Current Affairs in Tamil 18th February 2020
Hello, TNPSC Aspirants, Here we provide Current Affairs question and answer in Tamil for 18th February 2020. Take the quiz and improve your Current Affairs Knowledge.

1. ஒலி மாசுபாட்டில் முதலிடம் வகிக்கும் இந்திய மெட்ரோ நகரம்?
- டெல்லி
- மும்பை
- கொல்கத்தா
- சென்னை
Answer & Explanation
Answer: சென்னை
Explanation:
2018-ஆம் ஆண்டு டிசம்பா் மாதத்தின் கணக்கெடுப்பு விவரங்களை மத்திய மாசுக் கட்டுப்பாடு வாரியம் அண்மையில் வெளியிட்டது.
அதன்படி இந்தியாவின் முன்னணி பெருநகரங்களான தில்லி, மும்பை, கொல்கத்தா, சென்னை, பெங்களூரு, ஹைதராபாத் ஆகியவற்றில் சென்னையில் தான் அதிக ஒலிமாசு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
TNPSC Group 1 Model Papers – Download
2. சமீபத்தில் யோதவு” (”Yodhavu”) என்ற மொபைல் செயலியை அறிமுகம் செய்துள்ள மாநிலம்?
- தமிழ்நாடு
- கேரளா
- தெலுங்கானா
- கர்நாடகா
Answer & Explanation
Answer: கேரளா
Explanation:
போதைப் பொருள் கடத்தல் பற்றி, பொதுமக்கள் நேரடியாக காவல்துறைக்கு தகவல் அளிக்கக்கும் வகையில் Yodhavu என்ற மொபைல் செயலியை கேரள அரசு அறிமுகம் செய்துள்ளது.
3. சமீபத்தில் எந்த மாநிலம் காவல்துறையில் பெண்களுக்கு 25% இடஒதுக்கீடை வழங்கியுள்ளது?
- கர்நாடகம்
- கேரளா
- தமிழ்நாடு
- குஜராத்
Answer & Explanation
Answer: கர்நாடகம்
4. பெரிய பொருளாதார நாடுகள் பட்டியலில் இந்தியா வகிக்கும் இடம்?
- 4
- 5
- 6
- 7
Answer & Explanation
Answer: 5
Explanation:
சமீபத்தில் வெளியிடப்பட்ட வேர்ல்டு பாப்புலேஷன் ரிவ்யூ (World Population Review) அறிக்கையின் படி, பெரிய பொருளாதார நாடாடுகள் பட்டியலில் இந்தியா இரண்டு இடங்கள் முன்னேறி ஐந்தாவது இடத்தை பிடித்துள்ளது.
இந்த பட்டியலில் முதல் 7 இடங்கள் முறையே
- அமெரிக்கா
- சீனா
- ஜப்பான்
- ஜெர்மனி
- இந்தியா
- இங்கிலாந்து
- பிரான்ஸ்
ஆகிய நாடுகள் பிடித்துள்ளன.
5. ஒரு முறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்பாட்டை முற்றிலும் ஒழித்துள்ள இந்திய விமான நிலையம்?
- அறிஞர் அண்ணா பன்னாட்டு விமான நிலையம்
- இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையம்
- சத்ரபதி சிவாஜி சர்வதேச விமான நிலையம்
- நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் சர்வதேச விமான நிலையம்
Answer & Explanation
Answer: இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையம்
Explanation:
இந்தியாவிலேயே முதல் முறையாக ஒரு முறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்பாட்டை டெல்லியில் உள்ள இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையம் முற்றிலும் ஒழித்துள்ளது.
6. வரும் ஜூலையில் நடைபெறவுள்ள டோக்கியோ ஒலிம்பிக் 2020 -இன் மையக்கருத்து?
- வேண்டுகோள் மற்றும் மறுபிறப்பு
- உணர்ச்சியினால் ஒன்றுபட்டோம்
- உலக அமைதி மற்றும் சூழல்
- வரும் தலைமுறையை ஊக்குவிப்போம்
Answer & Explanation
Answer: உணர்ச்சியினால் ஒன்றுபட்டோம்
7. சமீபத்தில் சியாரா மற்றும் டென்னிஸ் புயல்களால் பாதிக்கப்பட்ட நாடு?
- ஆஸ்திரேலியா
- இங்கிலாந்து
- ஐயர்லாந்து
- ஜெர்மனி
Answer & Explanation
Answer: இங்கிலாந்து
Explanation:
ஒருவார கால இடைவெளியில் இங்கிலாந்தை சியாரா (Ciara ) மற்றும் டென்னிஸ் (Dennis) என்ற இரு புயல்கள் தாக்கியுள்ளன.
8. உலகின் சிறந்த விளையாட்டு வீரருக்கான 2019ம் ஆண்டின் லாரியஸ் விருது யாருக்கு வழங்கப்பட்டுள்ளது?
- போரிஸ் பெக்கர்
- லூயிஸ் ஹாமில்டன்
- லியோனல் மெஸ்ஸி
- சச்சின் டெண்டுல்கர்
Answer & Explanation
Answer: லூயிஸ் ஹாமில்டன் & லியோனல் மெஸ்ஸி
Explanation:
சிறந்த விளையாட்டு வீரருக்கான லாரியஸ் விருதை லூயிஸ் ஹாமில்டன் மற்றும் லியோனல் மெஸ்ஸி இருவரும் பகிர்ந்து கொண்டனர்.
மேலும் கடந்த 20 ஆண்டுகளில் விளையாட்டின் சிறந்த தருணத்துக்கான விருது சச்சின் டெண்டுல்கருக்கு வழங்கப்பட்டுள்ளது. (2011 உலகக் கோப்பை வெற்றியை தொடர்ந்து இந்திய அணி வீரர்கள் சச்சின் டெண்டுல்கரை தோளில் சுமந்து சென்ற நிகழ்வு சிறந்த தருணமாக தேர்வு செய்யப்பட்டுள்ளது)
சிறந்த வீராங்கனைக்கான விருது அமெரிக்க ஜிம்னாஸ்டிக் வீராங்கனை சைமன் பைல்ஸ் – க்கு வழங்கப்பட்டுள்ளது.
சிறந்த அணிக்கான விருது 2019 ரக்பி உலகக்கோப்பையை வென்ற தென்னாப்பிரிக்கா ரக்பி அணிக்கு வழங்கப்பட்டுள்ளது.
9. எம்.ஆர்.எப். தேசிய சேலஞ்ச் கார்பந்தயத்தில் சாம்பியன் பட்டம் வென்றவர்?
- லூயிஸ் ஹாமில்டன்
- அமென்டோலா
- டைலன் யங்
- அர்ஜுன் பாலு
Answer & Explanation
Answer: அமென்டோலா (பெல்ஜியம்)
10. சர்வதேச குழந்தை பருவ புற்றுநோய் தினம் எப்போது அனுசரிக்கப்படுகிறது?
- 14 பிப்ரவரி
- 15 பிப்ரவரி
- 16 பிப்ரவரி
- 17 பிப்ரவரி
Answer & Explanation
Answer: 15 பிப்ரவரி
Explanation:
குழந்தை பருவ புற்றுநோய் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி 15 ஆம் தேதி, சர்வதேச குழந்தை பருவ புற்றுநோய் தினமாக (International Childhood Cancer Awareness Day) அனுசரிக்கப்படுகிறது.
மேலும், ஆண்டுதோறும் பிப்ரவரி 04 உலக புற்றுநோய் தினமாக அனுசரிக்கப்படுவது குறிப்பிடத்தக்கது (Theme: I Am And I Will)
More TNPSC Current Affairs
Related