Current Affairs in Tamil 26th & 27th February 2020
Hello, TNPSC Aspirants, Here we provide Current Affairs question and answer in Tamil for 26th & 27th February 2020. Take the quiz and improve your Current Affairs Knowledge.

1. தென்னிந்தியாவின் முதல் தங்க நகை தொழிற்பூங்கா எங்கு அமைக்கப்பட உள்ளது?
- ஹைதராபாத்
- அமராவதி
- சென்னை
- கோவை
Answer & Explanation
Answer: கோவை
Explanation:
தென்னிந்தியாவிலேயே முதல் தங்க நகை தொழிற்பூங்கா கோவையின் பேரூரில் அமைக்கப்பட உள்ளது.
TNPSC Group 1 Model Papers – Download
2. சமீபத்தில் தலைமன்னார் முதல் தனுஷ்கோடி வரையிலான 30 கிலோ மீட்டர் தூரத்தை, 10 மணி 15 நிமிடங்களில் நீந்தி கடந்தவர்?
- ராஜ ஈஸ்வர பிரபு
- ஜெய் ஜஸ்வந்த்
- எடி ஹை
- விருத்தாவல் காதே
Answer & Explanation
Answer: எடி ஹை
Explanation:
அமெரிக்காவைச் சேர்ந்த பெண் எடி ஹை (Eddie Al-Ming Hu) தலைமன்னார் முதல் தனுஷ்கோடி வரையிலான (பாக் ஜலசந்தி) 30 கிலோ மீட்டர் தூரத்தை, 10 மணி 15 நிமிடங்களில் நீந்தி சாதனை படைத்துள்ளார்.
மேலும் இவருடன் இங்கிலாந்தை சேர்ந்த ஆடம் ஏ. ஜி. மோஸ் ( Adam A. G. Moss) என்பவரும் நீந்தி கடந்துள்ளார்.
3. ஃபவுண்டரி தொழில்நுட்பம் குறித்த சர்வதேச கண்காட்சி IFEX – 2020 எங்கு நடைபெறுகிறது?
- மும்பை
- டெல்லி
- சென்னை
- காந்திநகர்
Answer & Explanation
Answer: சென்னை
Explanation:
16வது IFEX – 2020 கண்காட்சி பிப்ரவரி 28, 29 மற்றும் மார்ச் 1ஆம் தேதிகளில் சென்னையில் நடைபெறுகிறது.
IFEX = International Exhibition on Foundry Technology, Equipment, Supplies, Service
4. குழந்தைகள் வாழ தகுதியான நாடுகள் பட்டியலில் இந்தியா வகிக்கும் இடம்?
- 68
- 92
- 131
- 156
Answer & Explanation
Answer: 131
Explanation:
உலக சுகாதார நிறுவனம், யுனிசெப், லான்செட் மருத்துவ இதழ் ஆகியவை இணைந்து வெளியிட்ட குழந்தைகள் வாழ தகுதியான நாடுகள் பட்டியலில் மொத்தம் 180 நாடுகளில் இந்தியா 131வது இடத்தை பிடித்துள்ளது.
இப்பட்டியலில் முதல் இடங்களை முறையே நார்வே, தென்கொரியா, நெதர்லாந்து ஆகிய நாடுகள் பிடித்துள்ளன.
மேலும் இலங்கை 68 ஆவது இடத்தை பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
5. சமீபத்தில் இங்கிலாந்தின் அட்டர்னி ஜெனரலாக பதவியேற்ற இந்திய வம்சாவளி பெண்?
- சமியா நசீம்
- அர்ச்சனா ராவ்
- தீபா அம்பேகர்
- சுயெல்லா பிராவர்மேன்
Answer & Explanation
Answer: சுயெல்லா பிராவர்மேன்
Explanation:
இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அமைச்சர் சுயெல்லா பிராவர்மேன் (Suella Braverman), இங்கிலாந்தின் புதிய அட்டர்னி ஜெனரலாக நியமிக்கப்பட்டுள்ளார்.
பாட்ரிசியா ஸ்காட்லாந்து (Patricia Scotland) – ஐ தொடர்ந்து இங்கிலாந்திற்கு நியமிக்கப்பட்டுள்ள இரண்டாவது பெண் அட்டர்னி ஜெனரல் சுயெல்லா பிராவர்மேன் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும், கன்சர்வேடிவ் கட்சி அரசால் நியமிக்கப்பட்ட முதல் பெண் அட்டர்னி ஜெனரல் பிராவர்மேன் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும்., சமீபகாலங்களில்…
- கொலம்பியா மாவட்ட மேல்முறையீட்டு நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக ஸ்ரீ ஸ்ரீநிவாசன் அவர்களும்,
- சிகாகோவின் நீதிபதியாக இந்திய வம்சாவளியை சேர்ந்த சமியா நசீமும் (Samiya Naseem)
- நியூயார்க் சிவில் நீதிமன்ற நீதிபதியாக அர்ச்சனா ராவும், இடைக்கால சிவில் நீதிமன்ற நீதிபதியாக தீபா அம்பேகரும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
6. உதிரியாக விற்கப்படும் இனிப்புகளிலும் தயாரிப்பு தேதி குறிப்பிடுவது எப்போதிலிருந்து து கட்டாயம் ஆக்கப்படுகிறது?
- மார்ச் 1, 2020
- ஏப்ரல் 1, 2020
- மே 1, 2020
- ஜூன் 1, 2020
Answer & Explanation
Answer: ஜூன் 1, 2020
Explanation:
பாக்கெட்டில் அடைத்து விற்கப்படும் இனிப்புகளில் தயாரிப்பு தேதியை குறிப்பிடுவது போல் உதிரியாக விற்கப்படும் இனிப்புகளிலும் தயாரிப்பு தேதி குறிப்பிடுவது வரும் ஜூன் 1, 2020 முதல் கட்டாயம் ஆக்கப்படுகிறது என இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர ஆணையம் அறிவித்துள்ளது.
7. சமீபத்தில் இந்தியா – அமெரிக்கா இடையே எத்தனை ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளன?
- 3
- 4
- 5
- 6
Answer & Explanation
Answer: 4
Explanation:
இந்தியா – அமெரிக்கா இடையே மனநலம், மருத்துவ உபகரணங்களை பாதுக்காப்பாக கைளாளுவது, இந்திய ஆயில் சார்ட் இண்டஸ்ட்ரீஸ் ஒத்துழைப்பு மற்றும் கடற்படைக்காக அதிநவீன அப்பாச்சி மற்றும் எம்.எச்.-60 ரோமியோ ஹெலிகாப்டர்கள் வாங்குதல் தொடர்பான 4 ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளன.
8. பிரான்ஸ் நாட்டிற்கான புதிய இந்திய தூதராக நியமிக்கப்பட்டுள்ளவர்?
- வினய் மோக குவாத்ரா
- ஜாவேத் அஷ்ரப்
- வினய் மோகன் குவாத்ரா
- மொயின் உல் ஹக்
Answer & Explanation
Answer: ஜாவேத் அஷ்ரப்
Explanation:
பிரான்சிற்கான இந்தியாவின் புதிய தூதராக ஜாவேத் அஷ்ரப் நியமிக்கப்பட்டுள்ளார். இவருக்கு முன் வினய் மோகன் குவாத்ரா தூதராக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
9. மூன்று விதமான கிரிக்கெட் போட்டிகளிலும், தலா 100 போட்டிகளில் விளையாடிய உலகின் முதல் கிரிக்கெட் வீரர்?
- ராஸ் டெய்லர்
- அலெஸ்டர் குக்
- ஸ்டீபன் பிளமிங்
- வெட்டோரி
Answer & Explanation
Answer: ராஸ் டெய்லர்
Explanation:
மூன்று விதமான கிரிக்கெட் போட்டிகளிலும் (டெஸ்ட், ஒருநாள் போட்டி, 20 ஓவர்) 100 போட்டிகளில் விளையாடிய உலகின் முதல் கிரிக்கெட் வீரர் என்ற பெருமையை நியூசிலாந்து வீரர் ராஸ் டெய்லர் பெற்றுள்ளார்.
இவர் 20-20 மற்றும் டெஸ்ட் போட்டிகளின் 100வது ஆட்டத்தை இந்தியாவிற்கு எதிராக விளையாடினர் என்பது குறிப்பிடத்தக்கது.
10. சமீபத்தில் தனது ஓய்வை அறிவித்துள்ள டென்னிஸ் வீராங்கனை?
- செரீனா வில்லியம்ஸ்
- மரியா ஷரபோவா
- கரோலின் வோஸ்னியாக்கி
- சிமோனா ஹாலெப்
Answer & Explanation
Answer: மரியா ஷரபோவா
Explanation:
ரஷ்யாவை சேர்ந்த பிரபல டென்னிஸ் வீராங்கனை மரியா ஷரபோவா சமீபத்தில் தனது ஓய்வை அறிவித்துள்ளார்.
இவர் 5 கிராண்ட்ஸ்லாம் (Grand-slam) பட்டத்தை வென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
11. தேசிய அறிவியல் தினம் எப்போது அனுசரிக்கப்படுகிறது?
- 26 பிப்ரவரி
- 27 பிப்ரவரி
- 28 பிப்ரவரி
- 29 பிப்ரவரி
Answer & Explanation
Answer: 28 பிப்ரவரி
Explanation:
இந்திய விஞ்ஞானி சா். சி. வி. ராமன் கண்டுபிடித்த ராமன் விளைவு கோட்பாடு உலகுக்கு அறிவிக்கப்பட்ட பிப்ரவரி 28(1928) தேசிய அறிவியல் தினமாக அனுசரிக்கப்படுகிறது.
தேசிய அறிவியல் தொழில்நுட்ப பரிமாற்றக் குழு 1986-ம் ஆண்டு இந்தத் தினத்தை அறிவித்தது குறிப்பிடத்தக்கது.
இந்த ஆண்டுக்கான கருப்பொருள்: அறிவியலில் பெண்கள் (Women in Science)
12. வாட்ஸ் ஆப்-இல் பயன்படுத்தப்படும் இயங்கும் மென்பொருள்(OS)?
- FreeBSD
- Arch Linux
- Slackware
- Linux
Answer & Explanation
Answer: FreeBSD
More TNPSC Current Affairs
Related
1 thought on “TNPSC Current Affairs Question and Answer in Tamil 26th & 27th February 2020”