Hello, TNPSC Aspirants, Here we provide Current Affairs question and answer in Tamil for 5th January 2020. Take the quiz and improve your Current Affairs Knowledge.
1. இந்தியாவில் எங்கு நன்னீர் ஆமைகள் மறுவாழ்வு மையம் அமைய உள்ளது?
பீகார்
மத்திய பிரதேஷ்
மேற்குவங்காளம்
கேரளா
Answer & Explanation
Answer: பீகார்
Explanation:
பீகாரில் உள்ள பாகல்பூர் வனப் பிரிவில் இந்தியாவின் முதல் நன்னீர் ஆமைகளுக்கான மறுவாழ்வு மையமானது தொடங்கபடவுள்ளது.
குறிப்பாக நோய்களினால் பாதிக்கப்பட்ட ஆமைகள், கடத்தல் காரர்களிடம் இருந்து மீட்கப்பட்ட ஆமைகளுக்கு போன்றவற்றிக்காக இந்த மறுவாழ்வு மையமானது தொடங்கபடவுள்ளது.
2. உலக புத்தாக்க குறியீடு 2019 -இல் இந்தியா பெற்றுள்ள இடம்?
60
56
52
48
Answer & Explanation
Answer: 52
Explanation:
2019 ஆண்டுக்கான உலக புத்தாக்க தரவரிசை பட்டியலில் (GII-Global Innovation Index 2019) இந்தியா 52வது இடத்தை பெற்றுள்ளது.
கடந்த ஆண்டுகளில் இந்தியா வகித்த இடம்.,
2018 – 57 th Rank
2017 – 60th Rank
2016 – 66th Rank
2015 – 81
மேலும் சில.,
இந்திய புத்தாக்க குறியீடு 2019 -இல் [India Innovation Index (III)] கர்நாடகம் முதல் இடத்தையும், தமிழகம் இரண்டாம் இடத்தையும் பெற்றுள்ளன.
3. Defence Expo 2020 எங்கு நடைபெறஉள்ளது?
பெங்களூர்
லக்னோ
கொச்சி
அகமதாபாத்
Answer & Explanation
Answer: லக்னோ
Explanation:
2020 ஆண்டுக்கான Defence Expo லக்னோவில் வரும் பிப்ரவரி 5 முதல் 9 வரை நடைபெறஉள்ளது.
4. சமீபத்தில் சுகன்யா திட்டத்தின் (Sukanya Project) 3வது பதிப்பை எம்மாநில காவல்துறை தொடங்கியுள்ளது?
கேரளா
குஜராத்
கர்நாடகா
மேற்கு வங்கம்
Answer & Explanation
Answer: மேற்கு வங்கம்
Explanation:
நகரத்தில் உள்ள பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் படிக்கும் சிறுமிகளுக்கு தற்காப்பு பயிற்சி அளிக்கும் Sukanya Project-இன் 3வது பதிப்பு மேற்கு வங்க மாநில காவல்துறை அதிகார வரம்பில் அமைந்துள்ள 100 நகர அடிப்படையிலான பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் தொடங்கியுள்ளது.
5. சமீபத்தில் யாருக்கு “நிருத்திய கலாநிதி” விருது வழங்கப்பட்டது?
பிரியதர்ஷினி
சாந்தா தனஞ்செயன்
லஷ்மி விஸ்வநாதன்
தேவி சுகுமாரி
Answer & Explanation
Answer: பிரியதர்ஷினி
Explanation:
சென்னை மியூசிக் அகாடமியின் 14-வது ஆண்டு நாட்டிய விழாவின் ஒரு பகுதியாக பிரியதர்ஷினி அவர்களுக்கு “நிருத்திய கலாநிதி” விருது வழங்கப்பட்டது.
6. சமீபத்தில் இஸ்ரோ விண்வெளிக்கான பிராந்திய கல்வி மையத்தை எங்கு அமைத்துள்ளது?
IIT டெல்லி
IIT சென்னை
NIT கர்நாடகா
NIT கொல்கத்தா
Answer & Explanation
Answer: NIT கர்நாடகா
Explanation:
இந்திய விண்வெளி ஆராய்ச்சி அமைப்பு (ISRO) விண்வெளிக்கான பிராந்திய கல்வி மையத்தை(Regional academic center for space), National Institute of Technology, Karnataka-இல் அமைத்துள்ளது.
7. கடல் பாதுகாப்பு மற்றும் கடல் ஆய்வு மேம்பாடு குறித்த சர்வதேசப் பயிலரங்கம் எங்கு நடைபெற உள்ளது?
கொல்கத்தா
மும்பை
சென்னை
கொச்சின்
Answer & Explanation
Answer: சென்னை
Explanation:
கடல் பாதுகாப்பு மற்றும் கடல் ஆய்வு மேம்பாடு குறித்த சா்வதேசப் பயிலரங்கம் சென்னையில் ஜனவரி 6-ஆம் தேதி முதல் 10-ஆம் வரை நடைபெறுகிறது.
மத்திய புவி அறிவியல் அமைச்சகம் சாா்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்தப் பயிலரங்குகள் பள்ளிக்கரணையில் அமைந்துள்ள தேசிய கடல்சாா் தொழில்நுட்ப நிறுவனத்தில் (என்ஐஓடி) நடைபெறுகிறது.
8. எந்த திட்டத்தின் கீழ் இந்தியா முழுவதும் 2636 மின்சார வாகன மின்னேற்று நிலையங்கள் (Electric vehicle charging station) அமைக்கப்பட உள்ளன?
Make in India
Startup India
FAME-India
Standup India
Answer & Explanation
Answer: FAME-India
Explanation:
கனரக தொழில்துறை மற்றும் பொது துறை நிறுவனங்கள் அமைச்சகத்தின் கீழ் இயங்கும் கனரக தொழில் துறையானது, FAME-India திட்டத்தின் இரண்டாம் நிலையின்(PHASE-II) கீழ் 2636 மின்சார வாகன மின்னேற்று நிலையங்களை(Electric vehicle charging station) அமைப்பதற்கு அனுமதி வழங்கியுள்ளது.
தமிழகத்தில் 256– மின்னேற்று நிலையங்கள் அமைக்கப்பட உள்ளன
FAME-India:- Faster Adoption and Manufacturing of (Hybrid &) Electric Vehicles in India (FAME-India)
FAME-India திட்டத்தின் முக்கிய நோக்கம் மின்சார வாகனங்களின் உற்பத்தி மற்றும் அதனை மக்கள் துரிதமாக ஏற்றுக்கொள்வதை நோக்கமாக கொண்டுள்ளது.
9. மூத்த வீரர், வீராங்கனைகள் பங்கேற்ற முதல் தேசிய மாஸ்டர்ஸ் விளையாட்டுப் போட்டியின் ஹாக்கி ஆண்கள் பிரிவில் சாம்பியன் பட்டம் வென்ற அணி?
தமிழ்நாடு
கேரளா
ராஞ்சி
பஞ்சாப்
Answer & Explanation
Answer: தமிழ்நாடு
Explanation:
ஹாக்கி போட்டியின் ஆண்கள் பிரிவு பைனலில், தமிழக அணி தங்கப்பதக்கத்தையும் பெண்கள் பிரிவில் வெள்ளிப் பதக்கத்தையும் வென்றுள்ளது.
10. மனவ் தாக்கர் பின்வரும் எந்த விளையாட்டுடன் தொடர்பானவர்?
டென்னிஸ்
டேபிள் டென்னிஸ்
கராத்தே
ஹாக்கி
Answer & Explanation
Answer: டேபிள் டென்னிஸ்
Explanation:
இந்திய டேபிள் டென்னிஸ் வீரர் மனவ் தாக்கர், உலக டேபிள் டென்னிஸ் தரவரிசையில் (21 வயதுக்குட்பட்டோருக்கான) முதலிடம் பிடித்துள்ளார்.