TNPSC Current Affairs Question and Answer in Tamil 19th January 2020

Current Affairs in Tamil 19th January 2020

Hello, TNPSC Aspirants, Here we provide Current Affairs question and answer in Tamil for 19th January 2020. Take the quiz and improve your Current Affairs Knowledge.




TNPSC Current Affairs in Tamil 19th January 2020
1. சமீபத்தில் தஞ்சை விமானப்படையில் இணைக்கப்பட்டுள்ள அதிநவீன போர் விமானம்?

  1. சுகோய் 30MKI
  2. சுகோய் 60MKI
  3. சுகோய் 90MKI
  4. சுகோய் 50MKI
Answer & Explanation
Answer: சுகோய் 30MKI

Explanation:

பிரமோஸ் ஏவுகணையை தாங்கி சென்று தாக்கும் வல்லமை சுகோய் 30MKI விமானம் சமீபத்தில் தஞ்சை விமானப்படையில் இணைக்கப்பட்டுள்ளது.

தஞ்சாவூரில் 1940-ம் ஆண்டு விமானப்படை தளம் அமைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

TNPSC Group 1 Model Papers – Download

2. 9-வது சர்வதேச குழந்தைகள் திரைப்பட விழா எங்கு நடைபெறுகிறது?

  1. கோவா
  2. கொல்கத்தா
  3. சென்னை
  4. மும்பை
Answer & Explanation
Answer: கொல்கத்தா

Explanation:

மேற்குவங்காள அரசின் கொல்கத்தா சர்வதேச குழந்தைகள் திரைப்பட விழா-வின் 9வது பதிப்பு கொல்கத்தாவில் ஜனவரி 19 முதல் 26 வரை நடைபெறுகிறது

3. மாக் பிஹு என்ற திருவிழா பின்வரும் எந்த மாநிலத்தில் கொண்டாடப்படுகிறது?

  1. பீகார்
  2. அசாம்
  3. மிசோரம்
  4. ஒரிஸா
Answer & Explanation
Answer: அசாம்

Explanation:

அசாமில் அறுவடை திருவிழாவானது மாக் பிஹு என்ற பெயரில் கொண்டாடப்படுகிறது.

இத்திருவிழா போகாலி பிஹு என்ற பெயரிலும் அழைக்கப்படுகிறது.




4. 50-வது உலக பொருளாதார மன்றம்(WEF) எந்த நகரத்தில் நடைபெற உள்ளது?

  1. தாவோஸ் (சுவிச்சர்லாந்து)
  2. சிட்னி (ஆஸ்திரேலியா)
  3. மும்பை (இந்தியா)
  4. ஹெல்சின்கி (பின்லாந்து)
Answer & Explanation
Answer: தாவோஸ் (சுவிச்சர்லாந்து)

Explanation:

ஜனவரி 21 முதல் 24 வரை உலக பொருளாதார மன்றத்தின்(WEF) 50வது ஆண்டு கூடுகை சுவிச்சர்லாந்தின் தாவோஸ் நகரில் நடைபெறுகிறது.

5. சமீபத்தில் ஆர்டர் ஆஃப் ஆஸ்திரேலியா விருது யாருக்கு வழங்கப்பட்டது?

  1. நரேந்திர மோடி
  2. கிரண் மஜும்தார் ஷா
  3. நைனா லால் கிட்வாய்
  4. சந்தா கோச்சர்
Answer & Explanation
Answer: கிரண் மஜும்தார் ஷா

Explanation:

ஆஸ்திரேலியா நாட்டின் மிக உயர்ந்த சிவில் விருதான ஆர்டர் ஆஃப் ஆஸ்திரேலியா விருது சமீபத்தில் இந்திய தொழில் அதிபர் கிரண் மஜும்தார் ஷாக்கு வழங்கப்பட்டது.

மேலும், ஆஸ்திரேலியா ஆணைக்குழுவின் பொதுப் பிரிவில் கவுரவ உறுப்பினராகவும் நியமிக்கப்பட்டுள்ளார்.

6. சமீபத்தில் லிபியா அமைதி மாநாடு எங்கு நடைபெற்றது?

  1. திரிப்போலி
  2. அங்காரா
  3. மாஸ்கோ
  4. பெர்லின்
Answer & Explanation
Answer: பெர்லின்

Explanation:

உள்நாட்டுச் சண்டை நடைபெற்று வரும் லிபியாவில் அமைதியை ஏற்படுத்துவது தொடர்பான சர்வதேச மாநாடு ஜெர்மனி தலைநகர் பெர்லினில் நடைபெற்றது.

7. ஹோபார்ட்டில் நடந்த சர்வதேச டென்னிஸ் போட்டியின் பெண்கள் இரட்டை பிரிவில் சாம்பியன் பட்டம் வென்ற அணி?

  1. சானியா மிர்சா – நடியா கிச்செனோக்
  2. தமரா ஜிடன்செக் – மேரி பவுஸ்கோவா
  3. வானியா கிங் – கிறிஸ்டியானா மெக்ஹாலே
  4. ஷய் பெங் – சானியா மிர்சா
Answer & Explanation
Answer: சானியா மிர்சா – நடியா கிச்செனோக்

Explanation:

ஹோபர்ட் சர்வதேச டென்னிஸ் தொடரில் இந்தியாவின் சானியா மிர்சா, உக்ரைனின் நாடியா கிச்செனோக் ஜோடி, சீனாவின் ஷய் பெங் மற்றும் ஷுவாய் ஜாங்கை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை வென்றது.

இது சானியா மிர்சாவின் 42 வது இரட்டையர் பட்டம் என்பது குறிப்பிடத்தக்கது.

8. சமீபத்தில் காலமான “பாபு நட்கர்னி” பின்வரும் எந்த விளையாட்டுடன் தொடர்பானவர்?

  1. கிரிக்கெட்
  2. டென்னிஸ்
  3. ஹாக்கி
  4. கால்பந்து
Answer & Explanation
Answer: கிரிக்கெட்

More TNPSC Current Affairs



Leave a Comment