Current Affairs in Tamil 15th January 2020
Hello, TNPSC Aspirants, Here we provide Current Affairs question and answer in Tamil for 15th January 2020. Take the quiz and improve your Current Affairs Knowledge.

1. ரிசர்வ் வங்கியின் புதிய துணை ஆளுநராக பொறுப்பேற்றுள்ளவர் யார்?
- மனோஜ் திவாரி
- பிரகாஷ் காரத்
- தேவப்ரதா பத்ரா
Answer & Explanation
Answer: தேவப்ரதா பத்ரா
Explanation:
இந்திய ரிசர்வ் வங்கியின் 4வது துணை ஆளுநராக மைக்கேல் தேவப்ரதா பத்ரா நியமிக்கப்பட்டுள்ளார்.
இவருடைய பதவி காலம் மூன்று ஆண்டுகள் ஆகும்.
TNPSC Group 1 Model Papers – Download
2. சமீபத்தில் தெலுங்கு மொழிக்கான ஆராய்ச்சி மையம் திறக்கப்பட்டுள்ளது?
- நெல்லுர்
- விசாகப்பட்டினம்
- அமராவதி
- ஹைதராபாத்
Answer & Explanation
Answer:
Explanation:
சமீபத்தில் துணை குடியரசு தலைவர் எம்.வெங்கையா நாயுடு நெல்லூரில் “தெலுங்கு மையத்தை” திறந்து வைத்தார்
3. இந்தியாவின் GSAT-30 செயற்கைக்கோளை விண்ணுக்கு சுமந்து செல்ல உள்ள ராக்கெட்?
- பிஎஸ்எல்வி-சி48
- ஏரியன் 5
- GSLV மார்க்-3 எம்.1
- பிஎஸ்எல்வி-சி47
Answer & Explanation
Answer: ஏரியன் 5
Explanation:
தகவல்தொழில்நுட்ப செயற்கைக்கோளான GSAT-30, பிரான்ஸ் விண்வெளி நிறுவனத்தின் ஏரியன் 5 VA-251 ராக்கெட் மூலம் வரும் ஜனவரி 17ஆம் தேதி விண்ணில் செலுத்தப்படுகிறது.
ஏற்கெனவே விண்வெளியில் செயல்பாட்டிலிருக்கும் INSAT-4A தகவல்தொழில்நுட்ப செயற்கைக்கோளுக்கு மாற்றாக, இந்த ஜிசாட்-30 செயற்கைக்கோள் செலுத்தப்பட உள்ளது.
2020-ஆம் ஆண்டில் இஸ்ரோவின் முதல் செயற்கைக்கோள் இது என்பது குறிப்பிடத்தக்கது.
இதன் எடை: 3357 KG
4. சுங்கச்சாவடிகளில் FASTAG முறை நடைமுறைக்கு வந்த நாள்?
- 14-ஜனவரி
- 15-ஜனவரி
- 16-ஜனவரி
- 17-ஜனவரி
Answer & Explanation
Answer: 15-ஜனவரி
5. 2019ம் ஆண்டுக்கான தமிழ்த்தாய் விருது யாருக்கு வழங்கப்பட்டது?
- மலேசிய தமிழ்ச்சங்கம்
- சிகாகோ தமிழ்ச்சங்கம்
- சரசுவதி ராமநாதன்
- முத்துக்குமாரசாமி
Answer & Explanation
Answer: சிகாகோ தமிழ்ச்சங்கம்
Explanation:
சிகாகோ தமிழ்ச்சங்கத்துக்கு 2019ம் ஆண்டுக்கான தமிழ்த்தாய் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
இவ்விருதுடன் ரூ.5 லட்சம் ரொக்கப்பரிசு, நினைவுப்பரிசு மற்றும் பாராட்டுச்சான்றிதள் ஆகியவை வழங்கப்படும்.
6. சமீபத்தில் சர்வதேச வானிலை அமைப்பு எந்த ஆண்டை மிக வெப்பமான ஆண்டாக அறிவித்தது?
- 2017
- 2018
- 2019
- 2020
Answer & Explanation
Answer: 2019
7. சமீபத்தில் நீர் மேலாண்மை திட்ட செயல்பாடுகளுக்கு தேசிய விருதை (ஸ்கோச் விருது) பெற்ற மாவட்டம்?
- தஞ்சாவூர்
- திருவண்ணாமலை
- திருநெல்வேலி
- திருச்சி
Answer & Explanation
Answer: திருவண்ணாமலை
8. இராணுவ தின அணிவகுப்பின் போது அனைத்து ஆண்களையும் வழிநடத்திய முதல் இந்திய பெண் அதிகாரி யார்?
- பாவனா கஸ்தூரி
- தான்யா ஷெர்கில்
- ப்ரியா ஜின்கன்
- சுவாதி பாண்டே
Answer & Explanation
Answer: தான்யா ஷெர்கில்
Explanation:
டெல்லி கரியப்பா ராணுவ மைதானத்தில் நடைபெற்ற,
ராணுவ அணிவகுப்பில் வரலாற்றில் முதன்முறையாக ஆண்கள் படைப்பிரிவுக்குத் தலைமையேற்று வழிநடத்திய முதல் பெண் என்ற பெருமையைப் தான்யா ஷெர்கில் பெற்றுள்ளார்.
9. இந்திய ராணுவ தினம் எப்போது அனுசரிக்கப்படுகிறது?
- 14-ஜனவரி
- 15-ஜனவரி
- 16-ஜனவரி
- 17-ஜனவரி
Answer & Explanation
Answer: ஜனவரி 15
Explanation:
இந்திய ராணுவத்தின் முதல் இந்திய தரைப்படையின் தலைமைத் தளபதியாக 1949ஆம் ஆண்டு ஜனவரி 15ஆம் தேதி ஃபீல்டு மார்ஷல் கே.எம்.கரியப்பா பொறுப்பேற்றுக் கொண்டார்.
அதை நினைவுகூறும் விதமாக ஆண்டுதோறும் ஜனவரி 15ஆம் தேதி ராணுவ தினமாக கடைப்பிடிக்கப்படுகிறது.
More TNPSC Current Affairs
Related