Hello, TNPSC Aspirants, Here we provide Current Affairs question and answer in Tamil for 18th January 2020. Take the quiz and improve your Current Affairs Knowledge.
1. குடியுரிமை சட்டத்தை எதிர்த்து தீர்மானம் நிறைவேற்றியுள்ள இரண்டாவது மாநிலம்?
மேற்குவங்காளம்
பஞ்சாப்
கர்நாடகா
தமிழ்நாடு
Answer & Explanation
Answer: பஞ்சாப்
Explanation:
கேரளாவை தொடர்ந்து பஞ்சாப் மாநில சட்டப்பேரவையில் குடியுரிமை சட்டத்தை எதிர்த்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
மேலும் மூன்றாவது மாநிலமாக ராஜஸ்தான் அரசும் சமீபத்தில் தீர்மானம் ஒன்றை நிறைவேற்றியுள்ளது.
2. சமீபத்தில் தென்கிழக்கு ஆசிய நாடுகள் கூட்டமைப்பின், வெளியுறவு அமைச்சர்கள் மாநாடு எங்கு நடைபெற்றது?
இந்தியா
வியட்நாம்
இலங்கை
இந்தோனேசியா
Answer & Explanation
Answer: வியட்நாம்
Explanation:
Association of Southeast Asian Nations கூட்டமைப்பின், வெளியுறவு அமைச்சர்கள் மாநாடு ஜனவரி 17 அன்று வியட்நாமின் நியூட்ரோங் நகரில் நடைபெற்றது.
3. சமீபத்தில் 5-வது அறிவியல் திரைப்பட விழா எங்கு நடைபெற்றது?
டெல்லி
மும்பை
கோவா
பெங்களூர்
Answer & Explanation
Answer: கோவா
Explanation:
கோவாவின் பனாஜியில், 5-வது அறிவியல் திரைப்பட விழா நடைபெறுகிறது.
4. அஷ்பாகுல்லா கான் என்ற பெயரில் மிருகக்காட்சி சாலை அமைக்கவுள்ள மாநிலம்?
மத்தியப்பிரதேசம்
உத்திரப்பிரதேசம்
கர்நாடகா
குஜராத்
Answer & Explanation
Answer: உத்திரப்பிரதேசம்
Explanation:
இந்துஸ்தான் சோசலிச குடியரசுக் கழகத்தை நிறுவிய ஷாஹீத் அஷ்பாகுல்லா கான் பெயரில், 121 ஏக்கரில் மிருகக்காட்சிசாலையை அமைக்க உத்திரப்பிரதேச அரசு முடிவு செய்துள்ளது.
5. உலகின் மிக உயர்ந்த ரயில் பாலம் (செனாப் பாலம்) எங்கு அமைக்கப்பட்டு வருகிறது?
சீனா
இந்தியா
பங்களாதேஷ்
பாக்கிஸ்தான்
Answer & Explanation
Answer: இந்தியா
Explanation:
காஷ்மீரை இந்தியாவின் மற்ற பகுதிகளுடன் இணைக்க இந்திய ரயில்வேயினால் Chenab Bridge என்ற பெயரில் அமைக்கப்பட்டு வரும் உலகின் மிக உயர்ந்த ரயில் பாலம் 2021 ஆம் ஆண்டுக்குள் செயல்பாட்டுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதன் உயரம்: 359 மீட்டர்
6. சமீபத்தில் Rojgar Sangi என்ற மொபைல் செயலியை அறிமுகப்படுத்தியுள்ள மாநிலம்?
குஜராத்
கர்நாடகா
பீகார்
சத்தீஸ்கர்
Answer & Explanation
Answer: சத்தீஸ்கர்
Explanation:
சத்தீஸ்கர் மாநில அரசுவேலைவாய்ப்பு சார்ந்த’Rojgar Sangi என்ற மொபைல் செயலியை அறிமுகப்படுத்தியுள்ளது.
7. சமீபத்தில் கேரள அரசின் ஜி.வி.ராஜா யாருக்கு வழங்கப்பட்டது?
முகமது அனஸ்
ஷாஜஹான்
முகமது ரஃபீக்
குர்பிரீத் சிங் சாந்து
Answer & Explanation
Answer: முகமது அனஸ்
Explanation:
கேரள மாநில விளையாட்டு கவுன்சிலின் ஜி.வி.ராஜா விருது முகமது அனஸ் மற்றும் சந்திரிகா துளசி என்பவருக்கும் அறிவிக்கப்பட்டுள்ளது.
முகமது அனஸ், ஜகார்த்தா ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் 400 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் இந்தியாவுக்காக வெள்ளி வென்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் சந்திரிகா துளசி பிரபல பூப்பந்து வீராங்கணை என்பது குறிப்பிடத்தக்கது.
8. சமீபத்தில் காலமான உலகின் மிக குள்ளமான மனிதர் யார்?
தாபா மாகர்
சந்திர பகதூர் டங்கி
டர்கி சுல்தான் கோசன்
சந்திரா பஹடுர்
Answer & Explanation
Answer: தாபா மாகர்
Explanation:
கின்னஸ் சாதனையில் இடம்பெற்ற உலகின் மிக குள்ளமான மனிதரான நேபாளத்தை சேர்ந்த தாபா மாகர் சமீபத்தில் காலமானார்.