Current Affairs in Tamil 16th & 17th February 2020
Hello, TNPSC Aspirants, Here we provide Current Affairs question and answer in Tamil for 16th and 17th February 2020. Take the quiz and improve your Current Affairs Knowledge.
1. 2019 ஆம் ஆண்டில் தமிழகத்தின் மகப்பேறு இறப்பு வீதம் ஒரு லட்சத்திற்கு எவ்வளவு?
57
60
63
67
Answer & Explanation
Answer: 57
Explanation:
தமிழகத்தின் மகப்பேறு இறப்பு வீதம் (Maternal Mortality Ratio (MMR)) 2019 ஆம் ஆண்டில் ஒரு இலட்சம் பிறப்புக்கு 57 ஆக இருந்ததாக சமீபத்திய தமிழக அரசின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் 2015-2017 ஆண்டுகளில் இந்த எண்ணிக்கை 63 ஆகவும் 2018 ஆம் ஆண்டில் 60 ஆகவும் இருந்தது குறிப்பிடத்தக்கது.
2. சமீபத்தில் அட்சய பாத்திரா திட்டத்திற்கு ஆளுநர் எவ்வளவு நிதி அளித்துள்ளார்?
2 கோடி
3 கோடி
4 கோடி
5 கோடி
Answer & Explanation
Answer: 5 கோடி
Explanation:
மாநகராட்சி பள்ளி மாணவர்களுக்கு காலை உணவு வழங்கும் திட்டதை செயல்படுத்தி வரும் அட்சய பாத்திரா திட்டத்தை விரிவுபடுத்தும் வகையில் தனது விருப்ப நிதியிலிருந்து, 5 கோடி ரூபாயை ஆளுநர் பன்வாரி லால் புரோஹித் வழங்கியுள்ளார்.
3. சமீபத்தில் பண்டிட் தீனதயாள் உபாத்யாயாவின் 63அடி உயர சிலை எங்கு திறக்கப்பட்டுள்ளது?
கான்பூர்
ராஜ்கோட்
நாக்பூர்
வாரணாசி
Answer & Explanation
Answer: வாரணாசி
Explanation:
பிப்ரவரி 16 அன்று உத்தர பிரதேசம் மாநிலம் வாரணாசியில் பாஜக நிறுவனர் பண்டிட் தீனதயாள் உபாத்யாயாவின் 63அடி உயர சிலை மற்றும் நினைவு மண்டபத்தை பிரதமர் திறந்து வைத்தார்.
நாட்டில் உள்ள தீனதயாளன் சிலைகளில் இது தான் உயரமானது என்பது குறிப்பிடத்தக்கது.
4. தொலை தூர இடங்களில் இருந்தும் ஓட்டளிக்கும் புதிய தொழில்நுட்பத்தை, தேர்தல் ஆணையம் எந்த அமைப்புடன் சேர்ந்த கண்டுபிடிக்கவுள்ளது?
IIT ஐஐடி
இந்திய அறிவியல் மையம் பெங்களூர்
IISc பெங்களூர்
TIFR மும்பை
Answer & Explanation
Answer: IIT ஐஐடி
Explanation:
வாக்காளா்கள் தங்கள் சொந்தத் தொகுதிக்குச் செல்லாமல் தங்கியிருக்கும் இடத்தில் இருந்தே வாக்களிப்பதற்கான தொழில்நுட்பத்தை (இ-ஓட்டு) , சென்னை இந்திய தொழில்நுட்பக் கல்வி நிறுவனத்துடன் (ஐஐடி சென்னை) இணைந்து தோ்தல் ஆணையம் கை உருவாக்க உள்ளது.
5. சமீபத்தில் அரவிந்த் கெஜ்ரிவால் டெல்லியின் முதல்வராக எப்போது பதவியேற்றார்?
14-2-2020
15-2-2020
16-2-2020
17-2-2020
Answer & Explanation
Answer: 16-2-2020
Explanation:
அரவிந்த் கெஜ்ரிவால் 3வது முறையாக டெல்லியின் முதல்வராக 16-2-2020 அன்று பதவியேற்ற்றுக்கொண்டார்.
டெல்லி சட்டப்பேரவைத் தேர்தலில் அரவிந்த் கெஜ்ரிவால் ஆம் ஆத்மி 62 தொகுதிகளிலும், பாரதிய ஜனதா கட்சி 8 தொகுதிகளிலும் வெற்றி பெற்ற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.
6. சீனா மற்றும் வாடிகனின் வெளியுறவுத் துறை அமைச்சா்கள் சமீபத்தில் எந்த நகரத்தில் சந்தித்துப் பேச்சுவாா்தை நடத்தினா்?
முனிச்
மான்டே கார்லோ
வாடிகன் நகரம்
பெய்ஜிங்
Answer & Explanation
Answer: முனிச்
Explanation:
சீனா மற்றும் வாடிகனின் வெளியுறவுத் துறை அமைச்சா்கள் கடந்த 50 ஆண்டுகளில் முதல் முறையாக ஜொ்மனியின் முனிச் (Munich) நகரில் பிப்ரவரி-14 அன்று சந்தித்துப் பேச்சுவாா்தை நடத்தினா்.
7. 2020ஆம் ஆண்டுக்கான உயிரி – ஆசியா உச்சி மாநாடு எங்கு நடைபெறுகிறது?
டெல்லி
மும்பை
ஹைதராபாத்
பெங்களூர்
Answer & Explanation
Answer: ஹைதராபாத்
Explanation:
பிப்ரவரி 17 முதல் 19வரை 2020ஆம் ஆண்டுக்கான உயிரி – ஆசியா உச்சி மாநாடு (BioAsia Summit 2020), நாளைக்கான இன்று (Today for Tomorrow) என்ற கருப்பொருளுடன் ஹைதராபாத்தில் நடைபெறுகிறது.
இந்தியாவில் , தேசிய உயிரி மருந்துகள் திட்டம் (National Biopharma mission) 2017 ஆம் ஆண்டில் உலக வங்கியின் உதவியுடன் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சகம் தொடங்கி வைத்தது குறிப்பிடத்தக்கது.
8. இந்தியாவின் மூன்றாவது தனியார் ரயில்?
காஷி மகாகல் எக்ஸ்பிரஸ்
அனன்யா எக்ஸ்பிரஸ்
பாகமதி எக்ஸ்பிரஸ்
துர்கியானா எக்ஸ்பிரஸ்
Answer & Explanation
Answer: காஷி மகாகல் எக்ஸ்பிரஸ்
Explanation:
IRCTC – யின் மூன்றாவது தனியார் ரயிலான காஷி மகாகல் எக்ஸ்பிரஸ் சேவையை வாரணாசியில் பிப்ரவரி 16 அன்று பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார்.
இந்த ரயில் இந்தூர் – வாரணாசி வழித்தடங்களில் இயக்கப்பட உள்ளது.
மேலும் இந்த ரயிலில் கோச் -பி5ல் 64வது எண் கொண்ட இருக்கை இறைவன் சிவனுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
9. ஆசிய அணிகள் பாட்மிண்டன் போட்டியின் ஆடவா் பிரிவில் சாம்பியன் பட்டம் வென்ற நாடு?
மலேசியா
இந்தோனேசியா
இந்தியா
ஜப்பான்
Answer & Explanation
Answer: இந்தோனேசியா
Explanation:
ஆசிய அணிகள் பாட்மிண்டன் போட்டியின் ஆடவா் பிரிவில் இந்தோனேசியா சாம்பியன் பட்டத்தை வென்றது, இரண்டாவது இடத்தை மலேசியாவும் பெற்றது.
அரையிறுதியில் இந்தோனேசியா அணியுடன் மோதிய இந்தியா வெண்கல பதக்கத்தை வென்றது.
மேலும் மகளிர் பிரிவில் முதல் மூன்று இடங்களை முறையே ஜப்பான், கொரியா மற்றும் தாய்லாந்து அணிகள் பிடித்துள்ளன.
10. எண்ணமே வாழ்க்கையாய் என்ற புத்தகத்தின் ஆசிரியர்?