TNPSC Current Affairs Question and Answer in Tamil 19th February 2020

Current Affairs in Tamil 19th February 2020

Hello, TNPSC Aspirants, Here we provide Current Affairs question and answer in Tamil for 19th February 2020. Take the quiz and improve your Current Affairs Knowledge.



TNPSC Current Affairs in Tamil 19th February 2020
1. மாநில பெண் குழந்தைகள் பாதுகாப்பு தினம் எப்போது அனுசரிக்கப்பட உள்ளது?

  1. 19 பிப்ரவரி
  2. 24 பிப்ரவரி
  3. 19 மார்ச்
  4. 24 மார்ச்
Answer & Explanation
Answer: பிப்ரவரி – 24

Explanation:

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் பிறந்தநாளான பிப்ரவரி 24 மாநில பெண் குழந்தைகள் பாதுகாப்பு தினமாக கடைபிடிக்கப்படும் என சட்டப்பேரவையில் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பிப்ரவரி 19 அன்று அறிவித்தார்.

மேலும் சில திட்டங்கள்,

பெண் குழந்தை பாதுகாப்புத் திட்டம்

மறைந்த முதல்வர் ஜெயலலிதா அவர்களால் 1992-ம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது

ஒரு பெண் குழந்தை மட்டும் இருந்தால் குழந்தையின் பெயரில் 50,000 ரூபாய் வைப்புத் தொகை

ஒன்றுக்கு மேற்பட்ட பெண் குழந்தைகள் இருந்தால் ஒவ்வொரு பெண் குழந்தைக்கும் தலா 25,000 வைப்புத் தொகை

தொட்டில் குழந்தை திட்டம்

பெண் சிசுக்கொலைகளைத் தடுக்கும் வகையில் 1992ல் மறைந்த முதல்வர் ஜெயலலிதா அவர்களால் தொடங்கப்பட்டது

பெண் குழந்தையை வளர்க்க முடியாத பெற்றோர் குழந்தையை அரசின் பாதுகாப்பில் ஒப்படைக்கலாம்

தமிழகத்தில் பெண் சிசுக்கொலையின் எண்ணிக்கை கணிசமாகக் குறையக் காரணமான திட்டம்

பெண்களுக்கான உடல் எடை பரிசோதனைத் திட்டம்

பெண்களின் உடல்நலனுக்காக மறைந்த முதல்வர் ஜெயலலிதா அவர்களால் கொண்டுவரப்பட்டது

அங்கன்வாடிகள் மூலம் குழந்தைகள், வளரிளம் பெண்கள், கர்ப்பிணிகளின் உடல் நலம் பாதுகாக்கப்படுகிறது

அம்மா குழந்தைகள் நல பரிசுப் பெட்டகம்

அரசு மருத்துவமனைகளில் குழந்தை பெற்றுக்கொள்ளும் தாய்மார்களுக்கு அரசின் பரிசாக 16 பொருட்கள்

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா அவர்களால் 2015ல் துவங்கப்பட்ட திட்டம்

பாலூட்டும் தாய்மார்களுக்கான தனி அறைத் திட்டம்

பாலூட்டும் தாய்மார்கள் பொதுஇடங்களிலும் குழந்தைக்கு பசியாற்ற கொண்டுவரப்பட்ட திட்டமாகும்

தாய்மார்கள் பாலூட்டுவதற்கு என பிரத்யேக தனியறைகளை அமைக்கப்பட்டன

அம்மா மகப்பேறு சஞ்சீவி திட்டம்

மகப்பேறு வரை கர்ப்பிணி பெண்ணுக்கு ஏற்ற மூலிகைகளைத் தரும் திட்டம்

ஆரோக்கியத்தை காக்க 11 வகை மூலிகை மருந்துகள் வழங்கப்படுகின்றன

TNPSC Group 1 Model Papers – Download

2. விவசாய ஏற்றுமதியை அதிகரிப்பதற்கான வழிமுறைகளை ஆராய அமைக்கப்பட்டுள்ள குழுவின் தலைவர்?

  1. சஞ்சிவ் பூரி
  2. ராஜிவ் குமார்
  3. வஜிஃப்தார்
  4. ஜூவன் ரெட்டி
Answer & Explanation
Answer: சஞ்சிவ் பூரி

Explanation:

விவசாய ஏற்றுமதியை அதிகரிப்பதற்கான வழிமுறைகளை ஆராய ஐ.டி.சி. நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் சஞ்சிவ் பூரி தலைமையிலான எட்டு நபர்கள் கொண்ட  சஞ்சீவ் பூரி குழுவை பிப்ரவரி 17 அன்று 15 வது நிதிக்குழு அமைத்துள்ளது.

3. சமீபத்தில் மின்வாரியங்களுக்கான செயல் திறன் ஒழுங்குமுறை சட்டம் 2019 -ஐ அமல்படுத்தியுள்ள மாநிலம்?

  1. மத்தியப்பிரதேசம்
  2. உத்தரப்பிரதேசம்
  3. ராஜஸ்தான்
  4. பஞ்சாப்
Answer & Explanation
Answer: உத்தரப்பிரதேசம்

Explanation:

பொது மக்களின் குறைகளை மின்வாரியங்கள் விரைந்து தீர்க்கவும், தாமதமாகும் ஒவ்வொரு சேவைக்கும் சம்பந்தப்பட்ட மின் வாரியங்கள் பொது மக்களுக்கு இழப்பீடு வழங்குவதை உறுதி செய்யவும் Performance Regulation Act 2019 for the Electricity Department என்ற ஒழுங்குமுறை சட்டத்தை பிப்ரவரி 18 அன்று உத்தரப்பிரதேச அரசு அமுல்படுத்தியுள்ளது.




4. சமீபத்தில் லுயி-ங்காய்-நி (Lui-Ngai-Ni) என்ற பெயரில் விதை விதைக்கும் திருவிழா எங்கு நடைபெற்றது?

  1. நாகலாந்து
  2. சிக்கிம்
  3. அசாம்
  4. மணிப்பூர்
Answer & Explanation
Answer: மணிப்பூர்

Explanation:

மணிப்பூர் நாகா இன பழங்குடி மக்களால் லுயி-ங்காய்-நி (Lui-Ngai-Ni) என்ற பெயரில் விதை விதைக்கும் திருவிழா ஆண்டுதொறும் பிப்ரவரி 15 மற்றும் 16 ஆம் தேதிகளில் கொண்டாடப்படுகிறது.

5. சமீபத்தில் ஆப்கானிஸ்தானின் அதிபராக தேர்வு செய்யப்பட்டுள்ளவர்?

  1. அப்துல்லா அப்துல்லா
  2. அஷ்ரப் கானி
  3. ஹமீத் கர்சாய்
  4. அப்துல் ரஷீத்
Answer & Explanation
Answer: அஷ்ரப் கானி

Explanation:

கடந்த செப்டம்பர் 28ஆம் தேதி நடைபெற்ற ஆப்கானிஸ்தான் அதிபர் தேர்தலின் வாக்குகள் டிசம்பர் 22-ம் தேதி எண்ணப்பட்டு அதிபராக அஷ்ரப் கானி தேர்வுசெய்யப்பட்டார்.

அவர் தேர்வுசெய்யப்பட்டது செல்லாது என்று அவரை எதிர்த்து போட்டியிட்ட அப்துல்லா அப்துல்லா தேர்தலில் முறைகேடு நடைபெற்றதாகவும் ஆகையால் தேர்தலில் பதிவான வாக்குகளை மீண்டும் எண்ண வேண்டும் என தேர்தல் ஆணையத்திடம் கோரிக்கை வைத்தார்.

சமீபத்தில் மீண்டும் வாக்குகள் எண்ணப்பட்டது, அதில் அஷ்ரப் கானியின் வெற்றி மீண்டும் உறுதி செய்யப்பட்டது.

6. கொலம்பியா மாவட்ட மேல்முறையீட்டு நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ளவர்?

  1. சமியா நசீம்
  2. ஸ்ரீ ஸ்ரீநிவாசன்
  3. அர்ச்சனா ராவ்
  4. ராபர்ட் எல். வில்கின்ஸ்
Answer & Explanation
Answer: ஸ்ரீ ஸ்ரீநிவாசன்

Explanation:

அமெரிக்காவின் உச்ச நீதிமன்றத்துக்கு அடுத்த நிலையில் உள்ள, கொலம்பியா மாவட்ட மேல்முறையீட்டு நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக, இந்தியாவை பூர்வீகமாக கொண்ட, தமிழரான ஸ்ரீ ஸ்ரீநிவாசன் (Sri Srinivasan) நியமிக்கப்பட்டுள்ளார்.

மேலும்., சமீபகாலங்களில்…

சிகாகோவின் நீதிபதியாக இந்திய வம்சாவளியை சேர்ந்த சமியா நசீம் (Samiya Naseem) நியமிக்கப்பட்டுள்ளார்.

நியூயார்க் சிவில் நீதிமன்ற நீதிபதியாக அர்ச்சனா ராவும், இடைக்கால சிவில் நீதிமன்ற நீதிபதியாக தீபா அம்பேகரும்  நியமிக்கப்பட்டுள்ளனர்.

7. பாதுகாப்பு ஆய்வு மற்றும் பகுப்பாய்வுகளுக்கான நிறுவனம் (IDSA) -ற்கு யாருடைய பெயரை புதிய பெயராக சுட்டப்பட்டுள்ளது?

  1. பல்தேவ் சிங்
  2. வி.கே.கிருஷ்ண மேனன்
  3. மனோகர் பாரிக்கர்
  4. ஜஸ்வந்த் சிங்
Answer & Explanation
Answer: மனோகர் பாரிக்கர்

Explanation:

புதுடெல்லியில் உள்ள Institute for Defence Studies and Analyses என்ற நிறுவனத்திற்கு மறைந்த முன்னாள் பாதுகாப்புத்துறை அமைச்சர் மனோகர் பாரிகர் நினைவாக,

மனோகர் பாரிக்கர் இன்ஸ்டிடியூட் ஆப் டிபன்ஸ் ஸ்டடீஸ் அண்டு அனலைசிஸ் (Manohar Parrikar Institute for Defence Studies and Analyses) என பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

8. ஆசிய மல்யுத்த போட்டியின் ‘கிரிகோ ரோமன்’ 87 கிலோ எடைப்பிரிவில் சாம்பியன் பட்டம் வென்றவர்?

  1. அஜாத் சாலிடினோ
  2. சுனில் குமார்
  3. பஜ்ரங் புனியா
  4. யோகேஸ்வர் தத்
Answer & Explanation
Answer: சுனில் குமார்

Explanation:

டெல்லியில் நடைபெற்றுவரும் ஆசிய மல்யுத்த போட்டியில்,

87 கிலோ எடைப்பிரிவில் (Greco-Roman) இந்திய வீரர் சுனில் குமார், கிர்கிஸ்தான் வீரர் அஜாத் சாலிடினோவை தோற்கடித்து சாம்பியன் பட்டத்தை வென்றார்.

கடந்த 27 ஆண்டுகளில் ஆசிய மல்யுத்த போட்டியில் கிரிகோ ரோமன் பிரிவில் இந்திய வீரர் ஒருவர் தங்கப்பதக்கம் வெல்வது இதுவே முதல்முறையாகும்.

கடைசியாக 1993-ம் ஆண்டு பப்பு யாதவ் என்பர் தங்கம் வென்று இருந்தார்.

மேலும் சுனில்குமார் கடந்த ஆண்டு ஆசிய சாம்பியன்ஷிப் போட்டியில் வெள்ளிப்பதக்கம் வென்று இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

9. மண் ஆரோக்கிய அட்டை தினம் எப்போது அனுசரிக்கப்படுகிறது?

  1. 17 பிப்ரவரி
  2. 18 பிப்ரவரி
  3. 19 பிப்ரவரி
  4. 20 பிப்ரவரி
Answer & Explanation
Answer: 19 பிப்ரவரி

Explanation:

முதல்முறையாக இந்தியாவில் மண் ஆரோக்கிய அட்டை திட்டம் (Soil Health Card Scheme) , 2015 ஆம் ஆண்டு பிப்ரவரி 19ஆம் நாள் பிரதமர் மோடி அவர்களால் ராஜஸ்தான் மாநிலம் சூரத்கார்க் பகுதியில் தொடங்கி வைக்கப்பட்டது.

மேலும் ஐக்கிய நாடுகளின் பொதுச் சபையினால் 2015 ஆம் ஆண்டை சர்வதேச மண் வருடமாக (International Year of Soils ) அறிவிக்கப்பட்டு அனுசரிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

மேலும், ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 5 உலக மண் தினமாக அனுசரிக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

More TNPSC Current Affairs



Leave a Comment