Current Affairs in Tamil 21st to 24th February 2021
Hello, TNPSC Aspirants, Here we provide the Current Affairs question and answer in Tamil for 21st to 24th February 2021. Take the quiz and improve your Current Affairs Knowledge.
1. மாநில பெண் குழந்தைகள் பாதுகாப்பு தினம் எப்போது அனுசரிக்கப்படுகிறது?
ஜனவரி 24
பிப்ரவரி 13
பிப்ரவரி 24
மார்ச் 8
Answer & Explanation
Answer:பிப்ரவரி- 24
Explanation:
மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் பிறந்தநாளான பிப்ரவரி 24 (1948) மாநில பெண் குழந்தைகள் பாதுகாப்பு தினமாக கடைபிடிக்கப்படுகிறது.
இத்தினமானது கடந்த ஆண்டுதான் முதன்முதலில் அனுசரிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
ஜனவரி 24 – தேசிய பெண் குழந்தைகள் தினம் / சர்வதேச கல்வி தினம்
பிப்ரவரி 13 – தேசிய மகளிர் தினம்
மார்ச் 8 – சர்வதேச மகளிர் தினம்
மே 28 – சர்வதேச மகளிர் நல தினம்
ஜெயலலிதா அவர்கள் மறைந்த நாள் – டிசம்பர் 5, 2016
2. சமீபத்தில் நரேந்திர மோடி என பெயர் மாற்றம் செய்யப்பட்ட உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் மைதானம் அமைந்துள்ள மாநிலம்?
குஜராத்
மகாரஷ்டிரா
மேற்கு வங்கம்
உத்தரப்பிரதேஷ்
Answer & Explanation
Answer: குஜராத்
Explanation:
அகமதாபாத்தில் உள்ள உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் மைதானமான சர்தார் வல்லபாய் படேல் மைதானம், நரேந்திர மோடி மைதானம் என பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
இந்த மைதானத்தில் முதல் போட்டியாக இந்தியா – இங்கிலாந்து இடையேயான டெஸ்ட் தொடரின் 3-வது ஆட்டம் நடைபெறுகிறது.
முதலில் 49,000 பேர் அமரும் வகையில் இருந்த மைதானம், மறுசீரமைப்புப் பணிகளுக்குப் பிறகு 1.10 லட்சத்துக்கும் அதிகமானோர் அமரும் வகையில் கட்டப்பட்டுள்ளது.
இதன்மூலம் 90,000 பேர் அமரும் வசதி கொண்ட மெல்போர்ன் கிரிக்கெட் மைதானத்தை முறியடித்து, உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் மைதானமாக உருவெடுத்துள்ளது.
3. 2020-ஆம் ஆண்டுக்கான பாரதி விருது பின்வரும் யாருக்கு வழங்கப்பட்டுள்ளது?
சுகி சிவம்
சீனி விஸ்வநாதன்
அலா்மேல் வள்ளி
சந்திரா தண்டாயுதபாணி
Answer & Explanation
Answer: சுகி சிவம்
Explanation:
2019 ஆம் ஆண்டுக்கான விருதுகள்
பாரதி விருது – சீனி விஸ்வநாதன்
எம்.எஸ்.சுப்புலட்சுமி விருது – எஸ்.ராஜேஸ்வரி
பாலசரஸ்வதி விருது – அலா்மேல் வள்ளி
2019 ஆம் ஆண்டுக்கான விருதுகள்
பாரதி விருது – சுகி சிவம்
எம்.எஸ்.சுப்புலட்சுமி விருது – வாணி ஜெயராம்
பாலசரஸ்வதி விருது – சந்திரா தண்டாயுதபாணி
டாக்டா் ஜெ ஜெயலலிதா சிறப்பு கலைமாமணி விருது
2019 ஆம் ஆண்டுக்கு
2020 ஆம் ஆண்டுக்கு
திரைத் துறை
சரோஜா தேவி
செளகாா் ஜானகி
இசைத் துறை
பி.சுசிலா
ஜமுனா ராணி
நாட்டியத் துறை
அம்பிகா காமேஷ்வா்
பாா்வதி ரவி கண்டசாலா
4. சமீபத்தில் “Go Electric” என்ற பிரசாரத்தை தொடங்கிவைத்தவர்?
ஆர்.கே.சிங்
நரேந்திர மோடி
தர்மேந்திர பிரதான்
நிதின் கட்காரி
Answer & Explanation
Answer: நிதின் கட்காரி
Explanation:
மின்சார வாகனம், பேட்டரியை ரீசார்ஜ் செய்வதற்கான கட்டமைப்பு, மின் அடுப்புகள் மூலம் சமையல் செய்வது போன்றவற்றின் பயன்கள் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்த ‘மின்சாரத்துக்கு மாறுவோம் (Go Electric)’ பிரச்சாரத்தை, மத்திய மின்துறை இணையமைச்சர் திரு.ஆர்.கே.சிங் முன்னிலையில், மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுங்சாலைத்துறை அமைச்சர் திரு. நிதின் கட்கரி தொடங்கி வைத்தார்.
5. சமீபத்தில் உலக எதிர்கால எரிசக்தி உச்சி மாநாடு எங்கு நடைபெற்றது?
திபிலிசி
புதுடெல்லி
ஏதென்ஸ்
சிங்கப்பூர்
Answer & Explanation
Answer:புதுடெல்லி
Explanation:
2-வது உலக எதிர்கால எரிசக்தி உச்சி மாநாடு (World Future Fuel Summit & Expo) மற்றும் 11-வது உலக பெட்ரோலியம் நிலக்கரி மாநாடு 2021 ( World PetroCoal Congress) சமீபத்தில் புதுடெல்லியில் நடைபெற்றது.
இந்த இரு மாநாடுகளையும் “ஆற்றல் மற்றும் சுற்றுச்சூழல் அறக்கட்டளை” ஏற்பாடு செய்திருந்தது.
6. உலக மர நகரம் 2020 பட்டியலில் இடம்பெற்றுள்ள இந்திய நகரம்?
சென்னை
பெங்களூர்
ஹைதராபாத்
கொச்சின்
Answer & Explanation
Answer:ஹைதராபாத்
Explanation:
Tree City of the World
ஆர்பர் தின அறக்கட்டளை (Arbor Day Foundation) மற்றும் ஐ.நா.வின் உணவு மற்றும் விவசாய அமைப்பு (Food and Agriculture Organization (FAO))ஆகியவை ஹைதராபாத்தை 2020’ஆம் ஆண்டின் உலக மர நகரமாக அங்கீகரித்துள்ளன.
நகர்ப்புற காடுகளை வளர்ப்பதற்கும் பராமரிப்பதற்கும் அதன் உறுதிப்பாட்டிற்கான அங்கீகாரத்தைப் பெற்ற ஒரே இந்திய நகரம் இதுதான்.
உலக அளவில் 51 நகரங்கள் இந்த பட்டியலில் இடம்பெற்றுள்ளன.
7. சிரியா நாட்டிற்கான இந்தியாவின் தூதராக பதவியேற்க உள்ளவர்?
D. மூர்த்தி
ஜான் கொரி
மகேந்திர சிங் கன்யால்
மோனிகா கபில் மோஹ்தா
Answer & Explanation
Answer:மகேந்திர சிங் கன்யால்
Explanation:
சுரினாம் குடியரசிற்கான (Republic of Suriname) தூதராக செயல்பட்டுவரும் மகேந்திர சிங் கன்யால் சிரியா நாட்டிற்கான அடுத்த இந்தியாவின் தூதராக நியமிக்கப்படவுள்ளார்.
8. “ஜிதர்-உல்-ஹதீத்” என்ற போர்ப்பயிற்சி பின்வரும் எந்த நாட்டுடன் தொடர்பானது?
பாகிஸ்தான்
ஆப்கானிஸ்தான்
ஈரான்
ஐக்கிய அரபு அமீரகம்
Answer & Explanation
Answer:பாகிஸ்தான்
Explanation:
பாகிஸ்தான் ராணுவம் சிந்து மாகாணத்தில் உள்ள தார் பாலைவனத்தில் ஜனவரி 28 தொடங்கி பிப்ரவரி 28 வரை “ஜிதர்-உல்-ஹதீத்” என்ற பெயரில் ராணுவ பயிற்சியை மேற்கொண்டு வருகிறது.
கடுமையான பாலைவன பகுதிகளில் திறன்பட போரில் ஈடுபட, இந்த பயிற்சியை பாகிஸ்தான் ராணுவம் மேற்கொண்டுள்ளது.
9. நகர்ப்புற கூட்டுறவு வங்கிகள் குறித்து ஆய்வு செய்யும் நிபுணர் குழுவின் தலைவர் யார்?
என். எஸ் விஸ்வநாதன்
வீரேந்திர சிங் செளகான்
Dr. V.K. பால்
நரேந்திர சிங் தோமர்
Answer & Explanation
Answer:என். எஸ் விஸ்வநாதன்
Explanation:
இந்திய ரிசர்வ் வங்கி, நகர்ப்புற கூட்டுறவு வங்கிகளின் செயல்பாடுகள் குறித்து ஆய்வு செய்ய என். எஸ் விஸ்வநாதன் தலைமையில் குழு ஒன்றை அமைத்துள்ளது.
10. சமீபத்தில் எந்த இரு நாடுகள் ஃபாசெக்ஸ் (PASSEX) என்ற பெயரில் போர்பயிற்சியில் ஈடுபட்டன?
இந்தியா – ரஷ்யா
இந்தியா – ஜப்பான்
இந்தியா – இந்தோனேசியா
இந்தியா – இலங்கை
Answer & Explanation
Answer: இந்தியா – இந்தோனேசியா
Explanation:
இந்தியா பல்வேறு நாடுகளுடன் இணைந்து PASSEX என்ற பெயரில் கடற்படை பயிற்சியில் ஈடுபட்டு வருகிறது.
அதன்படி பிப்ரவரி 18 அன்று அரபிக்கடல் பகுதியில் PASSEX கடற்படை ஒத்திகையில் இந்தியா மற்றும் இந்தோனேசியா கடற்படைகள் ஈடுபட்டன.
இப்பயிற்சில் இந்தியாவின் INS தல்வார் கப்பலும் இந்தோனேசியாவின் KRI Bung Tomo கப்பலும் ஈடுபட்டன.
11. தேசிய டேபிள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டியின் ஆண்கள் பிரிவில் சாம்பியன் பட்டம் வென்றவர்?
ஜி.சத்யன்
சுஷ்மித் ஸ்ரீராம்
சரத் கமல்
அந்தோணி அமல்ராஜ்
Answer & Explanation
Answer: ஜி.சத்யன்
Explanation:
அரியானா மாநிலம் பஞ்ச்குலாவில் நடந்த, 82-வது தேசிய டேபிள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் தமிழகத்தை சேர்ந்த ஜி.சத்யன், தமிழகத்தை சேர்ந்த சரத் கமலை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றுள்ளார்.
ஜி.சத்யன் உலக அளவில் 37 வது இடத்திலும், சரத் கமல் 32 வது இடத்திலும் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் பெண்கள் பிரிவில் டெல்லியை சேர்ந்த மணிகா பத்ரா சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
மணிகா பத்ரா, 2020 ஆம் ஆண்டிற்கான ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருதை வென்ற ஐந்து நபர்களில் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.
12. உலக தாய்மொழி தினம் எப்போது அனுசரிக்கப்படுகிறது?
20 பிப்ரவரி
21 பிப்ரவரி
22 பிப்ரவரி
23 பிப்ரவரி
Answer & Explanation
Answer:பிப்ரவரி – 21
Explanation:
ஐநாவின் யுனெஸ்கோ அமைப்பு உலக மொழிகளை காக்கவும் அவற்றின் சிறப்பை உணர்த்தவும் வண்ணம் 2000-ஆம் ஆண்டு முதல் பிப்ரவரி 21-ஐ உலக தாய்மொழி தினமாக அனுசரித்து வருகிறது.
கருப்பொருள்: கல்வி மற்றும் சமூகத்தில் சேர்ப்பதற்கான பன்மொழி மொழியை வளர்ப்பது (Fostering multilingualism for inclusion in education and society)
சில வரி செய்திகள்
ஆந்திர மாநிலம் அனந்தபுரமு மாவட்டம் பிரதமரின் விவசாயிகள் (பிஎம்-கிசான்) தேசிய விருதுக்கு தோ்வு செய்யப்பட்டுள்ளது.
இந்தியாவின் முதலாவது டிஜிட்டல் பல்கலைக்கழகம் கேரள மாநிலம் திருவனந்தபுரத்துக்கு அருகிலுள்ள மங்களாபுரத்தில் திறக்கப்பட்டுள்ளது.