TNPSC Current Affairs Question and Answer in Tamil 7th January 2020

Current Affairs in Tamil 7th January 2020

Hello, TNPSC Aspirants, Here we provide Current Affairs question and answer in Tamil for 7th January 2020. Take the quiz and improve your Current Affairs Knowledge.




TNPSC Current Affairs in Tamil 7th January 2020
1. சமீபத்தில் எந்த மாநிலம் “அம்மா வோடி (Amma Vodi)” என்ற திட்டத்தை செயல்படுத்த உள்ளது?

  1. ஆந்திரப்ரதேஷ்
  2. தெலுங்கானா
  3. கர்நாடகா
  4. தமிழ்நாடு
Answer & Explanation
Answer: ஆந்திரப்பிரதேஷ்

Explanation:

மாநில அரசு பள்ளிகளில் தங்கள் குழந்தைகளை சேர்க்கும் ஏழை தாய்மார்களுக்கு வருடாந்திர உதவித்தொகையாக ரூ 15,000 வழங்கும்,

“அம்மா வோடி(Amma Vodi)” என்ற திட்டம் ஆந்திராவில் ஜனவரி 26 முதல் நடைமுறைக்கு வரவுள்ளது.

TNPSC Group 2A Model Question Papers – Download

2. சமீபத்தில் வெளியிடப்பட்ட காசநோயால் பாதிக்கப்பட்டோர் பட்டியலில் தமிழகம் வகிக்கும் இடம்?

  1. 3rd
  2. 5th
  3. 7th
  4. 9th
Answer & Explanation
Answer: 7th

Explanation:

இந்த பட்டியலில் உத்திரபிரதேஷ் முதலிடத்தில் உள்ளது.

மேலும், 18583 பேர் தமிழகத்தில் காசநோயால் பாதிக்கப்பட்டுள்ளனர் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

2025 ஆம் ஆண்டுக்குள் காசநோயை முற்றிலுமாக ஒழிக்க இந்தியா இலக்கு நிர்ணயித்துயுள்ளது.

3. சமீபத்தில் அமெரிக்காவின் அனைத்துப் படைகளையும் பயங்கரவாதிகள் என்று பெயரிடும் மசோதாவை நிறைவேற்றியுள்ள நாடு?

  1. சீனா
  2. ஈரான்
  3. ஈராக்
  4. வடகொரியா
Answer & Explanation
Answer: ஈரான்

Explanation:

அமெரிக்க வான்வழித் தாக்குதலில் ஈரானிய இராணுவத் தளபதி காசெம் சோலைமானி (Qasem Soleimani) கொல்லப்பட்டதை தொடர்ந்து,

ஈரானிய பாராளுமன்றம் ஜனவரி 7 அன்று அமெரிக்காவின் அனைத்துப் படைகளையும் பயங்கரவாதிகள் என்று பெயரிடும் மசோதாவை நிறைவேற்றியுள்ளது.

4. New and Emerging Strategic Technologies(NEST) என்ற பிரிவை சமீபத்தில் அமைத்துள்ள அமைச்சகம்?

  1. வெளியுறவுதுறை அமைச்சகம்
  2. உள்துறை அமைச்சகம்
  3. நிதி அமைச்சகம்
  4. எரிசக்தி துறை அமைச்சகம்
Answer & Explanation
Answer: வெளியுறவுதுறை அமைச்சகம்

Explanation:

5 ஜி மற்றும் செயற்கை நுண்ணறிவு துறையில் வெளிநாட்டு முதலீடை ஈர்க்கும் வகையில் வெளியுறவுதுறை அமைச்சகம் New and Emerging Strategic Technologies(NEST) என்ற பிரிவை துவங்கியுள்ளது.




5. 2020 ஆம் ஆண்டுக்கான கோல்டன் குளோப் விருது எந்த திரைப்படத்திற்கு வழங்கப்பட்டது?

  1. டூலெட்
  2. 1917
  3. ஜோக்கர்
  4. கிரீன் புக்
Answer & Explanation
Answer: 1917

Explanation:

முதலாவது உலகப்போரை விவரிக்கும் 1917 என்ற படத்திற்கு சிறந்த படத்திற்கான கோல்டன் குளோப் விருது வழங்கப்பட்டுள்ளது.

சிறந்த நடிகர் – ஜாக்குயின் ஃபோனிக்ஸ்

கோல்டன் குளோப் விருதுகள் போட்டிக்குத் தமிழில் ‘ஒத்த செருப்பு’ மற்றும் ‘டூலெட்’ ஆகிய இரு படங்கள் தேர்வாகியிருந்தன என குறிப்பிடத்தக்கது.

6. அண்டார்டிகா கண்டத்தின் மிக உயர்ந்த மலை உச்சியான வின்சன் மாசிப்பை அடைந்த உலகின் இளம் வயது பெண்?

  1. சன்னா மரின்
  2. அபர்ணா குமார்
  3. மலாவத் பூர்ணா
  4. பச்சேந்திரி பால்
Answer & Explanation
Answer: மலாவத் பூர்ணா

Explanation:

தெலங்கானா மாநிலம் பாகாலாவைச் சேர்ந்த பழங்குடியினப் பெண்ணான மலாவத் பூர்ணா

சமீபத்தில் அண்டார்டிகா கண்டத்தின் மிக உயர்ந்த மலை உச்சியான வின்சன் மாசிப்(Vinson Massif)-இல் ஏறி,

உலகின் இளம் வயது பெண்(18 வயது) என்ற பெருமையை பெற்றுள்ளார்.

மேலும், 13-வது வயதில் எவரெஸ்ட் சிகரத்தில் ஏறி, எவரெஸ்டை எட்டிய இளம் பழங்குடிப் பெண் என்ற சாதனையையும் நிகழ்த்தியிருக்கிறார்.

இவர் ஏற்கனவே எவரெஸ்ட் (ஆசியா), கிளிமஞ்சாரோ (ஆப்பிரிக்கா), எல்பிரஸ் (ஐரோப்பா) மற்றும் அகான்காகுவா(தென்னமெரிக்கா) போன்றவற்றில் ஏறி சாதனை படைத்துள்ளார்.

7. திஷா சட்டம் பின்வரும் எந்த மாநிலத்துடன் தொடர்புடையது?

  1. ஆந்திரப்பிரதேஷ்
  2. தெலுங்கானா
  3. கேரளா
  4. கர்நாடகா
Answer & Explanation
Answer: ஆந்திரப்பிரதேஷ்

Explanation:

பாலியல் குற்றவாளிகளுக்கு 21 நாட்களில் தண்டனை விதிக்க வகை செய்யும் வகையில் ‘திஷா’ என்ற சட்டத்தை ஆந்திரப்பிரதேஷ் அரசு கொண்டுவந்ததுள்ளது.

தற்போது அச்சட்டத்தை அமல்படுத்துவதற்கான சிறப்பு அதிகாரிகளாக ஐ.ஏ.எஸ் அதிகாரி டாக்டர் கிருத்திகா சுக்லா மற்றும் ஐ.பி.எஸ் அதிகாரி எம்.தீபிகா ஆகியோரை ஆந்திர அரசு நியமித்துள்ளது.

8. 4-வது அகில இந்திய போலீஸ் ஜுடோ கிளஸ்டர் சாம்பியன்சிப் எங்கு நடைபெறுகிறது?

  1. டெல்லி
  2. கொல்கத்தா
  3. மும்பை
  4. சென்னை
Answer & Explanation
Answer: டெல்லி

Explanation:

4th All India Police Judo Cluster Championship – ஆனது ஜனவரி 3 முதல் 7 வரை டெல்லியில் CRPF நடத்துகிறது.

9. சரப்ஜீத் கவுர் பின்வரும் எந்த விளையாட்டுடன் தொடர்பானவர்?

  1. பளுதூக்குதல்
  2. குத்துசண்டை
  3. ஹாக்கி
  4. செஸ்
Answer & Explanation
Answer: பளுதூக்குதல்

Explanation:

ஊக்கமருந்து பயன்படுத்தியது தெரியவந்ததால், பஞ்சாப்பைச் சேர்ந்த பளுதூக்குதல் வீராங்கனை சரப்ஜீத் கவுருக்கு தேசிய ஊக்கமருந்து தடுப்பு அமைப்பு (NADA),

நான்கு ஆண்டுகள் போட்களில் பங்கேற்க தடை விதித்துள்ளது.

10. சமீபத்தில் எந்த நகரத்தில் 31 வது சர்வதேச காத்தாடி விழா தொடங்கியுள்ளது?

  1. குஜராத்
  2. மஹராஷ்டிரா
  3. மேற்குவங்காளம்
  4. மத்தியபிரதேசம்
Answer & Explanation
Answer: குஜராத்

Explanation:

31 வது சர்வதேச காத்தாடி விழா ஜனவரி 7 முதல் 14 வரை குஜராத்தில் நடைபெறுகிறது.

More TNPSC Current Affairs



Leave a Comment