Hello, TNPSC Aspirants, Here we provide Current Affairs question and answer in Tamil for 10th January 2020. Take the quiz and improve your Current Affairs Knowledge.
1. இந்திய அளவில் அதிக தற்கொலைகள் நிகழும் மாநிலங்கள் பட்டியலில் தமிழகம் வகிக்கும் இடம்?
1
2
3
4
Answer & Explanation
Answer: 2வது இடம்
Explanation:
தேசிய குற்ற ஆவண அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில் அதிக தற்கொலைகள் நிகழும் மாநிலங்கள் பட்டியலில் மஹராஷ்ட்ரா முதல் இடத்தை பிடித்துள்ளது.
2வது, 3வது, 4வது இடங்கள் முறையே தமிழ்நாடு, மேற்குவங்கம், மத்தியபிரதேசம் பிடித்துள்ளன.
2. உலகிலேயே மிக வேகமாக வளரும் நகரங்களின் பட்டியலில் முதலிடம் பிடித்துள்ள நகரம்?
மலப்புரம்
திருப்பூர்
கோழிக்கோடு
மஸ்கட்
Answer & Explanation
Answer: மலப்புரம்
Explanation:
சமீபத்தில் சர்வதேச வார இதழான தி எகானமிஸ்ட் வெளியிட்ட உலகிலேயே மிக வேகமாக வளரும் நகரங்களின் பட்டியலில்,
இந்தியாவின் கேரள மாநிலம் மலப்புரம் முதலிடத்தையும் கோழிக்கோடு 4வது இடத்தையும், கொல்லம் 10வது இடத்தையும் பிடித்துள்ளன.
தமிழகத்தின் திருப்பூர் 30வது இடத்தைப் பிடித்துள்ளது.
3. சமீபத்தில் காமன்வெல்த் நாடுகளின், நாடாளுமன்றத் தலைவர்கள் மாநாடு எங்கு நடைபெற்றது?
இந்தியா
கனடா
இங்கிலாந்து
சீனா
Answer & Explanation
Answer: கனடா
Explanation:
கனடா நாட்டின் தலைநகரமான ஒட்டாவா (Ottawa)-வில் சமீபத்தில் காமன்வெல்த் நாடுகளின், நாடாளுமன்றத் தலைவர்கள் மாநாடு நடைபெற்றது.
இதில் இந்திய மக்களவை தலைவர் ஓம் பிர்லா கலந்துகொண்டார்.
மேலும் அவர் நாடு சுகந்திரம் பெற்றதன் 75ஆம் ஆண்டை நினைவுகூறும் வகையில் 2022 ஆம் ஆண்டுக்குள் இந்தியாவிற்கு, புதிய நாடாளுமன்ற கட்டிடம் கட்டப்படும் என்றார்.
4. சமீபத்தில் நாசா நிறுவனம் கண்டுபிடித்த புதிய கோளின் பெயர்?
TOI 700d
TOI 700c
NTOI 700d
NTOI 700c
Answer & Explanation
Answer: TOI 700d
Explanation:
நாசாவின் TESS செயற்கைகோள் சமீபத்தில் பூமியை ஒத்த கோள் ஒன்றை கண்டுபிடித்தது.
அதற்கு TOI 700d என பெயரிட்டுள்ளனர். இது பூமியிலிருந்து சுமார் 100 ஓளி ஆண்டு தூரத்தில் உள்ளது.
TOI – Transiting Exoplanet Survey Satellite Object of Interest
5. சுரங்கங்கள் மற்றும் கனிம சட்டம் முதன்முதலில் எப்போது கொண்டுவரப்பட்டது?
1954
1957
1963
1969
Answer & Explanation
Answer: 1957
Explanation:
மத்திய அமைச்சரவை 1957ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட சுரங்கங்கள் மற்றும் கனிம சட்டம்-1957 -இல் திருத்தம் மேற்கொள்ள ஒப்புதல் அளித்தள்ளது.
இத்திருத்தத்தின் மூலம் இது வரை ஏலத்தில் விடப்படாமல் இருந்த சுரங்கங்களை ஏலத்தில் விட முடியும்.
6. சென்னை மற்றும் அந்தமான் இடையே கடலுக்கடியில் பதிக்கப்படும் கண்ணாடி இழை கம்பி வடம் திட்டத்தின் மொத்த மதிப்பு?
1200 கோடி
1210 கோடி
1214 கோடி
1224 கோடி
Answer & Explanation
Answer: 1224 கோடி
Explanation:
1224 கோடி மதிப்பில் சென்னை மற்றும் அந்தமான் இடையே 2250 கி.மீ தொலைவுக்கு கடலுக்கடியில்,
கண்ணாடி இழை கம்பி வடம் (Fiber Optic Caple) பதிக்கும் திட்ட பணியை மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் ஜனவரி 9 அன்று தொடங்கி வைத்தார்
7. நடப்பு நிதியாண்டில் (2019-2020) இந்தியாவின் GDP வளர்ச்சி எத்தனை சதவிகிதம் இருக்கும் என உலகவங்கி தெரிவித்துள்ளது?
5%
5.3%
6%
6.3%
Answer & Explanation
Answer: 5%
Explanation:
நடப்பு நிதியாண்டில் (2019-2020) இந்தியாவின் GDP வளர்ச்சி 6% லிருந்து 5%ஆக குறையும் என உலகவங்கி கணித்துள்ளது.
8. சமீபத்தில் லோக்பால் அமைப்பின் உறுப்பினர் பதவியை ராஜினமா செய்தவர்?
M.கோயல்
அர்ச்சனா ராமசுந்தரம்
பி.போஸ்லே
பினாகி சந்திரகோஷ்
Answer & Explanation
Answer: பி.போஸ்லே
Explanation:
‘லோக்பால் அமைப்பு’ என்பது அரசு அதிகாரிகளுக்கு எதிரான ஊழல் புகார்களை விசாரிக்க அமைக்கப்பட்ட அமைப்பு ஆகும்.
இதன் தலைவர் பினாகி சந்திரகோஷ் ஆவார்.
9. 2019-ம் ஆண்டுக்கான ஆப்பிரிக்கா கால்பந்து வீரர் விருதை வென்றவர்?
சேடியோ மானே
முகமது சாலா
தாமஸ் முல்லர்
ஓலா அய்னா
Answer & Explanation
Answer: சேடியோ மானே
Explanation:
செனகல் நாட்டைச் சேர்ந்த சேடியோ மானேக்கு 2019-ம் ஆண்டுக்கான ஆப்பிரிக்கா கால்பந்து வீரர் விருது வழங்கப்பட்டது.
கடந்த ஆண்டு இந்த விருதை பெற்றவர் முகமது சாலா என்பது குறிப்பிடத்தக்கது.
10. உலக இந்தி தினம் எப்போது அனுசரிக்கப்படுகிறது?
ஜனவரி 09
ஜனவரி 10
பிப்ரவரி 09
பிப்ரவரி 10
Answer & Explanation
Answer: ஜனவரி 10
Explanation:
1975-ஆம் ஆண்டுமுதல் ஆண்டுதோறும் ஜனவரி 10-ம் தேதி உலக இந்தி தினமாக அனுசரிக்கப்படுகின்றது.
செப்டம்பர் 14 தேசிய இந்தி தினமாக அனுசரிக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.