Current Affairs in Tamil 6th January 2020
Hello, TNPSC Aspirants, Here we provide Current Affairs question and answer in Tamil for 6th January 2020. Take the quiz and improve your Current Affairs Knowledge.
1. 4-வது பக்ஸா பறவை திருவிழா எங்கு நடைபெறுகிறது?
- கேரளா
- மேற்குவங்காளம்
- கோவா
- அசாம்
Answer & Explanation
Answer: மேற்குவங்காளம்
Explanation:
மேற்கு வங்காளத்தின் உள்ள பக்ஸா தேசிய பூங்காவில் “4th Buxa Bird Festival” நான்கு நாட்கள் நடைபெறுகிறது.
மேலும் சில.,
ஜனவரி 3-லிருந்து 5-வரை ஆந்திராவின் சூலூர்பேட்டையில் பூநாரை திருவிழா நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.
TNPSC Group 2A Model Question Papers – Download
2. ரியல் எஸ்டேட் துறையில் வெளிப்படைத்தன்மையைக் கொண்டுவருவதற்காக K-RERA என்ற அமைப்பை உருவாகியுள்ள மாநிலம்?
- கர்நாடகா
- கேரளா
- ஜம்மு-காஷ்மீர்
- சிக்கிம்
Answer & Explanation
Answer: கேரளா
Explanation:
ரியல் எஸ்டேட் துறையில் வெளிப்படைத்தன்மையைக் கொண்டுவருவதற்காக கேரளாவில் ‘கே-ரேரா’ என்ற அமைப்பு தொடங்கப்பட்டுள்ளது.
K-RERA (Kerala Real Estate Regulatory Authority)
3. ‘நசீம்-அல்-பாஹர்’ என்பது எந்த இருநாடுகளுக்கு இடையிலான கடற்பயிற்சி ஆகும்?
- பாகிஸ்தான் – ஓமன்
- பாகிஸ்தான் – சவூதிஅரபியா
- இந்தியா – ஓமன்
- இந்தியா – சவூதிஅரபியா
Answer & Explanation
Answer: இந்தியா – ஓமன்
Explanation:
இந்தியாவும் ஓமனும் இணைந்து கோவாவின் மோர்முகாவ் துறைமுகத்தில் இருதரப்பு கடல் பயிற்சியானா ‘Naseem-Al-Bahr’- இன் 12 வது பதிப்பை நடத்துகின்றன.
இந்த கடற்படைப் பயிற்சியானது இருநாடுகளுக்கும் இடேயே 1993-ஆம் ஆண்டுமுதல் நடைபெற்று வருகிறது
இந்த பயிற்சியில் இந்தியா சார்பில் பியாஸ் மற்றும் சுபத்ரா என்ற போர்க்கப்பல்கள் இடம் பெறுகிறது.
மேலும் சில.,
இருநாடுகளுக்கு இடையே நடைபெறும் மற்ற போர்பயிற்சிகள்.
- அல் நஜா (Al Najah) – ராணுவ பயிற்சி
- Ex Eastern Bridge – விமானப்படை பயிற்சி
4. சமீபத்தில் யாருக்கு உலகளாவிய குழந்தை மேதை விருது 2020 வழங்கப்பட்டது?
- சுஜிதா சதீஷ்
- ரோகித்
- சுனிதா லக்ரா
- அச்ஷா
Answer & Explanation
Answer: சுஜிதா சதீஷ்
Explanation:
120 மொழிகளில் பாட்டு பாடிய துபாயை சேர்ந்த “சுஜிதா சதீஷ் (13)” க்கு “உலகளாவிய குழந்தை மேதை விருது” வழங்கப்பட்டுள்ளது.
5. சமீபத்தில் அமெரிக்க ராணுவ தாக்குதலில் பலியான ஈரான் நாட்டின் தளபதி யார்?
- காசிம் சுலைமானி
- அப்துல் ரஜாக்
- மைதீன் ஷாகிப்
- ஷாகிப் அல் ஹசன்
6. சமீபத்தில் காலமான அக்பர் பதம்ஸி பின்வரும் எந்த துறையுடன் தொடர்பானவர்?
- ஓவியம்
- சினிமா
- அரசியல்
- பொருளாதாரம்
Answer & Explanation
Answer: ஓவியம்
Explanation:
இந்தியாவின் தலைசிறந்த ஓவியக் கலைஞர்களின் ஒருவரான அக்பர் பதம்ஸி கோவையில் காலமானார்.
7. 95-வது ஹேஸ்டிங்ஸ் சர்வதேச செஸ் பட்டத்தை வென்றவர்?
- செர்ஜி கர்ஜாகின்
- ராகவன் அருணாச்சலம்
- மகேஷ் சந்திரன்
- பிரக்ஞானந்தா
Answer & Explanation
Answer: மகேஷ் சந்திரன்
Explanation:
இந்தியாவின் மகேஷ் சந்திரன் இங்கிலாந்தின் ஹேஸ்டிங்ஸில் நடைபெற்ற 95-வது ஹேஸ்டிங்ஸ் சர்வதேச செஸ் பட்டத்தை வென்றுள்ளார்.
8. முதலாவது கேலோ இந்தியா பல்கலைக்கழக விளையாட்டு போட்டிகள் – 2020 எங்கு நடைபெறஉள்ளது?
- ஒடிசா
- குஜராத்
- அசாம்
- கேரளா
Answer & Explanation
Answer: ஒடிசா
Explanation:
ஒடிசா மாநிலம் புவனேஸ்வரத்தில் பிப்ரவரி-22 முதல் மார்ச் 1, 2020 வரை முதலாவது Khelo India University Games 2020 நடைபெறஉள்ளது.
மேலும் சில.,
ஜனவரி 10-ம் தேதி முதல் 3-வது கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டு போட்டி (3rd Khelo India Youth Games) அசாமின் கௌகாத்தியில் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.
9. ஜனவரி 6-ஐ மாநில பத்திரிகையாளர்கள் தினமாக கொண்டாடிய மாநிலம்?
- தெலுங்கானா
- குஜராத்
- மகாராஷ்டிரா
- பஞ்சாப்
Answer & Explanation
Answer: மகாராஷ்டிரா
10. ‘கர்மயோத கிரந்த்’ என்ற புத்தகம் யாருடைய வாழ்கை குறிப்பை பற்றியது?
- பிரதமர் மோடி
- வாஜ்பாய்
- விவேகானந்தர்
- அருண்ஜெட்லீ
Answer & Explanation
Answer: பிரதமர் மோடி
Explanation:
பிரதமர் மோடியின் வாழ்க்கை குறித்து, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ‘Karmayoddha Granth’ என்ற புத்தகத்தை வெளியிட்டார்.
More TNPSC Current Affairs
Related