துகிறது.
ClimFishCon-2020:- International Conference on ‘Impact of Climate Change on Hydrological Cycle, Ecosystem, Fisheries, and Food Security
6. உலகின் மிக வயதான ஆண் என்ற சிறப்புடன் கின்னஸ் புத்தகத்தில் இடம்பிடித்துள்ளவர்?
- சகரி மோமோய்
- கிதேத்சு வதனாபே
- மஸாஜோ நொனாகா
- ஜோஸ் அகுனிலோ டோஸ்
Answer & Explanation
Answer: கிதேத்சு வதனாபே
Explanation:
உலகின் மிக வயதான ஆண் என்ற சிறப்புடன் கின்னஸ் புத்தகத்தில், ஜப்பானை சேர்ந்த கிதேத்சு வதனாபே(Chitetsu Watanabe) இடம்பிடித்துள்ளார்.
இவரது தற்போதய வயது 112 ஆண்டுகள் மற்றும் 344 நாள்கள் ஆகும்.
தற்போது வாழும் நபர்களில் 117 வயதான கானே டனாகா என்ற மூதாட்டியே உலகின் மிக வயதான நபர் என்பது குறிப்பிடத்தக்கது.
7. அகில இந்திய செஸ் கூட்டமைப்பின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளவர்?
- அஜய் படேல்
- விசுவநாதன் ஆனந்த்
- நரேஷ் சா்மா
- விப்னேஷ் பரத்வாஜ்
Answer & Explanation
Answer: அஜய் படேல்
Explanation:
அகில இந்திய செஸ் கூட்டமைப்பின் தலைவராக அஜய் படேல், துணைத் தலைவராக விப்னேஷ் பரத்வாஜ், பொருளாளராக நரேஷ் சா்மா, இணைச் செயலராக எம்.அருண் சிங், ஆகியோா் போட்டியின்றித் தோ்வு செய்யப்பட்டனா்.
8. ஐக்கிய அரபு அமீரக கிரிக்கெட் அணியின் இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளவர்?
- ஜோ ரூட்
- சக்லைன் முஷ்டாக்
- சேத்தன் சவுஹான்
- ராபின்சிங்
Answer & Explanation
Answer: ராபின்சிங்
Explanation:
ஐக்கிய அரபு அமீரக (UAE) கிரிக்கெட் அணியின் இயக்குநர் மற்றும் தலைமை பயிற்சியாளராக இந்தியாவின் முன்னாள் ஆல் ரவுண்டர் வீரரான ராபின்சிங் நியமிக்கப்பட்டுளார்.
9. தேசிய மகளிர் தினம் எப்போது அனுசரிக்கப்படுகிறது?
- பிப்ரவரி 12
- பிப்ரவரி 13
- மார்ச் 08
- மே 28
Answer & Explanation
Answer: பிப்ரவரி 13
Explanation:
இந்தியாவின் முதல் பெண் கவர்னர் சரோஜினி நாயுடு அவர்களின் பிறந்தநாளான (Feb-13, 1879) பிப்ரவரி 13 தேசிய மகளிர் தினமாக அனுசரிக்கப்படுகிறது.
பிப்ரவரி 13 உலக வானொலி தினமாகவும் அனுசரிக்கப்படுகிறது. மேலும் இதற்கான கருப்பொருள்: வானொலி பன்முகத்தன்மை
மேலும் ஆண்டுதோறும் மார்ச்-8 சர்வதேச மகளிர் தினமாகவும் மற்றும் மே-28 சர்வதேச மகளிர் நல தினமாகவும் அனுசரிக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.
10. The Thin Mind Map என்ற புத்தகத்தின் ஆசிரியர்?
- டோனி புசன்
- தர்மேந்திரா ராய்
- கெவின் ட்ரூடோ
- ஜோசப் மர்பி
Answer & Explanation
Answer: தர்மேந்திரா ராய்
More TNPSC Current Affairs
Related