Current Affairs in Tamil 27th and 28th February 2021
Hello, TNPSC Aspirants, Here we provide the Current Affairs question and answer in Tamil for 27th and 28th February 2021. Take the quiz and improve your Current Affairs Knowledge.
1. சமீபத்தில் இந்திய வா்த்தக போட்டி ஆணையத்தின் (CCI) தென் மண்டல கிளை எங்கு தொடங்கப்பட்டுள்ளது?
ஓசூர்
மைசூர்
அமராவதி
சென்னை
Answer & Explanation
Answer: சென்னை
Explanation:
Competition Commission of India
இந்திய வா்த்தக போட்டி ஆணையத்தின் (CCI) தென் மண்டல கிளையை மத்திய நிதி, பெரு நிறுவன விவகாரங்கள் துறை அமைச்சா் நிா்மலா சீதாராமன், இணையமைச்சா் அனுராக் சிங் தாகூா் முன்னிலையில் திறந்து வைத்தாா்.
இந்தியப் போட்டி ஆணையமானது இந்திய வா்த்தக போட்டி சட்டங்கள் – 2002 ன் கீழ் 14 அக்டோபர் 2003 -இல் அமைக்கப்பட்ட நீதித் துறையைப் போன்ற சட்டப்பூர்வ அமைப்பாகும்.
இதன் தற்போதைய தலைவா் அசோக் குமாா் குப்தா.
2. சென்னை மாநகராட்சி பின்வரும் எந்த வங்கியுடன் இணைந்து “நம்ம சென்னை ஸ்மார்ட் கார்டு” திட்டத்தை துவங்கியுள்ளது?
HDFC
SBI
ICICI
Axis
Answer & Explanation
Answer:
Explanation:
நம்ம சென்னை ஸ்மார்ட் கார்டு என்ற பிரீபெய்டு கார்டை ஐசிஐசிஐ வங்கி, சென்னை மாநகராட்சி மற்றும் சென்னை ஸ்மார்ட் சிட்டி லிமிடெட் நிறுவனம் ஆகியவை இணைந்து உருவாகியுள்ளன.
பெருநகர சென்னை கார்பரேஷன் மையங்களில் செலுத்தப்படும் அனைத்து வரிகள் மற்றும் கட்டணங்களை இந்த நம்ம சென்னை ஸ்மார்ட் கார்டு மூலமாக வாடிக்கையாளர்கள் செலுத்தலாம்.
3. சமீபத்தில் இஸ்ரோ PSLV C51 ராக்கெட் மூலம் எத்தனை செயற்கைகோள்களை விண்ணுக்கு அனுப்பியது?
17
18
19
20
Answer & Explanation
Answer: 19
Explanation:
ஸ்ரீஹரிகோட்டா, சதீஷ் தவான் விண்வெளி மையத்தில் இருந்து PSLV C51 ராக்கெட் மூலம் பிப்ரவரி 28 அன்று 19 செயற்கைகோள்கள் விண்ணுக்கு அனுப்ப பட்டது.
PSLV-C51 என்பது PSLV இன் 53 வது மிஷன் என்பது குறிப்பிடத்தக்கது.
இதில் அடங்கிய செயற்கைகோள்கள்.,
பிரேசில் நாட்டின் அமேசானியா 1 (637 கிலோ & ஆயுட்காலம் 4 ஆண்டுகள்)
அமெரிக்காவின் 13 நானோ செயற்கைகோள்கள்
இஸ்ரோவின் சிந்துநேத்ரா
ஸ்பேஸ் கிட்ஸ் இந்தியா அமைப்பின் சதிஷ் தவான் சாட்
உயர்கல்வி நிறுவனங்கள் கூட்டமைப்பில் உருவான யுனிட்டிசாட்
மேலும், நடப்பாண்டில் 14 ஆய்வுத் திட்டங்களை செயல்படுத்த உள்ளதாக இஸ்ரோ தலைவர் கே.சிவன் தெரிவித்துள்ளார்.
4. 2021 ஆம் ஆண்டுக்கான உலகளாவிய எரிசக்தி மற்றும் சுற்றுச்சூழல் தலைமை விருது பின்வரும் யாருக்கு வழங்கப்பட உள்ளது?
அமின் நாசர்
டேனியல் யெர்கின்
ராம்நாத் கோவிந்த்
நரேந்திர மோடி
Answer & Explanation
Answer: நரேந்திர மோடி
Explanation:
CERAWeek Global Energy and Environment Leadership Award
மார்ச் 1 முதல் 5 வரை நடைபெறும் 39வது சர்வதேச எரிசக்தி மாநாட்டின் போது பிரதமர் நரேந்திர மோடிக்கு உலகளாவிய எரிசக்தி மற்றும் சுற்றுச்சூழல் தலைமைத்துவ விருது வழங்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
5. சமீபத்தில் நடைபெற்ற உலக கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டியில் எந்த நாட்டின் ஆடவர் அணி சாம்பியன் பட்டம் வென்றது?
ரஷ்யா
செக் குடியரசு
இந்தியா
கஜகஸ்தான்
Answer & Explanation
Answer:ரஷ்யா
Explanation:
எகிப்து தலைநகர் கெய்ரோவில் நடைபெற்ற ‘ஷாட்கன்’ உலக கோப்பை துப்பாக்கி சுடுதல் தொடரின் ஆண்கள் அணிகளுக்கான ‘ஸ்கீட்’ பிரிவில் ரஷ்யா அணி தங்க பதக்கமும், செக் குடியரசு அணி வெள்ளி பதக்கமும் பெற்றன.
குர்ஜோத் காங்குரா, மைராஜ் கான், அங்கத் பஜ்வா ஆகியோர் அடங்கிய இந்திய அணி வெண்கல பதக்கதிற்கான போட்டியில், கஜகஸ்தான் அணியை வீழ்த்தியது.
6. இந்தியா பொம்மைகள் கண்காட்சி 2021 – ஐ தொடங்கி வைத்தவர்?
ராம்நாத் கோவிந்த்
நரேந்திர மோடி
அமித்ஷா
ஸ்மிருதி இரானி
Answer & Explanation
Answer:நரேந்திர மோடி
Explanation:
India Toy Fair 2021
இந்தியா பொம்மைகள் கண்காட்சி 2021 என்ற இந்தியாவின் முதலாவது பொம்மை கண்காட்சி காணொளி வாயிலாக பிப்ரவரி 27 முதல் மார்ச் 2 வரை நடைபெறுகிறது.
இந்த கண்காட்சியை பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் தொடங்கி வைத்தார்.
7. சமீபத்தில், நியூயார்க் ஐ.நா சுற்றுச்சூழல் பாதுகாப்பு திட்டத்தின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளவர்?
சத்யா S திரிபாதி
சித்ரா பானர்ஜி
ஜோதி நிர்மலா
லிஜியா நோரான்ஹா
Answer & Explanation
Answer:லிஜியா நோரான்ஹா
Explanation:
ஐ.நா.வின் துணை பொதுச் செயலாளராக (Assistant Secretary-General) இந்தியாவின் பிரபல பொருளாதார நிபுணர் லிஜியா நோரான்ஹா (Ligia Noronha) நியமிக்கப்பட்டுள்ளார். மேலும் நியூயார்க் ஐ.நா. சுற்றுச்சூழல் மையத்தின் (UNEP NY) தலைவராகவும் இவர் நியமிக்கப்பட்டுள்ளார்.
இவருக்கு முன்னர் இந்தியாவை சேர்ந்த சத்யா S திரிபாதி அந்த பதவியை வகித்துவந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
8. சமீபத்தில் தனது ஓய்வை அறிவித்துள்ள வினய்குமார், பின்வரும் எந்த விளையாட்டுடன் தொடர்பானவர்?
டென்னிஸ்
டேபிள் டென்னிஸ்
கிரிக்கெட்
செஸ்
Answer & Explanation
Answer:கிரிக்கெட்
Explanation:
கர்நாடகா மாநிலத்தை சேர்ந்த, இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்துவீச்சாளர் வினய்குமார் சர்வதேச கிரிக்கெட் போட்டியிலிருந்து ஓய்வுபெறுவதாகஅறிவித்துள்ளார்.
இவர் இந்திய அணிக்காக ஒரு டெஸ்ட், 31 ஒரு நாள் போட்டி, ஒன்பது டி20 போட்டிகளில் விளையாடியுள்ளார்.
மேலும்.,
குஜராத் மாநிலத்தை சேர்ந்த, இந்திய ஆல்ரவுண்டரான யூசுப் பதானும் தனது ஓய்வை அறிவித்துள்ளார்.
9. தேசிய அறிவியல் தினம் எப்போது அனுசரிக்கப்படுகிறது?
26 பிப்ரவரி
27 பிப்ரவரி
28 பிப்ரவரி
01 மார்ச்
Answer & Explanation
Answer: பிப்ரவரி 28
Explanation:
இந்திய விஞ்ஞானி சா். சி. வி. ராமன் கண்டுபிடித்த ராமன் விளைவு கோட்பாடு உலகுக்கு அறிவிக்கப்பட்ட பிப்ரவரி 28 (1928) தேசிய அறிவியல் தினமாக அனுசரிக்கப்படுகிறது.
தேசிய அறிவியல் தொழில்நுட்ப பரிமாற்றக் குழு 1986-ம் ஆண்டு இந்தத் தினத்தை அறிவித்தது குறிப்பிடத்தக்கது.
சா். சி. வி. ராமனுக்கு இயற்பியலுக்கான நோபல் பரிசு 1930 ஆம் ஆண்டு கொடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
கருப்பொருள்: Future of STI: Impacts on Education, Skills, and Work
10. 2021ஆம் ஆண்டுக்கான அரிய நோய்கள் தினம் எப்போது அனுசரிக்கப்படுகிறது?
பிப்ரவரி 28
பிப்ரவரி 29
மார்ச் 01
மார்ச் 02
Answer & Explanation
Answer: பிப்ரவரி 28
Explanation:
மக்களிடையே அரிய நோய்கள் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை வரும் பிப்ரவரி மாதம் 29-ந்தேதி அரிய நோய்கள் தினமாக கடைபிடிக்கப்படுகிறது.
மேலும் மற்ற ஆண்டுகளில் பிப்ரவரி 28-ந்தேதி இத்தினம் கடைபிடிக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.
11. Unfinished: A Memoir என்ற புத்தகத்தின் ஆசிரியர்?
பிரியங்கா சோப்ரா
கீர்த்தனா கபூர்
ராஜ்கும்மர் ராவ்
மது சோப்ரா
Answer & Explanation
Answer: பிரியங்கா சோப்ரா
சில வரி செய்திகள்
2-வது கேலோ இந்தியா குளிர்கால விளையாட்டு போட்டி காஷ்மீரின் குல்மார்க்கில் பிப்ரவரி 26 தொடங்கியது. மார்ச் 2-ம் தேதி வரை நடைபெறுகிறது.
இந்திய டேபிள் டென்னிஸ் கூட்டமைப்பு தலைவராக துஷ்யந்த் சவுதாலா மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
இந்தியாவின் முதலாவது ஒருங்கிணைந்த இயந்திர கருவிகள் பூங்கா பெங்களூரில் அமைக்கப்பட உள்ளது.