TNPSC Current Affairs Question and Answer in Tamil 21st February 2020

Current Affairs in Tamil 21st February 2020

Hello, TNPSC Aspirants, Here we provide Current Affairs question and answer in Tamil for 21st February 2020. Take the quiz and improve your Current Affairs Knowledge.



TNPSC Current Affairs in Tamil 21st February 2020
1. சமீபத்தில் தமிழக அரசு ரத்து செய்த பெட்ரோலிய ரசாயன முதலீட்டு மண்டலம் அமைய இருந்த பகுதி?

  1. கடலூர் மற்றும் நாகை மாவட்டம்
  2. திருவாருர் மற்றும் தஞ்சாவூர் மாவட்டம்
  3. திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி மாவட்டம்
  4. ராமநாதபுரம் மற்றும் தூத்துக்குடி மாவட்டம்
Answer & Explanation
Answer: கடலூர் மற்றும் நாகை மாவட்டம்

Explanation:

கடலூர் மற்றும் நாகை மாவட்டங்களில் பெட்ரோலிய ரசாயன முதலீட்டு மண்டலம் அமைய கடந்த 2017ஆம் ஆண்டு வெளியிட்ட குறிப்பாணையை தமிழக அரசு சமீபத்தில் ரத்து செய்துள்ளது.

TNPSC Group 1 Model Papers – Download

2. தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகளை ஒட்டி 12000 கழிப்பறைகளை கட்ட முடிவுசெய்துள்ள மாநிலம்?

  1. தமிழ்நாடு
  2. கேரளா
  3. குஜராத்
  4. ஹரியானா
Answer & Explanation
Answer: கேரளா

3. மாணவர்களிடையே புத்தகம் வாசிப்பு பழக்கத்தை ஊக்குவிப்பதற்காக Reading Mission என்னும் புதிய திட்டத்தை தொடங்கியுள்ள மாநிலம்?

  1. ஹரியானா
  2. கேரளா
  3. உத்திரப்பிரதேஷ்
  4. டெல்லி
Answer & Explanation
Answer: ஹரியானா

Explanation:

“Reading Mission- Haryana” என்ற திட்டம் மத்திய அரசால் தொடங்கப்பட்ட Reading Mission 2022 -இன் ஒரு பகுதி என்பது குறிப்பிடத்தக்கது.




4. சமீபத்தில் தேசிய நீர் மாநாடு எங்கு நடைபெற்றது?

  1. மேற்குவங்காளம்
  2. தெலுங்கானா
  3. உத்திரப்பிரதேஷ்
  4. மத்தியப்பிரதேஷ்
Answer & Explanation
Answer: மத்தியப்பிரதேஷ்

Explanation:

நீர் பெறுவதற்கான உரிமைச் சட்டத்தை விரைவில் அமல்படுத்த உள்ள மத்தியப் பிரதேச அரசு, இந்த சட்டத்தின் இறுதி வடிவம் குறித்து விவாதிக்க போபாலில் தேசிய நீர் மாநாட்டை (National Water Conference) நடத்தியது.

நீர் உரிமைகள் சட்டத்தைச் செயல்படுத்த இருக்கின்ற நாட்டின் முதலாவது மாநிலம் மத்தியப்பிரதேஷ் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தியாவின் நீர் மனிதன் – ராஜேந்திர சிங்

5. சமீபத்தில் உதான் திட்டத்தின் கீழ் ஹெலிகாப்டர் சேவைகளை அறிமுகப்படுத்தியுள்ள முதல் மாநிலம்?

  1. உத்தரகண்ட்
  2. பஞ்சாப்
  3. டெல்லி
  4. சண்டிகர்
Answer & Explanation
Answer: உத்தரகண்ட்

Explanation:

உள்ளூர் விமான சேவையை குறைந்த கட்டணத்தில் வழங்க உருவாக்கப்பட்ட திட்டம் தான் ‘உதான்’ என்பது குறிப்பிடத்தக்கது.

6. சமீபத்தில் SERB சிறந்த பெண் அறிவியல் ஆராய்ச்சியாளருக்கான விருது யாருக்கு வழங்கப்பட்டது?

  1. குசலா ராஜேந்திரன்
  2. சந்திரிகா டான்டன்
  3. நிதி குமார்
  4. ௧. அனந்தி ஜோஷி
Answer & Explanation
Answer: நிதி குமார்

Explanation:

லக்னோவிலுள்ள மத்திய மருந்து ஆராய்ச்சி நிறுவனத்தின் அராய்ச்சியாளர் டாக்டர். நிதி குமாருக்கு (Dr. Niti Kumar) 2020ஆம் ஆண்டுக்கான SERB மகளிர் சிறப்பு விருது வழங்கப்பட்டுள்ளது.

SERB – Science, and Engineering Research Board

7. சமீபத்தில் காலமான லாரி டெஸ்லர் பின்வரும் எந்தத்துறை ஆராச்சியாளர்?

  1. இயற்பியல்
  2. வேதியியல்
  3. கணினி
  4. நானோ டெக்னாலஜி
Answer & Explanation
Answer: கணினி

Explanation:

கணினி அறிவியலில் கட் (Ctrl + X ), காப்பி (Ctrl + C ) , பேஸ்ட் (Ctrl + V ) செயல்முறையை உருவாக்கிய அமெரிக்க விஞ்ஞானி லாரி டெஸ்லர் சமீபத்தில் காலமானார்.

8. உலக தாய்மொழி தினம் எப்போது அனுசரிக்கப்படுகிறது?

  1. 20 பிப்ரவரி
  2. 21 பிப்ரவரி
  3. 22 பிப்ரவரி
  4. 23 பிப்ரவரி
Answer & Explanation
Answer: பிப்ரவரி  21

Explanation:

ஐநாவின் யுனெஸ்கோ அமைப்பு உலக மொழிகளை காக்கவும் அவற்றின் சிறப்பை உணர்த்தவும் வண்ணம் 2000-ஆம் ஆண்டு முதல் பிப்ரவரி  21-ஐ உலக தாய்மொழி தினமாக அனுசரித்து வருகிறது.

இந்த ஆண்டுக்கான கருப்பொருள்: எல்லைகள் இல்லா மொழிகள் (Languages Without Borders)

9.  WTA மகளிா் டென்னிஸ் போட்டியில் சாம்பியன் பட்டம் வென்றவர்?

  1. வாங் குயாங்
  2. எலெனா ரெபக்கினா
  3. சிமோனா ஹலேப்
  4. ஆன்ட்ரிஸ்கு பியான்கா
Answer & Explanation
Answer: சிமோனா ஹலேப்

Explanation:

துபாயில் நடைபெற்ற  WTA மகளிா் டென்னிஸ் போட்டியின் இறுதி போட்டியில் எலெனா ரெபக்கினாவை தோற்கடித்து ருமேனியாவின் சிமோனா ஹலேப் (Simona Halep) சாம்பியன் பட்டதை வென்றார்.

More TNPSC Current Affairs



Leave a Comment