TNPSC Current Affairs Question and Answer in Tamil 28th & 29th February 2020

Current Affairs in Tamil 28th & 29th February 2020

Hello, TNPSC Aspirants, Here we provide Current Affairs question and answer in Tamil for 28th & 29th February 2020. Take the quiz and improve your Current Affairs Knowledge.



TNPSC Current Affairs in Tamil 29th February 2020
1. சர்வதேச பொறியியல் ஆதார கண்காட்சி (IESS) எங்கு நடைபெற உள்ளது?

  1. சென்னை
  2. மதுரை
  3. கோவை
  4. கங்கைகொண்டான்
Answer & Explanation
Answer: கோவை

Explanation:

9-வது சர்வதேச பொறியியல் ஆதார கண்காட்சி (International Engineering Sourcing Show – IESS) வரும் மார்ச் 4 முதல் 6 வரை கோவையில் நடைபெறுகிறது.

TNPSC Group 1 Model Papers – Download

2. 2019ஆம் ஆண்டுக்கான ஆசிய ஸ்குவாஷ் கூட்டமைப்பின் சிறந்த வீரர் விருதுக்கான தேர்வுப்பட்டியலில் இடம்பெற்றுள்ள இந்தியர்?

  1. மன்பிரீத் சிங்
  2. பிஷேக் பிரதான்
  3. சவுரவ் கோசல்
  4. வீர் சோத்ரானி
Answer & Explanation
Answer: சவுரவ் கோசல் மற்றும் வீர் சோத்ரானி

Explanation:

2019ஆம் ஆண்டுக்கான ஆசிய ஸ்குவாஷ் கூட்டமைப்பின் சிறந்த வீரர் விருதுக்கான தேர்வுப்பட்டியலில் இந்தியா சார்பில் சவுரவ் கோசல் மற்றும் வீர் சோத்ரானி தேர்வுசெய்யப்பட்டுள்ளனர்.

உலகம் முழுவதும் 15 வீரர்கள் இந்த விருதுக்கான இறுதிப்பட்டியலில் இடம்பெற்றுள்ளனர். இவர்களில் இருந்து ஒருவர்க்கு சிறந்த வீரர் விருது வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

3. சமீபத்தில் அரசு ஊழியர்களின் ஓய்வு பெறும் வயதை 60-ல் இருந்து 58-ஆக குறைத்துள்ள இந்திய மாநிலம்?

  1. தெலுங்கானா
  2. பஞ்சாப்
  3. கேரளா
  4. ஹரியானா
Answer & Explanation
Answer: பஞ்சாப்

Explanation:

சமீபத்தில் அரசு ஊழியர்களின் ஓய்வு பெறும் வயதை 60ல் இருந்து 58 ஆக பஞ்சாப் அரசு குறைத்துள்ளது.

4. சமீபத்தில் யாருக்கு குருவாயூர் தேவஸ்தான விருது (பூந்தானம் விருது) வழங்கப்பட்டது?

  1. இளையராஜா
  2. பிரபா வர்மா
  3. டி. வி. கோபாலகிருஷ்ணன்
  4. குஞ்சு முஹம்மது
Answer & Explanation
Answer: பிரபா வர்மா

Explanation:

2020ஆம் ஆண்டுக்கான குருவாயூர் தேவஸ்தாத்தின் பூந்தானம் விருது திருவனந்தபுரத்தைச் சேர்ந்த பிரபா வர்மாவுக்கு வழங்கப்பட்டுள்ளது.

அவர் எழுதிய ‘ஷியாமா மாதவம்’ என்னும் கவிதைத் தொகுப்புக்காக இந்த விருது வழங்கப்படுகிறது.




5. சமீபத்தில் மலேசியாவின் புதிய பிரதமராக நியமிக்கப்பட்டுள்ளவர்?

  1. மகாதீர் பின் முகமது
  2. முஹைதீன் யாசின்
  3. முகமது தவுபிக் அலாவி
  4. அன்வர் இப்ராஹிம்
Answer & Explanation
Answer: முஹைதீன் யாசின்

Explanation:

மலேசியா பிரதமர் மகாதீர் பின் முகமது சமீபத்தில் பதவி விலகியதைத் தொடர்ந்து, முஹைதீன் யாசினை (Muhyiddin Yassin) புதிய பிரதமராக மன்னர் அப்துல்லா நியமித்துள்ளார்.

முகமது தவுபிக் அலாவி – ஈராக் பிரதமர்

6. சானிட்டரி நாப்கின்களை இலவசமாக வழங்க உள்ள உலகின் முதல் நாடு?

  1. பின்லாந்து
  2. ஸ்காட்லாந்து
  3. பிரான்ஸ்
  4. இத்தாலி
Answer & Explanation
Answer: ஸ்காட்லாந்து

Explanation:

சானிட்டரி பொருட்களை அனைத்து தரப்பு பெண்களுக்கும் இலவசமாக வழங்கும் சட்ட மசோதா ஸ்காட்லாந்து நாடாளுமன்றத்தில் சமீபத்தில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளது.

7. சமீபத்தில் கண்டுபிடிக்கப்பட்ட, பூமியை சுற்றிவரும் விண்கல்லுக்கு என்ன பெயர் வைக்கப்பட்டுள்ளது?

  1. 2020 CD
  2. 2020 DC
  3. 1991 VG
  4. 1991 GV
Answer & Explanation
Answer: 2020 CD

Explanation:

நிலவை போன்று பூமியை சுற்றிவரும் விண்கல்லுக்கு 2020 CD என பெயரிடப்பட்டுள்ளது. கடந்த மூன்று ஆண்டுகளாக இந்த குட்டி நிலவு பூமியை சுற்றிவருகிறது.

இது போன்ற பொருள்களை `குவாசி சாட்டிலைட்‘ (Quasi Satellite) என அழைக்கின்றனர்.

1991-ஆம் ஆண்டு இதே போன்றதொரு ‘1991 VG’ என்று பெயரிடப்பட்ட குட்டி கோள் ஒன்று பூமியைச் சில வருடங்கள் சுற்றி வந்தது குறிப்பிடத்தக்கது.

8. ஐ.நா. மனித உரிமைகள் சபையின் 43வது கூட்டம் எங்கு நடைபெறுகிறது?

  1. ஜெனிவா
  2. வான்குவர்
  3. டெல்லி
  4. பெர்லின்
Answer & Explanation
Answer: ஜெனிவா

Explanation:

ஜெனிவாவில் ஐ.நா. மனித உரிமைகள் சபையின் 43வது கூட்டம்  பிப்ரவரி 24 முதல் மார்ச் 20 வரை நடைபெறுகிறது.

ஐநா.வுக்கான இந்திய நிரந்தர தூதர் – விமர்ஷ் ஆரியன்

9. 2020ஆம் ஆண்டுக்கான அரிய நோய்கள் தினம் எப்போது அனுசரிக்கப்படுகிறது?

  1. பிப்ரவரி 28
  2. பிப்ரவரி 29
  3. மார்ச் 01
  4. மார்ச் 02
Answer & Explanation
Answer: பிப்ரவரி 29

Explanation:

மக்களிடையே அரிய நோய்கள் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை வரும் பிப்ரவரி மாதம் 29-ந்தேதி அரிய நோய்கள் தினமாக கடைபிடிக்கப்படுகிறது.

மேலும் மற்ற ஆண்டுகளில் பிப்ரவரி 28-ந்தேதி இத்தினம் கடைபிடிக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

10. காமன்வெல்த் ரகசியம் (The Secret Commonwealth) என்ற புத்தகத்தின் ஆசிரியர்?

  1. ஜே.கே. ரோலிங்
  2. வில்லியம் பிளேக்
  3. பிலிப் புல்மேன்
  4. பில்லி பைபர்
Answer & Explanation
Answer: பிலிப் புல்மேன்

More TNPSC Current Affairs



Leave a Comment