TNPSC Current Affairs Question and Answer in Tamil 3rd January 2020

Current Affairs in Tamil 3rd January 2020

Hello, TNPSC Aspirants, Here we provide Current Affairs question and answer in Tamil for 3rd January 2020. Take the quiz and improve your Current Affairs Knowledge.



TNPSC Current Affairs in Tamil 3rd January 2020
1. சமீபத்தில் கல்வி தொடர்பாக குஜராத் மாநில அரசு துவங்கியுள்ள பிரச்சாரம்?

  1. Learn in Gujrat
  2. Study in Gujrat
  3. Stay in Gujrat
  4. School in Gujrat
Answer & Explanation
Answer: Study in Gujrat

Explanation:

குஜராத் மாநிலத்தை தேசிய மற்றும் சர்வதேச அளவில் கல்வி மையமாக மாற்ற “Study in Gujrat”என்ற பிரச்சாரத்தை குஜராத் மாநில அரசு தொடங்கியுள்ளது.

TNPSC Group 2A Model Question Papers – Download

2. சமீபத்தில் “Cyber Safe Women” என்ற பிரச்சாரத்தை தொடங்கியுள்ள மாநிலம்?

  1. மகாராஷ்டிரா
  2. மேற்குவங்காளம்
  3. டெல்லி
  4. கேரளா
Answer & Explanation
Answer: மகாராஷ்டிரா

Explanation:

சைபர் கிரைம் (Cyber Crime) குறித்து பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு கல்வி கற்பிப்பதற்காக மகாராஷ்டிரா அரசு மாநிலம் முழுவதும் “Cyber Safe Women” என்ற பிரச்சாரத்தை மேற்கொண்டுள்ளது.

3. சமீபத்தில் எங்கு தமிழ்நாட்டில் முதல் முறையாக சோலார் படகுசவாரி தொடங்கப்பட்டுள்ளது?

  1. கொடைக்கானல்
  2. மணிமுத்தாறு
  3. பூண்டி
  4. பழவேற்காடு
Answer & Explanation
Answer: மணிமுத்தாறு

Explanation:

தமிழ்நாட்டில் முதல் முறையாக அம்பாசமுத்திரம் அருகே உள்ள மணிமுத்தாறு அணையில்  சோலாரில் இயங்கும் படகுசவாரி தொடங்கப்பட்டுள்ளது.

4. தமிழ்நாட்டில் முதன்முறையாக உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்ற முதல் திருநங்கை?

  1. கனிமொழி
  2. நளினா பிரசிதா
  3. ரியா
  4. ஜெயசந்தியா
Answer & Explanation
Answer: ரியா

Explanation:

நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு டவுன் பஞ்சாயத்தில் வெற்றி பெற்றதன் மூலம் திருநங்கை ரியா,

தமிழ்நாட்டில் முதன்முறையாக உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்ற முதல் திருநங்கை என்ற பெருமையையும்,

இந்திய அளவில் அங்கீகரிக்கப்பட்ட கட்சி சார்பாக உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்ற முதல் திருநங்கை சாதனையும் நிகழ்த்தியுள்ளார்.

மேலும்.,

கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி ஒன்றியத்திற்கு உட்பட்ட  தொட்டி ஊராட்சி மன்றத் தலைவராக 21 வயது கல்லூரி மாணவி ஜெயசந்தியா வெற்றி பெற்றுள்ளார்.




5. சமீபத்தில் இந்திய ரயில்வே அறிமுகப்படுத்தியுள்ள ஒருங்கிணைந்த ஹெல்ப்லைன் எண்?

  1. 115
  2. 125
  3. 119
  4. 139
Answer & Explanation
Answer: 139

Explanation:

விரைவான குறைகளைத் தீர்க்க மற்றும் பயணிகள் தங்கள் ரயில் பயணங்களின் போது விசாரிப்பதற்கு ஏதுவாக இந்திய ரயில்வேயானது 139 என்ற ஒருங்கிணைந்த ஹெல்ப்லைன் எண்ணை அறிமுகப்படுத்தியுள்ளது.

6. சமீபத்தில் எந்த மாநிலத்திற்கு சிறந்த வேளாண் தொழிலாளர் விருது வழங்கப்பட்டது?

  1. சிக்கிம்
  2. பஞ்சாப்
  3. தமிழ்நாடு
  4. தெலுங்கானா
Answer & Explanation
Answer: தமிழ்நாடு

Explanation:

எண்ணெய் வித்துகள் உற்பத்தியில் அதிக விளைச்சலை உருவாக்கியதற்காக தமிழகத்துக்கு 5வது முறையாக சிறந்த வேளாண் தொழிலாளர் விருதை (கிருஷி கர்மான்) பிரதமர் நரேந்திர மோடி வழங்கினார்.

7. 14வது உலக சுகாதார கூடுகை 2021-இல் எங்கு நடைபெற உள்ளது?

  1. விசாகப்பட்டிணம்
  2. சென்னை
  3. கொச்சி
  4. மும்பை
Answer & Explanation
Answer: விசாகப்பட்டிணம்

8. புதுடெல்லி  உலக புத்தக கண்காட்சி-2020 இன் கருப்பொருள்?

  1. Delhi for Annual fair
  2. Gandhi, the Writers’ Writer
  3. Environment and Climate Change
  4. Manushi
Answer & Explanation
Answer: Gandhi, the Writers’ Writer

9. “சுனிதா லக்ரா” பின்வரும் எந்த விளையாட்டுடன் தொடர்பானவர்?

  1. ஹாக்கி
  2. கிரிக்கெட்
  3. மல்யுத்தம்
  4. ரக்பி
Answer & Explanation
Answer: ஹாக்கி

Explanation:

இந்திய மகளிர் ஹாக்கி வீராங்கனை சுனிதா லக்ரா சர்வதேச ஹாக்கி போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக சமீபத்தில் அறிவித்துள்ளார்.

2nd January Current Affairs – Click Here

More TNPSC Current Affairs



2 thoughts on “TNPSC Current Affairs Question and Answer in Tamil 3rd January 2020”

Leave a Comment