TNPSC Current Affairs Question and Answer in Tamil 19th and 20th February 2021

Current Affairs in Tamil 19th and 20th February 2021

Hello, TNPSC Aspirants, Here we provide the Current Affairs question and answer in Tamil for 19th and 20th February 2021. Take the quiz and improve your Current Affairs Knowledge.



18th February | 21st to 24th Feb

1. சமீபத்தில் புதுச்சேரி மாநில துணைநிலை ஆளுநராக பொறுப்பேற்றுள்ளவர்?

  1. கிரண் பேடி
  2. சஞ்ஜீப் பானர்ஜி
  3. நஜ்மா ஹெப்டுல்லா
  4. தமிழிசை செளந்தர்ராஜன்
Answer & Explanation

Answer: தமிழிசை செளந்தர்ராஜன்

Explanation:

புதுச்சேரியில் துணைநிலை ஆளுநராக இருந்த கிரண்பேடி நீக்கப்பட்டதை தொடர்ந்து தெலுங்கானா ஆளுநராக உள்ள தமிழிசை சௌந்தரராஜனுக்கு புதுச்சேரி துணைநிலை ஆளுநர் பொறுப்பு கூடுதலாக வழங்கப்பட்டுள்ளது.

தமிழிசை சௌந்தரராஜன் புதுச்சேரியின் 31ஆவது துணைநிலை ஆளுநராகப் பதவியேற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஷரத்து 153

2. சமீபத்தில் Pey Jal Survekshan என்ற திட்டத்தை தொடங்கி வைத்த அமைச்சகம்?

  1. மத்திய கல்வி அமைச்சகம்
  2. வீட்டுவசதி மற்றும் நகர விவகார அமைச்சகம்
  3. சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகம்
  4. ஜல் சக்தி அமைச்சகம்
Answer & Explanation

Answer: வீட்டுவசதி மற்றும் நகர விவகார அமைச்சகம்

Explanation:

Pey Jal Survekshan

நகர்ப்புற ஜல் ஜீவன் இயக்கத்தின் கீழ் குடிநீர் ஆய்வு (பே ஜல் சர்வேக்ஷன்) மாதிரித் திட்டத்தை, மத்திய வீட்டு வசதி, நகர்ப்புற விவகாரங்கள் அமைச்சககம் பிப்ரவரி-16 அன்று தொடங்கிவைத்துள்ளது.

நகரங்களில் விநியோகிக்கப்படும் தண்ணீரின் அளவை மதிப்பிடவும், கழிவுநீர் மறுசுழற்சி, நீர்நிலைகளை வரைபடமிடுதல் போன்றவற்றிற்காகவும் இந்த ஆய்வு மேற்கொள்ளப்படும்.

முதல்கட்டமாக இத்திட்டம் 10 நகரங்களில் தொடங்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் இத்திட்டம் மதுரையில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

3. சமீபத்தில் பிரதமர் மகாபாகு- பிரம்மபுத்திரா நீர்வழி போக்குவரத்தை எங்கு தொடங்கிவைத்தார்?

  1. அசாம்
  2. மேகாலயா
  3. மேற்குவங்கம்
  4. குஜராத்
Answer & Explanation

Answer: அசாம் 

Explanation:

அசாம் மாநிலத்தில் ரூ.3,231 கோடி மதிப்பிலானா மகாபாகு- பிரம்மபுத்திரா நீர்வழி போக்குவரத்தை பிரதமர் மோடி அவர்கள் பிப்ரவரி 18 அன்று காணொலி முறையில் தொடங்கி வைத்தாா்.

மேலும் அசாமின் துப்ரி, மேகாலயாவின் புல்பரி இடையே பிரம்மபுத்திரா நதியில் ரூ.5,000 கோடியில் 19 கி.மீ. தொலைவு கொண்ட புதிய பாலம் கட்ட பிரதமர் அவர்கள் அடிக்கல் நாட்டினார்.

இந்த பாலம் கட்டமைக்கப்படும் நிலையில் இதுவே இந்தியாவின் மிக நீளமான நதி வழிப் பாலமாக அமையும்.

இந்தியாவின் முதல் தீவு மாவட்டம் – மஜுலி

4. சமீபத்தில் மலிவுவிலையில் உணவு வழங்கும் “மா கிட்சன்ஸ்” என்ற திட்டத்தை தொடங்கியுள்ள மாநிலம்?

  1. பஞ்சாப்
  2. மகாராஷ்டிரா
  3. மேற்கு வங்கம்
  4. குஜராத்
Answer & Explanation

Answer: மேற்கு வங்கம் 

Explanation:

அம்மா உணவகம் – 2013 மார்ச் 19

குடும்பஸ்ரீ ஓட்டல்கள் – கேரளா

இந்திரா கேன்டீன் – கர்நாடகா

அண்ணா உணவகம் – ஆந்திர பிரதேசம்

சிவ்போஜன் – மகாராஷ்டிரா

அந்த்யோதயா ராசோய் யோஜனா – மத்தியப்பிரதேசம்

இந்திரா ரசாேய் யாேஜனா & அன்னபூர்ணா ரசாேய் யாேஜனா – இராஜஸ்தான்

5. சமீபத்தில் பின்வரும் யாருக்கு SKOCH – ஆண்டின் முதல்வர் விருது வழங்கப்பட்டது?

  1. பினராயி விஜயன்
  2. எடியுரப்பா
  3. பிரமோத் பாண்டுரங் சாவந்த்
  4. Y S ஜெகன் மோகன் ரெட்டி
Answer & Explanation

Answer: Y S ஜெகன் மோகன் ரெட்டி

Explanation:

SKOCH Chief Minister of the Year Award

ஆந்திரப் பிரதேச முதல்வர் Y S ஜெகன் மோகன் ரெட்டிக்கு SKOCH – ஆண்டின் முதல்வர் விருது வழங்கப்பட்டுள்ளது.

கடந்த மாதம், மத்திய பழங்குடியினர் விவகார அமைச்சகத்திற்கு (Ministry of Tribal Affairs) மின்னாளுகைக்கான ஸ்கோச் சாலஞ்சர் விருதும்,

பஞ்சாயத்துராஜ் அமைச்சகத்திற்கு வெளிப்படையுடன் தன்மையுடன் கூடிய சிறந்த ஆளுகையை வழங்கியதற்கான ஸ்காச் சாலஞ்சர் விருதும் வழங்கப்பட்டது.

மேலும் ஸ்காச் சாலஞ்சர் விருதில், கரோனோ காலத்தில் அத்தியாவசிய பொருள்களை அதிகளவு அனுப்பி சிறந்த சேவையாற்றியதற்காக தெற்கு இரயில்வே இரண்டாம் பிடித்தது குறிப்பிடத்தக்கது.

6. சமீபத்தில் மாணவியர்க்கு இலவச பரிசு பால் என்ற முன்னெடுப்பை மேற்கொண்டுள்ள மாநிலம்?

  1. சிக்கிம்
  2. ஹிமாச்சலப்பிரதேஷ்
  3. ஹரியானா
  4. மேற்குவங்காளம்
Answer & Explanation

Answer: சிக்கிம்

Explanation:

Free Gift Milk to Girl Students

இளம் தலைமுறையினரிடையே ஊட்டச்சத்து குறைபாடு மற்றும் பிற சுகாதார பிரச்சினைகளை ஒழிப்பதை குறிக்கோளாக கொண்டு சிக்கிம் மாநில அரசு, மாணவியர்க்கு இலவச பரிசு பால் என்ற புதிய முயற்சியை துவங்கியுள்ளது.

இதன்மூலம் தினசரி மாணவியருக்கு 200 ml பால் இலவசமாக வழங்கப்படும்.





7. பெர்சிவரன்ஸ் ரோவர் விண்கலம் (Perseverance Rover) பின்வரும் எந்த நாட்டுடன் தொடர்பானது?

  1. அமெரிக்கா
  2. சீனா
  3. ரஷ்யா
  4. ஜப்பான்
Answer & Explanation

Answer: அமெரிக்கா 

Explanation:

கடந்தாண்டு ஜூலை 30ம் தேதி அட்லஸ் விண்கலம் மூலம் நாசா அனுப்பிய பெர்சிவரன்ஸ் விண்கல ஆய்வுர்த்தி சமீபத்தில் செவ்வாய் கிரகத்தின் மேற்பரப்பை படம் பிடித்து பூமிக்கு அனுப்பியுள்ளது.

இதனுடன் இன்ஜெனூட்டி எனப்படும் அதிநவீன குட்டி ஹெலிகாப்டர் ஆய்வு பணியில் ஈடுபடவுள்ளது.

பெர்சிவரன்ஸ் ரோவர் விண்கலத்தை வழிநடத்தும் குழுவின் தலைவரான ஸ்வாதி மோகன் இந்திய வம்சாவளியை சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

8. சமீபத்தில் பாரிஸ் பருவநிலை ஒப்பந்தத்தில் மீண்டும் இணைந்த நாடு?

  1. அமெரிக்கா
  2. சீனா
  3. இந்தியா
  4. இஸ்ரேல்
Answer & Explanation

Answer: அமெரிக்கா

Explanation:

பாரிஸ் பருவநிலை ஒப்பந்தத்தில் அமெரிக்கா மீண்டும் அதிகாரப்பூர்வமாக பிப்ரவரி 19 அன்று இணைந்துள்ளது.

9. ஐ.நா. மூலதன மேம்பாட்டு நிதி ஆணையத்தின் நிர்வாக செயலாளராக நியமிக்கப் பட்டுள்ளவர்?

  1. உஷா ராவ் மோனரி
  2. பிரீத்தி சின்ஹா
  3. அன்டோனியா குட்டரஸ்
  4. சுயெல்லா பிராவர்மேன்
Answer & Explanation

Answer:

Explanation:

ஐ.நா மூலதன நிதி மேம்பாட்டு ஆணையத்தின் (UNCDF) நிர்வாக செயலாளராக இந்திய வம்சாவளியை சேர்ந்த பெண் ப்ரீத்தி சின்ஹா நியமிக்கப்பட்டுள்ளார்.

பின்தங்கிய நாடுகளில் பெண்கள், இளைஞர்கள் சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு சிறிய அளவிலான நிதயுதவி வழங்குவதில் கவனம் செலுத்துகிறது.

இந்த ஐ.நா. மூலதன மேம்பாட்டு நிதியத்தின் நிர்வாக செயலாளராக இருந்து வந்த ஜூடித் கார்லு இந்த மாதம் ஓய்வு பெறுகிறார்.‌

இதையடுத்து நிதியத்தின் கவுரவம் மிக்க தலைமை பதவிக்கு இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பிரீத்தி சின்ஹா நியமிக்கப்பட்டு இருக்கிறார்.

10. மண் ஆரோக்கிய அட்டை தினம் எப்போது அனுசரிக்கப்படுகிறது?

  1. பிப்ரவரி 19
  2. பிப்ரவரி 20
  3. பிப்ரவரி 21
  4. பிப்ரவரி 22
Answer & Explanation

Answer: பிப்ரவரி 19

Explanation:

Soil Health Card Day

முதல்முறையாக இந்தியாவில் மண் ஆரோக்கிய அட்டை திட்டம் (Soil Health Card Scheme) , 2015 ஆம் ஆண்டு பிப்ரவரி 19ஆம் நாள் பிரதமர் மோடி அவர்களால் ராஜஸ்தான் மாநிலம் சூரத்கார்க் பகுதியில் தொடங்கி வைக்கப்பட்டது.

மேலும் ஐக்கிய நாடுகளின் பொதுச் சபையினால் 2015 ஆம் ஆண்டை சர்வதேச மண் வருடமாக (International Year of Soils ) அறிவிக்கப்பட்டு அனுசரிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

மேலும், ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 5 உலக மண் தினமாக அனுசரிக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

11. உலக சமூக நீதி தினம் எப்போது அனுசரிக்கப்படுகிறது?

  1. பிப்ரவரி 19
  2. பிப்ரவரி 20
  3. பிப்ரவரி 21
  4. பிப்ரவரி 22
Answer & Explanation

Answer: பிப்ரவரி 20

Explanation:

World Day of Social Justice

சமூக நீதிக்கான உலக தினம், 2009-ஆம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி 20 அன்று அனுசரிக்கப்படுகிறது.

இந்த ஆண்டுக்கான கருப்பொருள்: A call for social justice in the Digital Economy

More TNPSC Current Affairs

Leave a Comment