Current Affairs in Tamil 17th January 2020
Hello, TNPSC Aspirants, Here we provide Current Affairs question and answer in Tamil for 17th January 2020. Take the quiz and improve your Current Affairs Knowledge.

1. சமீபத்தில் 2019ஆம் ஆண்டுக்கான சொல்லின் செல்வர் விருது யாருக்கு வழங்கப்பட்டது?
- க. ஜீவபாரதி
- கவிதாசன்
- கண்மதியன்
- வீ.ரேணுகாதேவி
Answer & Explanation
Answer: கவிதாசன்
Explanation:
தமிழ் வளர்ச்சித் துறையின் மேலும் சில விருதுகள்
- கபிலர் விருது – புலவர் வெற்றி அழகன்
- உ.வே.சா. விருது – வெ.மகாதேவன்
- கம்பர் விருது – முனைவர் சரஸ்வதி ராமநாதன்
- சொல்லின் செல்வர் விருது – முனைவர் கவிதாசன்
- மறைமலை அடிகளார் விருது – முத்துக்குமாரசாமி
- முதலமைச்சரின் கணினித் தமிழ் விருது – நாகராசன்
- அம்மா இலக்கிய விருது – உமையாள் முத்து
- மொழி பெயர்ப்பாளர் விருது – மாலன்
- இளங்கோவடிகள் விருது – கவிக்கோ ஞானச் செல்வன்(எ) திருஞானசம்பந்தம்
- உமறுப்புலவர் விருது – லியாகத் அலிகான்
- மொழியியல் விருது – இலங்கை முனைவர் சுபதினி ரமேஷ்
- சிங்காரவேலர் விருது – அசோகா சுப்பிரமணியன்
- அயோத்திதாஸப் பண்டிதர் விருது – பிரபாகரன்
- ஜி.யு. போப் விருது – மரிய ஜோசப் சேவியர்
TNPSC Group 1 Model Papers – Download
2. சமீபத்தில் முதல் வெங்கய்ய நாயுடு தேசிய விருது யாருக்கு வழங்கப்பட்டது?
- எம்.எஸ். சுவாமிநாதன் & டாக்டர் குட்டா
- ஸ்ரீராமுலு & அமிதாப் பச்சன்
- ராதாகிருஷ்ணன் & செல்வக்கண்ணன்
- மு.முத்துக்குமரன் & கோவிந்த ராஜூ
Answer & Explanation
Answer: எம்.எஸ். சுவாமிநாதன் & டாக்டர் குட்டா
Explanation:
1st Venkaiah Naidu National – விருந்தானது ஹைதராபாத்தில் வைத்து எம்.எஸ். சுவாமிநாதன் & டாக்டர் குட்டா அவர்களுக்கு வழங்கப்பட்டது
3. முதலாவது சர்வதேச பாரம்பரிய கருத்தரங்கு மற்றும் கண்காட்சி (IHSE) எங்கு நடைபெற்றது?
- புது டெல்லி
- லக்னோ
- சென்னை
- மும்பை
Answer & Explanation
Answer: புது டெல்லி
Explanation:
டிஜிட்டல் உலகில் இந்திய பாரம்பரியம் “INDIAN HERITAGE IN DIGITAL SPACE” என்ற தலைப்பில் சர்வதேச பாரம்பரிய கருத்தரங்கு மற்றும் கண்காட்சி (IHSE) புதுடில்லியில் ஜனவரி 15-16 தேதிகளில் நடைபெற்றது.
இக்கருத்தரங்கை மத்திய கலாச்சார மற்றும் சுற்றுலாத் துறை அமைச்சர் ஸ்ரீ பிரகலாத் சிங் படேல் தொடங்கி வைத்தார்.
4. Fit India Movement -ஐ சிறப்பாக செயல்படுத்தும் உயர்கல்வி நிறுவனங்களுக்கு, தேசிய உயர்கல்வி தரவரிசை நடைமுறையில் எத்தனை சதவீத மதிப்பெண் வழங்க யுஜிசி முடிவு செய்துள்ளது?
- 3%
- 5%
- 7%.
- 9%
Answer & Explanation
Answer: 5%
Explanation:
Fit India Movement (ஃபிட் இந்தியா இயக்கம்) என்பது நாட்டு மக்களின் உடல்நலனை மேம்படுத்தி வலுவான இந்தியாவை உருவாக்கும் நோக்கத்தில் மத்திய அரசால் கடந்த 29th ஆகஸ்ட் 2019 தொடங்கப்பட்ட திட்டமாகும்.
ஜனவரி 2020 முதல் உயர் கல்வி நிறுவனங்களின் மாணவர்களுக்கு 45 நிமிடங்கள் கட்டாய உடற்பயிற்சி வழங்க வேண்டும் என யுஜிசி அறிவித்திருந்தது.
அதன்படி இத்திட்டத்தைச் சிறப்பாகச் செயல்படுத்தும் உயர்கல்வி நிறுவனங்களுக்கு 0 முதல் 5 மதிப்பெண் வழங்க யுஜிசி முடிவு செய்துள்ளது.
5. சமீபத்தில் பன்னாட்டு தனி மற்றும் பயன்பாட்டு வேதியியல் ஒன்றியத்தின் (IUPAC) உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ள இந்தியர்?
- சி.என்.ஆர்.ராவ்
- பிபுல் பெஹாரி சஹா
- தேவன் பிரகாசம்
- மகேஷ் யோகி
Answer & Explanation
Answer: பிபுல் பெஹாரி சஹா
Explanation:
பிரபல வேதியியலாளர் பிபுல் பெஹாரி சஹா 2020-23 காலகட்டத்திற்கான International Union of Pure and Applied Chemistry-இன் உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ளார்.
சி.என்.ஆர்.ராவ்க்கு பிறகு ஒரு நூற்றாண்டில்இப்பதவிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள இரண்டாவது இந்தியர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது.
6. காமன்வெல்த் நாடாளுமன்ற சங்கத்தின் (சிபிஏ) இந்திய பிராந்தியத்தின் 7 வது மாநாடு எங்கு நடைபெற்றது?
- டெல்லி
- லக்னோ
- சென்னை
- மும்பை
Answer & Explanation
Answer: லக்னோ
Explanation:
உத்திரப்பிரதேச மாநிலம் லக்னோவில் 7-வது Indian Commonwealth Parliamentary Association (CPA) India Region- மாநாடு நடைபெற்றது
7. 19 வயதுக்குட்பட்டோர் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி எங்கு நடைபெறுகிறது?
- இந்தியா
- ஆஸ்திரேலியா
- தென்னாப்பிரிக்கா
- இங்கிலாந்து
Answer & Explanation
Answer: தென்னாப்பிரிக்கா
Explanation:
தென்னாப்பிரிக்காவில் ஜனவரி 17 முதல் பிப்ரவரி 9-ம் தேதி வரை நடைபெறுகிறது.
இப்போட்டியில் புதிதாக ஜப்பான் மற்றும் நைஜீரிய அணிகள் இணைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
8. சமீபத்தில் காலமான உம்மர் கோயா பின்வரும் எந்த விளையாட்டுடன் தொடர்பானவர்?
- கிரிக்கெட்
- டென்னிஸ்
- டேபிள் டென்னிஸ்
- செஸ்
Answer & Explanation
Answer: செஸ்
Explanation:
9. “காசோலை (Chequebook)” என்ற புத்தகத்தின் ஆசிரியர்?
- வாஸ்தேவ் மோஹி
- சிவ ரெட்டி
- லக்ஷ்மி நந்தன்
- கோவிந்த் மிஸ்ரா
Answer & Explanation
Answer: வாஸ்தேவ் மோஹி
Explanation:
பிரபல சிந்தி மொழி எழுத்தாளரான வாஸ்தேவ் மோஹிக்கு 29 வது சரஸ்வதி சம்மன் விருது வழங்கப்பட உள்ளது.
இவரது சிறுகதைத் தொகுப்பான காசோலை புத்தகத்திற்காக இவ்விருது வழங்கப்பட உள்ளது.
More TNPSC Current Affairs
Related