Current Affairs in Tamil 1st January 2020
Hello, TNPSC Aspirants, Here we provide Quiz of TNPSC Current Affairs in Tamil 1st January 2020. Take the quiz and improve your Current Affairs Knowledge.

1. தமிழகத்தில் விண்வெளி ஏவுதளம் எங்கு அமைக்கப்பட உள்ளது ?
- ரெட்டியார்பட்டி
- கல்பாக்கம்
- குலசேகரபட்டினம்
- ஸ்ரீபெரும்புத்தூர்
Answer & Explanation
Answer: குலசேகரபட்டினம்
Explanation:
தூத்துக்குடி மாவட்டம் குலசேகரப்பட்டினத்தில் விண்வெளி ஏவுதளம் அமைப்பதற்கான வேலைகள் துவங்கியுள்ளதாக இஸ்ரோ தலைவர் K.சிவன் தெரிவித்துள்ளார்.
TNPSC Group 2A Model Question Papers – Download
2. சமீபத்தில் “குடியுரிமை சட்ட திருத்த மசோதாவிற்கு” எதிராக தீர்மானம் நிறைவேற்றியுள்ள மாநிலம்?
- கேரளா
- மேற்குவங்கம்
- ஜம்மு காஷ்மீர்
- புதுச்சேரி
Answer & Explanation
Answer: கேரளா
Explanation:
மத்திய அரசின் குடியுரிமை சட்ட திருத்த மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் இந்திய மாநிலங்களில் முதன் முதலாக கேரளா தனது சட்டப்பேரவையில் தீர்மானம் ஒன்றை நிறைவேற்றியுள்ளது.
3. இந்தியாவின் முதல் முப்படை தளபதியாக நியமிக்கப்பட்டுள்ளவர்?
- பிக்ரம்சிங்
- பிபின் ராவத்
- தேஸ் பால்
- கரம்பீர் சிங்
Answer & Explanation
Answer:பிபின் ராவத்
Explanation:
இந்தியாவின் முதல் முப்படை தலைமை தளபதியாக ஜெனரல் பிபின் ராவத் நியமிக்கப்பட்டுள்ளார்.
4. சமீபத்தில் தொடர்ந்து 288 நாட்கள் விண்வெளியில் தங்கியிருந்து சாதனைப்படைத்துள்ள அமெரிக்க விண்வெளி வீராங்கனை?
- கிறிஸ்டினா கோச்
- பெக்கி விட்சன்
- ஜெசிகா மேர்
- நமீரா சலீம்
Answer & Explanation
Answer: கிறிஸ்டினா கோச்
Explanation:
அமெரிக்க விண் வெளி வீராங்கனை கிறிஸ்டினா கோச், விண்வெளியில் தொடர்ந்து 288 நாட்கள் இருந்த வீராங்கனை என்ற சாதனையை படைத்துள்ளார்.
5. சமீபத்தில் RPF-ரயில்வே பாதுகாப்பு படையின் பெயர் எவ்வாறு மாற்றப்பட்டுள்ளது?
- IN-RPF
- RPFS
- IRPF
- IRPFS
Answer & Explanation
Answer: IRPFS
Explanation:
ரயில்வே பாதுகாப்புப் படையின் பெயர், இந்திய ரயில்வே பாதுகாப்பு சேவை (Indian Railway Protection Force Service [IRPFS]) என பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
6. சமீபத்தில் வெளியிடப்பட்ட நிதி அயோக்கின் மாநில வளர்ச்சிக்கான மதிப்பீட்டு பட்டியலில் முதலிடம் வகிக்கும் மாநிலம் ?
- கேரளா
- தமிழ்நாடு
- கர்நாடகா
- தெலுங்கானா
Answer & Explanation
Answer: கேரளா
7. சமீபத்தில் வெளியிடப்பட்ட தூய்மை நகரங்கள் பட்டியலில் முதலிடம் வகிக்கும் நகரம்?
- திருச்சி
- அமராவதி
- இந்தூர்
- போபால்
Answer & Explanation
Answer: இந்தூர்
Explanation:
இந்தியாவின் தூய்மையான நகரங்கள் பட்டியலில், மத்தியப் பிரதேச மாநிலத்தின் இந்தூர் நகரம் தொடர்ந்து 3-ஆவது ஆண்டாக முதலிடம் பிடித்துள்ளது.
முதல் காலாண்டு: (ஏப்ரல் to ஜூன்)
- 1st – இந்தூர்
- 2nd – போபால்
- 3rd – சூரத்
இரண்டாம் காலாண்டு: (ஜூலை to செப்டம்பர்)
- 1st – இந்தூர்
- 2nd – ராஜ்கோட்
- 3rd – மும்பை
8. அருண் ஜெட்லி பிறந்த தினத்தை மாநில விழாவாக அனுசரிக்க முடிவுசெய்துள்ள மாநிலம்?
- பீகார்
- மத்திய பிரதேசம்
- உத்திர பிரதேசம்
- ஜார்கண்ட்
Answer & Explanation
Answer: பீகார்
9. சமீபத்தில் துபே குளோப் சாக்கர் யாருக்கு வழங்கப்பட்டது?
- லியோனல் மெஸ்ஸி
- வேய்ன் ரூனி
- கிறிஸ்டியானோ ரொனால்டோ
- முகமது சலா
Answer & Explanation
Answer: கிறிஸ்டியானோ ரொனால்டோ
Explanation: கிறிஸ்டியானோ ரொனால்டோக்கு 2019ஆம் ஆண்டுக்கான Globe Soccer Awards வழங்கப்பட்டுள்ளது. இவர் இந்த விருதை ஆறாவது முறையாக வென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
10. உலக பிளிட்ஸ் செஸ் போட்டியில் சாம்பியன் பட்டம் வென்றவர்?
- கோனெரு ஹம்பி
- மாக்னஸ் காா்ல்ஸன்
- விஸ்வநாதன் ஆனந்த்
- ஹிகாரு நகமுரா
Answer & Explanation
Answer: மாக்னஸ் காா்ல்ஸன்
ரஷியாவில் நடைபெற்ற உலக பிளிட்ஸ் செஸ் போட்டியில் மாக்னஸ் காா்ல்ஸன் அமெரிக்க கிராண்ட் மாஸ்டா் ஹிகாரு நகமுராவை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றினாா்
More TNPSC Current Affairs
Related
Please send daily current affairs to my mail id
kindly send the daily update current affairs to my mail id
Please kindly send me the daily current affairs from this January 2020 to all may be o my mail I’d .thank you
please kindly send me the daily current affairs from this January 2020to all maybe my mail id.
Please send Daily Current Affairs to my mail id.