TNPSC Current Affairs Question and Answer in Tamil 13th January 2020

Current Affairs in Tamil 13th January 2020

Hello, TNPSC Aspirants, Here we provide Current Affairs question and answer in Tamil for 13th January 2020. Take the quiz and improve your Current Affairs Knowledge.




TNPSC Current Affairs in Tamil 13th January 2020
1. தேசிய இளைஞர் திருவிழா 2020 எங்கு நடைபெறுகிறது ?

  1. லக்னோ
  2. மும்பை
  3. டெல்லி
  4. ஹைதராபாத்
Answer & Explanation
Answer: லக்னோ

Explanation:

“FIT YOUTH FIT INDIA” என்ற கருப்பொருளுடன் 23வது தேசிய இளைஞர் திருவிழாவானது
உத்தரபிரதேச மாநிலம் லக்னோவில் ஜனவரி 12 முதல் 16 வரை நடைபெறுகிறது.

TNPSC Group 1 Model Papers – Download

2. சமீபத்தில் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் (SCO) உலக அதிசய பட்டியலில் இணைக்கப்பட்டுள்ள இந்திய சின்னம்?

  1. தாஜ்மஹால்
  2. படேல் சிலை
  3. திருவள்ளுவர் சிலை
  4. அம்பர் அரண்மனை
Answer & Explanation
Answer: படேல் சிலை

Explanation:

சீனாவின் தலைநகர் பீய்ஜிங்கை தலைமையகமாக கொண்டுள்ள SCO எனப்படும் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு,

தனது உலக அதிசய பட்டியலில் இந்தியாவின் சர்தார் வல்லபாய் படேல் சிலையை 8-வது அதிசயமாக இணைந்துள்ளது.

3. சமீபத்தில் யாருக்கு உலக இளம் சாதனையாளர் விருது – 2020 வழங்கப்பட்டது?

  1. கிருஷ்ண ராம்குமார்
  2. ஐஸ்வர்யா
  3. ஈஷ்வர் சர்மா
  4. ரக்ஷணா
Answer & Explanation
Answer: ஈஷ்வர் சர்மா

Explanation:

பிரிட்டனை சேர்ந்த இந்திய வம்சாவளி சிறுவன் ஈஷ்வர் சர்மாக்கு 2020ஆம் ஆண்டுக்கான உலக இளம் சாதனையாளர் விருது வழங்கப்பட்டுள்ளது.

இவர் யோகாவில் பல சாதனைகளை புரிந்ததற்காக இவ்விருது வழங்கப்பட்டுள்ளது.

4. தைவான் நாட்டின் அதிபர் தேர்தலில் வெற்றிபெற்றுள்ளவர்?

  1. ஹான் கோயு
  2. சாய் இங்-வென்
  3. எரிக் சு
  4. ஹூ ஜிண்டாவ்
Answer & Explanation
Answer: சாய் இங்-வென்

Explanation:

தைவானில் நடந்த பொதுத் தேர்தலில் ஆளும் ஜனநாயக முன்னேற்ற கட்சியின் முக்கிய பெண் தலைவரான சாய் இங் வென் 2-வது முறையாக அதிபர் பதவியை பிடித்துள்ளார்.




5. உலக எதிர்கால ஆற்றல் உச்சி மாநாடு-2020 எங்கு நடைபெறுகிறது?

  1. அபுதாபி
  2. கொல்கத்தா
  3. டெல்லி
  4. தோஹா
Answer & Explanation
Answer: அபுதாபி

Explanation:

நான்கு நாட்கள் உலக எதிர்கால ஆற்றல் உச்சி மாநாடு (world future energy summit 2020) அபுதாபியில் நடைபெறுகிறது.

இம்மாநாட்டின் கருப்பொருள்: Rethinking Global Consumption, Production and Investment

6. கத்தார் ஓபன் டென்னிஸ் போட்டியில் சாம்பியன் பட்டம் வென்ற ஜோடி?

  1. சானியா மிர்சா – நாடியா
  2. ரோகன் போபண்ணா – வெஸ்லி கூல்ஹாப்
  3. திவிஜ் சரண் – வெஸ்லி கூல்ஹாப்
  4. பாம்பிரிட்ஜி – கோன்ஸாலஸ்
Answer & Explanation
Answer: ரோகன் போபண்ணா – வெஸ்லி கூல்ஹாப்

Explanation:

தோஹாவில் நடைபெற்ற கத்தாா் ஓபன் டென்னிஸ் போட்டியின் இரட்டையா் பிரிவில் இந்தியாவின் போபண்ணா-வெஸ்லி கூல்ஹாப் இணை பாம்பிரிட்ஜி-கோன்ஸாலஸ் இணையை தோற்கடித்து சாம்பியன் பட்டத்தை வென்றனர்.

7. சமீபத்தில் யாருக்கு சிறந்த சர்வதேச கிரிக்கெட் வீரருக்கான பாலி உம்ரிகர் விருது வழங்கப்பட்டது?

  1. ஸ்டூவர்ட் பிராட்
  2. பும்ரா
  3. விராட்கோலி
  4. புவனேஷ்வர் குமார்
Answer & Explanation
Answer: பும்ரா

Explanation:

பிசிசிஐயின் உயரிய விருதான பாலி உம்ரிகர் விருது வேகப்பந்துவீச்சாளர் பும்ராக்கு வழங்கப்பட்டது.

மேலும்.,

வாழ்நாள் சாதனையாளர் விருது முன்னாள் கேப்டன் ஸ்ரீகாந்த்க்கும், அஞ்சும் சோப்ராக்கும்  வழங்கப்பட்டது.

8. 2020 ஆம் ஆண்டுக்கான தேசிய இளைஞர் தினத்தின் கருப்பொருள்?

  1. Fit Youth Fit India
  2. Channelizing Youth Power for Nation Building
  3. Ek Bharat Shrestha Bharat
  4. Transforming education
Answer & Explanation
Answer: Channelizing Youth Power for Nation Building

Explanation:

சுவாமி விவேகானந்தரின் பிறந்த நாளான ஜனவரி 12 ஆம் நாள் தேசிய இளைஞர் தினமாக அனுசரிக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

இந்த ஆண்டுக்கான கருப்பொருள்: Channelizing Youth Power for Nation Building

More TNPSC Current Affairs



Leave a Comment