TNPSC Current Affairs Question and Answer in Tamil 14th February 2020

Current Affairs in Tamil 14th February 2020

Hello, TNPSC Aspirants, Here we provide Current Affairs question and answer in Tamil for 14th February 2020. Take the quiz and improve your Current Affairs Knowledge.



TNPSC Current Affairs in Tamil 14th February 2020
1. 6ஆம் கட்ட கீழடி அகழாய்வுப் பணிகள் எப்போது தொடங்கவுள்ளன?

  1. பிப்ரவரி 15
  2. பிப்ரவரி 19
  3. மார்ச்  15
  4. மார்ச் 19
Answer & Explanation
Answer: பிப்ரவரி 19

Explanation:

6ஆம் கட்ட கீழடி அகழாய்வுப் பணிகள் வரும்  பிப்ரவரி 19ஆம் தேதி முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்களால் தொடங்கி வைக்கப்பட உள்ளது.

TNPSC Group 1 Model Papers – Download

2. இடம்பெயரும் வன உயிரினங்கள் பாதுகாப்பு மாநாடு எங்கு நடைபெறவுள்ளது?

  1. மைசூர்
  2. டார்ஜிலிங்
  3. திருச்சூர்
  4. காந்திநகர்
Answer & Explanation
Answer: காந்திநகர்

Explanation:

குஜராத் தலைநகா் காந்திநகரில் வரும் 17-ஆம் தேதி இடம்பெயரும் வன உயிரினங்கள் பாதுகாப்பு மாநாடு நடைபெறவுள்ளது. இதனை பிரதமர் மோடி தொடக்கிவைக்க உள்ளார்.

இதில் அழிந்துவரும் விலங்குகள் மற்றும் பறவைகளை பாதுகாக்கும் வழிமுறைகள் குறித்து ஆலோசிக்கப்பட உள்ளது.

மேலும் இந்த மாநாட்டில், ஆசிய யானைகள், கானமயில்கள் மற்றும் வங்காள ஃபுளோரிகன் பறவைகளை அழிவின் விளிம்பில் உள்ள உயிரினங்கள் பட்டியலில் சோ்க்குமாறு இந்தியா வலியுறுத்த உள்ளது.

3. சமீபத்தில் பொதுமக்களுக்கான அத்தியாவசிய பொருட்களின் பட்டியலில் குடிநீர் பாட்டிலை சேர்த்துள்ள மாநிலம்?

  1. டெல்லி
  2. கேரளா
  3. மேற்குவங்காளம்
  4. ராஜஸ்தான்
Answer & Explanation
Answer: கேரளா

Explanation:

கேரள அரசு பொதுமக்களுக்கான அத்தியாவசிய பொருட்களின் பட்டியலில் குடிநீர் பாட்டிலை சேர்த்துள்ளது.

மேலும் ஒரு லிட்டர் குடிநீர் பாட்டிலை ரூ.13க்கு விற்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளது. கூடுதல் விலைக்கு விற்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது

4. ‘பிம்ஸ்டெக்’ சார்பில், போதைப் பொருள் கடத்தல் தடுப்பு தொடர்பான இரண்டு நாள் கருத்தரங்கம் எங்கு நடைபெறுகிறது?

  1. புவனேஸ்வர்
  2. டெல்லி
  3. மும்பை
  4. சென்னை
Answer & Explanation
Answer: டெல்லி

Explanation:

வங்கக் கடலோரங்களில் அமைந்துள்ள இந்தியா, மியான்மர், தாய்லாந்து, வங்கதேசம், இலங்கை, நேபாளம், பூடான் ஆகிய 7 நாடுகளின் கூட்டமைப்பான ‘பிம்ஸ்டெக்’ சார்பில், போதைப் பொருள் கடத்தல் தடுப்பு தொடர்பான இரண்டு நாள் கருத்தரங்கம் டெல்லியில் பிப்ரவரி 13 மற்றும் பிப்ரவரி 14 தேதிகளில் நடைபெறுகிறது.

மேலும் சில நாட்களுக்கு முன், பிம்ஸ்டெக் நாடுகளுக்கிடையேயான கூட்டு பேரிடர் மேலாண்மை ஒத்திகை பயிற்சியானது BIMSTEC DMEx-2020 ஒடிஷா மாநிலம் புவனேஸ்வரில் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.




5. சமீபத்தில் பிரிட்டன் நிதி அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளவர்?

  1. ரிஷி சுனக்
  2. போரிஸ் ஜான்சன்
  3. பிரிதி படேல்
  4. சஜித் ஜாவித்
Answer & Explanation
Answer: ரிஷி சுனக்

Explanation:

இந்திய வம்சாவழியைச் சேர்ந்த ரிஷி சுனக் பிரிட்டனின் நிதியமைச்சராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

இவர் தொழிலதிபர் இன்ஃபோசிஸ் நாராயணமூர்த்தியின் மருமகன் என்பது குறிப்பிடத்தக்கது.

6. சமீபத்தில் ஏர்-இந்தியாவின் நிர்வாக இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளவர்?

  1. அஸ்வானி லோகானி
  2. ராஜீவ் பன்சால்
  3. வினோத் குமார் யாதவ்
  4. ரிஷி குமார் சுக்லா
Answer & Explanation
Answer: ராஜீவ் பன்சால்

Explanation:

ஏர்-இந்தியா தலைமை நிர்வாக இயக்குநராக இருந்த அஸ்வானி லோகானியின் பதவிக்காலம் முடிவடைந்ததை தொடர்ந்து ஏர்-இந்தியாவின் புதிய தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநராக ராஜீவ் பன்சால் நியமிக்கப்பட்டுள்ளார்.

7. பிரவாசி பாரதிய கேந்திரா மற்றும் டெல்லி வெளிநாட்டு சேவை நிறுவனத்திற்கு யாருடைய பெயரை புதிய பெயர்களாக சுட்டப்பட்டுள்ளது?

  1. அருண்ஜெட்லீ
  2. வாஜ்பாய்
  3. விநாயக் தாமோதர் சாவர்க்கர்
  4. சுஷ்மா ஸ்வராஜ்
Answer & Explanation
Answer: சுஷ்மா ஸ்வராஜ்

Explanation:

மறைந்த முன்னாள் மத்திய அமைச்சர் சுஷ்மா சுவராஜ் பிறந்தநாளை முன்னிட்டு அவருக்கு மரியாதை செலுத்தும் விதமாக,

டெல்லியின் பிரவாசி பாரதிய கேந்திரா சுஷ்மா ஸ்வராஜ் பவன் என்றும் & தூதரக அதிகாரிகள் பயிற்சி பெறும் டெல்லி வெளிநாட்டு சேவை நிறுவனம், சுஷ்மா ஸ்வராஜ் வெளிநாட்டு சேவை நிறுவனம் என்றும் பெயர் மாற்றம் செய்யபட்டுள்ளது.

8. அமித் பன்ஹால் பின்வரும் எந்த விளையாட்டுடன் தொடர்பானவர்?

  1. கிரிக்கெட்
  2. ஹாக்கி
  3. துப்பாக்கி சுடுதல்
  4. குத்துச்சண்டை
Answer & Explanation
Answer: குத்துச்சண்டை

Explanation:

உலக குத்துச்சண்டை தரவரிசையில் ஆண்களுக்கான 52 கிலோ எடைப்பிரிவில் ஹரியானவை சேர்ந்த அமித் பன்ஹால் 420 புள்ளிகளுடன் நம்பர் ஒன் இடத்தை பிடித்துள்ளார்.

விஜேந்தர் சிங்குக்கு பிறகு (2009-ம் ஆண்டு) நம்பர் ஒன் இடத்தை பிடித்த முதல் இந்திய வீரர் அமித் பன்ஹால் என்பது குறிப்பிடத்தக்கது.

9. சா்வதேச ஹாக்கி சம்மேளனத்தின் (IHF) 2019 ஆண்டுக்கான சிறந்த வீரா் விருது யாருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது?

  1. ஆர்தர் வான் டோரன்
  2. மன்பிரீத்சிங்
  3. லுகாஸ் வில்லா
  4. விவேக் சாகா் பிரசாத்
Answer & Explanation
Answer: மன்பிரீத்சிங்

Explanation:

சா்வதேச ஹாக்கி சம்மேளனத்தின் (IHF) 2019 ஆண்டுக்கான சிறந்த வீரா் விருது இந்திய ஹாக்கி அணியின் கேப்டன் மன்பிரீத்சிங்க்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விருதை பெறும் முதல் இந்தியர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் 2019 ஆம் ஆண்டிற்கான வளரும் வீரர் விருதானது (Rising Star of the Year 2019) ஆண்கள் பிரிவில் விவேக் சாகர் என்பவருக்கும் பெண்கள் பிரிவில் லால்ரெம்சியாமி என்பவருக்கும் அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும்,

10. ‘விதியின் குழந்தை’ (A Child of Destiny) என்ற புத்தகத்தின் ஆசிரியர்?

  1. கிரிஷ்வர் மிஸ்ரா
  2. சுதிர் கக்கர்
  3. ஆஷிஸ் நந்தி
  4. கே.ராமகிருஷ்ண ராவ்
Answer & Explanation
Answer: கே.ராமகிருஷ்ண ராவ்

Explanation:

கே.ராமகிருஷ்ண ராவ் எழுதிய சுயசரிதை ‘விதியின் குழந்தை’ (A Child of Destiny) என்ற புத்தகத்தை துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு வெளியிட்டார்.

More TNPSC Current Affairs



2 thoughts on “TNPSC Current Affairs Question and Answer in Tamil 14th February 2020”

Leave a Comment