Current Affairs in Tamil 25th February 2020
Hello, TNPSC Aspirants, Here we provide Current Affairs question and answer in Tamil for 25th February 2020. Take the quiz and improve your Current Affairs Knowledge.

1. தமிழில் சிறந்த மொழிபெயர்ப்பு நூலுக்கான சாகித்ய அகாடமி விருது சமீபத்தில் யாருக்கு வழங்கப்பட்டுள்ளது?
- நஞ்சுண்டன்
- கே.வி.ஜெயஸ்ரீ
- கிருஷ்ணசாமி
- எஸ்.ராமகிருஷ்ணன்
Answer & Explanation
Answer: கே.வி.ஜெயஸ்ரீ
Explanation:
பாணர்கள் மற்றும் நடனக் கலை புரியும் கூத்தர்கள் தங்கள் வாழ்வில் எதிர்கொண்ட சம்பவங்களை மையக் கருவாகக் கொண்டு மலையாள எழுத்தாளர் மனோஜ் குரூர் எழுதியிருந்த நாவலை ‘நிலம் பூத்து மலர்ந்த நாள்’ என தமிழில் மொழி பெயர்த்ததற்காக மொழிபெயர்ப்பாளர் கே.வி.ஜெயஸ்ரீக்கு சாகித்ய அகாடமி விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு, தமிழில் சிறந்த படைப்பிற்காக சூல் எனும் நாவலுக்கு எழுத்தாளர் சோ.தர்மனுக்கு சாகித்ய அகாடமி விருது அறிவிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
TNPSC Group 1 Model Papers – Download
2. காவிரி நதிநீர் மேலாண்மை ஆணையதின் (CWMA) தலைவர்?
- நவீன் குமார்
- மணிவாசன்
- ராஜேந்திர குமார்
- பட்டாபிராமன்
Answer & Explanation
Answer: ராஜேந்திர குமார் ஜெயின்
Explanation:
காவிரி நதிநீர் மேலாண்மை ஆணையத்தின் ஐந்தாவது கூட்டம், தில்லி ராமகிருஷ்ணா புரத்தில் உள்ள மத்திய நீர்வள ஆணைய அலுவலகத்தில் 25-.2-2020 அன்று நடைபெற்றது.
காவிரி நதிநீர் மேலாண்மை ஆணையத்தின்(CWMA) தலைவராக ராஜேந்திர குமார் ஜெயின் பொறுப்பேற்ற பின் நடைபெற்ற முதல் கூட்டம் இது என்பது குறிப்பிடத்தக்கது.
காவிரி ஒழுங்காற்றுக்குழு (CWRC) – வின் தலைவர் – நவீன் குமார்
3. ஐ.என்.எஸ் சிந்துவீர் என்ற நீர்மூழ்கி கப்பலை இந்தியா எந்தநாட்டிற்கு வழங்கவுள்ளது?
- பங்களாதேஷ்
- இலங்கை
- மியான்மர்
- மொரிஷியஸ்
Answer & Explanation
Answer: மியான்மர்
Explanation:
இந்தியா பல ஆண்டுகளாக பயன்படுத்திவரும் ரஷ்ய தயாரிப்பான ஐ.என்.எஸ் சிந்துவீர் -ஐ மறுகட்டமைப்பு செய்து மியான்மர் கடற்படையிடம் வழங்க உள்ளது.
இந்த நீர்மூழ்கியுடன் தனது முதல் நீரடி படைப்பிரிவை மியான்மர் துவக்கஉள்ளது குறிப்பிடத்தக்கது.
4. 2020ஆம் ஆண்டுக்கான பெண் குழந்தை முன்னேற்றத்திற்கான மாநில விருது யாருக்கு வழங்கப்பட்டது?
- ந. நந்தினி
- பவதாரணி
- வி. அமுதவல்லி
- மா. மகாலட்சுமி
Answer & Explanation
Answer: பவதாரணி
Explanation:
பெண் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களைத் தடுக்கவும்,
அனைத்து பெண் குழந்தைகளும் 18 வயது வரை கல்வி கற்றலை உறுதி செய்யவும்,
பெண் குழந்தை தொழிலாளா் முறையை ஒழிக்கவும்
பல்வேறு விழிப்புணா்வு பிரசாரங்களை மேற்கொண்ட கடலூா் மாவட்டம் மாலுமியா்பேட்டையைச் சோ்ந்த 9 வயது பெண் குழந்தை ச.பவதாரணிக்கு 2020ஆம் ஆண்டுக்கான பெண் குழந்தை முன்னேற்றத்துக்கான மாநில விருதை முதல்வர் வழங்கினார்.
5. சமீபத்தில் மாநில அளவிலான ஹிந்தி மொழி மாநாடு எங்கு நடைபெற்றது?
- சென்னை
- கோவை
- ஊட்டி
- கொடைக்கானல்
Answer & Explanation
Answer: கொடைக்கானல்
Explanation:
இந்திய உணவுக்கழகம் தமிழ்நாடு சாா்பில் கொடைக்கானலில் மாநில அளவிலான ஹிந்தி மொழி மாநாடு 24-02-2020 அன்று நடைபெற்றது.
6. விவசாயிகள் நிதி உதவித் திட்டம் (PM கிஸான்) துவங்கப்பட்ட நாள்?
- 26-01-2020
- 26-01-2019
- 24-02-2020
- 24-02-2019
Answer & Explanation
Answer: 24-02-2019
Explanation:
கடந்த ஆண்டு பிப்ரவரி 24-ஆம் தேதி கோரக்பூரில் பிரதமரின் விவசாயிகள் உதவித்தொகைத் திட்டத்தை (பி.எம்.-கிஸான்) பிரதமா் மோடி தொடங்கி வைத்தாா்.
இத்திட்டம் தொடங்கி ஓராண்டு நிறைவு பெறுவதையொட்டி உத்தரப் பிரதேச மாநிலம், சித்திரகூடம் மாவட்டத்தில் வரும் 29-ஆம் சிறப்பு விழா நடைபெறஉள்ளது.
மேற்கு வங்கத்தைத் தவிர அனைத்து மாநிலங்களிலும் இந்த திட்டத்தில் இணைந்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
7. மத்திய கலால் தினம் (Central Excise Day) எப்போது அனுசரிக்கப்படுகிறது?
- பிப்ரவரி 24
- ஏப்ரல் 15
- ஜூலை 24
- மார்ச் 2
Answer & Explanation
Answer: பிப்ரவரி 24
More TNPSC Current Affairs
Related