Current Affairs in Tamil 9th January 2020
Hello, TNPSC Aspirants, Here we provide Current Affairs question and answer in Tamil for 9th January 2020.
Take the quiz and improve your Current Affairs Knowledge.

1. சமீபத்தில் யாருக்கு எள் சாகுபடியில் அதிக மகசூல் ஈட்டியதற்காக கிருஷி கர்மான் விருது வழங்கப்பட்டது?
- பாப்பாத்தி
- ராசாத்தி
- சாமிநாதன்
- செந்தில்நாதன்
Answer & Explanation
Answer:
Explanation:
நிலக்கடலை மற்றும் எள் எண்ணெய் வித்துகளை சாகுபடி செய்யும் விவசாயிகளான கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த செந்தில்குமார் மற்றும் நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த பாப்பாத்தி ஆகியோர் அதிக மகசூல் ஈட்டியதற்காக கிருஷி கர்மான் விருது வழங்கப்பட்டது.
TNPSC Group 1 Model Question Papers – Download
2. மூத்த குடிமக்களுக்கு, வீட்டிற்கே சென்று ரேஷன் பொருட்கள் வழங்கும் திட்டத்தை சமீபத்தில் அறிமுகப்படுத்தியுள்ள மாநிலம்?
- குஜராத்
- டெல்லி
- மத்தியப் பிரதேசம்
- உத்திரப்பிரதேசம்
Answer & Explanation
Answer: மத்தியப் பிரதேசம்
Explanation
தனிமையில் வசிக்கும் 75 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்களின் வீட்டிற்கே சென்று ரேஷன் பொருட்கள் வழங்கும் திட்டத்தை மத்தியப்பிரதேச அரசு அறிமுகப்படுத்தியுள்ளது.
3. 2020ஆம் ஆண்டை “Year of Mobility” என அறிவித்துள்ள இந்திய பாதுகாப்பு அமைப்பு?
- CISF
- CRPF
- BSF
- ITBP
Answer & Explanation
Answer: CISF
Explanation:
மத்திய தொழில் துறை பாதுகாப்பு படையானது 2020ஆம் ஆண்டை “Year of Mobility” என அறிவித்துள்ளது.
- CISF – Control Industrial Security Force
4. தூய்மையான நகரங்கள் பட்டியலில், தென்னிந்திய அளவில் முதலிடம் பிடித்துள்ள பேரூராட்சி?
- ரெடியார்பாளையம்
- ஜலகண்டாபுரம்
- மேலதிருப்பூந்துருத்தி
- கீழ்வேளூர்
Answer & Explanation
Answer: மேலதிருப்பூந்துருத்தி
Explanation:
25 ஆயிரம் மக்கள் தொகை வரையிலான நகரங்கள் பிரிவில் தென்னிந்திய அளவில் தஞ்சாவூர் மாவட்டத்தை சேர்ந்த மேலத்திருப்பூந்துருத்தி பேரூராட்சி முதல் காலாண்டில் முதலிடமும்,
இரண்டாம் காலாண்டில் இரண்டாம் இடமும் பெற்று தென் இந்தியாவின் தூய்மையான நகரம் என சாதனை படைத்துள்ளது.
மேலும் அகில இந்திய அளவில் 149-வது இடமும் பிடித்துள்ளது.
5. சமீபத்தில் தேசிய வர்த்தகர்கள் மாநாடு எங்கு நடைபெற்றது?
- மும்பை
- சென்னை
- கொச்சின்
- டெல்லி
Answer & Explanation
Answer: டெல்லி
Explanation:
அகில இந்திய வர்த்தகர்கள் கூட்டமைப்பின் “தேசிய வர்த்தகர்கள் மாநாடு”, டெல்லியில் நடைப்பெற்றது.
இம்மாநாட்டை மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தொடங்கி வைத்தார்.
6. மிலன்-2020 என்ற கடற்படை பயிற்சியை நடத்தவுள்ள நாடு?
- அமெரிக்கா
- ரஷ்யா
- இந்தியா
- இலங்கை
Answer & Explanation
Answer: இந்தியா
Explanation:
Milan 2020 (Multilateral Naval Exercise) என்ற கடற்படை பயிற்சியானது விசாகப்பட்டிணத்தில் ஜனவரி 10ஆம் தேதி தொடங்குகிறது.
இதில் பல்வேறு நாடுகளை சேர்ந்த போர்க்கப்பல்கள் பங்கேற்கின்றன
இந்த பயிற்சின் கருப்பொருள் : Synergy Across the Seas
7. ஜாதி வாரி கணக்கெடுப்பை நடத்தவேண்டும் என, மத்திய அரசை வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றியுள்ள மாநிலம்?
- மஹராஷ்டிரா
- கர்நாடகா
- பீகார்
- உத்திரப்பிரதேஷ்
Answer & Explanation
Answer: மஹராஷ்டிரா
8. சமீபத்தில் இந்திய அளவை பொருளாதாரக் கழகத்தின் 56ஆம் ஆண்டு மாநாடு எங்கு நடைபெற்றது?
- சென்னை
- மதுரை
- மும்பை
- புனே
Answer & Explanation
Answer: மதுரை
9. வெளிநாடுவாழ் இந்தியர்கள் தினம் எப்போது அனுசரிக்கப்படுகிறது?
- 8th ஜனவரி
- 9th ஜனவரி
- 10th ஜனவரி
- 11th ஜனவரி
Answer & Explanation
Answer: 9th ஜனவரி
Explanation:
ஜனவரி 9, 1915 ஆம் ஆண்டு மகாத்மா காந்தி, தென்னாப்பிரிக்காவிலிருந்து இந்தியா(மும்பை) வந்தார், அந்த நாளை சிறப்பிக்கும் வகையில்,
2003 ஆம் ஆண்டிலிருந்து ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 9 ஆம் நாள், வெளிநாடுவாழ் இந்தியர் தினமாக கொண்டாடப்படுகிறது.
More TNPSC Current Affairs
Related