Hello, TNPSC Aspirants, Here we provide Current Affairs question and answer in Tamil for 24th February 2020. Take the quiz and improve your Current Affairs Knowledge.
1. ‘அம்மா பிளாட்டினம் பிளஸ் பரிசோதனை’ எவ்வளவு ரூபாயில் தொடங்கப்பட உள்ளது?
1000
2000
3000
4000
Answer & Explanation
Answer: 4000
Explanation:
சென்னை அரசு பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனையில் ரூ.4 ஆயிரத்துக்கு ‘அம்மா பிளாட்டினம் பிளஸ் பரிசோதனை’ ஓரிரு வாரத்தில் அறிமுகம் செய்யப்பட உள்ளது.
மேலும் சில.,
1000 ரூபாய் – அம்மா கோல்டு முழு உடல் பரிசோதனை
2000 ரூபாய் – அம்மா டைமண்ட் முழு உடல் பரிசோதனை
3000 ரூபாய் – அம்மா பிளாட்டினம் முழு உடல் பரிசோதனை
2. தமிழ்நாடு சீருடைப் பணியாளா் தோ்வாணையத்தின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளவர்?
பிரதீப் குமார்
சுனில்குமாா்
அஜய் ஜெயின்
சுரேஷ் கல்வாங்கர்
Answer & Explanation
Answer: சுனில்குமாா்
3. சமீபத்தில் சர்வதேச நீதித்துறை மாநாடு எங்கு நடைபெற்றது?
கோவா
மும்பை
புது தில்லி
ஜெய்ப்பூர்
Answer & Explanation
Answer: புது தில்லி
Explanation:
மாறிவரும் உலகில் நீதித்துறை (Judiciary and The Changing World) எனும் தலைப்பில் சர்வதேச நீதித்துறை மாநாடு புது தில்லியில் நடைபெற்றது.
4. பெண்களின் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை பரப்புவதற்காக ‘பவர் வாக்’ என்ற நிகழ்ச்சி நடைபெறவுள்ள இடம்?
டெல்லி
மும்பை
கொல்கத்தா
கொச்சின்
Answer & Explanation
Answer: டெல்லி
Explanation:
தேசிய மகளிர் ஆணையம் மார்ச் 1 ஆம் தேதி இரவு 7 மணி முதல் இரவு 8 மணி வரை ‘பவர் வாக்’ என்ற நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யவுள்ளது.
பெண்களின் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை பரப்புவதற்காக இந்த நிகழ்ச்சியை தேசிய மகளிர் ஆணையம் முன்னெடுத்துள்ளது.
5. மகாதீர் பின் முகமது பின்வரும் எந்தநாட்டை சேர்ந்தவர்?
ஆப்கானிஸ்தான்
ஜோர்டான்
புரூணை
மலேசியா
Answer & Explanation
Answer: மலேசியா
Explanation:
மலேசிய பிரதமர் மகாதீர் முகமது (94 வயது) தனது பதவியை சமீபத்தில் ராஜினாமா செய்துள்ளார்.
6. இந்தியாவிற்கு வருகைபுரிந்த முதல் அமெரிக்க அதிபர்?
டுவைட் ஐசன்ஹோவர்
ரிச்சர்ட் நிக்சன்
ஜிம்மி கார்ட்டர்
பில் கிளிண்டன்
Answer & Explanation
Answer: டுவைட் ஐசன்ஹோவர்
Explanation:
1959 ஆம் ஆண்டு ஜவஹர்லால் நேரு பிரதமராக இருந்த போது அப்போதைய அமெரிக்க பிரதமர் டுவைட் ஐசன்ஹோவர் இந்தியா வந்தார்.
பிப்ரவரி 24 அன்று டொனால்ட் டிரம்ப் இந்தியா வருகிறார். இந்தியா வரும் 7வது அதிபர் டொனால்ட் டிரம்ப் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தியா வந்த அமெரிக்க அதிபர்களின் வரிசை,
டுவைட் ஐசன்ஹோவர்
ரிச்சர்ட் நிக்சன்
ஜிம்மி கார்ட்டர்
பில் கிளிண்டன்
ஜார்ஜ் புஷ்
பராக் ஒபாமா
டொனால்ட் டிரம்ப்
7. ‘டைகர் டிரயல்‘ என்பது எந்த இருநாடுகளுக்கு இடையேயான கூட்டு ராணுவப்பயிற்சி?
இந்தியா – பங்களாதேஷ்
இந்தியா – அமெரிக்கா
இங்கிலாந்து – இந்தோனேசியா
இங்கிலாந்து – இலங்கை
Answer & Explanation
Answer: இந்தியா – அமெரிக்கா
Explanation:
இந்தியா – அமெரிக்கா இடேயே டைகர் டிரயல் என்ற பெயரில், இரு நாடுகளின் ராணுவ கூட்டுப்பயிற்சி நடத்தப்படும் என இந்தியா வந்துள்ள அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
8. சரத்கமல் – சத்யன் ஞானசேகரன் பின்வரும் எந்த விளையாட்டுடன் தொடர்பானவர்கள்?
டென்னிஸ்
டேபிள் டென்னிஸ்
பேட்மிட்டன்
துப்பாக்கிசூடுதல்
Answer & Explanation
Answer: டேபிள் டென்னிஸ்
Explanation:
ஹங்கேரி ஓபன் டேபிள் டென்னிஸ் போட்டி ஆடவா் இரட்டையா் பிரிவின் இறுதிபோட்டியில் இந்தியாவின் சரத்கமல்-சத்யன் ஞானசேகரன் இணை, ஜொ்மனியின் டுடா பெனடிக்ட்-பிரான்ஸ்கா பேட்ரிக்கை இணையிடம் தோல்வியுற்று வெள்ளி பதக்கத்தை வென்றது.
மேலும் கலப்பு இரட்டையா் பிரிவில் சரத்கமல்-மனிகா பத்ரா இணை வெண்கலப் பதக்கம் வென்றுள்ளது.