TNPSC Current Affairs Question and Answer in Tamil 20th February 2020

Current Affairs in Tamil 20th February 2020

Hello, TNPSC Aspirants, Here we provide Current Affairs question and answer in Tamil for 20th February 2020. Take the quiz and improve your Current Affairs Knowledge.



TNPSC Current Affairs in Tamil 20th February 2020
1. பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டல சட்ட மசோதா சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்ட நாள்?

  1. 18 பிப்ரவரி
  2. 19 பிப்ரவரி
  3. 20 பிப்ரவரி
  4. 21 பிப்ரவரி
Answer & Explanation
Answer: பிப்ரவரி 20

Explanation:

காவிரி டெல்டா பகுதிகள் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக்க சிறப்புச் சட்டம் கொண்டு வரப்படும் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி 9-2-2020 அன்று அறிவித்திருந்தார்

அதன் முதல் கட்டமாக இன்று(பிப்ரவரி 20) பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டல சட்ட மசோதா சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டது.

TNPSC Group 1 Model Papers – Download

2. அடுத்த 5 ஆண்டுகளில் எத்தனை வேளாண் ஊக்குவிப்பு மையங்களை அமைக்க மத்தியஅரசு ஒப்புதல் அளித்துள்ளது?

  1. 5000
  2. 10000
  3. 15000
  4. 22000
Answer & Explanation
Answer: 10000

Explanation:

அடுத்த 5 ஆண்டுகளில் நாடு முழுவதும் 10,000 வேளாண் உற்பத்தி ஊக்குவிப்பு அமைப்புகளை உருவாக்குவதற்கு மத்திய அமைச்சரவை 19-02-2020 அன்று ஒப்புதல் அளித்துள்ளது.

மேலும் இதற்காக ரூ. 6,865 கோடி நிதியை ஒதுக்கவும் அமைச்சரவை அனுமதி அளித்துள்ளது.

3. மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையத்தின் தலைமை ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளவர்?

  1. விமல் ஜுல்கா
  2. ராஜீவ் பன்சால்
  3. சஞ்சய் கோத்தாரி
  4. வினோத் குமார் யாதவ்
Answer & Explanation
Answer: சஞ்சய் கோத்தாரி

Explanation:

மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையத்தின் (CVC) தலைமை ஆணையராக குடியரசுத் தலைவரின் செயலா் சஞ்சய் கோத்தாரி நியமிக்கப்பட்டுள்ளார்.

மேலும் மத்திய தகவல் ஆணையத்தின் தலைமை ஆணையராக (CIC) செய்தி ஒளிபரப்புத் துறை முன்னாள் செயலா் விமல் ஜுல்காவும் தோ்வு செய்யப்பட்டுள்ளார்.

4. இந்தியா முழுவதும் எப்போது பாரத் நிலை -VI (BS-VI) என்ற தூய்மையான பெட்ரோல் டீசலுக்கு மாற உள்ளது?

  1. மார்ச் 1, 2020
  2. மார்ச் 1, 2021
  3. ஏப்ரல் 1, 2020
  4. ஏப்ரல் 1, 2021
Answer & Explanation
Answer: ஏப்ரல் 1, 2020

Explanation:

இந்தியா தற்போது நடைமுறையிலுள்ள பாரத் நிலை – IV (BS-IV) நிலையிலிருந்து நேரடியாக ‘பாரத் நிலை -IV’ (Bharat Stage (BS-VI)) என்ற தூய்மையான பெட்ரோல் டீசலுக்கு ஏப்ரல் 1, 2020 முதல் மாற உள்ளது.




5. ஸ்ரீ ராம ஜென்மபூமி தீா்த்த க்ஷேத்ரா-வின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளவர்?

  1. மஹந்த் நிருத்திய கோபால் தாஸ்
  2. சம்பத் ராய்
  3. கே.பராசரன்
  4. சுவாமி கோவிந்த் கிரி மகராஜ்
Answer & Explanation
Answer: மஹந்த் நிருத்திய கோபால் தாஸ்

Explanation:

அயோத்தி ராமா் கோயில் அறக்கட்டளையின் தலைவராக மஹந்த் நிருத்ய கோபால் தாஸ் தோ்வு செய்யப்பட்டுள்ளார்.

மேலும் பொதுச் செயலராக சாம்பத் ராய் தோ்வு செய்யப்பட்டுள்ளார்.

6. உலகளவிலான எதிர்காலக் கல்வி குறியீடு 2019 -இல் இந்தியா வகிக்கும் இடம்?

  1. 35
  2. 77
  3. 92
  4. 131
Answer & Explanation
Answer: 35

Explanation:

பொருளாதார நிபுணர் புலனாய்வு பிரிவு (EIU) வெளியிட்டுள்ள உலகளவிலான எதிர்காலக் கல்வி குறியீடு 2019 -இல் இந்தியா 35 வது இடத்தை பிடித்துள்ளது.

7. நமஸ்தே டிரம்ப் என்ற நிகழ்ச்சி எந்த இடத்தில்  நடைபெற உள்ளது?

  1. புதுடெல்லி
  2. மும்பை
  3. கொல்கத்தா
  4. அகமதாபாத்
Answer & Explanation
Answer: அகமதாபாத்

Explanation:

இந்திய பிரதமர் கடந்த ஆண்டு அமெரிக்கா சென்றிருந்த போது, அமெரிக்காவின் ஹூஸ்டன் நகரில் நடத்தப்பட்ட ஹவுடி மோடி (howdy modi) நிகழ்ச்சியை போன்று

இந்தியா வரவுள்ள அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் – ஐ வரவேற்கும் பொருட்டு குஜராத்தின் அகமதாபாத் கிரிக்கெட் மைதானத்தில் ‘நமஸ்தே டிரம்ப்’ என்ற நிகழ்ச்சி நடத்தப்படவுள்ளது.

8. உலக சமூக நீதி தினம் எப்போது அனுசரிக்கப்படுகிறது?

  1. 20 பிப்ரவரி
  2. 21 பிப்ரவரி
  3. 22 பிப்ரவரி
  4. 23 பிப்ரவரி
Answer & Explanation
Answer: பிப்ரவரி  20

Explanation:

கருப்பொருள்: Closing the Inequalities Gap to Achieve Social Justice

More TNPSC Current Affairs



Leave a Comment