Hello, TNPSC Aspirants, Here we provide Current Affairs question and answer in Tamil for 16th January 2020. Take the quiz and improve your Current Affairs Knowledge.
1. 2019ஆம் ஆண்டிற்கான ஜி.யு.போப் விருது யாருக்கு வழங்கப்பட்டது?
சுதா சேசையன்
மரிய ஜோசப் சேவியர்
கோ.இராசேசுவரி கோதண்டம்
கு.கோ.சந்திரசேகரன் நாயர்
Answer & Explanation
Answer: மரிய ஜோசப் சேவியர்
Explanation:
அயல்நாட்டு மொழிகளில் தமிழ் இலக்கியங்களை மொழிபெயர்க்கும் சிறந்த தமிழ் மொழி பெயர்ப்பாளருக்கு 2014ஆம் ஆண்டுமுதல் ஜி.யு.போப் விருது வழங்கப்பட்டு வருகிறது.
2. 2019ஆம் ஆண்டிற்கான அம்மா இலக்கிய விருது யாருக்கு வழங்கப்பட்டது?
ஹம்சா தனகோபால்
மீ.சு.ஸ்ரீஇலட்சுமி
உமையாள் முத்து
உலகநாயகி பழனி
Answer & Explanation
Answer: உமையாள் முத்து
Explanation:
மகளிர் இலக்கியங்களைப் படைப்பதில் தம்மை முழுமையாக ஈடுபடுத்தித் தொண்டாற்றி வரும் பெண் படைப்பாளருக்கு 2015ஆம் ஆண்டு முதல் ஆண்டுதோறும் அம்மா இலக்கிய விருது வழங்கப்பட்டு வருகிறது.
3. சமீபத்தில் உலகின் மிகப்பெரிய ரேடியோ தொலைநோக்கி (FAST) எங்கு செயல்பாட்டுக்கு வந்துள்ளது?
இந்தோனேஷியா
சீனா
அமெரிக்கா
ரஷ்யா
Answer & Explanation
Answer: சீனா
Explanation:
சீனாவின் குவிஷொவ் (Guizhou) மலைப்பகுதியில் 500 மீட்டர் விட்டம் கொண்ட மிகப்பெரிய கிண்ணத்தின் வடிவில் ரேடியோ தொலைநோக்கி உருவாக்கப்பட்டுள்ளது.
FAST = Five hundred meter Aperture Spherical Telescope
4. சாஹியோக்-கைஜின் என்பது எந்த இருநாடுகளின் கடலோரக் காவல்படையினரின் கூட்டுப் பயிற்சி?
இந்தியா – சீனா
இந்தியா – ஜப்பான்
பாகிஸ்தான் – சீனா
பாகிஸ்தான் – ஜப்பான்
Answer & Explanation
Answer: இந்தியா – ஜப்பான்
Explanation:
இந்தியா மற்றும் ஜப்பான் நாடுகளுக்கு இடையே 19-ஆவது கடலோரக் காவல் படையினரின் கூட்டுப் பயிற்சி சென்னையில் நடைபெற்றது.
இந்த பயிற்சியில் ஜப்பான் கடலோரக் காவல் படையின் ‘எச்சிகோ’ ரோந்துக் கப்பல் பங்கேற்றது.
இந்திய கடலோரக் காவல் படையின் தலைமை இயக்குநா் – கே.நடராஜன்.
5. நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் எப்போது தொடங்கவுள்ளது?
28 ஜனவரி
29 ஜனவரி
30 ஜனவரி
31 ஜனவரி
Answer & Explanation
Answer: 31 ஜனவரி
Explanation:
ஜனவரி 31 தொடங்கி பிப்ரவரி 11-ம் தேதி வரை நடைபெற உள்ளது.
2020-2021-ம் நிதி ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை பிப்ரவரி 1-ம் தேதி மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்ய உள்ளார்.
6. ‘புரூ’ பழங்குடியினத்தவர்களுக்கு எந்த மாநிலத்தில் நிரந்தர குடியுரிமையை வழங்கப்பட உள்ளது?
மிசோரம்
திரிபுரா
அசாம்
ஹிமாச்சலப்பிரதேஷ்
Answer & Explanation
Answer: திரிபுரா
Explanation:
மிசோரமிலிருந்து இடம்பெயா்ந்து 20 ஆண்டுகளுக்கு மேலாக திரிபுராவில் வசித்துவரும் 30ஆயிரத்துக்கும் மேற்பட்ட ‘புரூ’ பழங்குடியினத்தவா்களுக்கு திரிபுராவில் நிரந்தர குடியுரிமையை வழங்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
7. மால்டா (Malta) – வின் புதிய பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளவர்?
ராபர்ட் அபேலா
ஜோசப் மஸ்கட்
ஜார்ஜ் அபேலா
லூயிஸ் கிரேச்
Answer & Explanation
Answer: ராபர்ட் அபேலா
Explanation:
தொழிற்கட்சி வேட்பாளர் ராபர்ட் அபேலா 9% வாக்குகளைப் பெற்று மால்டாவின் 14 வது பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
8. சமீபத்தில் கிருஷி மந்தன் (Krishi Manthan) என்ற மாநாடு எங்கு நடைபெற்றது?
மும்பை
பெங்களூர்
அகமதாபாத்
டெல்லி
Answer & Explanation
Answer: அகமதாபாத்
Explanation:
ஆசியாவின் மிகப்பெரிய உணவு, வேளாண் வணிக மற்றும் ஊரக வளர்ச்சி உச்சி மாநாடான, கிருஷி மந்தனின் முதல் மாநாடு குஜராத்தின் அகமதாபாத்தில் உள்ள IIM கல்லூரியில் நடைபெற்றது.
9. 2019ஆம் ஆண்டுக்கான ISSF தரவரிசையில் இந்தியா வகிக்கும் இடம்?
1
2
3
4
Answer & Explanation
Answer: 1
Explanation:
சர்வதேச துப்பாக்கி சுடுதல் விளையாட்டு கூட்டமைப்பு (ISSF) வெளியிட்டுள்ள 2019ஆம் ஆண்டுக்கான தரவரிசை பட்டியலில் இந்தியா முதலிடம் பிடித்துள்ளது.
இரண்டாம் இடத்தை சீனா பிடித்துள்ளது.
10. ஆஜ் கி சிவாஜி, நரேந்திர மோடி என்ற புத்தகத்தின் ஆசிரியர்?
க. துளசிதாசன்
ஜெய் பகவான் கோயல்
சுப்பிரமணிய சுவாமி
வெங்கையா நாயுடு
Answer & Explanation
Answer: ஜெய் பகவான் கோயல்
Explanation:
பஞ்சாபை சேர்ந்த பாரதீய ஜனதா தலைவர் ஜெய் பகவான் கோயல் ‘ஆஜ் கி சிவாஜி, நரேந்திர மோடி’ (இன்றைய சிவாஜி நரேந்திர மோடி) என்ற தலைப்பில் புத்தகம் ஒன்றை எழுதி உள்ளார்.