Current Affairs in Tamil 25th and 26th February 2021
Hello, TNPSC Aspirants, Here we provide the Current Affairs question and answer in Tamil for 25th and 26th February 2021. Take the quiz and improve your Current Affairs Knowledge.
1. தமிழ்நாடு அரசு பணியாளர்களின் ஓய்வு பெறும் வயது எவ்வளவாக உயர்த்தப் பட்டுள்ளது?
59
60
61
62
Answer & Explanation
Answer: 60 வயது
Explanation:
தமிழக அரசு பணியாளர்களின் ஓய்வு வயதை மேலும் ஓராண்டுக்கு அதாவது 60 ஆக உயர்த்துவதாக முதல்வர் பழனிசாமி சட்டப்பேரவையில் 110 விதியின் கீழ் அறிவித்துள்ளார்.
தற்போது அரசு பணியில் இருக்கும் அனைவருக்கும் மற்றும் இந்த ஆண்டு, அதாவது 31.5.2021 அன்று பணியில் இருந்து ஓய்வு பெறும் பணியாளர்களுக்கும் இந்த அறிவிப்பு பொருந்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த மே அன்று அரசு ஊழியர்களின் ஓய்வு பெறும் வயதை 58ல் இருந்து 59ஆக உயர்த்தி ரசாணை வெளியிட்டது குறிப்பிடத்தக்கது.
2. 2019 – 20ம் ஆண்டுக்கான பாரத ரத்னா டாக்டர் எம்.ஜி.ஆர்., பாரம்பரிய நெல் பாதுகாவலர் விருது பட்டியலில் தவறானது?
சக்திபிரகதீஷ்
வேல்முருகன்
உ.சிவராமன்
ஜெயராமன்
Answer & Explanation
Answer: ஜெயராமன்
Explanation:
2019 – 20ம் ஆண்டுக்கான பாரத ரத்னா டாக்டர் எம்.ஜி.ஆர்., பாரம்பரிய நெல் பாதுகாவலர் விருது நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த சக்திபிரகதீஷ், சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த வேல்முருகன், சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த உ.சிவராமன் ஆகியோருக்கு வழங்கப்பட்டுள்ளது.
பாரம்பரிய நெல் ரகங்களைப் பாதுகாத்து பயிரிடும் விவசாயிகளை ஊக்குவிக்க இவ்விருது வழங்கப்படுகிறது.
3. பின்வரும் எந்தப்படம் 18வது சென்னை திரைப்பட விழாவில் சிறந்த படமாக தேர்வுசெய்யப்படவில்லை?
என்றாவது ஒரு நாள்
சியான்கள்
க/பெ.ரணசிங்கம்
கன்னி மாடம்
Answer & Explanation
Answer: கன்னி மாடம்
Explanation:
பிப்ரவரி 18-ம் தேதி தொடங்கி நடைபெற்று வந்த 18வது சென்னை திரைப்பட விழாவில் தமிழ்ப் படங்களுக்கான போட்டியில்,
முதல் பரிசை வெற்றிதுரைசாமி இயக்கி தயாரித்த என்றாவது ஒரு நாள் (சம் டே) என்ற படமும், இரண்டாவது பரிசை சியான்கள் படமும் பெற்றுள்ளன.
என்றாவது ஒரு நாள் படத்தின் ஒளிப்பதிவாளர் சண்முகசுந்தரக்கு சிறந்த ஒளிப்பதிவுக்கான விருது வழங்கப்பட்டது.
மேலும் சிறந்த நடிப்பு பங்களிப்புக்காக ‘க/பெ ரணசிங்கம்’ படத்தில் நாயகியாக நடித்த ஐஸ்வர்யா ராஜேஷ்-க்கு விருது வழங்கப்பட்டது.
4. மூன்றாவது உலகத் திருக்குறள் மாநாடு எங்கு நடைபெறுகிறது?
சென்னை
மதுரை
தஞ்சாவூர்
சிதம்பரம்
Answer & Explanation
Answer: தஞ்சாவூர்
Explanation:
மூன்றாவது உலகத் திருக்குறள் மாநாடு தஞ்சாவூரில் உள்ள பாரத் அறிவியல் – நிர்வாகவியல் கல்லூரியில் பிப்ரவரி 26 முதல் 28 வரை நடைபெறுகிறது.
சென்னை உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், தஞ்சாவூர் பாரத் அறிவியல் – நிர்வாகவியல் கல்லூரி, ஆஸ்திரேலியா மெல்போர்ன் தமிழ்ச் சங்கம், இளங்காடு நற்றமிழ்ச் சங்கம், தஞ்சாவூர் தமிழ்த்தாய் அறக்கட்டளை ஆகியவை இணைந்து மாநாட்டை நடத்துகின்றன.
2-வது உலகத் திருக்குறள் மாநாடு இலங்கை யாழ்ப்பாணத்தில் கடந்த ஆண்டு பிப்ரவரி 21 முதல் 23 வரை நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.
5. பொதுமக்கள் பின்வரும் எந்த செயலி மூலம் தேர்தல் நடத்தை விதி மீறல் பற்றி புகார் தெரிவிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது?
cVIGIL
Voter Helpline
Mx. Democracy
Garuda
Answer & Explanation
Answer:cVIGIL
Explanation:
தமிழகம், கேரளா, புதுச்சேரி, அசாம் மற்றும் மேற்குவங்கம் மாநிலங்களுக்கான சட்டப்பேரவை தேர்தல் தேதி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகம், கேரளா, புதுச்சேரி – க்கான தேர்தல் தேதி – ஏப்ரல் 6.
தமிழகம் மற்றும் புதுச்சேரி மாநிலங்களில் தேர்தல் நடத்தை உடனடியாக அமுலுக்கு வருவதாக தேர்தல் ஆணையர் சுனில் அரோரா தெரிவித்துள்ளார்.
மேலும் தேர்தல் நடத்தை விதி மீறல் பற்றி பொதுமக்கள் புகார் தெரிவிக்க cVIGIL என்ற மொபைல் செயலியை பயன்படுத்தலாம் என்று தெரிவித்துள்ளார்.
6. முக்கிய மந்திரி கர் கர் ரேஷன் யோஜ்னா என்ற திட்டம் பின்வரும் எந்த மாநிலத்துடன் தொடர்பானது?
டெல்லி
சண்டிகர்
கோவா
தெலுங்கானா
Answer & Explanation
Answer:டெல்லி
Explanation:
Mukhyamantri Ghar Ghar Ration Yojana
ரேஷன் பொருட்களை வீடுகளுக்கே சென்று விநியோகிக்கும் முக்கிய மந்திரி கர் கர் ரேஷன் யோஜனா (MMGGRY) என்ற திட்டத்தை டெல்லி அரசு செயல்படுத்தி வருகிறது.
கொரானா ஊரடங்குகாலத்தில் (ஜூலை 21, 2020) அறிமுகப்படுத்தப்பட்ட இத்திட்டம் வரும் மார்ச் முதல் மாநிலம் முழுவதும் மீண்டும் செயல்படுத்தப்பட உள்ளது.
ஆந்திர மாநில அரசு பிப்ரவரி 1, முதல் ரேஷன் பொருட்களை வீடுகளுக்கே சென்று விநியோகிக்கும் திட்டத்தை துவங்கியது குறிப்பிடத்தக்கது.
தேசிய உணவுப் பாதுகாப்பு சட்டம் 2013
7. சமீபத்தில் பின்வரும் எந்த இந்தியருக்கு சர்வதேச ஊழல் தடுப்பு சாம்பியன் விருது வழங்கப்பட்டது?
நீரா தாண்டன்
லிண்டா தாமஸ்
அஞ்சலி பரத்வாஜ்
தீபா அம்பேகர்
Answer & Explanation
Answer:அஞ்சலி பரத்வாஜ்
Explanation:
அமெரிக்காவின் சர்வதேச ஊழல் தடுப்பு சாம்பியன் என்ற புதிய விருது, இந்தியாவைச் சேர்ந்த சமூக செயற்பாட்டாளர் அஞ்சலி பரத்வாஜ் உள்ளிட்ட 12 பேருக்கு வழங்கப்பட்டுள்ளது.
அஞ்சலி பரத்வாஜ், டெல்லியில் சதார்க் நகரிக் சங்காதன் என்ற அமைப்பை நிறுவியவர் என்பது குறிப்பிடத்தக்கது.
8. சமீபத்தில் e-Parivahan Vyavstha என்ற திட்டத்தை கொண்டுவந்துள்ள மாநிலம்?
ஹிமாச்சல் பிரதேஷ்
ஆந்திரபிரதேஷ்
உத்தரபிரதேஷ்
கேரளா
Answer & Explanation
Answer: ஹிமாச்சல் பிரதேஷ்
Explanation:
ஓட்டுநர் உரிமம் மற்றும் வாகன அனுமதி புதுப்பித்தல் போன்றவற்றை இணையவழியில் மேற்கொள்ள ஹிமாச்சல் பிரதேஷ் அரசு e-Parivahan Vyavstha என்ற திட்டத்தை கொண்டுவந்துள்ளது.
இதற்கு முன்னர் ஹிமாச்சல் பிரதேஷ் அரசு e-Vidhan Sabha, e-Budget மற்றும் e-cabinet ஆகியவற்றை மேற்கொண்டது குறிப்பிடத்தக்கது.
9. பயணிகளுக்கு பிடித்த விமான நிலையங்கள் பட்டியலில் முதலிடம் பிடித்துள்ள விமான நிலையம் ?
உதய்பூர் விமான நிலையம்
மதுரை விமான நிலையம்
கொச்சின் விமான நிலையம்
பெங்களுரு விமான நிலையம்
Answer & Explanation
Answer:உதய்பூர் விமான நிலையம்
Explanation:
Customer Satisfaction Survey
இந்திய விமான நிலைய ஆணையம் வெளியிட்டுள்ள பயணிகளுக்கு பிடித்த விமான நிலையங்கள் பட்டியலில் முதலிடத்தை உதய்பூர் விமான நிலையமும் இரண்டாம் இடத்தை மதுரை விமான நிலையமும் பெற்றுள்ளன.
10. சமீபத்தில் காலமான விஷ்ணு நாராயணன் நம்பூதிரி, பின்வரும் எந்த மாநிலத்தை சேர்ந்தவர்?
தமிழ்நாடு
கேரளா
ஆந்திரா
தெலுங்கானா
Answer & Explanation
Answer: கேரளா
Explanation:
பத்ம ஸ்ரீ விருது, சாகித்ய விருது உள்ளிட்ட பல விருதுகளை பெற்றுள்ள கேரள கவிஞர் விஷ்ணு நாராயணன் நம்பூதிரி பிப்ரவரி 25, அன்று காலமானார்.
ஸ்வாதந்த்ரியாதே குரிச்சோரு கீதம், பிராணயா கீதங்கல், உஜ்ஜயினியேல் ராப்பகலுகல், ஆரண்யகம், அபராஜிதா, பூமிகீதங்கல் மற்றும் அலகடலம் நயம்பலுகலம் உள்பட பல்வேறு நூல்களை அவர் எழுதியுள்ளார்.
11. மத்திய கலால் தீர்வை தினம் எப்போது அனுசரிக்கப்படுகிறது? ?
ஜனவரி 26
பிப்ரவரி 24
ஜூன் 29
ஜூலை 6
Answer & Explanation
Answer:பிப்ரவரி 24
Explanation:
Central Excise Day
பிப்ரவரி 24, 1944 ஆம் ஆண்டு மத்திய கலால் மற்றும் உப்பு சட்டம் ஏற்படுத்தப்பட்டதை நினைவுகூறும் விதமாக ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி 24 மத்திய கலால் தீர்வை தினமாக அனுசரிக்கப்பட்டு வருகிறது.
மத்திய மறைமுக வரிகள் மற்றும் சுங்க வாரியம் தலைவர்: எம். அஜித் குமார்
CBIC நிறுவப்பட்ட நாள்: 1 ஜனவரி 1964
கடந்த 2018 ஆம் ஆண்டு மத்திய கலால் மற்றும் சுங்க வாரியம், மத்திய மறைமுக வரிகள் மற்றும் சுங்க வாரியம் எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
ஜனவரி 26 – சர்வதேச சுங்க தீர்வை தினம்
ஜூன் 29 – தேசிய புள்ளியியல் தினம்
ஜூலை 6 – சர்வதேச கூட்டுறவு தினம்
12. Agriculture Acts 2020 என்ற புத்தகத்தின் ஆசிரியர்?
விஜூ கிருஷ்ணன்
வீரமணி
CS கர்ணன்
A.K. ராஜன்
Answer & Explanation
Answer: A.K. ராஜன்
Explanation:
மெட்ராஸ் உயர் நீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதி A.K. ராஜன் எழுதிய Agriculture Acts 2020 என்ற புத்தகம் திராவிடர் கழகம் கட்சியின் தலைவர் வீரமணி அவர்களால் சமீபத்தில் வெளியிடப்பட்டது.
சென்னை அருகே உள்ள காவனூரில், நிதி தொழில்நுட்ப நகரம் அமைக்கப்பட்டு வருகிறது.
திருநெல்வேலி மாவட்டம் கங்கைகொண்டானில் புதிதாக அமைக்கப்பட உள்ள உணவுப் பூங்காவுக்கு முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி 24-2-2021 அன்று அடிக்கல் நாட்டினார்.
புதுச்சேரியில் குடியரசுத் தலைவர் ஆட்சி அமலுக்கு வந்தது (பிப்ரவரி 25). 7 – வது முறையாக குடியரசு தலைவர் ஆட்சி அமைக்க இருப்பது குறிப்பிடத்தக்கது.
அசாம் மாநிலத்தை சேர்ந்த பிரபல தடகள வீராங்கனை ஹீமா தாஸ் இன்று (பிப்ரவரி 26) அசாம் மாநில டி.எஸ்.பி – ஆக பொறுப்பேற்றுக்கொண்டார்.
இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மூத்த தலைவர் தோழர் தா.பாண்டியன் இன்று (பிப்ரவரி 26) காலமானார்.
சமீபத்தில் சீன அரசு வறுமையை 100% ஒழித்துள்ளதாக தெரிவித்துள்ளது.